23 செப்டம்பர் 2019

நிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள்

மனித வாழ்க்கையில் இன்று (18.07.2019) முக்கியமான நாள். வரலாற்று மகத்துவம் நிறைந்த நாள். நிலவில் மனிதன் காலடி வைத்து 50 ஆண்டுகள் ஆகும் வரலாற்று நாள்.



ஒரு காலத்தில் நிலவைக் காட்டி தாய்மார்கள் சோறு ஊட்டிக் கொண்டு இருந்தார்கள். நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டு இருப்பதாகத் தந்தை மார்கள் சொன்னார்கள். நிலவைப் பார்த்துக் கவிஞர்கள் காதல் கவிதைகள் எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் நிலவையே ஒரு பெண்ணாக்கிய கவிஞர் வாலி ஒரு காதல் கவிதையையும் எழுதினார். நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ... பாடலை மறக்க முடியுமா. இருந்தாலும் அதிசயிக்கும் அதிசயம் ஒரு நாள் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 (Apollo 11) விண்கலம் பாய்ச்சப் பட்டது. நான்கு நாள்கள் பயணித்த அந்த விண்கலம் ஜூலை 20-ஆம் தேதி சந்திரனில் தரை இறங்கியது.

நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong). மற்றவர்கள் இருவர். மைக்கேல் காலின்ஸ் (Michael Collins); எட்வின் ஆல்ட்ரின் (Buzz Aldrin). ஜூலை 21-ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி உலகையே வியக்க வைத்தார்.

உண்மையில் எட்வின் ஆல்ட்ரின் தான் கால் பதிக்க வேண்டும் என்பது முன்னேற்பாடு. அப்படித்தான் நாசா (NASA's Apollo program) அறிவியலாளர்கள் திட்டம் போட்டு வகுத்து இருந்தார்கள். ஆனால் என்னவோ ஏதோ நிலவில் கால வைக்க எட்வின் ஆல்ட்ரின் சில விநாடிகள் தயங்கினார்.

வேறு வழி இல்லாமல் ஆம்ஸ்ட்ராங் முந்திக் கொண்டு நிலவில் காலடி வைத்தார். அவர் கால் பதித்த இடத்திற்கு Tranquility Base என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

இது எதிர்பார்க்காத ஒன்று. எட்வின் ஆல்ட்ரின் தான் அந்தப் புகழைப் பெற்று இருக்க வேண்டும். விதி வேறு மாதிரி எழுதி விட்டது. அதுதான் சொல்வார்கள். மனிதன் நினைப்பது ஒன்று. தெய்வம் நினைப்பது வேறு ஒன்று. அந்த மாதிரி தான் அங்கேயும் நடந்தது.

அந்தச் சில விநாடிகள் தாமதிக்காமல் எட்வின் ஆல்ட்ரின் முயற்சி செய்து இருந்தால் அவரின் பெயர் இமயத்தில் தலைச் சிகரம் பார்த்து இருக்கும். இருந்தாலும் எட்வின் ஆல்ட்ரினை உலக மக்கள் மறக்க மாட்டார்கள்.

ஆகவே அன்பர்களே... வாய்ப்பு கிடைத்தால் அதைத் தள்ளிப் போடாதீர்கள். உடனே பற்றிக் கொள்ளுங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் வரும் போது நீல் ஆம்ஸ்ட்ராங்கை நினைத்துக் கொள்ளுங்கள். சரிங்களா.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

குறிப்புகள்:

1. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ எனும் பாடலை எழுதியவர் வாலி

2. July 20, 1969 marks exactly fifty years from when the Apollo Lunar Module Eagle touched down on the Moon.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Letchumanan Nadason வணக்கம் ஐயா. நாம் வாழும் காலத்திலேயே நடந்த வரலாற்று நிகழ்வுகளைக்கூட மறந்து விடுகிறோம். நீங்கள் தான் அவற்றை என் போன்றவர்களுக்கு நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

Muthukrishnan Ipoh வரலாற்றை மறப்பவர்கள் தாய் தந்தையரை மறப்பது போலாகும் என்று ஓர் அறிஞர் சொன்னது நினைவில் வருகிறது...

Letchumanan Nadason Muthukrishnan Ipoh வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையுமே நி்னைவில் வைத்திருப்பது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. நிகழ்வுகள் நினைவு இருக்கும். ஆனால் காலம் மறந்து போய் இருக்கலாம் அல்லவா? என்னுடையப் பதிவு அதன் அடிப்படையிலானது.
Muthukrishnan Ipoh Letchumanan Nadason உண்மைதான்... அந்தப் பொன்மொழி ஓர் உவமையாகச் சொல்லப் பட்டது ஐயா...

Santhanam Baskaran A giant leap of man kind என்று சொல்வார்கள். அந்த வருடத்தில் தான் நான் பிறந்து இருக்கிறேன். நிலவில் காலடி வைத்து சரியாக 51 நாட்களுக்குப் பிறகு...

Muthukrishnan Ipoh That's one small step for man, one giant leap for mankind என்று சொன்னவர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்... நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்...
Manickam Nadeson ஆமாம் ஐயா சார், நானும் மறந்துட்டேன். நன்றி நலமாக இருக்கிறீர்களா?

Muthukrishnan Ipoh உங்கள் புண்ணியத்தில் நல்ல நலம்...

Manickam Nadeson Muthukrishnan Ipoh அப்போ கெட்ட நலம் எப்படி இருக்கும்??
Muthukrishnan Ipoh மழையில் நனைந்து வரும்... குடை பிடிக்க வேண்டி இருக்கும்...
Tamil Zakir
Image may contain: grass, outdoor and nature
M R Tanasegaran Rengasamy

நீல வானத்தில்
நீந்துகின்ற நிலாவினில்
கால்பதிக்க
உறுதியான கரங்கள்
(Armstrong) உடைய
நீல் பொருத்தமானவரென
விதித்திருக்கலாம்.


Muthukrishnan Ipoh சபாஷ்... எப்படி எல்லாம் உவமைப் படுத்துகிறார் பாருங்கள்... இதைத்தான் ஆங்கிலத்தில் Far sighted என்று சொல்வார்கள்... ஒரு தமிழ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ஆயிற்றே... சும்மாவா...
Melur Manoharan
Image may contain: mountain, sky, outdoor and nature

Baakialetchumy Subramaniam இனிய காலை வணக்கம். சகோதரரே. அருமையான தகவல்.

Mu Ta Neelavaanan Muthuvelu ஐயா, பாட்டி வடை சுட்ட கதை போலவே, நீங்களும் " தெய்வம் " நினைப்பது வேறு என்கிறீர்கள். அவனவன் செயலுக்கு
அவனவன் தான் பொறுப்பேயன்றி, எவனவனோ அல்ல என்பதை அறிந்தவர் தானே நீங்கள்.

Muthukrishnan Ipoh நமக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியைத் தான் தெய்வம் என்கிறோம் ஐயா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக