23 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு சிப்பாய் சாலை - 1869

பிரான்சிஸ் லைட் (Francis Light). பினாங்கைத் தோற்றுவித்த ஆங்கிலேயர். காடுகள் நிறைந்த தீவைக் கவின்மிகு தீவாய் மாற்றிக் காட்டிய மனிதர். அப்போது அவர் கிழக்கிந்திய கம்பெனியில் (East India Company) சேவை செய்து வந்தார். 1786-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து பினாங்கிற்கு வரும் போது 100-க்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்களையும்; 40 தமிழர்களையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

Francis Light. The Englishman who transformed the island of Penang into an island of paradise. He was then serving in the East India Company. He brought along more than 100 Indian sepoys from Chennai to Penang in 1786. He also brought 40 Tamils with him.

1786-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயக் காலனித்துக் காலத்தில் மலாயா தமிழர்கள் மலாயாவுக்கு வந்து உள்ளார்கள். பினாங்கு கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்கள். காட்டுப் புலிகளும்; காட்டுச் சிறுத்தைகளும்; காட்டுக் கரடிகளும் வாழ்ந்த பினாங்கு காடுகளைத் துப்புரவு செய்தார்கள். சாலைகள் அமைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டில் வந்தேறிகள் அல்ல. இவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் மலாயா தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது பெரிய கேலிகூத்து.

The Indians ​​came to Malaya as early as 1786 during colonial period. They were engaged in infra structure works in Penang. They cleared the Penang Island forests where wild tigers; wild leopards; wild bears lived for milleniums. They made jungle tracks and paved roads in Penang. They are not pendatangs in this country. It is a great irony to use such a term.

1765-ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த ஜோர்டாயின் சுலிவான் டி சூசா (Jourdain, Sulivan & Desouza) எனும் வணிக நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அவருக்குச் சென்னை நகரம் நன்றாகவே அறிமுகமானது. அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பீட்வெல் (Speedwell) எனும் கப்பலையும் வாடகைக்கு எடுத்தார்.

In 1765 Francis Light secured command of a ship belonging to Madras trading firm Jourdain, Sulivan & Desouza the Speedwell. At that time he was well acquainted with the city of Chennai.

தாய்லாந்தின் புக்கெட் மாநிலத்தில் இருந்த தாலாங் (Thalang) துறைமுகத்தில் ஒரு வணிகத் தளத்தையும் உருவாக்கி இருக்கிறார். தாலாங் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு, கோல கேடாவில் ஒரு வர்த்தக தளத்தையும் அமைத்தார். கெடா சுல்தானுடன் நல்ல செல்வாக்கு பெற்றார்.

He set up a trading base in Thalang in Siam (also known as Salang, now Phuket province, in Thailand). Basing himself in Thalang, he set up a trading post in Kuala Kedah. He soon gained an influential position with the Sultan of Kedah.

சென்னையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்களின் பாதுகாப்பிற்கு 1677-ஆம் ஆண்டிலேயே இந்தியச் சிப்பாய்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முதன்முதலில் அந்த ஆண்டில் தான் இந்தியச் சிப்பாய்ப் படைகள் உருவாகின. சென்னை, பம்பாய், பஞ்சாப்பில் இருந்து சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப் படடனர்.

The East India Company at Chennai used Indian sepoy soldiers for their defenses as early as 1677. It was in that year that the Indian Sepoy Army was first formed. Sepoy soldiers from Chennai, Bombay and Punjab were selected and trained.

அந்த வகையில் பிரான்சிஸ் லைட், பினாங்கிற்கு வரும் போது இந்தியச் சிப்பாய்களையும் அழைத்து வந்து இருக்கிறார். இந்தச் சிப்பாய்கள் தங்குவதற்கு பினாங்கில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்குப் பெயர் தான் சிப்பாய் லைன்ஸ் சாலை (Sepoy Lines Road).

Francis Light brought Indian soldiers with him when he arrived in Penang. A site was chosen in Penang for the sepoy soldiers to stay. The place now called Sepoy Lines Road.

அங்கு அவர்களுக்கு படை வீடுகள் (barracks) அமைக்கப் பட்டன. இந்தியச் சிப்பாய்கள் வெகு காலமாகப் பினாங்கில் சேவை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பினாங்குத் தமிழர்கள் நீண்ட காலமாக உதவிகள் செய்து இருக்கிறார்கள்.

Barracks were set up for sepoy soldiers in Penang. Indian sepoy soldiers have been served in Penang for a long time. The Penang Indian Tamils had helped sepoy soldiers for a long time.

1800-ஆம் ஆண்டுகளில் சிப்பாய் லைன்ஸ் சாலை ஒரு கருமண் சாலை. மாட்டு வண்டிகள் பயணித்த சாலை. அந்தச் சாலையைத் தான் பினாங்குத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Sepoy Lines Road was a black soil road then in the 1800's. Cattle carts used the road to travel. Penang Tamils also used that road.

ஜார்ஜ் டவுன் துறைமுகத்தில் இருந்து இந்தியச் சிப்பாய்களின் படை வீடுகளுக்கு மாட்டு வண்டிகளில் பினாங்குத் தமிழர்கள் பொருட்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்போது எடுத்த படத்தைத் தான் இப்போது பார்க்கிறோம்.

Penang Tamils carried goods in cattle carts from the Port of Georgetown to the homes of Indian sepoy soldiers. We can see the picture taken then.

அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்து பின்புறத்தில் இந்தியச் சிப்பாய்களின் படைவீடுகள் இருப்பதையும் கவனியுங்கள். புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளை வேட்டி; முண்டாசுகளுடன் காட்சி தருகிறார்கள். சாமான்யக் கூலி வேலை செய்பவர்களின் உடைகள் அவ்வளவு தூய்மையாக இருக்காது.

Also notice the barracks of Indian soldiers in the back from where the Indian Tamils stand. They show up with white tothis and mundas for a shot. Usually the clothes of ordinary laborers are not as clean as that.

சேவையில் இருக்கும் இந்தியச் சிப்பாய்கள் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குக் கடினமானப் பயிற்சிகள் மிகவும் அவசியம். அது மட்டும் அல்ல. தொடர்ந்து உடல்ப் பயிற்சிகள்; தொடர்ந்து ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அங்கு இருந்த பிரிட்டிஷ் இராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Indian sepoy soldiers in service must keep their body fit. It requires a lot of hard physical training. And not only that. Regular physical exercises; Regular weapons training should be carried out. As well as conducting joint exercises with the British troops there.

அந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதற்குப் படைவீடுகளுக்கு அருகில் இருந்த திடலைப் பயன்படுத்தினார்கள். மழைக் காலங்களில் அந்தத் திடலில் தண்ணீர் தேங்குவது வழக்கம். ஏன் என்றால் படைவீடுகள் இருந்த பகுதி ஒரு சதுப்பு நிலமாகும். திடலில் வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் தங்குவது வழக்கம். பாம்புகளும் பூச்சிகளும் கொசுக்களும் குடும்பம் குடித்தனம் நடத்துவதும் வழக்கம்.

Indian sepoy soldiers used the field near the barracks to carry out their exercises. During the rainy season, the field usually flooded. Because the area where the barracks built were was a swampy area. It is common for stagnant rainwater during floods. Snakes, insects and mosquitoes are also common in the swampy field area.

அந்தக் காலக் கட்டத்தில் பினாங்குத் தீவை, மலேரியா கொசுக்களின் தாயகம் என்றும் சொல்வார்கள். பினாங்கின் பெரும்பகுதி சதுப்பு நிலமாக இருந்ததால் நிறையவே குளம் குட்டைகள். நிறையவே அருவி ஏரிகள். நிறையவே பச்சைப் பாசா காடுகள். மலேரியா கொசுக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

At that time, Penang Island was also known as the home of malarial mosquitoes. Most of Penang Island was swampy in those days and there were a lot of ponds and pools. Also a lot of waterfall lakes; a lot of green mangaroove forests. Not to mention the malaria mosquitoes.

பினாங்கில் மட்டும் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் மலேரியாக் கொல்லி நோயினால் 15 ஆயிரம் பேர் இறந்தார்கள். பினாங்கில் மட்டும் அல்ல மலாயா முழுமைக்கும் இருந்த ரப்பர் காபித் தோட்டங்களில் பல்லாயிரம் தமிழர்கள் மலேரியாவினால் இறந்தார்கள்.

In Penang alone, 15,000 people died of malaria in the 18th; 19th centuries. Tens of thousands of Tamils died of malaria not only in Penang but in rubber coffee plantations throughout Malaya.

ரொம்ப வேண்டாம். பினாங்கை உருவாக்கிய பிரான்சிஸ் லைட் அவர்களே மலேரியா நோயினால் தானே இறந்து போனார். அவர் இறக்கும் போது வயது 53. 1784 அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி காலமானார். சின்ன வயது தான். மலேரியா கொசு கடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் கொஞ்சம் கூடுதலான நாட்கள் வாழ்ந்து இருக்க முடியும்.

Francis Light, the founder of Penang, died of malaria. He was 53 years old when he died. He died on October 21, 1784. He could have lived a couple of more years more if not the malarial mosquitoes.

அவருடைய கல்லறை பினாங்கு, ஜார்ஜ் டவுன் நார்த்தாம் சாலையில் (Northam Road) உள்ள பழைய புரடெஸ்டண்ட் இடுகாட்டில் உள்ளது. நார்த்தாம் சாலை இப்போது ஜாலான் சுல்தான் அகமட் ஷா (Jalan Sultan Ahmad Shah) என்று அழைக்கப்படுகிறது.

His grave is in the Old Protestant Cemetery on Northam Road, Georgetown, Penang. Northam Road is now known as Jalan Sultan Ahmad Shah.

அந்தக் குண்டு குழிகளில் கருமண்ணைப் போட்டு நிரப்புவது தமிழர்களின் வேலை. திடலில் கருமண் குவியல்கள் இருப்பதைக் காணலாம். மாட்டு வண்டிகளின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட கருமண். அதிகச் சுமையான கருமண்ணை ஏற்றி வந்ததால் அழுத்தமான சாலைகளிலும் அழுத்தமான வண்டிச் சக்கரங்களின் வடுக்கள்.

It is the job of the Tamils to fill the pits on the roads with fresh earth. You can see the black piles of earth at the field. Black soils were brought by cattle carts. Wheel marks also can be seen on the roads due to heavy loadings of black soil.

1869-ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் அல்பிரட், பினாங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ஒரு புகைப்படத் தொகுப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. அந்தத் தொகுப்பில் பினாங்குத் தமிழர்களின் இந்தப் படமும் சேர்க்கப்பட்டு இருந்தது.

In 1869 Prince Alfred of England visited Penang. He was then presented with a photo album. This picture of Penang Tamils was also included in that album collection.

புகைப்பட விவரங்கள்:
Photo details:

தலைப்பு:
Title: Sepoy Lines Road, Penang 1869

இப்போதைய இடம்:
Current location: Sepoy Lines Road in Penang

எடுக்கப்பட்ட காலம்:
Photo taken: 1869

படத்தின் அளவு:
Dimensions: 15.3 x 20.9 cm

படம் எடுத்தவர்:
Picture taken by: Kristen Feilberg (1839-1919)

காப்பகம்:
Archives: The Royal Collection Trust Picture Library, London

இந்தச் சிப்பாய் சாலையை பற்றி மேலும் அதிகமான தகவல்கள் உள்ளன. பிரிட்டிஷ் இராணுவம்; கேப்டன் ஸ்பீடி (Captain Speedy); போலோ திடல்; ஆப்பிரிக்காவின் பாவோபாப் மரம் (Baobab Tree) நடப்பட்ட தகவல்கள் உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.12..2020

சான்றுகள்:
References:

1. Khoo S.N., 2007. Streets of George Town, Penang. Areca Books.

2. Cheah J. S., 2013. Penang 500 Early Postcards. Editions Didier Millet.

3. https://penang.fandom.com/wiki/Sepoy_Lines_Road


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக