கித்தா காட்டுல காசும் பணமும் கொத்து கொத்தா காய்ச்சு தொங்கும்... மேட்டு
மரத்தில ஒத்தை ஒத்தை வெள்ளியா தொங்கும்... பக்கத்து மரத்துல அஞ்சு அஞ்சு
வெள்ளியா தொங்கும்... பாசா மரத்துல பத்து பத்து வெள்ளியா தொங்கும்... அத்தாப்பு காட்டு ஓரமா தான் பணம் கொட்டுற மரம் ரொம்பவா தெரியும்... தேடிப்
புடிக்கிறது தான் உங்க சொக்கா புடிக்கிற சோலி...
பணம்
காய்ச்சுற மரம் எல்லாம் மலாயா காட்டுல மட்டும் தான் இருக்கு... உலகத்துல வேற எங்கேயும் இல்ல... என்ன
ஒன்னு... அந்த காசை எல்லாம் பொறுக்கி எடுக்கிறது தான் அம்புட்டு லெச்ச
புடிச்ச வேலை...
சீனக்காரங்க சோம்பேறி பசங்க... பாசா காடுனா பயந்து ஓடுவானுங்க... மீனு சுட்டுத் திங்கிறவங்களுக்கு உடம்பு வளையாது... நீங்க வாங்க... வருசம் பூரா காசை பாக்கலாம்... சொல்லி வச்சு ஒரே வருசத்துல... ஒரே வருசம் தான்... அப்புறம் கையில ரெண்டு காசோட திரும்பி வந்துடலாம்...
இந்த மாதிரி பேச்சை நம்பி மலாயாவுக்கு வந்தவர்கள் கடைசியில் வாளிகளைத் தலையில் தூக்கிச் சுமந்த கதை... ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத சோகக் கதை... படத்தைப் பாருங்கள்...
1900-ஆம் ஆண்டுகளில் நம்ப தமிழ்ப் பெண்கள்... அப்பிராணி ஊமைகளாய் வரிசை பிடித்து நிற்கிறார்கள்... நம் இனத்தை எப்படி எல்லாம் வேதனைப் படுத்தி இருக்கிறார்கள்... கடைசியில் கெலிங் எனும் கண்ராவிச் சொல்லில் கண்கலங்கித் தவிக்கிறோம். காயங்களின் வடுக்களில் வேதனையின் விசும்பல்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.07.2021

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக