தாமரை மலர் இந்துக்களின் தேவதை சரஸ்வதியின் சிம்மாசனம். இந்திய சமயத் தத்துவத்தின் தலைவாசல். சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை என்றும் செந்தாரகை தான். ஆன்மீகத்தின் தலை மலர் அல்லவா. அதுவே தனிப் புகழ்மாலை அல்லவா.
தாமரைக் கோபுரம் (Lotus Tower), தாமரை மலருக்குச் சிறப்பு செய்யும் கோபுரம். இந்தியப் பாரம்பரிய மலருக்குச் சிறப்பு சேர்க்கும் கோபுரம். இலங்கையில் உள்ளது.
உலகிலேயே உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று. இரு வாரங்களுக்கு முன்னதாக, 2019 செப்டம்பர் 16-ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப் பட்டது.
தமிழர்கள் சிலருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும் கலை நயத்துடன் தாமரைக் கோபுரத்தைப் பார்ப்போம். போற்றுவோம். கலையை ரசிப்போம். அதுவே தமிழர்களின் பண்பாடு. ஒருவருடைய நற்சேவைகளைப் பாராட்டும் பழக்கம் நமக்கு வேண்டும். அதுவே நல்ல ஒரு மனிதப் பாண்பு.
தாமரைக் கோபுர நிர்மாணிப்புப் பணிகள் 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. கட்டி முடிக்க 7 ஆண்டுகள்.
மொத்தம் 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு. சீனாவின் எக்சிம் வங்கி 67 மில்லியன் கடனாகக் கொடுத்து உதவியது.
தாமரைக் கோபுரத்தில்...
- 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய வசதி
- 50 வானொலி நிலையங்கள்
- 50 தொலைக்காட்சி நிலையங்கள்
- 20 தொலைத்தொடர்பு நிலையங்கள்
- கொழும்பு நகரத்திற்குள் செல்லும் ஒவ்வொருவரின் கண்களுக்கும் எட்டிய தூரத்தில் இருந்து தெரியக் கூடிய கோபுரம்.
- கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டர்.
- கட்டடத்தின் 215 மீட்டர் வரை லிப்ட் வசதி. 90 மாடிகள் உச்சிக்குச் செல்ல 2 நிமிடங்கள். அதி வேகமான லிப்டுகள்.
- உலகிலேயே 19-ஆவது உயரமான கோபுரம். ஆசியாவில் 11-வது உயரமான கோபுரம்.
- கோபுரத்தின் மேல் பகுதியில் 400 பேர் அமரும் வசதி கொண்ட மாநாட்டு மண்டபம்; திருமண வரவேற்பு மண்டபம்; ஆடம்பரமான தங்கும் அறைகள்.
- 6-ஆவது மாடியில் சுழலும் உணவகம். கொழும்பு நகர் முழுவதையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.
- 8 மின்தூக்கிகளை (லிப்ட்) கொண்டது. நொடிக்கு 7 மீட்டர் உயரும் வேகம். படு வேகம்.
- கோபுரத்தின் அடித்தளத்தில் மண்ணுக்கு அடியில் நான்கு மாடிகள்.
கூடுதல் தகவல். மலேசியாவின் கோலாலம்பூர் கோபுரம் (Kuala Lumpur Tower) 421 மீட்டர் உயரம் (1,381 அடி). தாமரைக் கோபுரத்தை விட 44 மீட்டர்கள் கூடுதலான உயரம்.
உலகில் 7-ஆவது உயரமான கோபுரம். 54 விநாடிகளில் உச்சியைச் சென்று அடையும் மிக வேகமான மின்தூக்கிகள்.
1995 மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டி முடிக்கப் பட்டது. மலேசியாவின் NTV7 இங்கு இருந்து தான் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2109
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
உலகிலேயே உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று. இரு வாரங்களுக்கு முன்னதாக, 2019 செப்டம்பர் 16-ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப் பட்டது.
தமிழர்கள் சிலருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும் கலை நயத்துடன் தாமரைக் கோபுரத்தைப் பார்ப்போம். போற்றுவோம். கலையை ரசிப்போம். அதுவே தமிழர்களின் பண்பாடு. ஒருவருடைய நற்சேவைகளைப் பாராட்டும் பழக்கம் நமக்கு வேண்டும். அதுவே நல்ல ஒரு மனிதப் பாண்பு.
மொத்தம் 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு. சீனாவின் எக்சிம் வங்கி 67 மில்லியன் கடனாகக் கொடுத்து உதவியது.
தாமரைக் கோபுரத்தில்...
- 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய வசதி
- 50 வானொலி நிலையங்கள்
- 50 தொலைக்காட்சி நிலையங்கள்
- 20 தொலைத்தொடர்பு நிலையங்கள்
- கொழும்பு நகரத்திற்குள் செல்லும் ஒவ்வொருவரின் கண்களுக்கும் எட்டிய தூரத்தில் இருந்து தெரியக் கூடிய கோபுரம்.
- கட்டடத்தின் 215 மீட்டர் வரை லிப்ட் வசதி. 90 மாடிகள் உச்சிக்குச் செல்ல 2 நிமிடங்கள். அதி வேகமான லிப்டுகள்.
- உலகிலேயே 19-ஆவது உயரமான கோபுரம். ஆசியாவில் 11-வது உயரமான கோபுரம்.
- கோபுரத்தின் மேல் பகுதியில் 400 பேர் அமரும் வசதி கொண்ட மாநாட்டு மண்டபம்; திருமண வரவேற்பு மண்டபம்; ஆடம்பரமான தங்கும் அறைகள்.
- 8 மின்தூக்கிகளை (லிப்ட்) கொண்டது. நொடிக்கு 7 மீட்டர் உயரும் வேகம். படு வேகம்.
- கோபுரத்தின் அடித்தளத்தில் மண்ணுக்கு அடியில் நான்கு மாடிகள்.
கூடுதல் தகவல். மலேசியாவின் கோலாலம்பூர் கோபுரம் (Kuala Lumpur Tower) 421 மீட்டர் உயரம் (1,381 அடி). தாமரைக் கோபுரத்தை விட 44 மீட்டர்கள் கூடுதலான உயரம்.
1995 மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டி முடிக்கப் பட்டது. மலேசியாவின் NTV7 இங்கு இருந்து தான் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2109
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
VT Rajan அற்புதமான
தகவல் சகோதரரே... தமிழ் மலர் நாளிதழ் நான் வாங்கி படிப்பதற்கு காரணமே,...உங்களின் அற்புதமான படைப்புகள் தான் காரணம்... வாழ்க வளமுடன்... தொடரட்டும்
தங்களின் எழுத்துப் பணி...
M R Tanasegaran Rengasamy உலகில்
உயர்ந்த கோபுரங்களைக் கட்டும் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் மனங்களை மடு
அளவே முடக்கிக் காட்டுவது வேதனையாய் உள்ளது. ஆனால் வழக்கம் போல் உங்கள்
பதிவில் இதுவொரு கோபுரம் சார்.
Muthukrishnan Ipoh வார்த்தைச் சாரங்களில் (ஜாலங்களில்) தனசேகரன் சாரை மிஞ்சமுடியாது போலும்... நறுக்கென்று ஏதாவது இருக்கவே செய்யும்...
Sathya Raman M R Tanasegaran Rengasamy கருத்துக்களில் எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது சார் .
M R Tanasegaran Rengasamy Sathya Raman
உண்மைதான். அவர்கள் கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும்
உயர்ந்தே காணப் படுகிறது. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற எம்.
ஜி.ஆர். பாடலில் ஒரு அடி வரும். "கோபுரத்தின் மேல் நீக்க வச்சாலும்..."
இப்பாடலை முழுதாகக் கேட்டால் கவிஞர் சில கழிசடைகளின் முகத்திரையை அப்பொழுதே
கிழித்திருப்பார்.
Sathya Raman M R Tanasegaran Rengasamy
சில மனிதப் பெருச்சாளிகளுக்கு எத்தனை தத்துவங்களையும், தன் முனைப்புகளையும்
அள்ளி வீசினாலும் திறந்த மனதோடு ஏற்று திருந்திவிடவா போகிறார்கள் சார்...
Muthukrishnan Ipoh Sathya Raman >>> எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது >>> நல்ல கருத்து... அருமை...
Muthukrishnan Ipoh M R Tanasegaran Rengasamy >>> கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும் உயர்ந்தே காணப்படுகிறது >>> அருமையான கருத்து... அருமையான சொல் வடை...
Muthukrishnan Ipoh Sathya Raman மனிதப் பெருச்சாளிகள் என்றாலும்... பணப் பெருச்சாளிகள் என்று சொன்னாலும் இரண்டுமே ஒன்றுதான் சகோதரி...
Mahdy Hassan Ibrahim இந்தக் கோபுரம் உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட போதும் முழுமையாகப் பூரணத்துவம் அடைய இன்னும் காலம் செல்லும்! காத்திருப்போம்!