05 அக்டோபர் 2019

மலர்களே மலர்களே- இன்றைய சிந்தனை 05.10.2019

மலர் என்றதும் நம் மனதில் முதலில் வருவது அதன் வண்ண வண்ண நிறங்கள். மனதை ஈர்க்கும் அதன் நறுமணங்கள். மல்லிகையின் மனம் ஆளைத் தூக்கும். ரோஜாவின் மணம் ஆளைக் கொன்று போடும். 



மலரின் கதம்ப வாசனை மனதைக் கிறங்கச் செய்யும். அதனால் இலக்கியங்களில் மலருக்கு 'நறுவீ' என்று பெயர்.

மலரின் நறுமணம் அதன் பூவிதழ்களில் கசியும் எண்ணெயில் இருந்து வருகிறது. ஒரு வகையான வாசனைப் பொருளைச் சுரக்கின்றது. இந்த வாசனைப் பொருள் தான் ஆவியாகி நாலா புறமும் பரவி மணம் வீசுகின்றது. 




மலர்கள் இனப்பெருக்கம் செய்யவே நறுமணத்தை உருவாக்குகின்றன. ஒரு மலர் இன்னொரு மலரைத் தேடிப் போக முடியாது. காலும் இல்லை. கையும் இல்லை. இருந்தாலும் அதற்கும் ஆசை தான்.

’வந்தால் வாடி... வராட்டி போடி...’ என்று அதிகார ஆனந்த பைரவியில் யாசிக்க முடியாது. ’நான் இங்கே நீ அங்கே’ என்று ஒரு காம்போதியைத் தான் கானா ராகத்தில் வாசிக்க முடியும்.

ஆக மனித இனத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தேடிப் போவது போல தாவரங்களில் நாடலும் இல்லை. ஊடலும் இல்லை. கூடலும் இல்லை. உதவி செய்ய ஆளும் இல்லை. 




மகரந்தச் சேர்க்கை புரிய உதவி செய்யும் பூச்சி இனங்களைக் கவர்ந்து இழுக்கவே மலர்கள் நறுமண வலையை வீசுகின்றன. அப்படியே வளைத்துப் போடுகின்றன. அந்த வகையில் மகரந்தம் இருக்கும் இடத்திற்கு ஈர்த்துச் செல்கின்றன

எல்லா மலர்களின் மணமும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. நம்ப மொழியில் சொன்னால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகமாம். நான் சொல்லவில்லை. அறிஞர் அண்ணா சொன்னது. நினைவிற்கு வந்தது.

இருக்கிற பூவையே முகர்ந்து பார்க்க நேரம் இல்லை. இதில் அடுத்த வீட்டு மல்லிகையா... போகிற போக்கில் ஒரு கண் சிமட்டல் தான்.

ஒவ்வொரு பூவின் நறுமணத்தையும் பூச்சிகள் நன்றாக நினைவில் வைத்து இருக்குமாம். தங்களுக்கு விருப்பமான மணத்தையும் அவை அறிந்து இருக்குமாம். 




பூச்சி இனங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் ஒவ்வொரு செடியின் 'விசிட்டிங் கார்ட்' மாதிரி.

எந்த நறுமணம் எங்கே இருந்து வருகிறது என்று கண்டு பிடிக்கின்றன. இனம் காண்கின்றன. தமக்குப் பிடித்த தாவரத்தைத் தேடிச் செல்கின்றன. மகரந்தச் சேர்க்கையை உருவாக்குகின்றன. ஒரு பாடலின் வரிகளுடன் காரியத்தைக் கச்சிதமாக முடித்தும் கொள்கின்றன.

மலர்களே மலர்களே...
விண்ணோடும் நீ தான்...
மண்ணோடும் நீ தான்...
கண்ணோடும் நீ தான்...

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.10.2019



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Sathya Raman வித விதமான மலர்களைக் கூடை நிறைய தூக்கிக் கொண்டு "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,  தோட்டத்து மலர்களில் ஆயிரம் நிறங்களில் ஜனங்களில் ஆயிரம் குணங்கள்" என்று டி.எம். எஸ். பாட சிவாஜி படத்தில் வாய் அசைத்து இருப்பார்.

மலர்களின் ராஜா அழகிய ரோஜா என்றும் பாட்டு உண்டு. நம் நாட்டில் குளிர்ப் பிரதேசங்களில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண ரோஜா, சாமந்தி, அல்லி, டாலியா, பத்து மணி, அஞ்சு மணி பூக்கள் என்று நிறைய ரகம்.

கேமரன் மலையில் "மம்"  அழைக்கப்படும் பெரிய வகை சாமந்தி வகையை மெலிதான தாளைக் கொண்டு பொங்குஸ் பண்ணிய அனுபவமும்; பூந்தோட்டத்தில் மலர்களை வெட்டி, செடிகளுக்குக் களை எடுத்து, பேக்கிங், நாத்து, நடவுன்னு மலர்க் காட்டில், மகிழ்ச்சிகளைத் தருவித்த தருணங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இந்த மனிதர்கள்கூட மலர்களைப் போல் பலவகை ரகங்கள் தான். நம்பிடையே தொட்டால் சிணுங்கிகளும் உண்டு, ரோஜாவின் முட்களைப் போன்று கரடு முரடுகளும் உண்டு.

பூஜைக்கு உகந்த மலர்களை மனித பாதங்களுக்கு தூவுவதையோ, நெருப்பில் இட்டுக் கொளுத்துவதையோ வன்மையாக கண்டிக்கிறேன்.

நம் நாட்டில் தமிழ்ப் படைப்பிலக்கியமும், பத்திரிக்கைத் துறையும் பறிகொடுத்து தவிக்கும் அக்கினி சுகுமார் சாரின் பேரிழைப்பைத் தங்களின் மலர்களே மலருங்கள் பதிவு சற்று ஆறுதலாக இருக்கிறது சார்.
 

 
Muthukrishnan Ipoh தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி. கேமரன் மலையில் தங்களின் வாழ்வியல் அனுபவங்களும்... அதனால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளும் மலேசிய இந்தியர்களின் காலச் சுவடுகளில் ஒரு பகுதியாக அமைகிறது.

>>> இந்த மனிதர்கள்கூட மலர்களை போல் பலவகை ரகங்கள் தான். நம்மிடையே தொட்டால் சிணுங்கிகளும் உண்டு; ரோஜாவின் முட்களைப் போன்று கரடு முரடுகளும் உண்டு. பூஜைக்கு உகந்த மலர்களை மனித பாதங்களுக்கு தூவுவதையோ, நெருப்பில் இட்டுக் கொளுத்துவதையோ வன்மையாக கண்டிக்கிறேன்.  >>>

நெஞ்சைத் தைக்கும் வேதனைச் சொற்கள்.

தங்களின் இந்தப் பதிவு வலைத்தளத்தில் நிரந்தரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Sivalingam Muniyandi பூவே இனிய பூவே... உங்கள் பூந்தோட்டத்தில் இருந்து பூந்தென்றல் என் பக்கம் வருமா?
 
Muthukrishnan Ipoh என் வீட்டில் கொஞ்சம் நிலம் உள்ளது. ஒரு பக்கம் மலர்ச் செடிகள்... இன்னொரு பக்கம் காய் கறிகள்... வாழை மரங்கள்... தென்னை மரங்கள்... மூலிகைச் செடிகள்... மலர்ச் செடிகளுக்கு துணைவியார் பொறுப்பு... காய்கறிகளுக்கு அடியேன் பொறுப்பு...ஆக உங்கள் இடத்தைச் சொல்லுங்கள்... தென்றலைத் திருப்பி விடுகிறேன்... 
 

Mageswary Muthiah இனிய காலை வணக்கம் உங்கள் பதிவுகளில் ஆக்ஷ்யமும் கலந்திருப்பது மிக அருமையாக உள்ளது.
 
Image may contain: flower, plant and nature 
 
Muthukrishnan Ipoh நகைச்சுவையாக பேசுவதும் ஜோக்கடிப்பதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... மலர் அழகு...

Manickam Nadeson மணக்கும் மலர்களை மனம் கவரச்செய்த மன்மத ராசாவுக்கு எனது நன்றியும் வாழ்த்தும்.
 
Muthukrishnan Ipoh மன்மத ராசாவுக்கு ஓர் அம்பு இல்லையே...

 
Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!
 
Image may contain: 8 people, people smiling, people standing 
 
Muthukrishnan Ipoh அடடடா... காலையிலேயே இப்படி அழகிய அவதாரங்களைப் பதிவு செய்து பலரையும் கலங்க வைக்க வேண்டாமே...   
 
Melur Manoharan Muthukrishnan Ipoh
ஐயா...
இப்புகைப்படம்...
சக்தியின்
"நவராத்திரி" அவதாரங்கள்...!
-----------------------------------
இது...
"நவராத்திரி" பண்டிகைக்காலம்...
 
 

 
Image may contain: text, nature and outdoor 
 
Tamil Zakir
 Image may contain: text, outdoor and nature    
 
Rajeswari Rajes
 Image may contain: flower, plant and text
 
Rasi Rasi
 Image may contain: plant, flower, nature and outdoor




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக