பூமத்திய ரேகைக்கு வடக்கே கடக ரேகை. தெற்கே மகர ரேகை. இரண்டு ரேகைக்கும் இடையில் ஒரு மழைக் காட்டு ரேகை. அதுதான் மலேசியா எனும் அழகிய பச்சைக் காட்டு வாகை.
அங்கே பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் பசும் காடுகள். சரிகை போன்று சறுக்கி விழுந்து சலசலத்து ஓடும் நதிகள். மயில் இறகு போன்று நீராடும் நீர்நிலைக் காடுகள். நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள்.
இன்னும் சொன்னால் அத்தனையும் நயன விழிகளின் நயனதாராக்கள். ஒரு நிமிடம்... இஞ்சி இடுப்பழகி நயன்தாராக்கள் அல்ல. இளஞ்சிவப்பு நயனதாராக்கள். அதாவது நித்தியக் கல்யாணிகள். அதாவது நித்தியக் கல்யாணிக்கு இன்னொரு பெயர் நயனதாரா.
அழகிய அந்தப் பசுமைக் காட்டில் அழகு அழகான தாவரங்கள்; அரிதிலும் அரிதான பூச்சிப் புழுக்கள். அற்புதமான விலங்கு இனங்கள்; அதிசயமான பறவை இனங்கள்; அபூர்வமான பச்சைப் பயிர்கள். இயற்கை அன்னையே ஆசைப்படும் ரம்மியமான பாரிஜாதக் கோலங்கள். சரி.
முன்பு காலத்தில் மலேசியாவில் இரண்டே இரண்டு பருவ காலங்கள் தான். ஒன்று மழைக் காலம். இன்னொன்று கோடைக் காலம். அப்படி இருந்த பூமியில் இப்போது எல்லாம் அப்படி இல்லீங்க. நான்கு பருவ காலங்களாகி விட்டன.
1. மழைக்காலம்
2. டெங்கி காலம்
3. புகைக் காலம்
4. டுரியான் காலம்.
இப்போது அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது. வேறு எப்படி சொல்வதாம். சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.
நாம் என்ன செய்யலாம். எங்கேயாவது எப்படியாவது ஒரு மரத்தை நட்டு வைக்கலாமே... கிண்டல் கேலி செய்வதை விட்டுவிட்டு... அட் லீஸ்ட்... ஒரு செடியையாவது நட்டு வைத்து அழகு பார்க்கலாமே... கொஞ்சம் புண்ணியம் சேர்க்கலாமே...

பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்
Sathya Raman: "நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள்" சிறுகதை, தொடர் கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு சார். இயற்கையைப் பற்றி ஒரு கவிஞன் கணக்காய் வர்ணித்த விதம் அட, அட, அட... அருமை, அருமை சார். மனிதர்கள் இந்த இயற்கைக்கு எதிராகச் செய்யும் சேட்டைகள் அது திரும்ப மானிடனுக்கே கேடாய் வந்து சேரும் என்பதைப் பல சமயம் மறந்து வருகிறோம்.
மேகங்கள் கடுமையாக மூடிக் கொண்டிருக்கும் போது சூரியனே பிரகாசிக்க முடியாது. இயற்கைக்கே இந்த கதி என்றால் மனிதர்களால் ஏற்படுத்தப் படும் மாசுக்கு எத்தகைய வீரியம் இருக்கும்.
எனவே செடி வளர்ப்போம், மரங்களையும், நமது அற்பதமான காடுகளையும் காப்போம். காடுகளை அழிவதிலிருந்து காப்பதை ஒவ்வொரு மானுடனும் தன் மானம் காப்பதை போல் சற்று கவனமாகக் கையாளுவானால் இயற்கை பேரழிவிலிருந்து கொஞ்சமாவது தப்பும் என்று நம்புவோம்.
Muthukrishnan Ipoh: நீல நயனங்கள் எனும் சொல் தொடர் எனக்கும் மிகவும் பிடித்தது. முதன்முதலில் 1976-இல் நீல நயனங்கள் எனும் தலைப்பில் ஒரு நாவல் எழுதினேன். அதில் ஒரு நூல்கூட என்னிடம் இப்போது இல்லை. தேடிக் கொண்டு இருக்கிறேன். விடுங்கள்.
இயற்கைக் கட்சிகள்... மன்னிக்கவும் காட்சிகள்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் பச்சை நிறங்கள்... நான் நிறைய சுவர் ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். அவற்றில் பச்சை மரக்காடுகள் நிறையவே இருக்கும்...
இயற்கையை நேசிப்போம்... இயற்கையோடு இணைவோம்... இயற்கையோடு வாழ்வோம்...
Muthukrishnan Ipoh: உங்கள் பதிவை என் வலைத் தளத்தில் இணைத்துக் கொள்கிறேன் சகோதரி...
Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வணக்கம் சார். நிறங்களில் முதலில் பார்போரை ஈர்க்கும் நிறமே இந்த பச்சை நிறம்தான். இது இயற்கையைச் சார்ந்து இருப்பதாலோ அல்லது வண்ணங்களின் இயல்பினாலோவோ இருக்கலாம்.
எழுத்தாளர் பணியையும் தாண்டி ஓவியராகவும் இருந்து உள்ளீர்கள். மகிழ்ச்சி சார். பிடித்த நிறம் பச்சை என்கிறீர்கள். இந்தப் பச்சை நிறத்தில் 460-க்கு மேல் ரகங்கள் இருக்கின்றன. இந்தத் தகவலை ஒரு புடவைக் கடையின் உரிமையாளர் என்னிடம் சொன்னது சார். இயற்கையை நம் சுவாசமாய் எண்ணிக் காத்து போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக