27 செப்டம்பர் 2017

தொலை பேசியா - தொலைப்பேசியா

தொலைப்பேசி என்பதே சரியான சொல். தொலை + பேசி = தொலைப்பேசி. இங்கே வலி மிகும். 


தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று மட்டும் ஏன் பிழையாகச் சொல்கிறோம். புரியவில்லை. தொலை பேசி என்றால் பேசியைத் தொலைத்துவிடு என்று அல்லவா பொருள் படுகிறது.

தொலைவில் இருந்து காணக் கூடியது தொலைக்காட்சி. அப்படி என்றால் தொலைவில் இருந்து பேசக் கூடியது தொலைப்பேசி தானே? பின்னர் ஏன் பலர் தொலைபேசி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

1 கருத்து:

  1. அடுத்த மொழிக்காரன் கண்டுபிடித்தத அவன் மொழியில் சொல்வதே சிறந்த்தது. அதற்க்கு எதற்கு தமிழாக்கம்?

    பதிலளிநீக்கு