24 ஜூலை 2017

எண் கணித மேதை முத்தையா

வானொலி தொலைக்காட்சிப் புகழ் எண் கணித மேதை முத்தையா (Dr. Muthaya). இவரின் அசல் பெயர் தஜுடின் ஜமால் முகமட். (Thajhuteen Jamal Mohammad). வயது 58. 



தன்னுடைய எண் கணித ஆற்றலின் மூலமாகப் பலரின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்தவர்.

தங்காக் நகரில் உள்ள ஒருவரிடம் 52,000 ரிங்கிட் ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 


கடந்த 20.07.2017-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இவர் மீது மேலும் 13 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தன்னுடைய எதிர்காலத்தையே இவரால் நிர்ணயிக்க முடியவில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி இவர் மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும். வேதனையான விசயம்.

சான்று: 
https://m.utusan.com.my/berita/mahkamah/8216-tukang-tilik-8217-dituduh-salah-guna-rm52-000-1.505174

4 கருத்துகள்:

  1. இந்த தலைப்பு தவறானது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு எப்படி வைக்கலாம் என்று சொல்லுங்கள்...

      நீக்கு
    2. ஐயா என்னுடைய குறுகிய கருத்திற்கு மன்னிக்கவும். அதற்காகத்தான் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். தலைப்பில் என்ன பிழை கண்டேன் என்பதை விரிவாக பார்ப்போம். மலேசியாவில் எண்கணித மேதை என்று சொன்னால் அதற்க்கு அர்த்தம் இந்த நான்கு மற்றும் டோடோ எங்களை, அதிஷ்ட எண்களை கணித்துக் கூறுபவர் என்று எனக்குத்தெரியாது! இந்த அதிஷ்ட எண் விளையாட்டு மலேசிய மக்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்று நினைக்கிறேன்? அதனால் தான் நீங்கள் தலைப்பை படிக்கும்போது இலகுவாக புரிந்துகொண்டீர்கள்? அது எந்தமாதிரியான எண்கணிதம் என்று?

      எனக்கு எண்கணித மேதை என்று சொன்னவுடன் நினைவிற்கு வருவது திரு ராமானுஜம் அவர்கள், அவரை போன்ற சிந்தனைகள் உள்ளவர் என்று நினைத்து இந்த பதிவை படிக்க ஆரமித்தேன்!இன்னும் ஒருபடி மேல்சென்று ஏன் இவரை கைதுசெய்யவேண்டும்? கடைசிலதான் தெரிந்தது சுரைக்கயில் உப்பில்லையென்று.

      சமீபத்தில் ஒரு பிரபலமான வசனம் கேள்விப்பட்டேன், அது போலத்தான் இந்த தலைப்பும் இருக்கிறது! ஒருத்தன ஏமாத்தனுமுன்னா அவனோட ஆசையா தூண்டனுமுன்னு சொல்லியிருந்தாங்க அது மாதிரித்தான் நானும் இங்க ஏமாந்தேன்!

      என்னை பொறுத்தவரையில் இதுபோன்ற செய்திகளை படிப்பதற்கு நான் இந்த தளத்திற்கு வருவதில்லை! இந்த தளத்திற்கென்று தனி மரியாதை உண்டு!

      நன்றி வணக்க.

      நீக்கு
    3. சரியாக சொன்னீர்கள்

      நீக்கு