20 December 2012

கேமரன் மலை அழிகிறது

-ஜே.சிம்மாதிரி,
பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012.

மலேசியக்கினி இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

சிம்மாதிரி
மக்கள் தொண்டன் சிம்மாதிரி
ேசிய  நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை.

கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு முழுமூச்சாக அல்லும் பகலுமாக பாடுபடுகிறது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கம்.

ஆம்! கேமரன் மலைக் காடுகள் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்ற. காடுகளை வெட்டி அழிப்பவர்கள், உள்நாட்டினர் அல்ல. வெளிநாட்டுத் தொழிலாளர்களான வங்களாதேசிகளும் மியான்மார் வாசிகளும் ஆகும்.

ந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்து காடுகளை அழிப்பது அரசாங்க மாவட்ட நில துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளே. இதனை மாநில மந்திரி பெசாரே ஒப்புக் கொண்டுள்ளார். (The Star – 12.10.2012)


அழிக்கப்படும் இவ்வகை காடுகளை இங்குள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு ஊழியர்கள் ‘விற்று’ விடுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு இயற்கையான சூழிநிலைகள் மாற்றம் கண்டு; குளிர்ச்சிக்குப் பாதகம் விளைவது மட்டும் இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் பல புகார்கள் செய்தும் எவ்வித பலனுமில்லை. தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கூறிவிட்டனர். சுற்றுச் சூழல் துறையிடம் புகார் செய்யப்பட்டது, அவர்களும் கைவிரித்துவிட்டனர்.

இவ்வகையில் இதே ஆட்சி நீடிக்குமானால் இன்னும் ஓராண்டில் கேமரன் மலை தரைமட்டமாகிவிடும். அப்புறம், அழுதோ புலம்பியோ கதறியோ எந்த பயனும் இல்லை. கேமரன் மலையை எப்படி காப்பாற்றுவு என்று புரியாமல் தவிக்கிறோம்.

ொழிகள்


singam wrote on 18 December, 2012, 19:05

என்ன சார் கொடுமை இது. குளிர்ச்ச்சிக்கு பேர் போன கேமரன் மலையை அழிக்க இந்த பாரிசான் அரசிற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை. கேமரன் மலையை காப்பாற்ற ஒரே வழி பாரிசானை தூக்கி எறிவதுதான்.

KODISVARAN wrote on 18 December, 2012, 19:29

அதிகாரிகள் பணம் பண்ணுவதற்கு ஏதோ சில வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்! தரை மட்டமானால் தாரை தம்பட்டம் அடித்தா நாம் அழ முடியும்!


puchong samy . wrote on 19 December, 2012, 6:40

இயற்கை அளித்த செல்வம் கேமரன் மலை காடுகள்!காடுகள் தான் அஸ்லி மக்களின் பிழைப்பு!காடுகளை அழித்தால்அஸ்லி மக்களின் பிழைப்பு நாறிடுமே!அஸ்லிகள் BN னுக்கு ஒட்டு போடுவார்களா?Marra Tamilan wrote on 19 December, 2012, 9:44


அய்யா இந்த விஷயதை கையாள நடப்பு அரசாங்கதுக்கு நிச்சயம் துப்பில்லை. காடுகள் கண்டிப்பாக பாதுககாகக் படவேண்டும். இதற்கு சட்ட நடவடிக்கை எதேனும் எடுக்க முடியாதா? செம்பருதியின் சட்ட நடவடிக்கை குழு இதற்கு ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்.

·

S. Mani wrote on 19 December, 2012, 11:17

கேமரன்மலையில் குளிர்ச்சி குறைவது ஒரு பக்கம் இருக்கட்டும், அங்கே அதிகளவில் இந்தியர்கள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த அம்னோகாரனுங்களுக்கு பொறாமையா இருக்கு. இந்தியர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேருவது இவனுங்களுக்கு புடிக்காது. நம் இனத்தை அழிப்பதில்தான் இவனுங்க குறிக்கோள்

·

kamapo wrote on 19 December, 2012, 16:36

தரைமட்டம் மட்டும் இல்லை … முடிந்தால் பெரிய குளமே தோண்டி விடுவார்கள் இந்தத திருட்டு அதிகாரிகள்….! நொண்டிச்சாக்குகள் ஆயிரம்…! கண எதிரே காடுகளை வெட்டுபவர்களைப் பிடிக்க முடியாதா? உண்மையிலேயே இது Malaysiaவில்தான் Boleh.!!!! DO, ADOs,.SOs, polis, game-wardens, forest offficers, etc etc.தண்டசம்பளமா? Accountability..??!! அதுசரி, illegal ஆக அழிக்கப்பட்ட நிலங்களை பின்னர் யாரும் பயன் படுத்துவது இல்லையா? அவர்களை பிடித்தால் எல்லாம் தெரிந்துவிடுமே..!! அதனால்தான் அவர்களை பிடிப்பது இல்லை போலும்…!!!


singam wrote on 19 December, 2012, 17:45


 உண்மை Mr .kamapo வேலியே பயிரை மேய்கிறது. காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து எதிர்கட்சியினர் அண்மையில் ஒரு மறியலை  நடத்தியதாக அறிந்தேன். வாழ்த்துக்கள். காடுகள் அழிக்கப்  படுவதை எதிர்த்து அவ்வூர் MP தேவமணி, மூச்சே விடுவதில்லை. ஏன் ?    

VGK KUANTAN wrote on 20 December, 2012, 12:00

 கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே!!!உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே ?? சொந்த தொகுதி பிரச்சினையை கவனிக்க முடியாதவர்
சிப்பாங்கில் சாமீ மேடைக்கு என்ன புடுங்குகிறார். இதைத்தான் தமிழில் ‘வேலை இல்லாதவன் அம்ப ……….ன் எதையோ புடிச்சு சிறைச்சனாம்’ என்று சொல்வார்கள்.

கேமரன் மலை இயற்கை சூழல் காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தான் ஒரே வழி. ஆகவே கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே அச்சமின்றி எதிர் கட்சிக்கு வாக்களியுங்கள்.

No comments:

Post a Comment