இணைய உலகில் அவர் அவர் தனித் தனியாக வலை மனைகளை அமைத்துக் கொள்கிறார்கள். மனதில் பட்டதை எழுதுகின்றார்கள். ஒரு பழமொழி இருக்கிறது. கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்; கண்டதைத் தின்றவன் சோம்பேறி ஆவான். அந்த மாதிரி, இந்த வலைமனைகளினால் சிலருக்கு வம்புகள். சிலருக்கு வாழ்த்துகள். இந்த மாதிரியான இயல்புகள் இன்றைய வாழ்க்கையின் ஒரு புதிய பரிமாணமாகவும் அமைந்து விட்டது. ஒன்றும் செய்ய முடியாது. படியுங்கள்.
இந்த வலை மனை உருவாக்கம் என்பது ஓர் உலகளாவிய இணையப் புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஆக, இணையம் உலக மக்களை விரல் நுனிக்குள் கொண்டு வந்து விடுகிறது. Blogs எனும் சொல் Web log எனும் சொற்களில் இருந்து இணைக்கப் பட்டது. இந்த வலை மனைகள் அமைப்பது, பராமரிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அந்த வலை மனைகளில் கருத்துகளை எழுதுவதும், அவை தொடர்பான தகவல்களை நண்பர்களுக்கு அனுப்புவதும் மிகவும் எளிதான செயல்களாக மாறிவிட்டன.
வலை மனைகளை உருவாக்குவதில் நண்பர்களிடையே நல்ல ஒரு நலமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய வலை மனை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்குப் பல வழிகளில் முயற்சியும் செய்கின்றனர்.
இவர்களுக்கு உதவ பல தளங்கள் பற்பல நிரலிகளை இலவசமாக வழங்குகின்றன. அவற்றில் மிகச் சிறந்தவை என்பது என்னுடைய கருத்து.
http://www.allblogtools.com/
http://www.bloggertools.org/
இந்தத் தளங்களில் நுழைந்தவுடன் அவை நம்மை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. பலவகையான சாதனங்கள், உதவிகள் மற்றும் தகவல்கள். ஒரு வலை மனை அமைக்க போதுமானவை இங்கே கிடைக்கின்றன.
இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு பட்டியல் இருக்கும். அங்கே ஒரு நீலப் பயணப் பட்டியல் தரப்பட்டுள்ளது.
நீலப் பயணப் பட்டியலில் கிடைக்கும் வகைகள்.
1. Blogger Templates: வலை மனைகளை அமைக்க தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு, என்ன வண்ணங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனைச் சொடுக்கு செய்தால் தொடர்பு ஒன்று கிடைக்கும். இந்தத் தொடர்பைச் சொடுக்கு செய்தால் மிக அழகாக வடிவு அமைக்கப் பட்ட நல்ல பல நகல்களைப் பார்க்கலாம். பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.
2. Blogger Tricks: இந்தப் பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான நெளிவு சுழிவுகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப் படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலைகளை எளிதாக்குகின்றன.
Blogger Tools: இதில் நான்கு வகையான சாதனங்கள் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, a signature generator, a static image generator, மற்றும் a HTML color code generator ஆகும். அனைத்தையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.
ஆனால் வலை மனைகளை வண்ண மயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இருந்தால் இதனைப் பயன்படுத்தலாம்.
4. Blogger Falling Objects : உங்கள் வலை மனையில் நட்சத்திரங்கள், அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைய வேண்டும். அதற்கு ஏற்றவாறு இந்தப் பிரிவு வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.
இதைக் கட்டாயமாக உங்கள் வலை மனைகளில் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்தப் பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
5.Glitters: இந்தப் பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் படங்கள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து வலை மனையில் இணைத்துக் கொள்ளலாம்.
6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்களை உங்கள் வலை மனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்தப் பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் கோப்புகளைத் தருகிறது.
Custom-work-iconமேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் அதன் பிரிவுகளைச் சேர்ந்தவை. இந்தத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். இன்னும் என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே வலை மனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று சுயமாக வல மனை அமைக்கத் தொடங்கலாம். இல்லாதவர்கள் தங்கள் வலை மனைகளுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். அமைத்து சமைத்த பிறகு ஒரு கடிதம் எழுதுங்கள். அனிமேஷன் கோப்புகளைத் தருகிறது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் அதன் பிரிவுகளைச் சேர்ந்தவை. இந்தத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். இன்னும் என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: http://senthilvayal.wordpress.com

பயன் தரும் பதிவு
பதிலளிநீக்குunggal sevai engalukku tevai..vaaltukel..
பதிலளிநீக்கு