07 டிசம்பர் 2020

ஜோகூர் லாபிஸ் தமிழ்ப்பள்ளிக்கு 35 தங்கப் பதக்கங்கள்

கோலாலம்பூர், டிச 4 –

கடந்த ஜூன் முதலாம் தேதியில் இருந்து அக்டோபர் 31-ஆம் தேதி வரையில் நடைபெற்ற எத்திக் (E –Thic) எனப்படும் அனைத்துலகப் புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆசிய பசிபிக் பசுமை புத்தாக்கப் போட்டியில், ஜோகூர் லாபிஸ் தமிழ்ப்பள்ளி 35 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தது.

இணையம் வாயிலாக நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் 30 மாணவர்களைக் கொண்ட 6 குழுக்களும், 5 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவும் பங்கேற்றன. அந்தப் போட்டியில், மறுசுழற்சி பொருட்களின் மூலமாக உருவாக்கப்பட்ட கண்டுப்பிடிப்புகள் இடம்பெறச் செய்யப் பட்டன.

நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பங்கெடுத்துக் கொண்ட அந்தப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் ஜோகூர் லாபிஸ் தமிழ்ப் பள்ளியின் 7 கண்டுபிடிப்புகள், போட்டி ஏற்பாட்டாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றன.

நன்றி: வணக்கம் மலேசியா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக