11 March 2012

கணினியும் நீங்களும் – 132


எஸ்.ரகுநாதன் ragun@streamyx.com
கே: என்னுடைய கணினியில் தமிழில் டைப் செய்வது எப்படி? எங்கே இருந்து தமிழ் நிரலி இலவசமாகக் கிடைக்கும்?

ப: உங்களுடைய தமிழ் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். NHM எனும் நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் கணினியில் அதைப் பதிக்க வேண்டும். பதித்தல் என்றால் Install செய்தல். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

NHM Writer செயலியைப்  பதிவு எனும் Install செய்த பின்னர்  ஒரு மணியின் சின்னம் ஆகக் கீழே உள்ள பணிப்பட்டையில் தோன்றும். அதை  வலது சொடுக்கு செய்யுங்கள். Enable windows Text Services என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்து, Start automatically When Starting Windows என்பதையும் சொடுக்கி விடுங்கள்.

அந்த வகையில் கணினி தொடங்கும் போதே என்.எச்.எம். செயலியும் தொடங்கும். பணிப்பட்டையில் தோன்றும் மணிச்சின்னத்தை இடது சொடுக்கு செய்யவும். அதில்
Tamil / Phonetic / Unicode என்பதை மட்டும் சரி என்று சொடுக்கி விடுங்கள். மற்றவற்றை நீக்கி விடுங்கள். Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் ஒரே சமயத்தில் தட்டி விடுங்கள். மணிச்சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்ப்டி என்றால் தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று அர்த்தம். மணிச்சின்னம் வெள்ளி நிறத்தில் இருந்தால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம் என்று அர்த்தம். ஏதும் பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். மலேசியாவில் உள்ள தமிழர்களின் வீட்டில் இருக்கும் கணினிகளில் தமிழ் தட்டச்சு இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசைகள்.குமாரி. லோகாஷினி நாயுடு, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: என் தாயாருக்கு வயது 59. அண்மையில்தான் கணினியில் டைப் செய்ய கற்று வருகிறார். நானும் என் தங்கையும் சொல்லித் தருகிறோம். அவருக்கு கண் பார்வை கொஞ்சம் குறைவு. எழுத்துகளை உற்று உற்றுப் பார்க்கிறார். கண் பார்வை மேலும் பாதித்து விடுமோ என்று பயப்படுகிறோம். ஆனால், அவர் கவலைப்படுவதாக இல்லை. கணினியின் முன்னாலேயே உட்கார்ந்து கொள்கிறார். திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க குறுக்கவழி இருக்கிறதா?
ப: உங்கள் அம்மாவுக்கு வயது 59. இந்த வயதில் கணினி பற்றி படிக்க ஆசைப்படுகிறார். அவரைப் பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் உலகத்தைக் கணினிதான் கட்டி ஆளப் போகிறது என்று நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். கணினியைப் படியுங்கள், படியுங்கள் என்று சந்தனம், ஜவ்வது பூசுகிறேன். சிலர் கேட்கிறார்கள். பலர் முறைக்கிறார்கள்.

அது எல்லாம் அவர்களுக்கு முக்கியம் இல்லை. ஜெயிக்கப் போவது யாரு? அசத்தப் போவது யாரு? அது ஒரு கோடியின் குரல் என்று ஆளாளுக்குச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.


50, 60 வயதுகளைத் தாண்டியவர்களுக்கு கண் பார்வையில் தொய்வு நிலை ஏற்படுவது இயற்கை. இதில் என்னைப் போன்றவர்கள் கணினியைத் தொடர்ந்தால் போல பயன்படுத்தினால் கண் பார்வை கண்டிப்பாக பாதிப்படையும். மருத்துவரைப் பார்த்து கண்ணாடியின் பார்வைத் திறனைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு வேறு ஓர் இலகு முறை உள்ளது. கணினித்திரையில் உள்ளவற்றைப் பெரிதுபடுத்திப் பார்க்க Control பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனையும் அழுத்துங்கள். திரையில் உள்ளவை பெரிதாகும். அதே போல  சிறிது படுத்த Control பட்டனை அழுத்திக் கொண்டு - பட்டனை அழுத்துங்கள். அல்லது Control பட்டனை அழுத்திக் கொண்டே சுழலியில் உள்ள சக்கரத்தை முன்பக்கம் நகர்த்தினால் திரை பெரிதாகும். Control பட்டனை அழுத்தியவாறு சுழலியின் சக்கரத்தை பின்பக்கம் நகர்த்தினால் திரை சிறியதாகும். 
இது ஒரு தற்காலிக நிவாரணமே. மருத்துவரைப் பார்த்து அவருடைய கருத்துகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

2 comments:

  1. வணக்கம் அன்பரே facebook googleplus இவைகளில் கணக்கு வைத்துள்ளேன்,ஆனால் எப்படி நண்பர்களை பெறுவது?எப்படி நாம் படித்ததையோ or ஒரு லிங்க் இவைகளையோ மேற்கண்ட தளங்களில் அல்லது ஜிமெயிலில் இணைப்பது?தயவு செய்து உதவுங்கள்

    ReplyDelete
  2. கணினி சம்பந்தமாக தாங்கள் ஆற்றும்பணி மிகவும் மேலானது
    உங்களுக் இனியவழ்துககள்

    ReplyDelete