14 ஜூலை 2019

இந்திரா பார்த்தசாரதி பிறந்தநாள் 10.07.2019

தமிழ் உலகத்தின் பிரபலமான படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy). அவரின் பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவருக்கு வயது 90.

Image may contain: 1 person, eyeglasses and closeup

# சென்னையில் (1930) பிறந்தவர். கும்பகோணத்தில் வளர்ந்தவர். கும்பகோணத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி.

# எழுத்தாளர் தி.ஜானகிராமனின் மாணவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்.

# சின்ன வயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம். ஆனந்த விகடன் வார இதழில் முதன்முதலாக ‘மனித இயந்திரம்’ சிறுகதை.

# தன் மனைவியின் பெயர் இந்திரா. அதை இணைத்துக் கொண்டு ‘இந்திரா பார்த்தசாரதி’ எனும் பெயரில் எழுதத் தொடங்கினார்.



# கல்கி, கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எழுதினார். இவரின் இரு நாவல்கள் கால வெள்ளம், தந்திர பூமி ஆகியவை வரவேற்பைப் பெற்றன. சிறந்த படைப்பாளியாக அடையாளம் காணப் பெற்றார்.

# எதார்த்த நிகழ்வுகளைத் தனித்துவம் வாய்ந்த முறையில் எழுதுவது இவரின் சிறப்புப் பாணி. பெரும்பாலும் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்ட படைப்புகள்.

# நடுத்தர வர்க்க மக்களின் மனக்குழப்பங்கள், உறவுப் பிறழ்ச்சிகளைக் காணலாம். விரக்தி, தற்கொலை, மரணம், தோல்வி, தனிமை, நோய், துன்பம், மனஉளைச்சல் எனும் கூறுகள் மிகுதியாக வெளிப்படுவதைக் காணலாம்.


# அரசியல் சீர்கேடுகளையும், அரசியல் தந்திரங்களையும் விமர்சிப்பதில் வல்லவர்.

# ஆழ்வார்கள் பற்றி ஆய்வுகள் செய்து டில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

# திருச்சி கல்லூரியில் 1952-ஆம் ஆண்டில் ஆசிரியராகப் பணி. டில்லியில் தமிழ் ஆசிரியராகப் பணி. 1962-ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர். தொடர்ந்து இணைப் பேராசிரியர். அடுத்து பேராசிரியராக 40 ஆண்டு காலச் சேவை.

# 1981-ஆம் ஆண்டில் இருந்து 1986-ஆம் ஆண்டு வரை போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவம், பண்பாட்டு பாடப் பிரிவுக்கான வருகைதரு பேராசிரியராகப் பணி.

# இதுவரை 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார். 2010-ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ, சரஸ்வதி சம்மான் விருதுகளைப் பெற்றார்.


# இவரின் குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பாரதிய பாஷா பரிஷத் விருதுகளையும் பெற்றார்.

# முதுபெரும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இன்று 90-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். வாழ்த்துவோம். மேலும் நீண்ட காலம் பயணிக்க இறைஞ்சுவோம்.


இவரின் புதினங்கள்:

ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
சத்திய சோதனை
குருதிப்புனல்
தந்திர பூமி
சுதந்தர பூமி
வேதபுரத்து வியாபாரிகள்
கிருஷ்ணா கிருஷ்ணா
மாயமான் வேட்டை
ஆகாசத்தாமரை
கிருஷ்ணா கிருஷ்ணா
அக்னி
தீவுகள்
வெந்து தணிந்த காடுகள்
வேர்ப்பற்று
திரைகளுக்கு அப்பால்
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக