05 அக்டோபர் 2017

மன்னிப்போம் மறப்போம்

நமக்கு ஒருவர் தீங்கு செய்து விட்டால் அதை நினைத்துக் கொண்டே இருந்தால் அதுவே ஒரு பெரும் பாவச் சுமை. அந்தச் சுமையை இறக்கி வைத்துவிட வேண்டும். மற்றவர்கள் செய்த தீங்குகளையும் பாவங்களையும் நமக்குள் போட்டு பூட்டி வைப்பதும் இன்னொரு பாவம். 


அதே நிலையில் யாரையும் பழி வாங்கும் எண்ணமும் இருக்கக் கூடாது. பழி வாங்க வேண்டும் என்று நினைப்பதே பெரிய பாவம். நமக்கு தீங்கு செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தப்பு. அதனால் நம்முடைய கர்மவீனைகள் தீரா.

நம்முடைய கர்மவினைகளைச் சீர் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு செய்த பாவங்களை மறக்க வேண்டும். அப்போது தான் நாம் நல்ல ஒரு மனிதனாக வாழ்ந்து காட்ட முடியும்.

நாம் என்றைக்கும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதும் பாவம். அவர்கள் பாவம் நினைத்தால் அது அவர்களுக்கே போய்ச் சேரட்டும். நாம் மட்டும் யாருக்கும் பாவம் செய்யக் கூடாது. நினைக்கவும் கூடாது. 


எது எது நடக்குமோ அது அது நடந்தே ஆகும். நடப்பது எல்லாம் நன்மைக்கே எனும் எண்ணம் எப்போது நமக்குள் துளிர்க்கின்றதோ அப்போதே நம்முடைய பாவங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகத் தொடங்குகின்றன. நல்லதை நினைப்போம். நல்லதைச் செய்வோம்.

மற்றவர்கள் நமக்கு இழைத்த தீங்குகளையும் பாவங்களையும் மறப்போம். மன்னிப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

2 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வதெல்லாம் மிக சரி ஆனால் இந்த காலத்தில் அதை பின்பற்றும் ஆட்களை முட்டாள்கள் என்றுதான் சமுகம் கருதுகிறது

    பதிலளிநீக்கு
  2. அதுவும் ஒரு வகையில் உண்மை தாங்க...

    பதிலளிநீக்கு