மலேசிய இந்தியர்கள் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாளைய தினத்தில் என்ன நடக்கும்... என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தடுமாற்ற நிலை. ஒரு பதற்றமான வழியில் அவர்களின் நகர்வுகள்.
இருப்பினும் சின்னதாய் ஓர் அறைகூவல். அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப் படுவோம். மதிப்பு அளிப்போம். அரசாங்கத்தை எதிர்த்து எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம்.
பொறுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டால் நம்முடைய எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்வோம்.
கடிவாளம் கையில் இருக்கும் இடத்தில் பிடிமானம் இருக்கும். கடிவாளம் இல்லை என்றால் பிடிமானம் இல்லை. மற்றவர்களைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாத செயல். இதை நாம் என்றைக்கும் மறக்கக் கூடாது.
அதே சமயத்தில் நம்முடைய கருத்துகளை விவேகமான முறையில் பதிவு செய்வோம். நம்முடைய உணர்வுகளை நியாயமான முறையில் முன் வைப்போம். உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டு பதிவு செய்வதைத் தவிர்ப்போம்.
நம்முடைய பதிவுகள் எவரையும் புண்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. இனம், சமயம் தொடர்பான கருத்துகளில் முரண்பாடான செருகல்களை தவிர்ப்பது மிக்க நல்லது.
விவேகமான முறையில் முன் வைக்கப்படும் கருத்துகளுக்கு என்றைக்குமே மரியாதை உண்டு.
அரசமைப்பு இருக்கிறது. அரசு சாசனங்கள் இருக்கின்றன. அரசியலமைப்பு பாவனையில் என்ன தீர்வுகளைக் காணலாம் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அந்தத் தீர்வுகள் நியாயமான வழிமுறைகளில், நியாயமான விமர்சனங்களாக அமைய வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.
பல்லினச் சமுதாயத்தில் நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும் வழக்கம் மட்டுமே நலம் பயக்கும். அதுவே சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளைக் காண பேருதவியாகவும் அமையும்.
சிறுபான்மை மக்களிடம் ஒற்றுமை குறைந்தால் நிறைவுகளைக் காண இயலாது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.10.2019
பொறுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டால் நம்முடைய எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்வோம்.
கடிவாளம் கையில் இருக்கும் இடத்தில் பிடிமானம் இருக்கும். கடிவாளம் இல்லை என்றால் பிடிமானம் இல்லை. மற்றவர்களைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாத செயல். இதை நாம் என்றைக்கும் மறக்கக் கூடாது.
நம்முடைய பதிவுகள் எவரையும் புண்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. இனம், சமயம் தொடர்பான கருத்துகளில் முரண்பாடான செருகல்களை தவிர்ப்பது மிக்க நல்லது.
விவேகமான முறையில் முன் வைக்கப்படும் கருத்துகளுக்கு என்றைக்குமே மரியாதை உண்டு.
அந்தத் தீர்வுகள் நியாயமான வழிமுறைகளில், நியாயமான விமர்சனங்களாக அமைய வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.
பல்லினச் சமுதாயத்தில் நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும் வழக்கம் மட்டுமே நலம் பயக்கும். அதுவே சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளைக் காண பேருதவியாகவும் அமையும்.
சிறுபான்மை மக்களிடம் ஒற்றுமை குறைந்தால் நிறைவுகளைக் காண இயலாது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.10.2019
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Hamba Mu Umar Umar
M R Tanasegaran Rengasamy: பொது இடங்களுக்குச் சென்றால் இன்னமும் மலாய்க்கார ,சீன சமூகத்தினர் நம்மிடம் இயல்பாகவே பழகுகிறார்கள். அண்மையில் என் உறவினர் ஓட்டிச் சென்ற லாரி ஈப்போவில் விபத்துக்கு உள்ளானது.
அவருடன் மனைவி, மகளும் இருந்தனர். நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரிக்கு உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றியவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரச் சகோதரர்களே.
எனவே வெளியில் எல்லாம் சரியாகவே நடைபெறுகிறது. நீங்கள் சொல்வது போல் இது அரசியல் சலசலப்பு தான். அமைதி காப்போம். நன்றி சார்.
Muthukrishnan Ipoh: நன்றிங்க தனா... மலாய்க்காரர்கள் மிகவும் நல்லவர்கள்... பொதுவாகவே இனிமையாகப் பழகக் கூடியவர்கள்... பெரும்பாலோர் கபடு சூது அறியாதவர்கள்.. இன்றும் பலர் நமக்காகத் துணிந்து நிற்பவர்கள்...
ஏன் என்றால் விவரம் தெரிந்து நம்முடன் ஒரு 150 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டவர்கள்... நம்முடைய கலை கலாசாரத்துடன் பிணைந்து போனவர்கள்...
சில பல அரசியல்வாதிகளின் சுயநலத் தூண்டுதல்களால் தான் இன்றைய மலாய்க்கார இளைஞர்கள் சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்... இதில் குட்டைக் குழப்பிகள் அரசியல்வாதிகள் தான்... சாமான்ய மக்கள் அல்ல...
Periasamy Ramasamy: இதுதான் நிதர்சனம். சுமார் நூறு மலாய் சகோதரர்கள் மத்தியில் துறைமுக தீயணைப்பு பிரிவில் ஒன்றாகப் பணியாற்றிய மூன்றே இந்திய அரசு ஊழியர்களில் நானும் ஒருவன்.
அவர்களின் கலாச்சாரத்துடன் பிணைந்த Senda gurau கேலியும் கிண்டலும் நாமும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் யாவரும் இயல்பாக ஒன்றி விடுவோம்.
அதிலும், நமது மலாய் பேச்சுத் வழக்கு அவர்களுடையது போலவே சார்ந்திருக்குமாயின் அவர்கள் நம்மோடு அளவலாவுவதில் மிகுந்த விருப்பம் கொள்வர். அரசியல், மதம், விளையாட்டு, சினிமா, கலாச்சாரம் என்று எதைக் குறித்து அலசினாலும், அவர்களிடம் ஒரு மிதவாதப் போக்கை நாம் எதிர்பார்க்கலாம்.
எங்களில் பலர் இன்று பணி ஒய்வு பெற்று விட்ட போதிலும், அருகருகே வசிப்பவர்கள் இன்னும் அதே தோழமையுடன் பழகுவது குறிப்பிடத் தக்கது.
Muthukrishnan Ipoh: உண்மைதாங்க ஐயா.... 1960 - 1970-ஆம் ஆண்டுகளில் என்னுடன் பயின்றவர்களில் ஒருவர், இந்த நாட்டின் முன்னாள் துணை ஐ.ஜி.பி. இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போது உரையாடிக் கொள்வோம்.
அன்றைய காலக் கட்டத்தில் படிக்கும் போது தீபாவளிக்கு அவர் என் வீட்டிற்கு வந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்... அதே போல ஹரிராயாவுக்கு அவர் வீட்டிற்கு நான் போய் விடுவேன்... சாப்பாடு என்ன சந்தோஷம் என்ன... அந்த மாதிரி அந்தக் காலத்து மலாய்க்காரர்கள் நம்முடன் ஐக்கியமானவர்கள்... அரசியல்வாதிகள் கெடுத்து விட்டார்கள்...
M R Tanasegaran Rengasamy: எனக்கும் ஒரு மலரும் நினைவுகள் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும். ஐந்து வயதிலா எனச் சிலர் புருவத்தை உயர்த்தலாம். எனக்கு ஞாபக சக்தி அதிகம். நெகிரி செம்பிலான், சிரம்பான் அருகே ரெம்பாவ் தோட்டம். தம்பின்- சிரம்பான் சாலையை ஒட்டி அமைந்திருந்தது.
அந்தத் தோட்டத்துக்குப் பக்கத்திலேயே ஒரு கம்பம் இருந்தது. இன்றும் கம்பம் இருக்கிறது. தோட்டம் இல்லை. எங்கள் வீட்டை ஒட்டியே மலாய்காரர் வீடு இருந்தது. ஆயாக் கொட்டகையில் இருக்க பிடிக்காததால் வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியில் வ்ராந்தாவில் விட்டுச் செல்வார்கள். கொஞ்ச நேரம் தான் வீட்டில் இருப்பேன்.
கம்பத்து வீட்டு மலாய்க்காரர் காலையிலேயே கூப்பிடுவார். காலை பசியாறல் (மரவள்ளிக் கிழங்கு). பெற்றோர் திரும்பும் வரை அங்குதான் இருப்பேன். பெற்றோர் வைத்துச் செல்லும் சாப்பாடு எனக்கு காவலாக இருக்கும் பொன்னி நாய்க்கு வைத்து விடுவேன்.
அந்த மலாய்க்காரரும் அவர்தம் மனைவியும், பிள்ளைகளும் அவ்வளவு பிரியமாக இருப்பர். இது போன்று பல கதைகள் உண்டு. எவ்வளவு அருமையான காலம் அது. பாவிகள் அரசியல்வாதிகள் அனைத்தையும் கெடுத்துவிட்டார்கள்.
Muthukrishnan Ipoh >>> M R Tanasegaran Rengasamy: இதை எல்லாம் கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது... அந்த மாதிரியான இனிமையான காலங்கள் மீண்டும் மலருமா... அவை கனாக் காலங்களாக மாறி விட்டன...
Narayanan Krishnan: இனவாதம் பேசும் எவனும் மலாய்காரர் அல்ல. இஸ்லாமியர் என்ற தகுதியை வைத்து பூமிபுத்திரா (pseudo malay) தகுதியை அடைந்தவர்கள்.
அவர்கள் எப்பொழுதுமே தங்கள் சாயம் வெளுக்கும் பொழுது தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாகவே முந்திக் கொண்டு மற்ற சிறுபான்மையினர் மீது துவேசம் பரப்புவர். அதில் முதன்மையானவர் பிரதமர்.
M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh: இரு மாதங்களுக்கு ஒருமுறை நான் பிறந்த மண் Tampin, Kota-வில் உள்ள கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் போது எல்லாம் என் மனைவி மக்களிடம் அந்தக் கம்பத்துக் கதையைக் கூறுவேன். அவர்கள் சலிப்படைவார்கள். எனக்கு மட்டும் அந்தக் கனாக் காலம் களைவதே இல்லை.
Kannan Krisnan >>> M R Tanasegaran Rengasamy: உண்மை ஐயா
Manickam Nadeson >>> Narayanan Krishnan: உண்மைய போட்டு உடைச்சிட்டீங்க.
Tanigajalam Kuppusamy: காலத்திற்கு ஏற்ற நல்ல அறிவுரை. நம் தமிழர்கள் கோப்பிக் கடை அரசியல் அலசலில் இருந்து விடுபட வேண்டும். அரசியல் தொடர்பான பிற இன, சமய, கலாசார எதிர்மறைக் கருத்துகளை வெளியிடுவதையும், பெறுகின்ற பகிர்வுகள் அமைதியைக் குலைக்கும் சாயலில் இருக்குமானால் அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகள், கைபேசி உரையாடல்கள் போன்றவை கூட கண்காணிக்கப் படுகின்றன என்றால் மிகையாகாது.
எனவே, நாம் அதற்கேற்ப நடுநிலையான,நியாயமான கருத்துகளை வெளியிட நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளைய மணிகள் உணர்ச்சி வயப்பட்டு பிற இனத்தவரின் உணர்வைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
Muthukrishnan Ipoh: மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா... கைக்குள் சமூக ஊடகங்கள்... நினைத்தை எழுதலாம் எனும் போக்கைக் கைவிட வேண்டும்... பெரும் ஆபத்தை ஈர்த்துவிடும்...
>>> பிற இன,சமய, கலாசார எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதையும், பெறுகின்ற பகிர்வுகள் அமைதியைக் குலைக்கும் சாயலில் இருக்குமானால் அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். >>>
மிக மிக முக்கியமான கருத்துகள்... நன்றிங்க...
Tanigajalam Kuppusamy: வசிஷ்டரின் அங்கீகாரத்திற்கு மிக்க நன்றி ஐயா.
Muthukrishnan Ipoh >>> Tanigajalam Kuppusamy: வசிஷ்டர் என்று ஓர் அடைமொழியே கொடுத்து விட்டீர்கள்... நன்றிங்க... இருந்தலும் அந்தத் தகுதி நமக்கு இல்லைங்க சார்...
Tanigajalam Kuppusamy: தமிழர்க்கும் தமிழர் வரலாற்றிற்கும் கணினி பயன்பாட்டில் தமிழுக்கும் நீங்கள் ஆற்றி வரும் அளப்பரிய சேவைக்கும் இந்த அடைமொழி பொருத்தமென்றே எனக்குப் படுகிறது.
Anbananthan Renga: வணக்கம் சார், நீங்கள் மேலே சொல்லியதைப் போல், நேற்று ஒரு அரசியல் புள்ளியிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னது “ இது அரசியலுக்கு சகஜம் பா”
Muthukrishnan Ipoh: அரசியலில் நேற்றைய எதிரி இன்றைக்கு நண்பன்... இதை என்றைக்கும் நாம் மறந்துவிடக் கூடாது...
Amz Harun: உண்மை தான் ஐயா. உணர்ச்சி வசப்பட்டு பேசுவதாலும் போஸ்ட் செய்வதாலுமே உலகமெங்கும் பல இன்னல்கள். மலாய் சமூகத்தார் பலரும் Is தொடர்பு என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.
Muthukrishnan Ipoh: உண்மை தம்பி... மலேசிய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும்... ஒரு நம்பிக்கையுடன் பயணிப்போம்... நன்றிங்க...
Letchumanan Nadason: உண்மை. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் உள்ள பிரச்சினைகள். இதனை நிதானமாகவும் பொறுப்பு உணர்ச்சியுடனும் அணுக வேண்டும்.
Muthukrishnan Ipoh: உண்மை ஐயா...
Balan Muniandy: சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க தம்பி...
Maha Lingam: நன்றி...வாழ்த்துகள்.ஐயா
Muthukrishnan Ipoh: தங்களுக்கும் வணக்கம்... வாழ்த்துகள்...
Sambasivam Chinniah: Vaazhga Valamudan ayyah. Kaalai vanakam.
Muthukrishnan Ipoh: வணக்கம் ஐயா...
Sundaram Natarajan: Inniya Kaalai Vanakam Anna
Muthukrishnan Ipoh: வணக்கம் வாழ்த்துகள்...
Vadivelu Vadivelu: Nandri Aiyaa,Nalvalthukkal.
Muthukrishnan Ipoh: நன்றிங்க.... வாழ்த்துகள்
Parimala Muniyandy: உண்மைதான்...
Muthukrishnan Ipoh: நன்றிங்க
Perumal Thangavelu: நிதர்சனமான உண்மை. நீதிக்கு தலை வணங்குவோம்
Muthukrishnan Ipoh: வணக்கம் வாழ்த்துகள்
Doraisamy Lakshamanan: நாம் நம் சமுதாயத்திற்குச் சொல்லி விளக்குவதற்கு... நாம் வாரம் ஒருநாள் ஒரு ஆலயத்திலோ ஒரு பள்ளியிலோ ஒன்றுகூடி நம் பிள்ளைகளை உயர்கல்வி பெறுவதற்கான அறிவுரை களும் வழிகாட்டுதல்களும் வழங்குவதற்கு வழி காண வேண்டும்! நாம் பெற்றுள்ள திருக்குறளை வாழ்வியல் நூலாக கற்பிக்கவும், அதே வேளை வாழ்க்கையைச் சிறப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளைச் சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் இப்படி நாம் கூடுவதல்...
பல்லின மக்களோடு மகிழ்ச்சியாக இணைந்து வாழ்வதற்கு நம் பிள்ளைகளைப் பழக்குவதற்கு ஒரு நல் வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடிவதோடு... நம் தாய்மொழியும் நம் தமிழ்ப் பண்பாடும் நம் பிள்ளைகளுக்கு வாழ்வியலாக அமையும் என நம்பத் தொடங்குவோம்!
Doraisamy Lakshamanan: எதிரதாய் காக்கும் அறிவினோர்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் -குறட்பா.
ஒரு சமுதாயமே களமிறங்கிச் செய்ய வேண்டிய மிக முக்கியப் பணி நம் மொழி மற்றும் பண்பாட்டுப் பெருமையை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு திருக்குறளே ஏற்ற நூல், எந்த இனமும் மதிக்கும் நூல், எல்லா மொழியினர்க்கும் ஏர்ப்புடைய நூல்.
வாரத்தில் ஒருநாள் நாம் நம் தமிழ்ப்பள்ளிகளின் விடுமுறை நாளான சனிக்கிழமைகள் தோறும் ஒன்றுகூடி நாம் நம் சமுதாயத்திற்குத் தெரிவிக்க வேண்டிய எல்லாத் தகவல்களையும் தயங்காமல் தெரிவிக்கலாம்.
நம் சமயத்தின் நூலாகவே இந்து சங்கமே திருக்குறளை மூன்று மொழிகளிலும் கற்பிக்கத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களை நியமித்துக் கற்பிக்கலாம். மித்ரா பிரதமர் துறை வழி நிதியதவியும் பெற இந்து சங்கம் முயன்றால் உறுதியாகச் செயல் படுத்த முடியும்!
Inbachudar Muthuchandran: தற்போது நம் சமுதாயம் தோட்டப் புறங்களில் இல்லை. தொழிற்சாலைகளில் தான் வேலை செய்கின்றார். அவர்களுக்கு சீனர்கள் தான் தவக்கேயாக இருக்கின்றார்கள். அரசு ஊழியர்களில் ஒரு தமிழர் ஒய்வு பெற்றால் அதற்கு பதிலாக மற்றொரு தமிழரை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்.
இது ம.இ.கா. காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வருகின்றது. மற்றும் தற்போது மலாய் மொழியுடன் காட் வனப்பெழுத்து. படிக்க வைத்தால் தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் கூட இருக்க மாட்டார்கள்.
புதிய நம்பிக்கை கூட்டணி அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம் தாங்கள் கூறுவது போல் அரசியல் சாசனத்தை நம் தமிழ் மக்கள் கடைப் பிடித்து கொண்டு தான் உள்ளார்கள். பொதுவில் மலாய்க்கரர்கள் நல்லவர்கள் தான்.
ஆனால் இனம் என்று பார்த்தால் அண்மையில் நடந்த மலாய் தன்மான காங்கிரசு போல தான், ஒன்று சேர்ந்து இனம் கண்டு செயல் படுவார்கள். தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அதனால் இந்த நாட்டில் தங்களது அடையாளத்தை கூட இழந்து வருகின்றார்கள்.
Durai Muniandy: உணமைதான் நம்மிடையே ஒற்றுமை என்பது மிக மிக குறைவு.
VT Rajan: ஆம், நீங்கள் சொல்வது தான் உண்மை ஐயா.. பொறுமை கொள்வோம்..
Nagoo Narasiman: உண்மை. இத்தகைய நிதானமான பொறுப்பை நாம் எப்பொழுதும், வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டும்.
Muthukrishnan Ipoh: நிதானமாகப் பயணித்து நியாயத்தைப் பார்ப்போம்... நன்றிங்க...
Shanthi Ganapathy: நன்றி...வாழ்த்துகள். ஐயா.
Savithri Savi: உண்மையான வார்த்தைகள்.
Hamba Mu Umar Umar
Most Relevant is selected, so some comments may have been filtered out.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக