மலாயா காட்டுல காசும் பணமும் கித்தா மரத்தில காய்ச்சு காய்ச்சு தொங்குது... ஒரு மரத்தில ஒத்தை ஒத்தை வெள்ளியா தொங்கும்... இன்னொரு மரத்துல அஞ்சு அஞ்சு வெள்ளியா தொங்கும்... இன்னொரு மரத்துல பத்து பத்து வெள்ளியா தொங்கும்... பாசா காட்டில தான் பணம் கொட்டுற மரம் ரொம்பவா தெரியும்... தேடிப் புடிக்கிறது தான் சொக்காய் புடிக்கிற சோலி...
பணம் காய்ச்சுற மரம் எல்லாம் மலாயா காட்டுல மட்டும் தான் இருக்கு... என்ன ஒன்னு... அந்த காசை எல்லாம் பொறுக்கி எடுக்கிறது தான் அம்புட்டு லெச்ச புடிச்ச வேலை...
சீனக்காரங்க சோம்பேறி பசங்க... பாசா காடுனா பயந்து ஓடுவானுங்க... நீங்க வாங்க... வருசம் பூரா காசை பாக்கலாம்... சொல்லி வச்சு ஒரே வருசத்துல... ஒரே வருசம் தான்... அப்புறம் கையில ரெண்டு காசோட திரும்பி வந்துடலாம்...
இந்த மாதிரி பேச்சை நம்பி மலாயாவுக்கு வந்தவர்கள் கடைசியில் வாளிகளைத் தலையில் தூக்கிச் சுமந்த கதை... ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத சோகக் கதை... படத்தைப் பாருங்கள்...
1900-ஆம் ஆண்டுகளில் நம்ப தமிழ்ப் பெண்கள்... அப்பிராணி ஊமைகளாய் வரிசை பிடித்து நிற்கிறார்கள்... நம் இனத்தை எப்படி எல்லாம் வேதனைப் படுத்தி இருக்கிறார்கள்... கடைசியில் கெலிங் எனும் கண்ராவிச் சொல்லில் கண்கலங்கித் தவிக்கிறோம். காயங்களின் வடுக்களில் வேதனையின் விசும்பல்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.04.2020
பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்
M R Tanasegaran Rengasamy : நாம் உழைக்க வந்தவர்கள். இந்த நாட்டை முன்னேற்ற உருக்குலைந்து போனவர்கள். இன்று உதாசினத்துக்கு ஆளாகின்றோம். நேற்று வந்த மியன்மார் காரன் "செலாயாங் பசாரை எங்களுக்கு கொடு..." என்கிறான். நம்மில் பலர் இன்னும் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள். கொடுமை சார். இந்த ஏமாந்த சனங்களின் வரலாறு உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் உள்ளவரை வாழும். சல்யூட் சார்...
Muthukrishnan Ipoh : இன்று நாளிதழில் 36 வயது தமிழ்ப் பெண்மணிக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்று ஒரு செய்தி... பிறப்புப் பத்திரத்தில் தந்தையார் பெயர் இல்லையாம்... தந்தையார் பெயர் இல்லாமல் பிறப்புப் பத்திரம் வழங்க மாட்டார்கள்...
கணவர் ஈப்போவில் பிறந்தவர்... இதில் அந்தப் பெண்ணின் குடும்பத்தாரின் அலட்சியப் போக்கே மூல காரணம்... குடியுரிமை என்பது ஒருவரின் வாழ்க்கைப் பிரச்சினை... அதை 36 ஆண்டுகளுக்கு முன்பாகவே களைந்து இருக்க வேண்டும்... நம் இனத்தவர்களிடமும் குறைகள் உள்ளன... தங்களுக்கும் வாழ்த்துகள்...
Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh : இன்னும் பலர் இது போன்ற அலட்சியமாகே இருக்கிறார்கள். மற்றவர்கள் செய்து தருவார்கள் என்னும் எதிர்ப் பார்ப்பில் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். எதிலும் அலட்சியம். திருந்துமா... இந்தச் சமுதாயம்.
Muthukrishnan Ipoh >>> Manickam Nadeson : உண்மைதான்... நம் இனத்தவரிடம் அலட்சியப் போக்கு மிகுதியாக உள்ளது... அதுவும் குடியுரிமை என்பது உயிர்ப் பிரச்சினை... அதில் அசட்டையாக இருக்கலாமா... ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை மாணிக்கம் ஐயா...
Chitra Ramasamy : என் பெற்றோரும் காட்டை அழித்து கித்தா மரங்களை நட்டதை கதை கதையாகச் சொன்னார்கள்...
Muthukrishnan Ipoh : மலேசியாவில் 80 விழுக்காட்டு இந்தியர்களின் வாழ்வியலில் கித்தா மரத்தின் பின்னணி உள்ளது.
KR Batumalai Robert : வேதனை... வேதனை... மனம் வலிக்கிறது. நம் முன்னோர்களைப் போற்றுவோம்.
Muthukrishnan Ipoh : அப்பாவித் தனங்களால் பலிக்கடா ஆன செய்திகள் நிறையவே உள்ளன...
Mariamal Surinarayanan : இந்த வலிகளை எல்லாம் இப்போதைய சந்ததியினர் உணர வேண்டும்.... சிந்தித்து நடக்க வேண்டும்
Muthukrishnan Ipoh : ஆமாம் சகோ... அதற்காகத் தான் இன்றைய தலைமுறையினருக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டி உள்ளது...
Sathya Raman >>> Mariamal Surinarayanan : இன்றைய தலைமுறையில் பலர் உழைக்காமலே பெரிய ஊதியத்தையும், சொகுசு வாழ்க்கையையும் கொஞ்சம்கூட வலியே இல்லாமல் வாழ நினைக்கின்றனர். உடல் உழைப்பும் வியர்வையும் இன்றைய தலைமுறையிடம் எதிர்பார்க்க முடியாது. சதா ஏ.சி யில் வேலைப் பார்க்கும் இப்படிப் பட்டவர்கள் நம் மூதாதையர்களின் அனுபவங்களையும், ஆறாத் துயரையும் அறிந்து தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் குறைவே .
Periasamy Ramasamy >>> Sathya Raman : உண்மைதான். இருப்பினும், தாம் பட்ட இன்னல்கள், தமது சந்ததிகளையும் தொடரக் கூடாது என்பதுதான் அந்த புண்ணிய ஆத்மாக்களின் அன்றாட பிரார்த்தனையாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Barnabas : கண்ணாம்பூச்சி விளையாட்டில் மாட்டி சிதைந்த தமிழினம்... தாங்கள் எழுதும் பல செய்திகள் நெஞ்சைப் பிழிகிறது.
Muthukrishnan Ipoh : 1850 - 1950-ஆம் ஆண்டுகளில் நம் மக்களின் அறியாமையும் அப்பாவித் தனமும் கறுப்புக் கங்காணிகள் எனும் இடைத் தரகர்களுக்கு இலுப்பைப் பூவாகிப் போனது மலேசியத் தமிழர்கள் வாங்கி வந்த வரம்......
Sheila Mohan : இனிய வணக்கம் சார்.. நம் மூதாதையர்கள் அனுபவித்த வேதனையை விரிவாக எழுதியுள்ளீர்கள்... வலி மிகுந்த வரிகள்...
Muthukrishnan Ipoh : நம் மூதாதையர்கள் அனுபவித்த வேதனைகள் சொல்லில் அடங்கா... எழுத்தில் அடங்கா... பெரும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள்... அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளில் வாழ்கிறோம்... என்றும் அவர்களை மறவோம்...
Sheila Mohan >>> Muthukrishnan Ipoh : மறக்கத்தான் மனம் வருமா.. மறவோம் சார்...
Muthukrishnan Ipoh >>> Sheila Mohan : அவர்கள் என்ன மாதிரியான வேதனைகளை அனுபவித்து இருப்பார்கள்... தகரக் கொட்டகை எனும் லயன்களில் குடும்பம் நடத்தி பிள்ளைகளைப் பெற்று படிக்க வைத்து... நினைக்கும் போது சமயங்களில் மனசு ரொம்பவுமே வேதனைப்படுகிறது சகோதரி.... அந்த மாதிரி லயன்களில் நானும் வாழ்ந்து இருக்கிறேன்... எப்படிங்க மறக்க முடியும்...
Manickam Nadeson : இந்த வேதனைகளை இப்பொழுது 60 வயதுக்கு மேற்பட்ட பல தமிழர்களும் அனுபவித்து இருக்கிறோம். அந்த நாளும் வந்திடாதோ???
Muthukrishnan Ipoh >>> Manickam Nadeson : அந்த வாழ்க்கை சற்றே வேதனையாக இருக்கலாம்... ஆனால் அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அளவில்லா ஆனந்தம் ஏற்படுகிறது... மறுபடியும் கிடைக்குமா எனும் ஏக்கமும் வருகிறது...
Sambasivam Chinniah : Vaazhga Valamudan Arutperatral karunaiyal udal nalam, neel ayul, nerai selvam, uyer pugal, onggi vaazhga.
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா... தங்களுக்கும் நிறைவான வாழ்த்துகள்...
Nagamah Muruta : வணக்கம் இந்த கதை உண்மை தான்னா
Muthukrishnan Ipoh : உண்மைதாங்க...
Maha Lingam >>> Nagamah Muruta : ஏன்னம்மா.. இந்த கேள்வி... இந்த மண் சொல்லும் தமிழனின் உழைப்பை... நமது இலட்சக் கணக்கான முன்னோர்கள் இந்த மலைநாட்டுக்கு உரமாக இருந்து இருக்கிறார்கள்... இந்த மண்ணுக்கு உரமே போட தேவையில்லை... ஒவ்வொரு கட்டடத்தின் கீழும் விமான நிலையங்களின் மடியிலும் நம்மவர்கள் எலும்பும் சதையும் இருக்கு... ஆக, தமிழனின் சரித்திரப் புத்தகங்களை வாங்கி படித்து குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்...
Muthukrishnan Ipoh >>> Maha Lingam : அழகாகச் சொன்னீர்கள்... மலாயா இரயில் பாதைகளில் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் 20 தமிழர்கள் இறந்து இருக்கலாம்...
சுங்கை சிப்புட் - தைப்பிங் கம்பிச் சடக்கில் ஏறக்குறைய 1500 இந்தியர்கள் இறந்து போய் இருக்கிறார்கள்...
கிமாஸ் - கோல லிப்பீஸ் இரயில் பாதை போடும் போது ஏறக்குறைய 2000 இந்தியர்கள் இறந்து போய் இருக்கிறார்கள்...
பத்து தீகா - போர்ட் கிள்ளான் இரயில் பாதை போடும் போது 500 தமிழர்கள் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள்...
இந்தக் கணக்கை எல்லாம் எதில் கொண்டு போய் சேர்ப்பது... தெரியலீங்க...
Nagamah Muruta : நன்றி ஐயா இதை எல்லாம் எடுத்து சொன்னதுக்கு
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...
Jainthee Karuppayah : கம்பி சடக்கு... இந்த வார்த்தை...
Maha Lingam >>> Muthukrishnan Ipoh : வேதனை அண்ணா...
Muthukrishnan Ipoh >>> Jainthee Karuppayah : இரயில் பாதைக்கு முன்பு கம்பிச் சடக்கு என்று சொல்வார்கள்...
Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh : yes... மாமியார் அடிக்கடி பயன்படுத்தப்படும்
சொல்..
Mgrkalaimagal Poonkodi : அருமையான பதிவு உண்மையான கதைகள். எங்களின் முன்னோர்கள் தாத்தா - பாட்டிகள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
Muthukrishnan Ipoh : நம் தாத்தா பாட்டிமார்களின் கதைகளை நம் பிள்ளைகளும் நம் பேரப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்... அதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்...
Sundaram Natarajan : இனிய காலை வணக்கம் அண்ணா
Muthukrishnan Ipoh : இனிய வாழ்த்துகள்... 🙏
Melissa Elroy : hi uncle ... god bless you
Muthukrishnan Ipoh : தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
Murugan Thevar : உழைப்பையும், தியாகத்தையும், நாடும், உலகும் மதிக்காது... புறம்தள்ளி, இழிவு செய்த அதர்மத்தின் விலைதான் இன்று கொரோனா நோய் கொல்லி பரவல் போலும். ஆண்டான் முதல் அடிமை வரை வீட்டுக் காவல்...
Mangala Gowri : வணக்கம் சார். முதல் பாராவில் நீங்க சொல்லி இருக்கும் செய்திகளை எங்க அப்பா பாட்டாவே பாடி காட்டுவார்...
காய்ச்சல் அடித்தால் மருந்து கொடுக்க கட்டிடம் பெரிது என்றார்
கால்நடையும் அதிகமில்லை கார் இருக்குது என்றார்....
என்று போகும் அந்த பாடலின் வரிகள் மறந்து விட்டது. எனினும் முதல் இரண்டு வரிகள் போதும்... நம்மவர்கள் ஏமாற்றப்பட்ட கதை சொல்ல... ஏமாற்றி அழைத்து வந்தவர்களும் ஆள் கட்டு கங்காணியான சொந்த இனம் தானே. அதையும் கண்டிப்பா சொல்லனும்
Muthukrishnan Ipoh : உண்மைதான் சகோதரி... முன்பு காலத்தில் தோட்டப் புறங்களில் அப்படி ஒரு பாடல் இருந்தது... தோட்டம் தோட்டமாகப் பாடுவார்கள்... கேட்ட நினைவுகள்... நானும் மறந்து விட்டேன்... தோட்டத்து ஆயாக் கொட்டகையில் ஆயம்மா பாடி இருக்கிறார்... அப்போது எனக்கு சின்ன வயது... நினைவில் இல்லாமல் போய் விட்டது... கறுப்புக் கங்காணிகள் நம் இனத்தை ரொம்பவுமே ஏமாற்றி விட்டார்கள்... வேதனை...
Mangala Gowri >>> Muthukrishnan Ipoh : கொசுறு செய்தியா இன்னொரு பாட்டு சொல்றேன் சார்..
என்ன தம்பி சித்திரை
மணியப் பார்த்தா பத்தரை
ரவைக்கெல்லாம் கழுதை போல கத்தற
லயன் வீடுகளில் அக்கம் பக்கம் நடக்கும் கூத்தும் பாடலாக
சிவனேஸ் சிவாநந்தம் : சகோ இன்னும் ஒரு பாடல்...
ஓ ரப்பரு பாலே
நாஞ் சொல்லுறத கேளே
குப்புற படுத்துக்காத ரப்பரு பாலே
நா கப்ப ஏறி வந்துட்டேன் என் கெப்புறுனாலே..
என் தந்தை வழிப்பாட்டி அடிக்கடி இந்தப் பாட்டை பாடி சிரிப்பூட்டுவார், அப்போது நகைச்சுவையாய் இருந்தது... இப்போது யோசிக்கையில் அவர்களின் வேதனை புரிகிறது
Mangala Gowri >>> சிவனேஸ் சிவாநந்தம் : இப்படி நிறைய பாடல்கள் சிவநேஸ். மறந்து போச்சு
சிவனேஸ் சிவாநந்தம் : ஆமாம் சகோ இங்கேயும் அதே கதைதான் !!
Muthukrishnan Ipoh >>> Mangala Gowri : அருமை... அருமை... இந்தப் பதிவுகளை எல்லாம் நூல் வடிவத்தில் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்... இணையத்திலும் (வலைத் தலத்திலும்) பதிவு செய்கிறேன்... நன்றிங்க...
Manickam Nadeson : நாட்டை தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்த்த சமுதாயம், இன்று வலுவிழந்து கிடக்கிறது. வாழ வைக்கிறேன் என்று மக்களின் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்ட ஒரு திருட்டு அரசியல் கட்சியும் நமக்கு எதிரியாக வந்து நிற்கின்றன. ஏதோ ஓரளவுக்கு தனது சுய முயற்சிகளால் வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த ஏழைச் சமுதாயம், இனி யாரையும் நம்பாமல் இருந்தாலே சிறப்படையலாம்.
Muthukrishnan Ipoh : நம்பி மோசம் போவதே நம் இனம் வாங்கி வந்த வரம்... நம் இனம் சார்ந்த அரசியல் தலைவர்களில் பலரும் சிலரும் சமுதாயத்தின் மீது முழுமையாக அக்கறை கொள்ளவில்லை... அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பார்த்துக் கொள்வதிலேயே அதிக கவனம்... அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை... ஓட்டுப் போட்டோமே... நம்மைச் சொல்லணும்... இனிமேலாவது விழிப்புடன் நகர்வோம்...
மா.சித்ரா தேவி : தோட்டப் புறத்தில் படாத வேதனையா சத்தியா... அதில் யாழ்ப்பாணத்து மனித மிருகங்கள் இன்னொரு பக்கம்...
Sathya Raman >>> மா.சித்ரா தேவி : தமிழர்களை ஜாதி வாரியாக அடிமை படுத்தி பல துறைகளில் ஆளுமை செய்தவர்களாயிற்றே...
மா.சித்ரா தேவி >>> Sathya Raman : வேதனையான விடயம
மாரியப்பன் முத்துசாமி : உழைத்து ஓடா போயிட்டாங்க!
Muthukrishnan Ipoh : ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து உயிரற்ற ஜீவன்களாய்க் கரைந்து போனார்கள்...
Francis Silvan : Bro, pls call, francis silvan 013-3885652
Muthukrishnan Ipoh : சரிங்க தலைவரே...
Maha Lingam : நன்றி.. அண்ணா.. வாசித்து விட்டு வருகிறேன்...
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...
Parimala Muniyandy : இனிய காலை வணக்கம் அண்ணா.
Muthukrishnan Ipoh : இனிய வணக்கம்...
Oviyar Lenah : மறக்க முடியாது
Muthukrishnan Ipoh : 😢😢
Maravan Madal Tamilmani : அங்கிருந்து கடந்து விட்டோம்! இனி இங்கிருந்து கடக்க வேண்டும்! மலைப்பாக இருக்கிறது. "மலையா.. இது மலையாயப்பா? ..." இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது?
Periasamy Ramasamy : இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தொழிலாளரின் அன்றாட ஊதியம் கணக்கிடப் பட்ட முறைதான்.
எ.கா: சுமார் 15 காலன் (150 lbs பவுண்டு) முதுகொடிய கொண்டு வந்து சேர்க்கும் பச்சைப் பால் DRC (Quantified Dry Rubber Content) முறையில் அளவெடுத்தால் கிடைக்கும் சொற்ப காய்ந்த பாலுக்குத்தான் ஊதியம்.
பச்சைப் பால் கொண்டுள்ள பெருவாரியான நீர் பகுதிக்கு ஊதியம் கிடையாது.
ஆகவே, அதிக ஊதியம் பெற வேண்டுமானால், அதிக மரம் சீவ வேண்டும்.
ஆரம்பக் காலங்களில், 300 மரங்களில் ஆரம்பித்து, பிந்நாளில் உலக இரப்பர் தேவையைப் பூர்த்தி செய்ய தொழிலாளர்கள் 600 மரங்கள் வரை சீவ உட்படுத்தப் பட்டனர்.
Muthukrishnan Ipoh : உண்மைதான் ஐயா... விடியல் காலையில் பள்ளிக்குப் போவதற்கு முன்னால் என் அம்மாவுடன் சென்று ஒரு 50 மரங்களையாவது சீவி விட்டு... வீட்டுக்கு வந்து குளித்து விட்டு பள்ளிக்குச் சென்ற அனுபவங்களை இன்றும் அசை போட்டுப் பார்ப்பது உண்டு... அந்த மாதிரி வாழ்க்கை மீண்டும் கிடைக்காதுங்க...
Sathya Raman >>> Periasamy Ramasamy : அயராத உழைப்பு அற்ப, சொற்ப ஊதியம், அரை வயிறும் கால் வயிறுமாய் அன்று எம் முன்னோர்கள் பட்ட அல்லல்களை சொல்லி மாளாது. அவர்களின் ரத்தங்களை அட்டைகளாய் உறிஞ்சி, வியர்வையை சக்கையாய் பிழிந்தெடுத்த பின்னணியை இப்போது கூறினால் பிதற்றுவதாக சில பத்தாம் பசலிகள் எள்ளி நகையாடுவார்கள்.
நேற்று இந்த நாட்டுக்குள் நாடோடிகளாய் வந்தவர்கள் இந்த நாட்டை சொந்தம் கொண்டாடி தைரியமாக இட ஒதுக்கீடு கோருகிறார்கள். இந்த நாட்டை உதிரம் சிந்தி உழைப்பால் உருமாற்றிய தமிழர்கள் உரிமையை இழந்து இன்னமும் தரம் தாழ்த்தப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை சார்.😢
Muthukrishnan Ipoh : அன்பர்களின் பதிவுகள் அனைத்தும் வலைத்தளத்தில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்... தற்சமயம் ஓய்வு இல்லாததால்... வலைத்தலத்தில் இன்னும் பதிவுகள் செய்யவில்லை... தங்களின் கருத்துகள்... பழைய நினைவுகள்... அருமை அருமை.. அடியேன் ஐக்கியமாகிப் போகிறேன்...
Sathya Raman : நான் கேமரன் மலை தேயிலை தோட்டத்தில் வளர்ந்தாலும், மற்ற மாநிலங்களில் வசித்த உறவுகாரர்கள் பால் மரம் தோட்டத்திற்கு அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் லேலைக்குச் செல்வதை பார்த்திருக்கிறேன்.
நெத்தி லாம்பு கட்டி [நெற்றியில் கட்டும் விளக்கு] விடிவதற்குள் காம்பராவில் செக்ரோல் முடித்து கித்தாக் காட்டுக்குள் மரம் சீவ கிளம்பும் நம் தமிழர்கள் பாம்பு கடிக்கும், பூரான் கடிக்கும் மற்ற மற்ற விஷ சந்துக்கள் கடிக்கும் ஆளாவதோடு அவர்களை ஆட்டி வைக்கும் அரக்க குணம் கொண்ட கங்காணிமார்களின் கண்ட, கண்டபேச்சையும் கண்டனத்தையும் கேட்டு தொலையணும்.
மரத்தில் காயம் படக் கூடாது, குறித்த நேரத்தில் அவரவருக்கு கொடுத்த நிரைகளை சீவி முடிக்கணும். மழைக்காலம் என்றால் பம்பரமாய் ஒட்டு பால் சேகரிக்கணும். முன்பு ஒட்டு பால் சேகரிப்பு மிக குறைவு தான். எல்லாமே சீட்டுபால் தான்.
ஒரு தாய்மைக்கு பால் சுரப்பதைப் போல் கித்தா மரமும் பாலைச் சுரந்து பலரது வயிற்று பசியை சிறிதேனும் போக்கி இருக்கிறது.
அதுவும் தொடர்ந்து மழை பெய்தால் அதிலும் மண் விழும். இப்படிதான் எம் மூதையர்கள் இந்த மலேசியாவில் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்து உருகுழைந்து எந்தவித சுகங்களையும், சுதந்திரத்தையும் அனுபவிக்காமலே அப்பாவிகளாய் போய் சேர்ந்தார்கள்.
இன்று தோட்டங்கள் துண்டாடப்பட்ட நிலையில், இப்போது தோட்டங்களில் பங்களாதேசியும் பர்மாகாரனும் பரவலாக கித்தா மரங்களை குத்தகைக்கு எடுத்து வேலை செய்கிறார்கள்.
பழைய கித்தா மரங்கள் மட்டும் வெட்டி சாய்க்காமல் இருந்திருந்தால் எம் இனம் அந்த காடுகளில் பட்ட வேதனைகளையும் துன்பத்தையும் கண்ணீரோடு கதை, கதையாய் கதறிச் சொல்லும் அவர்கள் பட்ட ரணங்களை.
இந்த ரப்பமரக் கன்றுகள் முதன் முதலாக பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டதாக படித்த ஞாபகம் இதைப்பற்றி கூடுதல் விளக்கம் தாருங்கள் சார்.🙏
Muthukrishnan Ipoh : நீண்ட ஒரு வரலாற்றுப் படிமம்... உங்களின் பதிவிற்கு என்ன மாதிரி பதில் அளிப்பது என்று தெரியவில்லை... உங்களுக்குள் தேங்கிக்கிடக்கும் மனக் கிடக்கையை அழகாய் அள்ளிக் கொட்டி இருக்கிறீர்கள்... அங்கே தோடப்புறங்களில் பயன்படுத்தப்பட்ட நெத்தி லாம்பு; காம்பரா; செக்ரோல்; சீட்டுபால் போன்ற பழைய... ஆனால் மறக்க முடியாத சொற்களையும் நினைவுபடுத்தி இருகிறீர்கள்...நன்றிங்க...
மலாயாவில் முதல் ரப்பர் மரம் எனும் தலைப்பில் தமிழ் மலர் நாளிதழில் 14.11.2017-ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்... அதில் வரும் ஆதங்கம்...
உலகத்திற்கே ரப்பரைப் பற்றி சொல்லிக் கொடுத்தது மலேசியா எனும் புண்ணிய பூமி. உலகம் முழுமைக்கும் ரப்பரை ஏற்றுமதி செய்து சாதனை செய்தது இந்தப் பச்சைப் பசும்பூமி.
பல்லாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகச் சாணக்கியம் பேசியது இந்த அழகிய பூமி. புலம் பெயர்ந்து கரை தாண்டும் மனிதர்களையும் கட்டிப் போட்டது இந்தச் செம்மலர் பூமி.
ரப்பர் எனும் அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி காசு பணத்தை வாரி இறைத்த அந்தப் புண்ணிய பூமியின் கனவுகள் நனவாகின. ஆனால் அந்த நனவுகள் இப்போது வேறு மாதிரியான வடிவத்தில் கனவுகளாகிப் பரிணமிக்கின்றன.
அதே அந்தப் பூமியில் ரப்பர் மரத்தைத் தொட்டுப் பார்க்கும் சின்னஞ் சிறுசுகள். வழிகின்ற ரப்பர் பாலைத் தடவிப் பார்க்கும் பேரப் பிள்ளைகள். ரப்பர் மரத்தை உரசிப் பார்த்து அதிசயத்துப் போகும் பால்யப் பிஞ்சுகள். ரப்பர் கட்டிகளை முகர்ந்து பார்த்து முகம் சுழிக்கும் இளவட்டங்கள்.
அந்த மாதிரியான ஒரு காலக் கட்டத்தில் தான் நாமும் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதாவது பரவாயில்லை.
நாடு விட்டு நாடு வந்த பலருக்கும் இந்தப் பூமியில் வாழ்வு அளித்த ரப்பர் எனும் அந்த மந்திரப் புன்னகையைப் பலரும் மறந்து கொண்டு வருகிறார்களே; ரப்பர் என்றால் என்ன என்று தெரியாமல் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே; ரப்பர் என்றால் என்னங்க என்று நம்மையே கேள்விகள் கேட்கிறார்களே; இதைப் போய் எங்கே சொல்லி எப்படி முட்டிக் கொள்வதாம். சொல்லுங்கள்.
உலகத் தரத்திற்கு உயர்ந்து போய் விட்ட நினைப்பில் நம்மில் பலர் மிதந்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்லலாம். இருந்தாலும் அப்படிச் சொல்ல மனசிற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. மன்னிக்கவும்.
மலேசியாவின் இத்தனை பெரிய சாதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஒரே ஒரு ரப்பர் மரம் தான் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்கிற விசயம் எத்தனை பேருக்குத் தெரியும்.
தங்களின் அனுபவக் கருத்துகளுக்கு நன்றிங்க...
Sathya Raman >>> Muthukrishnan Ipoh : சிறப்பான, மிக தெளிந்த கருத்துகள். நன்றிங்க சார். இந்த நாட்டில் கித்தா மரங்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டால் ஓராயிரம் கண்ணீர்க் கதைகளைச் சொல்லும்... அது பலரை வேதனைப் படுத்தும் என்பதால் விடுவோம் 😥
Muthukrishnan Ipoh >>> Sathya Raman : தோட்டப்புற வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி பேரப் பிள்ளைகளிடம் நினைவு படுத்துவது வழக்கம்... நேரம் கிடைக்கும் போது தோட்டத்தில் நான் வாழ்ந்த கதையைச் சொல்வேன்... ஆற்றில் மீன்பிடித்த கதை... தீபாவளி கலகலப்புகள்... பள்ளிக்கூடத்தில் இருந்து நடந்தே வருவது... தம்பி தங்கைகளை உப்புக்குட்டி தூக்கி வருவது... அவர்களும் ஆர்வமாகக் கேட்பார்கள்... ஒருமுறை ரப்பர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று இருந்தேன்... கித்தா மரங்களைத் தடவிப் பார்த்து என்னையும் பார்த்தார்கள்... இந்த மலேசியாவில் இந்தியர்களில் பெரும்பாலோரை வாழ வைத்த தெய்வம் என்று சொல்ல முடியவில்லை... மனதிற்குள் அழுகை...
Kumarasamy G P Govindasamy : சகோதரி சத்தியா கருத்து நெஞ்சை நெருடச் செய்கிறது. கித்தா தோட்டத்தில் நம் இனம் பட்டப்பாடுகள்... அப்பப்பா... பால் கொண்டு வந்த வாளிகளிலேயே குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து அதைப் பருகும் போது கிடைக்கும் மணத்திலும் இன்பம் கண்ட சமூகம். முப்பது நாள் வேலைக்குச் சென்றாலும் கைக்கும் வாய்க்கும் பற்றாமல் வாழ்ந்த குடும்பங்கள்... எத்தனையோ கதைகள் எண்ணும் போதே நெஞ்சம் கனக்கிறது.
Sathya Raman >>> Kumarasamy G P Govindasamy : அன்று நம்மவர்கள் பட்ட துயரங்களையும், இடர்களையும் இந்நாடு மறந்தாலும் இயற்கையும், ரப்பர் காடுகளும் ஒரு இதிகாசம் போல் இந்த புவி உள்ள வரை காவியமாய் கதைகள் சொல்லும் சார். 🙏
Khavi Khavi : அதே செம்மண் சாலைகளில் விழுந்து எழுந்தவர்களில் நானும் ஒருவன். அந்த எச்சென்ஸி (HNC) எஸ்டேட், அந்த சுங்கை செனாருட் எஸ்டேட், பயலாங் எஸ்டேட், கோமாளி எஸ்டேட் (GOMALI) என இன்னும் பல ஆத்திச்சூடிகளை... அந்தச் சுவடிகளை சுவாசித்தவன் நான். இனிமையான காலம். இனி என்றும் திரும்பாது. அழிக்கப்பட்ட ஒரு சுவடு என்றே உணர்கிறேன். தோட்டப்புற வாழ்வென்பதே எமது அடையாளம்.
'கிட்ட கொண்டுவா ஓங்காத.. (உன் காதை)
சொல்லப்போறேன் பலகத...
சொந்தகத சோகக்கத..
தாத்தாபாட்டி வந்தகத... இயற்கைமணம் வீசும் பால்மரக்காட்டுல..
வாழ்க்கை தேயும் செம்மண்ணு ரோட்டுல..!'
Maha Lingam >>> Khavi Khavi : வேதனை... ஆனால் சுகமான வாழ்க்கை..
Muthukrishnan Ipoh : // கிட்ட கொண்டுவா ஓங்காத...
சொல்லப் போறேன் பலகத...
சொந்தகத சோகக்கத...
தாத்தா பாட்டி வந்த கத...
இயற்கை மணம் வீசும் பால்மரக்காட்டுல...
வாழ்க்கை தேயும் செம்மண்ணு ரோட்டுல...
இந்த மாதிரியான தோட்டப்புற பாடல்களை இப்போது எல்லாம் கேட்க முடியாதுங்க... அவை அந்தக் காலத்து தோட்ட மக்களோடு காலாவதியாகி விட்டன...
இந்தப் பாடல்களை எல்லாம் மீட்டு எடுக்க வேண்டும்... ஒரு நூலாக வெளியிட வேண்டும்... நம் சந்ததியினருக்குத் தெரிய வேண்டும்...
Khavi Khavi : ஐயா.. தாங்கள் நினைப்பது போல காலம் கடந்த பழைய பாடல் அல்ல இங்கு நான் பதித்த வரிகள், மலையக மண்ணின் மைந்தர்களின் இயற்றல். #பூமிரேங்ஸ்.. boomerangs இசைக் குழுவினரின் ஆழமான வரிகள் இவை..
Muthukrishnan Ipoh >>> Khavi Khavi : பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறதே... போற்றுவோம் ஐயா...
Kamala Devi : வலி மிகுந்த வாழ்க்கை.. எத்தனை எத்தனை போராட்டங்கள்? அவர்களின் அர்பணிப்பு இன்றைய நம் வளர்ச்சி... என்றும் அவர்களை வணங்கி உய்வோம். இன்றைய தலைமுறைக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும்..... நன்றி ஐயா
Muthukrishnan Ipoh : ஒன்று மட்டும் உறுதி... இந்தத் தலைமுறையில் உள்ளவர்கள் மலாயா கித்தா மரங்களைப் பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்தவில்லை என்றால் அதோடு பால்மரக் காட்டின் வரலாறுகள் காணாமல் போகலாம்...நம் மூதாதையரின் வரலாறும் கரைந்து போகலாம்...
Kamala Devi >>> Muthukrishnan Ipoh : உண்மை ஐயா.... ஏற்கனவே பல வரலாறுகள் கரைக்கப் பட்டு விட்டன..
Maha Lingam : இந்த தோரனையில் தான் என் முன்னோர்களும் இருந்திருப்பார்கள்...
1920-ஆம் ஆண்டு வாக்கில் மலைநாட்டுக்கு வந்த எனது முன்னோர்கள்
1. சின்னசாமி கவுண்டர்... தாத்தா
2. சின்னம்மா கவுண்டர்... பாட்டி
3. படவெட்டான் கவுண்டர்... அப்பா
4. தனபாக்கியம் த/பெ நாராயணசாமி கவுண்டர்... அம்மா
5. இராஜகோபால்... சித்தப்பா
6. பாக்கியம்... அம்மாவின் சின்னம்மா..
தாத்தவும் பாட்டியும் அப்பாவின் பெற்றோர்கள்...
இவர்கள் தான் நான் எனது வம்சாவளியை மலைநாட்டில் முதன் முதலில் கால் பதிக்க வந்தவர்கள் என்பதை அறிவேன்.
தமிழ் நாட்டிலிருந்து மலைநாட்டுக்கு வந்து நுழைந்த முதல் வாசல் பினாங்கு தீவு என்றும்... பிறகு, இந்தத் தீவிலிருந்து மற்றும் ஒரு சிறிய படகில் "புறமலை" தீவிற்கு (இன்று அது PULAU JERJAK) அழைத்துச் சென்று அடைக்கப் பட்டதாகவும் எனது பெற்றோர்கள் கூறி உள்ளனர்.
அங்கு சில வாரங்கள் வைத்து இவர்களின் ஆரோக்கியத்தை சரி படுத்திய பிறகு தான் இவர்களை கூட்டம் கூட்டமாக இவர்களின் மேல் அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைப்பார்கள்.
பெரும்பாலும் இவர் இன ஜாதி ரீதியாகவும் அவர் தம் சொந்த பந்தங்களோடும் தான் ஒரு ஊருக்கு குடியேருவார்கள்.
காரணம், இப்படி குழுவாகப் போய் வசிப்பதால் அங்கு நடக்கும் நல்லது கெட்டது, ஒத்துழைப்புக்கு, உறவுக்காகவும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் செயல் படுவார்கள்.
அதனால் தான் தோட்டபுற வாழ்க்கையை உற்று நோக்கினால் நிச்சயம் இவர்கள் அனைவரும் ஒரே ஜாதிக் காரங்க... ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று பல கோணத்தில் ஒன்று படுவார்கள்.
இன்றும் புறமலையில் நம்மவர்களின் இறைப் பற்றை சாற்றும் வகையில் பழங்கால முருகன் சிலை மற்றும் அம்மன் என்று வழிப்பாட்டில் உள்ளன.
வருடம் ஒரு முறை அங்கு வழிப்பாடும் நடக்கும்.
ஆக, இப்படியாக மலைநாட்டில் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்த எனது முன்னோர்களையும் அவர்களது ஜாதி ஜனத்தையும் ஒரு வழியாக அழைத்து இல்லை ஓட்டிக் கொண்டு சித்தியவான் பட்டிணத்தில் இருந்து ஒரு 15 மைல் கல் தொலைவில் உள்ள சொகமானா தோட்டம் என்ற ஒரு காட்டு பகுதியில் இறக்கி விட்டு...
அன்று முதல் ஆங்கிலேயர்களின் வேட்டை ஆரம்பம்...
அவனது சுக போக வாழ்க்கைக்கு நம்மவர்களின் அளப்பறியா துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.... நன்றி.. பயணத்தைப் பிறகு தொடர்வோம்..
Muthukrishnan Ipoh : நீண்ட ஒரு வரலாற்றுப் பதிவு... புறமலையில் நம் இனத்தவர்கள் ஏற்க்குறைய 2000 பேர் இறந்து இருக்கலாம் எனும் புள்ளிவிவரங்கள் உள்ளன...
காய்ச்சல், காச நோய், தோல் வியாதிகள், கடல் பயணத்தின் மயக்கத்தினால் உடல் நலிவு, சீத பேதி... இப்படி பாதிக்கப் பட்டவர்கள் புறமலையிலேயே தனி இடத்தில் ஒதுக்கப்பட்டு கண்டு காணாமல் போனதால் காலமாகி இருக்கிறார்கள்...
’கெலிங் வரலாற்றுச் சொல்’ நூலில் அன்பர்கள் அனைவரின் கருத்துகளும் சேர்த்துக் கொள்ளப்படும்... அதுவே நாம் விட்டுச் செல்லும் ஒரு வரலாற்று ஆவணமாக அமையட்டும்...
Thina Karan : கொசுக் கடிகளுக்கும் பாம்பு கடிகளுக்கும் தேள் கடிகளுக்கும்
சிலந்தி பூச்சிக் கடிகளுக்கும் பஞ்சமே இல்லாத கித்தா மரத் தோட்டங்கள். என்ன கனவுகளோடு வந்தார்களோ நம் முன்னோர்கள். அந்தக் கனவுகள் எல்லாம் கித்தா மரத்திற்கே தெரியும். அத்தனை வேதனைகளின் மத்தியிலும் ஒரு கனவு தீப்பிழம்பாய் எரிந்து கொண்டிருந்தது நம் முன்னோர்களுக்கு. இனி என் பிள்ளை எனைப் போல வேதனை படக்கூடாது.. என் பிள்ளை கஷ்டப் படக்கூடாது. என் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற கனவு. கஷ்டத்திலும் நம்மைப் படிக்க வைத்தார்கள். அந்த கனவுதான் நம் இனத்தில் இன்று மருத்துவர்களையும், வக்கீல்களையும், பொறியியலாளர்களையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்த்துவோம் நம் முன்னோர்களை. மே தின வாழ்த்துகள்.
Gunasegar Manickam : தோட்டப் புறத்தில் வாழ்ந்த அனுபவம் எனக்கும் உண்டு. பாட்டி, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்கும் ஆயாவாகவும், தாத்தா பால் தொழிற்சாலை தொழிலாளராகவும், பெரியம்மா பால்வெட்டு தொழிலாளியாகவும் மற்றும் பெரியப்பா தோட்ட நிர்வாகி பங்களாவில் தலைமை சமையற்காராகவும், புக்கிட் ரோத்தான் அருகிலுள்ள சுங்கை திங்கியில்...
Pon Vadivel : ஒவ்வொரு கித்தா மரமும் சொல்லும் கெத்தாக, என் கித்தா பாலை வெட்டி வெட்டி நாட்டை வளமாக்கியவன் தமிழன் தொழிலாளி என்று...
Mani Letchumanan : To all the indian generation in Malaysia. May God bless you all.
Ramakrishnan Suppiah : Those who forget history will be condemned by history.
Viji Nijtha : வணக்கம் ஐயா நெகிழ்ச்சியான பதிவு.
Muthukrishnan Ipoh : தலையில் வாளிகளைச் சுமந்து இருக்கிறார்கள்... கற்பனை செய்யும் போதே வேதனைகள் அலைமோதுகின்றன....
Melur Manoharan "அருமை..அருமை"...!
Murthy Devi Vereverenum : immathiri aivinai seinggendranara kurippa nam naddil aya unggalukku oru periya salute ninggal tamilarin peria POKKISAM (இம்மாதிரி ஆய்வினை செய்கின்றனரா? நம் நாட்டில் ஐயா உங்களுக்கு ஒரி பெரிய சலுயூட். நீங்கள் தமிழரின் பெரிய பொக்கிஷம்)
Muthukrishnan Ipoh : மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
Vejaya Kumaran : om nameshiwaaye
Muthukrishnan Ipoh : 🙏🙏
Thirukkural Mandram : வணக்கம் சார். நெகிழ்ச்சியான பதிவு.
Mathee Sai : அன்பின் மறு பெயர்
Ramaiah Paidiah : ஐயா. அந்த நினைவுகள் தங்களது எழுத்து ரப்பர் பால் போல
ஒட்டிக்கொண்டு இருக்கிறது.. நினைவில். நீங்கள் ஒரு அதிசய பாத்திரம் மாமா.
வாழ்த்துக்களுடன் ராம் ராமையா செலாயாங்.
Letchumanan Nadason : தலையில் தான் ரப்பர் பாலை சுமந்துப் போவார்கள் என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். படத்தில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எவ்வளவு வலிகளைத் தாங்கி இருக்கிறார்கள். பல அரிய, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நன்றி ஐயா.
Muthukrishnan Ipoh : ஏறக்குறைய ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு தலையில் பாலைச் சுமந்து இருக்கிறார்கள்...
Gunasegar Manickam : சுங்கை பூலோ தோட்டத்தில் வசித்து வந்தது இன்றும் பசுமையாக இருக்கிறது. அப்பொழுது நான் முதலாம் ஆண்டு முதல் படிவம் ஐந்து வரை பாட்டி தாத்தா வீட்டில் தான் வசித்து வந்தேன்.
சனிக்கிழமைகளில் மற்றும் பள்ளி விடுமுறை காலங்களிலும் பெரியம்மாவிற்கு உதவியாக பால் சேகரிக்கும் மங்கை சுத்தம் செய்வதற்காகவும் வடிந்தப் ரப்பர் பாலை சேகரிக்கவும் செல்வது உண்டு. 60-ஆம் ஆண்டுகளிலிந்து 70-ஆம் ஆண்டுகள் வரை மறக்க முடியாத அனுபவம் ஆகும்.
Gunasegar Manickam : கித்தா மரத்தின் நிர்வாண உண்மைகள், என் கடந்த கால புக்கிட் ரோத்தான், சுங்கை பூலோ தோட்ட வாசத்தை ஞாபகப் படுத்தியது ஐயா...
Venogobaal Kuppusamy : என்று தணியும் நம் தாகம்??
Ramaiah Paidiah >>> Jeyabalan Ramasamy: ஐயா. தங்களது வேட்கை சொல்லி முடியாத கவிதையாய் இருக்கிறது. மலேசிய வார இதழ் 'தென்றல்'லில் இதை பதிவு செய்ய முடியுமா? தங்களது அனுமதி எனது வெகுமதி. மகிழ்ச்சி.
- ராம் ராமையா செலாயாங்.
Puchong Siva : What To Do Sir, Feel Very Sad When Think Work Hard Indian Community In Malaysia Was BETRAYED & CHEATED By M. I. C. & THE SELFISH & POLITIC THIEF Name SAMY VELU.
Amirtharuoban Arr : Same scenario in Sri Lanka & South Africa but little different stories
Yanasegaran Manickam : என் பெற்றோர் உட்பட, குடும்பங்கள் அவ்வாறுதான் பினாங்கில் ரஜுலா கப்பல் மூலம் கொண்டு வரப் பட்டு நேராக சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கூலா தோட்டத்திற்கு கால் நடையாகவே நடக்க வைத்து அழைத்து செல்லப் பட்டனர்.
Mangala Gowri >>> Yanasegaran Manickam : என் முப்பாட்டனார் பினாங்கு (பிறை) வந்து சேர்ந்த ஆள்கட்டு கங்காணிதான். இன்றும் அவரது மகன் வயிற்று பேரன்கள் பினாங்கிலும் கூலிமிலும் உண்டு. கூலிம் கவிஞர் தமிழ்பித்தன்தான் அவர். இப்பொழுதும் வருடத்துக்கொரு முறை சாலம்பாரு முனீஸ்வரனை கும்பிட வருகிறோம்.
Muthukrishnan Ipoh : 1920-1930ஆம் ஆண்டுகளில் மாட்டுக் காடிகளில் கொண்டு போய் இருக்கிறார்கள்... நடக்க வைத்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்... கம்பிச் சடக்குகளில் நடக்க வைத்து இருக்கிறார்கள்... மிருகத் தனமாய் நடத்தி இருக்கிறார்கள்... உண்மைதாங்க ஐயா...
Indirani Rani Laddu : இந்த ஊரடங்கு அதுவும் மே 1-இல் அருமையான பகிர்வுகளை படித்து மகிழ்ந்தேன். நன்றி. பலதரப்பட்ட பிரச்சனைகள் மனதில் ரண கிழிசல்களை ஏறபடுத்தி விட்டன. தங்களின் நூல்களைக் கொண்டு கதைக்க விரும்புகிறேன். தொடர்பு எண்: 01110592413.
Thanirmalai Muthusamy : உண்மை தாங்க நண்பரே வாழ்த்துகள்!
Muthukrishnan Ipoh : வாழ்த்துகள் ஐயா...
Vani Yap : அருமை. பால் மரக் காட்டினிலே... தோட்டப்புற வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொருவக்கும் தெரியும். அங்கே அவர்கள் அனுபவித்த இன்னல்கள். சொல்லில் அடங்கா. உங்கள் பதிவில் சொல்லி உள்ள அத்தனை விசயங்களும் உண்மை... சஞ்சிக் கூலிகள் மற்றும் கிலிங் என்ற பெயரும் தான் மிச்சம். தோட்ட பாட்டாளிகள் என்ற கொடுமை ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம், நம் பண்பாடு வளர்ந்தது என்பதும் உண்மை. முக்கிய சிறப்பு தமிழ் பள்ளி நமது தேர்வாக அமைந்தது என்பதை மிக மகிழ்ச்சியாக கூறிக் கொண்டோம். தேவாரம், ஆலய வழிபாடு, விளையாட்டு அம்சங்கள், நல்ல பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர் வளர்ச்சி இப்படி பல அம்சங்கள் நல்லவையாக ... சுத்தமான ஆற்றுத் தண்ணீர், மழை நீர், எல்லாம் தோட்டத்தில் கிடைத்தவை. ஆதங்கம் இருப்பினும் சில பசுமைகள்.
Maha Lingam >>> Vani Yap : நன்றி..மா..
Vani Yap : மகிழ்ச்சி அண்ணா
Maha Lingam
Muthukrishnan Ipoh : தோட்டப்புற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு அந்த உண்மைகள் கண்டிப்பாகத் தெரியும்... இன்னல்கள் என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட முடியாது... கிலிங் என்று வசைபாடல்களையும் மறந்துவிட முடியாது... நல்ல நீண்ட பதிவு... அன்பர்கள் அனைவரின் கருத்துகளும் வலைதளத்தில் பதிவாகும்... நன்றிங்க சகோதரரே...
Jeyabalan Ramasamy : மேற்கண்ட வரலாற்றைச் சொல்லி நீதி கேட்கும் கவிதை...
நாங்களும் மண்ணின் மைந்தர்கள்
"""""""""""""""""""""""""""""""""""
எங்கள் மொழி
எங்கள் இனம்
அதுக்கும் மேலாக
இது எங்கள் தேசம்...
அவைகளே
எங்கள் உயிர் மூச்சாய்
வாழ்கை மந்திரமாய்
ஆனது
எங்கள் இனத்தின்
நான்கு தலைமுறையின்
ஆயுற் காலம்
இந்த தேசத்து வெற்றிக்கு
உரம் சேர்த்தது
எங்கள்
நாட்டுப் பற்றில்
குறையேதும் கண்டதாய் இல்லை
ஆட்சிக்கும் மன்னருக்கும்
நன்றிக் குறைந்ததாய்
இல்லை
எங்கள் வியர்வையில்
தேசம் வளர்ந்தது
ஒற்றுமை நிலைத்தது
மலேசிய மணம் வீசியது
எங்கள் உள்ளத்தின்
நாடிப் பிடித்துப் பார்த்தால்
அது தேச விசுவாசத்தை
அப்பட்டமாய் கூறும்
மண்டியிட்டு
மண்ணின் வாசத்தை
நுகர்ந்துப் பார்த்தால்
அது எங்கள் உழைப்பின் தன்மையை சொல்லிக் காட்டும்
எங்கள் பாட்டன் அப்பன்
சிந்திய இரத்தத்தின்
வாடையைச் சுமந்து நிற்கும்
எங்கள் தாய்மார்களின்
சகோதரிகளின்
கண்ணீர் சுரந்த உப்பின்
கரிப்பை காட்டி விடும்
அனைத்தும் என்ன ஆனது !!!
இன்று
எங்கள் வரலாறு
வேரறுக்கப்பட்டு
வீழ்ந்துக் கிடக்கின்றோம்
தேசப் பற்றை
இனத் தன்மானத்தை
உரசிப் பார்ப்பதில்
நாங்களே முதலாவதாய்
இருக்கின்றோம்
மலேசியத்தின்
ஓரத்தில் ஒதுக்கப்பட்டு
அனாதையாய் கிடக்கின்றோம்
எதுவாயினும்
எங்கள் உயிர்
எங்கள் உடல்
எங்கள் உணர்வு
அனைத்தும்
இந்த மண்ணுக்கே என்று
வாழ்ந்து மடிவோம்
அதை மட்டும்
பறித்து விட வேண்டாம் .....
ஒன்றை மறந்து
விடாதீர்கள் .....
நாங்களும்
இந்த மண்ணின்
மைந்தர்களே .....
✍🏽இராம.ஜெயபாலன்
(மலேசிய தமிழர்கள் வரலாறு காலத்தால் மறக்கப்பட்ட வரலாறு .... அது ஒரு சோகம்)
Muthukrishnan Ipoh : அருமையான கவிதை ஐயா... உங்கள் கவிதையும் அன்பர்களின் கருத்துகளும் கெலிங் வரலாற்று நூலில் கண்டிப்பாக இடம் பெறும்... மிக மிக நன்றிங்க ஐயா...
Jeyabalan Ramasamy : ஐயா வணக்கம்..
உங்களின் வரலாற்றை படித்ததும் எனக்கு இந்த என்னுடைய கவிதை நினைவுக்கு வந்தது.. கருத்தை எழுதுவதை விட இந்த கவிதை இன்னும் சிப்பாக அமையும் என்பதனாலேயே இந்த கவிதையை பதிவு செய்தேன்..
எனக்காக நீங்கள் எழுதிய பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.. புத்தகத்தில் போடுவதாக சொன்னீர்கள்.. அதற்காக என் வணக்கமும் நன்றியும் ஐயா...
இன்னொன்று ஐயா.. இன்னொரு கவிதையும் பதிவிடுகிறேன்.. அதையும் பாருங்களேன்.. நன்றி ஐயா...
Jeyabalan Ramasamy : எங்கள் தேசம்
இந்த தேசம்
எங்கள் தாயகம்
நாங்கள்
வந்தேறிகள் அல்ல
இந்த தேசத்தின் சுதேசிகள்
தேசத் தியாகிகளின்
குலக் கொழுந்துகள்
தேசத்தின் வளர்ச்சியை
உணர்ந்து உற்று நோக்குங்கள்
அனைத்தும் அது சொல்லும்
இந்த மண்ணை
நுகர்ந்துப் பார்த்தால்
அது எங்கள் வரலாற்று
சுவடுகளைக் காட்டும்
எங்கள்
மூதாதையர்கள்
புதைக்கப்படாமல்
விதைக்கப்பட்டுள்ளார்கள்
இந்த மண்ணில் என்பது
தெரியும்
அவர்களின் சதைகள்
இரத்தங்கள்
வியர்வைத் துளிகள்
இந்த மண்ணுக்கு
உரமாகி கிடப்பது புரியும்
எங்கள்
உழைப்பின் தாக்கத்தை
அப்பட்டமாக காண முடிகிறது
இந்த தேசத்தின் வளர்ச்சியில்
மண்ணின் வாசத்தில்
எங்கள் விசுவாசம் கலந்தது
தேசத்திற்காக
எங்கள் சுவாசமும் கரைந்தது
காலம் காலமாய்....
எங்களை
பிரித்து பார்க்காதீர்கள்
ஓரங்கட்டாதீர்கள்
தேசத்தின்
வளர்ச்சிப் பாதையில்
முன் நிற்போம்
தோல் கொடுத்து
உங்களுடன் கரம் கோர்த்து
ஏன்னென்றால்
இது எங்கள் தேசம்
நாங்கள்
தேசத்தின் மைந்தர்கள்....
✍🏽இராம.ஜெயபாலன்
Muthukrishnan Ipoh : அருமை... அருமை... உயிரோட்டமான கவிதை... இலயித்துப் போகிறேன்...
// தேசத் தியாகிகளின்
குலக் கொழுந்துகள் //
அருமையான வரிகள். நன்றிங்க.
Jeyabalan Ramasamy : உங்கள் ஆதரவுக்கு மனமுவந்த நன்றிங்க ஐயா...
Murali Rajoo : கண் கலங்கிவிட்டேன். சோம்பேரி நாதாரிகள் நம்மை இன்னும் ஆட்சி செய்வது தான் வேதணையாக உள்ளது. இந்தியர்களின் தோல்விக்கும் ம.இ.கா.வே காரணம். பணத்திற்கு நாக்கை தொங்கப் போட்டு நம் இனத்தை விற்று விட்டார்கள் பாவிகள்.
Panjini Thiru : அருமையான கருத்துப் பதிவு ஐயா. நானும் தோட்டப் புறத்தில் பிறந்து பல இன்னல்களை அனுபவித்தவள். பெற்றோரின் அயரா உழைப்பு, தொடர்ச்சியான ஊக்குவிப்பு, பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி ஆகிய பண்புகள் இன்று எங்களை உயர்த்தி உள்ளன. தங்களது படைப்பு எனது கடந்த காலத்தை ஞாபகப் படுத்தியது. வாழ்க தங்களின் அளப்பரிய அறப்பணி. வாழ்த்துகள் ஐயா
Indirani Rani Laddu : மாற்றான் தோட்ட மல்லிகை அதிகம் மணக்கும் என்பதை அண்டை வீட்டு கறையான் அறியும் போலும். எமது பொக்கிஷங்களைப் பறித்து (அரித்து) விட்டன. குறிப்பாக பால்காட்டினிலே நாவல் 5-ஆம் படிவத்தில் படித்தது. அன்றைய மாணவ மாணவியர் தங்களை கதைமாந்தர்களாவே மாறச் செய்த காவியம். தோட்ட வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டியது. மலாக்கா வாழ் என்னுடன் தொடர்பு கொள்வீர்கள் (wtsapps) என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நன்றி கலந்த வணக்கம்.
Kogilan Muthiah : நமது முன்னோர்கள் சிந்திய இரத்தம்... சரித்திரமாக நம் கண் முன்னே... இன்றைய தலைமுறைக்கு எட்டாத தூரம்... நாகரிகம் சொல்லி சரித்திரத்தை புறம் தள்ளும் நாம் சமுதாயம். ஆணித் தரமாக இந்த தலைமுறைக்கு பதிய வைக்க வேண்டும். வெறும் சொல் அல்ல. சரித்திரம்
பதிய வைப்பது எப்படி
காண்ட
மு.வரதராசு எழுதிய ‘மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் வரலாறும் பிரச்சினைகளும்’ படித்தேன். தூரோகம்தான்.
நான் இதுவரை தேடிய 4, 5, 6, 7 சொல்லாத துயரங்களுடன் மலையக மண்ணில் மறைந்தது தான் மிச்சம்
1) என் மகள்/மகன்
2) நான்
3) முத்தையா (தாத்தா)
4) முனியாண்டி (பாட்டன்)
5) வைத்தி (பூட்டன்)
6) பணயன் (ஓட்டன்)
7) அழகுமலை (பரன்)

தனி மனித மாற்றம் ஒன்று மற்றுமே சமுதாயத்தில் மாற்றத்தைக் கொணரும்.இல்லையேல் நவீன யுகமாயினும் பழைய சமுதாயமாகவே இருந்திடுவோம்
பதிலளிநீக்கு