19 மே 2020

ரதி பூர்வாரினி

ரதி பூர்வாரினி
 
கொரோனா கொடுமைகளில் ஓர் இளம் இந்தோனேசியப் பெண் மருத்துவர் பலியானது மேலும் ஒரு வேதனையான நிகழ்ச்சி. நேற்று காலமானார். அவருக்கு வயது 46. கொரோனா தாக்கத்தில் இதுவரை இந்தோனேசியாவில் 26 டாக்டர்கள் பலியாகி உள்ளனர்.

வட ஜாகர்த்தா மருத்துவமனையின் ஆள்பலத் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வந்தார். மக்கள் பலர் கொரோனாவினால் அவதிப் படுவதைக் கண்டு, தானாகவே ஆபத்து அவசரப் பிரிவில் முன்னணிச் சேவையாளராக மருத்துவம் செய்ய முன் வந்தார்.



நேற்று அதிகாலையில் ஜகார்த்தா இடுகாட்டில் ரதி பூர்வாரினி (Ratih Purwarini) நல்லடக்கம். செய்யப் பட்டார். அவருடைய மகன் பிரோஸ் மட்டும் தான் இடுகாட்டில் பார்வையாளராக அனுமதிக்கப் பட்டார். அவருடைய உடல் பிலாஸ்டிக் துணியால் மூடப்பட்டு இருந்தது.

ரதி பூர்வாரினியின் குடும்பத்தார் இடுகாட்டில் தூரத்தில் இருந்து பார்த்தனர். அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் அல்ல. உலகத்தில் யார் கோரோனாவினால் இறந்தாலும் அவருடைய குடும்பத்தினர் எவரும் அருகே செல்ல முடியாது.


உலகில் இதுவரை 250 - 300 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 97 மருத்துவர்கள் பலி. பிரிட்டனில் 8. பிலிப்பைன்ஸில் 9. இந்தப் பட்டியல் தொடர்கிறது. செவிலியர்களை விட டாக்டர்களின் இறப்பு தான் அதிகமாக உள்ளது.

😓😓😓



பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்

Parimala Muniyandy: காலை வணக்கம் அண்ணா. மிகவும் வருத்தமான ஒரு செய்தி. அவரது ஆத்மா சாந்திக்கு பிராத்திப்போம்...

Muthukrishnan Ipoh:  இவரைப் போல 200 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்... உலகத்திலேயே புகழ்பெற்ற சயாமிய இரட்டைப் பிறவிகளைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்... அவரும் இறந்து விட்டார்...

Sai Ra >>> Muthukrishnan Ipoh:  Rip

Balasekeran Manikam:  இயற்கையின் சீற்றம். அப்பாவிகள் பலி. மனம் குமுறல். அய்யகோ...

Muthukrishnan Ipoh:  இயற்கையின் சீற்றம் என்று சொல்வதைக் காட்டிலும்... தூங்கிக் கிடந்த கொரோனாவைத் தட்டி எழுப்பியது மனிதர்கள் தான் என்று சொல்வதே சாலப் பொருந்தும்...

இத்தனைக் கோடி ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் வௌவால் கூட்டத்தோடு வாழ்ந்த அந்த கொரோனா கோவிட்... ஏன் இந்த 2020 ஆண்டில் மட்டும் உயிர் பெற்று இப்படி உத்தரத் தாண்டவம் ஆட வேண்டும்... மனிதர்கள் எங்கேயோ என்னவோ கோளாறு பண்ணி இருக்கிறார்கள்...

Sai Ra >>> Muthukrishnan Ipoh: Unmai

Manickam Nadeson: இது சீன நாட்டின் இராசயனப் போர் என்று சொல்லலாமா? அமெரிக்காவையும் மற்றிம் ஐரோப்பிய நாடுகளை அழிக்க சீன நாட்டின் அரசியல் பித்தலாட்டுமாகவும் இது இருக்கலாம்.

Muthukrishnan Ipoh : உண்மை என்னவென்று தெரியவில்லையே... இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த இந்த வைரஸ் இப்போது மட்டும் எப்படி துள்ளிக் குதிக்கிறது... ஏதாவது ஓர் உயிரியல் கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாமா என்றுகூட வல்லுநர்கள் சந்தேகப் படுகிறார்கள்...

Kanagarajoo Meekan : RIP..

Muthukrishnan Ipoh : 🙏🙏

பார்வதி ஸ்ரீ : எனது பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

Muthukrishnan Ipoh : தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

Mahdy Hassan Ibrahim : கவலையளிக்கும் செய்தி!

Muthukrishnan Ipoh :
🙏

Vel Paandiyan : இதற்கிடையில் மலேசியாவில் வாழும் சில தரப்பினர்களுக்கு
மனிதாபிமானம் குறைந்து கொண்டு வருகிறது.. வாய்பேச முடியாத ஜிவராசிகள் கொள்ள படுகின்றன. கர்மா மேலும் அதிகரிக்கிறது

Muthukrishnan Ipoh : மலேசியாவில் மட்டும் அல்ல... உலகின் பெரும்பாலான இடங்களில் மனிதாபிமானத்திற்கு மதிப்பும் குறைந்து விட்டது... மரியாதையும் மறைந்து விட்டது... வேதனை...

Mageswary Muthiah : மிகவும் வருந்த தக்க செய்தி.

Muthukrishnan Ipoh : சின்ன வயது... வாழ வேண்டிய வயது... போய்ச் சேர்ந்து விட்டார்... கடைசி நேரத்தில் கணவன் பிள்ளைகளைக் கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே... வேதனை...

Mageswary Muthiah >>> Muthukrishnan Ipoh : மிகவும் வருந்தத்தக்கது... கடைசி நேரத்தில் யாரும் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் போவது.

Melur Manoharan : "ஆழ்ந்த இரங்கல்"...!

Muthukrishnan Ipoh : 🙏🙏

Malathi Nair : Deepest condolances to Dr's family.

Muthukrishnan Ipoh : 🙏🙏

Kesavan Suppiah : படைத்தவனிடம் சரணடைவோம். இறைவா !

Muthukrishnan Ipoh : கடைசியில் எல்லோருக்கும் இறைவனின் சன்னிதானம் தானே...

Raman Appasamy : RIP

Elan Ada : Just read in Indonesia a nurse died bcs covid 19, when her body was brought for burial in her own kampung, other kampung folks refused the body to be buried in that kampung, The deceased family members plea was just ignored, then the body was buried at different location. So sad to read that, even a health worker has no respect in this community. What a shame.

Sai Ra >>> Elan Ada : 😭So Sad

Muthukrishnan Ipoh : மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள்... சுயநலவாதிகள்...

Manickam Nadeson : கவலையாக இருக்கிறது ஐயா சார், கடவுள் என்று ஒன்று இருக்கிறதா என்னும் சந்தேகம் எழுகிறது. இந்த விசக் கிருமியை வேண்டுமென்று உலகம் முழுவதும் பரப்பிய சீன நாட்டை மற்ற நாடுகள் இணைந்து புறக்கணிக்க வேண்டும், தகுந்த தண்டனையாக சீனாவின் எல்லாப் பொருள்களையும் வாங்குவதை நிறுத்த வேண்டும். அந்தப் பைத்தியம் பிடித்த நாட்டுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, எல்லா வெளி உறவு தொடர்புகளை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும். நடக்குமா???

Muthukrishnan Ipoh : எனக்கும் அந்த தாக்கம் ஏற்பட்டது... கடவுள் மீது உள்ள நம்பிக்கை சற்றே தளர்வது போல உள்ளது...மற்ற உயிர்களைக் காப்பாற்றப் போய் தன் உயிரையே பணயம் வைத்து விட்டார் அந்த இளம் மருத்துவர்...

கடைசியில் இடுகாட்டில் சொந்த பந்தங்கள் எவரும் அனுமதிக்கப் படவில்லை... மிக மிக வேதனை... கண்டதைத் தின்னும் இனத்தை நினைக்கும் போது... ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை...

இந்தக் கொரோனவினால் உலகின் தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களும் பலிக்கடா ஆகி இருக்கிறார்கள்... இதுவரை 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்... வேதனை மாணிக்கம் சார்...

Mgrkalaimagal Poonkodi : ஆழ்ந்த இரங்கல்

Jayanthi Bala : ஆழ்ந்த இரங்கல்

Ravi Purushothaman : ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Shree Rau : May God Bless

Ravichandran Baliah

Malar Veely

Sathya Raman : இயலாதவர்கள் தங்களின் குறைகளைத் தெய்வத்திடம் முறையிடுவார்கள் அந்த தெய்வமே குறையாக இருந்தால் துன்பப் படுபவர்கள் யாரிடம் அவற்றை முன்வைப்பார்கள்? ஒரு மருத்துவப் படிப்பு என்பது இயலாதவர்களுக்கு மிகப் பெரிய கனவு. அந்தக் கனவுகளைக் காலன் இந்த வகையில் கொண்டு செல்வது கொடுமையிலும் கொடுமை. 😭. மருத்துவராவதே இலட்சியமாகக் கொண்டிருக்கும் வருங்காலத்தினரின் நிலை எப்படி இருக்கும்? பெரும்பாலான மருத்துவர்களைப் பலி கொண்டிருக்கும் இந்த கொரோனா இன்னும் எத்தனை மனித உயிர்களை எடுக்கப் போகிறதோ??? 😥😥😥 கடவுளே 🙏

Muthukrishnan Ipoh : 10.04.2020 தேதி வரையில் இத்தாலியில் மட்டும் 101 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் இறந்து இருக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் 21 மருத்துவர்கள். இங்கிலாந்தில் 16 மருத்துவர்கள். இந்தோனேசியாவில் 29 மருத்துவர்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உலகம் முழுமைக்கும் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்து இருக்கலாம். அவர்களுக்காகக் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய இயலாது...

Sai Ra : 😭

Kumaravelu Shanmugasundaram : இந்தியாவில் எந்தக் கணக்கும் உண்மை அல்ல

Muthukrishnan Ipoh :
கணக்கு விசயத்தில் சீனாவைவிட இந்தியா பல மடங்கு சிறப்பு...

Kumaravelu Shanmugasundaram >>> Muthukrishnan Ipoh : இதில் ஒப்பீடு நமக்கு தேவையில்லை. நாம் என்றால் தமிழர்கள் தாம். வழியில்லை இந்தியாவுக்கு அடிமை நாங்கள்...

Muthukrishnan Ipoh : இதுவரையில் உலகில் 97,058 பேர் பலியாகி உள்ளனர். உலகை மிரட்டும் உலகளாவிய நோய்...

Shantakumar Dilip : மிகவும் சங்கடமான ஒரு செய்தி ஐயா... அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திப்போம்.

Muthukrishnan Ipoh : இவரைப் போல நிறைய முன்னணிச் சேவையாளர்கள் பலியாகி உள்ளனர்... வேதனை...

Nirijah Balasubramaniam : Rip

Rajesh Ravinkkaran : TRAGEDY

Govin Nagu : Rip

Selva Selva : ஆழ்ந்த இரங்கல்... மனம் வலிக்கிறது இறைவா...

Muthukrishnan Ipoh : நேற்று அந்தச் செய்தியைப் பார்த்த பின்னர் மனசு ரொம்பவும் வலித்தது...

Saroja Devi : RIP

Vani Yap : ஆழ்ந்த இரங்கல்... கொடுமையிலும் கொடுமை...

பெ.சா. சூரிய மூர்த்தி : இறைவா... வேதனை.

Perumaiyee Raj

Amu Tha

Muthukrishnan Ipoh : 🙏🙏

Poovanesvary Eswari : ஓம் நமசிவாய...



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக