19 மார்ச் 2016

தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள்



நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை தமிழ்த் திரையுலகத்தை ஓர் அதிர்ச்சியான சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பணம், புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தது. இருந்தாலும் தங்களின் பொன்னான வாழ்க்கையை அற்ப காரணங்களுக்காக முடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவையும் நடிகர் நடிகையர்களின் தற்கொலைகளையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அந்த வகையில் இதுவரை தற்கொலை செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்தத் தகவல்களைச் செய்தியுலகம் இணையத்தில் இருந்து பெற்றேன். அவர்களுக்கு நன்றி.

நடிகை லட்சுமி ஸ்ரீ 1979 ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மயுத்தம் படத்தில் அவரின் தங்கையாக லட்சுமி ஸ்ரீ நடித்திருந்தார்.

படாபட் ஜெயலட்சுமி ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழ் பெற்றவர். இவர் 1979 ஆம் ஆண்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவள் ஒரு தொடர்கதை, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ஜெயலட்சுமி நடித்திருக்கிறார்.

படாபட் ஜெயலெட்சுமி

பசி, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஷோபா. பசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர். இயக்குநர் பாலு மகேந்திராவைத் திருமணம் செய்து கொண்ட ஷோபா, தனது 18 ஆவது வயதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

15-1458024853-tamil-actress-shoba-dead-60

முள்ளும் மலரும் ரஜினிக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் முள்ளும் மலரும். அப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஷோபாவும், மனைவியாக ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர். இதில் ஜெயலட்சுமி 1979 ஆம் ஆண்டும் ஷோபா 1980 ஆம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

15-1458024883-mullummalarum-600

சில்க் ஸ்மிதாவின் தற்கொலை தமிழ் சினிமாவை அதிகம் உலுக்கி எடுத்த மரணமாக இன்றளவும் கருதப் படுகிறது. 1996 ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா தூக்கு மாட்டி இறந்து போனார் காதல் தோல்வி, தொழில் பிரச்சினை ஆகியவை இவரின் மரணத்திற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.

15-1458024921-silk-smitha-600

இதே போல காதல் தோல்வியால் கோழி கூவுது புகழ் விஜி 2௦௦௦ ஆம் ஆண்டு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

15-1458027225-viji-s-600

தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த திவ்யபாரதி 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மும்பை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தள்ளி விடப் பட்டாரா? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

15-1458025039-actress-divyabharti-600

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜய்யுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் 2002 ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் மோனல் கொண்ட காதலே இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

15-1458025087-actress-monal-dead-600

மோனல் இறந்த அதே வருடம் கடல் பூக்கள், தவசி படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டார்.

‘புன்னகை மன்னன்’ பாணியில் காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பிரதியுஷா இறந்து போனார். ஆனால் அவரது காதலர் இந்த தற்கொலை முயற்சியில் பிழைத்துக் கொண்டார்.

15-1458025189-kadal-pookal-actress-600

மோனலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணாலும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் குணால் நடித்திருக்கிறார்.

15-1458025229-kunal-tamil-actor-600

பார்வை ஒன்றே போதுமே இப்படத்தில் இணைந்து நடித்த குணால், மோனல் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

15-1458025273-paarvai-ondre-podhume-tamil

வடிவேலுவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகை ஷோபனா 2004 ஆம் ஆண்டு, தன்னுடைய கோட்டூர்புரம் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார். உடல்நலப் பிரச்சினைகளே ஷோபனாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

15-1458025310-actress-shobana--600

இறந்து போன நடிகைகளில் பெரும்பாலானோர் தங்கள் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளாமல் அவற்றைக் கண்டு பயந்தே தற்கொலை முடிவை தேடிக் கொண்டுள்ளனர். 

அதிலும் நிறைய பேர் நிறைவேறாத காதல் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் பல நடிகைகளின் தற்கொலைகளுக்கு இன்னும் காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. 

நன்றி: செய்தி உலகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக