26 டிசம்பர் 2020

மலேசியாவில் உடைக்கப்பட்ட உலகப் பாரம்பரியத் தளம் - 2013

2013 டிசம்பர் 02-ஆம் தேதி. கெடா, பூஜாங் சமவெளியில் சுங்கை பத்து புராதனத் தளம் ரகசியமாக உடைக்கப்பட்டது. இந்தத் தளத்திற்கு 11-ஆவது தளம் என்று பெயர். (Candi Sungai Batu in Lembah Bujang, Kedah). யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியத் தளம். அதுவே பூஜாங் வெளியில் உடைக்கப்பட்ட 1200 ஆண்டுகள் பழைமையான உலகப் பாரம்பரியத் தளம் ஆகும்.

A 1,200-year-old Candi called Candi Sungai Batu in Lembah Bujang, Kedah was destroyed by a developer on 02 Dec 2013. The Kedah state government, NGOs and netizens are angered over the demolition of the candi that is known as site number 11.

கெடாவில் உள்ள புக்கிட் சோராஸ் தொடங்கி மத்திய செபராங் பிறை; செரோக் தோக் குன் வரை பூஜாங் வெளி பரந்து விரிந்து உள்ளது.

Lembah Bujang is a sprawling historical complex and has an area of approximately 224 square km. Situated near Merbok, Kedah, between Gunung Jerai in the north and Muda River in the south, it is the richest archaeological area in Malaysia.

அந்தத் தளம் இருந்த பகுதியை கெடா மாநில அரசாங்கம் இரகசியமாக ஒரு நில மேம்பாட்டாளரிடம் விற்று விட்டது. அவரும் இரகசியமாக உடைத்து விட்டார். 2013-ஆம் ஆண்டு முக்ரீஸ் மகாதீர் கெடா முதல்வராக இருந்த போது நடந்த துர்நிகழ்ச்சி.

The Kedah state government has secretly sold the site to a land developer. He, too, secretly demolished the candi.

மலேசியா முழுமைக்கும் எதிர்ப்பு அலைகள். உலக வரலாற்று அமைப்புகளின் ஆவேசங்கள். உடைப்பதை நிறுத்தி விட்டார்கள். புதிதாக அதே மாதிரி ஒரு தளத்தைக் கட்டித் தர நில மேம்பாட்டாளர் முன் வந்தார். என்னே அறிவுஜீவிகள். பாரம்பரியச் சின்னத்தை உடைத்துவிட்டு அதே மாதிரி அதே இடத்தில் கட்டித் தருகிறார்களாம்.

The demolished candi number 11 in Sungai Batu, Lembah Bujang will be rebuilt by the developer soon on the same site. “They (developer) regret their action and have agreed to cordon off the site from their housing development project. The company agreed to rebuild the candi structure based on the original plan, at the original site 11 said' Datuk Mukhriz Mahathir.

2013 செப்டம்பரில் அந்தப் பாரம்பரியத் தளம் உடைக்கப்பட்டது. பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு வட்டத்தின் தலைவர் டத்தோ வி. நடராஜா அங்கு போய் இருந்த போது  இடிபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தத் தளம் தரை மட்டமாக்ப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது.

Torn down in September 2013, the demolition of the ancient temple ruins only came to light after Bujang Valley Study Circle chairman Datuk V. Nadarajan went to check the site and found the land flattened and bare.


உடனே டத்தோ நடராஜன் போலீஸில் ஒரு புகார் செய்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஒரு தளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.

After Nadarajan lodged a police report, Penang Deputy Chief Minister II Prof Dr P. Ramasamy visited the site two days ago and confirmed that the candi was no longer there.


அந்தத் தள உடைப்பு நாடகம் மலேசியர்கள்; உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இது போன்ற பொன் கலசங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லா விட்டால், மேலும் இது போன்ற வரலாற்று தளங்கள் உடைக்கப்படுவது தொடரும் என்று நடராஜன் எச்சரித்தார்.

The disclosure of the demolition has now caused uproar among Malaysians and local historians, with Nadarajan warning that such total disregard for historical sites like this will continue if the government does nothing to safeguard such treasures.

மீண்டும் சொல்கிறேன். பூஜாங் பாரம்பரியத் தளம் 11; புனரமைக்கப்பட்ட கோயில் இடிபாடு ஆகும். 150 அடி அகலம்; 250 அடி நீளம். சுங்கை பத்து பகுதியில் அமைந்து உள்ளது. 1936 - 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி குவாரிச் வேல்ஸ் என்பவரும் அவருடைய மனைவி டோரதி வேல்ஸ் என்பவரும் அந்தத் தளத்தைத் தோண்டி எடுக்கும் வேலைகளைச் செய்தார்கள்.

candi number 11 was a large reconstructed temple ruin that had measured 150 feet wide and 250 feet long located at Sungai Batu area. Candi 11 was excavated by HG Quaritch Wales and Dorothy Wales between 1936 and 1937.

இந்து சமயத் தாக்கங்களைக் கொண்ட கோயில் இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டன. 1974-ஆம் ஆண்டில்  புனரமைப்பு செய்யப்பட்டன.


The temple ruins, with Hindu influences, was reconstructed back in 1974 after it was excavated.

லெம்பா பூஜாங் என்பது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான தொல்பொருள் தளம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் தாயகமாகும். 110-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு களிமண் செங்கல் நினைவுச் சின்னம் ஆகும். அதாவது 1900 ஆண்டுகளுக்கு முந்தைய தளம்.

Lembah Bujang is the richest archaeological site in Malaysia and the home of the oldest man-made structure recorded in Southeast Asia — a clay brick monument dating back to 110AD.

அப்பா அம்மாவைச் சாகடித்து விட்டு மறுபடியும் புதிதாக அதே மாதிரி அப்பா அம்மாவை உருவாக்கித் தருகிறார்களாம். இனவாதம் மத வாதத்தால் என் நெஞ்சு வலிக்கிறது.

After killing a father and mother, the unscrupulous parties wanted to create a new model of Daddy and Mommy again. What a crap? Much pain is coursing through my heart with lifetime wounds; because of Prejudice, Racism, Racial Discrimination, Bigotry, Xenophobia in this country.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.12.2020



 

1 கருத்து: