19 மே 2016

ஸ்ரீ விஜய பேரரசு - 1

இந்தோனேசியா உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காவது இடம். 26 கோடி மக்கள். அந்த நாட்டைச் சுற்றிலும் 13,466 தீவுகள். அது ஓர் அழகிய அதிசயமான பூமி.


இந்தோனேசியா எனும் சொல்லில் பற்பல பழைமைகள் பற்பல புதுமைகள். அவற்றில் பற்பல மர்மங்கள். அந்தச் சொல்லுக்குள் நீண்ட நெடிய ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் 1000 ஆண்டுகள் இந்தியர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்ததும் ஒரு வரலாறு. மலைக்கவும் வேண்டாம். திகைக்கவும் வேண்டாம். உருப்படியான ஓர் உண்மையை மறைக்கவும் வேண்டாம்.

இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. முதலில் ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள். அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:
 

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். இவற்றுள் மிக வலிமை வாய்ந்ததாக மஜபாகித் பேரரசு கருதப் படுகிறது. அந்தப் பேரரசின் கீழ், ஒரு கட்டத்தில் அதாவது கி.பி. 1350 லிருந்து 1389 வரையில் 98 சிற்றரசுகள்  இயங்கி இருக்கின்றன.

சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைஸ், கிழக்கு தீமோர் நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.

(சான்று: http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).

இந்தியப் பேரரசுகள் இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. இந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. இன்னும் ஒரு விசயம்.

பாலித் தீவில் முதன்முதலில் ஒரு சிற்றரசை  உருவாக்கியது ஓர் இந்திய மன்னர். அவருடைய பெயர் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesarivarma). பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல். அந்தச் சிற்றரசு கி.பி.914ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. அங்கே சைவமும் புத்தமும் ஒரே சமயத்தில் பின்பற்றப் பட்டன.

சஞ்சாயா பேரரசை ஆட்சி செய்த ஸ்ரீ இசயானா விக்ரமதாமதுங்கா (Sri Isyana Vikramadhammatunggadeva) எனும் அரசரின் ஆட்சி காலத்தில் பெராப்பி எரிமலை வெடித்தது. சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவருக்குப் பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isanatungavijaya) ஆட்சிக்கு வந்தார்.

பெராப்பி எரிமலை வெடிப்பினால் சஞ்சாயா பேரரசு  தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியது. அந்த மாற்றத்தில் சஞ்சாயா எனும் மற்றொரு சிற்றரசும் உருவாக்கப்பட்டது. ஓர் இடைச் செருகல். சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு.

கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு அப்படியே தன் அதிகார வலிமையை பாலித் தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான் பாலித் தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம் நிலைத்துப் போனது. அதனால் இப்போது பாலித் தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். இதுதாங்க வரலாறு. இதுதாங்க வரலாற்று உண்மை.

இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படி கிடைத்தன என்று கேட்கலாம். நல்ல கேள்வி. இந்தோனேசியாவில் ஜாகர்த்தா, மேடான், சுராபாயா, பாண்டுங், செமாராங் எனும் நகரங்களில் பழஞ்சுவடிக் காப்பகங்கள் உள்ளன. அங்கே இந்த வரலாற்று உண்மைகளை அச்சு அசலாக எழுதி வைத்து இருக்கிறார்கள்.

அகழாய்வு செய்யப்பட்ட கல்வெட்டுகள், பழஞ்சுவடிகள், மண்சுவடுகள் போன்றவற்றைப் பத்திரப்படுத்திக் காட்சிப் படுத்துகிறார்கள். அங்கே வரலாற்றை வரலாற்றுப் பூர்வமாகப் பார்க்கிறார்கள். அதனால் வரலாறு படைக்கிறார்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் பாட்டனும் பாட்டியும் பட்டம் விட்டார்கள் என்று எழுதும் காமா சோமாக்கள் அங்கே இல்லை. சட்டைகளைக் கழற்றி மட்டைகளைக் கட்டி அழகு பார்க்கும் வரலாற்று வித்தைகளும் அங்கே இல்லை. அந்த வகையில் வரலாறுகளைச் சிதைத்து வடிவேலு கணக்கில் யாரையும் சிரிக்க வைப்பதும் இல்லை. சரி. விசயத்திற்கு வருவோம்.

இந்தோனேசியா. இதன் மூலச் சொல் சிந்து நதி (Indus River). அடுத்து ‘இண்டஸ்’ (Indus)  ‘நேசஸ்’ (nèsos). இந்த இரு சொற்களில் இருந்து இந்தோனேசியா (Indonesia) எனும் சொல் உருவானது. இண்டஸ் - நேசஸ் எனும் இரண்டு சொற்களுமே கிரேக்கச் சொற்களாகும். இந்தோ நேசஸ் (Indo nèsos) எனும் கூட்டுச் சொற்கள் மருவி இந்தோனேசியா (Indonesia) என்று மாற்றம் கண்டன. இண்டஸ் என்றால் சிந்து. நேசஸ் என்றால் தீவு.

இந்த இண்டஸ் எனும் சொல்லில் இருந்து தான் இந்தியா எனும் சொல்லே உருவானது. அந்த வகையில் இந்தியா எனும் சொல் ஒரு கிரேக்கச் சொல் ஆகும். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சரி.

இந்தோனேசியா எனும் சொல்லை 1850இல் ஜேம்ஸ் ரிச்சர்ட்சன் லோகான் (James Richardson Logan) எனும் பிரித்தானிய கல்வியாளர் தான் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் டச்சுக்காரர்கள் பயன்படுத்தினார்கள். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.

பொதுவாக இந்தோனேசியா எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. கிழக்கு இந்தியத் தீவுகள் என்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். டச்சுக்காரர்களுக்குப் பின்னர் வந்த பிரித்தானியர்களும் கிழக்கு இந்தியத் தீவுகள் என்றே அழைத்தனர்.

இந்த இந்தோனேசியாவைப் பற்பல அரசுகள் ஆட்சி செய்துள்ளன. அவற்றுள் வரலாற்றில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அரசு ஒன்று இருந்தது என்றால் அதுதான் ஸ்ரீ விஜய அரசு. இந்தோனேசியாவை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மாபெரும் ஓர் அரசு. இந்த அரசைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஸ்ரீ விஜய என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஸ்ரீ என்றால் நற்பேறு, மகிழ்ச்சி. விஜய என்றால் வெற்றி அல்லது மிகச்சிறந்த என்று பொருள். ஸ்ரீ விஜய பேரரசு இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை மையம் கொண்ட ஒரு பேரரசு.

அந்தப் பேரரசு 8ஆம் - 12ஆம் நூற்றாண்டுகளில் புத்த மதத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. 7ஆம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான இந்திய வணிகர்கள் சுமத்திராவிற்கு வந்தனர். வணிகம் பெருகியது. இந்து மதமும் புத்த மதமும் செழித்தோங்கியது.

10ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய பேரரசின் வழித்தோன்றல்களாகச் சைலேந்திரா, மத்தாராம் அரசுகள் உருவாகின. சைலேந்திரா அரசு போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது.  மத்தாராம் (Mataram) அரசு பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம்.

இந்தக் கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்தக் கோயிலை காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறு. அதைக் கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர்.

13ஆம் நூற்றாண்டில் மஜாபாகித் அரசு உருவானது. காஜா மாடா (Gajah Mada) எனும் அரசரின் கீழ் உச்சத்தைத் தொட்டது.

ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா, வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங் வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி, மஜாபாகித் அரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டு இருக்கலாம்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசியர்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.

1918ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னார். அப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. முதலில் அதிர்ச்சி அடைந்தது சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள்.

1984ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தவிர கை வேலைப் பாட்டுப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன.

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.

தென் சுமாத்திராவின் பலேம்பாங் நகரில் மூசி எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் ஸ்ரீ விஜய பேரரசு மையம் கொண்டு இருந்தது எனும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. அந்த முடிச்சை அவிழ்த்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர். அவருடைய பெயர் பியரி ஈவஸ் மாங்குயின் (Pierre-Yves Manguin).

2013ஆம் ஆண்டு இந்தோனேசியப் பலகல்கலைக்கழகம் தீவிர ஆய்வுப் பணியில் இறங்கியது. அதன் பயனாக பாத்தாங் ஹாரி ஆற்றுப் பகுதியில் ஜாம்பி எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்ததாக உறுதிபடுத்தப்பட்டது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல இந்திய மர்மங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் தான் அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

அங்கோர் வாட்டில் ஓர் அதிசயம் இருப்பதாகச் சொன்னவர் ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தோனேசியா பெரம்பானான் திருமூர்த்தி கோயிலைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததும் ஒரு பிரெஞ்சுக்காரர். போராபுடோர் புத்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர். ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான். இன்னும் இருக்கிறது. ஆக ஒரு வகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியர்கள் உலகம் நன்றி சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இன்னும் ஒரு விசயம்.


இந்தோனேசியா முழுமையும் இந்தியர்கள் 1000 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தோனேசியர்களின் உடலிலும் இந்திய இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது. ஆக, அங்கிருந்து பக்கத்து நாட்டிற்கு குடியேறியவர்களுக்கு என்ன இரத்தம் ஓடலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கலிகாலச் சாமியார்கள்

கமலஹாசன் ஒரு வசனம் சொல்வார். ”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால், நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. இவை கற்பக விருட்சங்களாக வாழ்கின்ற தத்துவப் பாசுரங்கள். மனிதனில் எவனும் கடவுள் இல்லை. எந்த ஒரு மனிதன் தன்னை ஒரு கடவுள் என்று சொல்கிறானோ, அவன் மனிதனே இல்லை.



இப்போது கலியுகம் நடக்கிறது. அந்த யுகம் கண் சிமிட்டிய நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல சாமியார் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போகின்றார்கள்.

கையை நீட்டச் சொல்லி, நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.




இங்கே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சாமியார்கள் யாரையும் நாம் குறை சொல்லவில்லை. உண்மையான, நல்ல சாமியார்கள் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாணயமாக ஆன்மீகச் சேவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கிறோம். வாழ்த்துகிறோம்.

Narayan Sai
ஆனால், அந்தச் சாமியார் கூட்டத்திலேயே பசுத் தோல் போர்த்திய புலிகளும் இருக்கின்றன. மான்தோல் போர்த்திய முதலைகளும் இருக்கின்றன. அந்தக் கார்ப்பரேட் புலிகளும், அந்தக் கார்ப்பரேட் முதலைகளும் எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கின்றன.

எத்தனைப் பெண்களை நாசமாக்கி நடுத்தெருவில் விட்டு இருக்கின்றன. எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து கருவை நசுக்கி இருக்கின்றன. எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் கழிசடை ஆக்கி இருக்கின்றன. எத்தனைப் பேரைக் கொலை செய்து மாலைகள் போட்டு இருக்கின்றன. அந்த ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை.


கார்ப்பரேட் சாமியார்கள் பிரம்ம மந்திரங்களைப் பாடினார்கள். மன்னிக்கவும். பிரம்ம மந்திரங்கள் என்பது புனிதமானச் சொற்கள். இருந்தாலும் அதைப் பாடித்தானே கார்ப்பரேட் சாமியார்கள் கோடிக் கோடியாய்ச் சுருட்டினார்கள். கதைக்கு வருகிறேன். ரமண ரிஷியை உங்களுக்குத் தெரியும் தானே.

ஒருநாள் அவர் கையில் இருந்த சில சில்லறைக் காசுகளைக் குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு தபசில் ஆழ்ந்து போனார். ‘காசும் பணமும் நகையும் ஆட்கொல்லி’ என்று சொன்னவர், கடைசி வரையில் காசைக் கையில் தொடவே இல்லை. அவரைப் பின்பற்றி இன்னொரு யோகி வாழ்ந்தார். ‘நான் ஒரு பிச்சைக்காரன். உனக்கும் எனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சைக் கேட்கிறேன்’ என்றார். அவர் யோகி ராம் சுரத் குமார்.
 

(ான்று: Fake Indian Babas Scandals Crimes And Their leaked Photo - https://plus.google.com/+14mixpage/posts/Sruy331CqcR )
 
ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்த ஆன்மீகவாதிகள்.

அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா போன்ற சாமியார்கள். அதற்கு முன், கார்ப்பிரேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


கார்ப்பிரேட் என்பது corporate எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வாடிக்கைச் சொல். தமிழில் இது ஒரு வழக்குச் சொல்லாக மாறி வருகிறது. ஒரு நிறுவனத்தின் உச்ச மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களைக் கார்ப்பிரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றிச் சுற்றிதான் இருக்கும்.
 
Kripalu-Mahara
அவர்களை மிஞ்சி எதுவும் நடக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப் போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான்  கார்ப்பிரேட் அல்லது கார்ப்பரேட் தலைவர்கள் என்பார்கள்.


நித்தியானந்தா என்பவர் ஒரு கார்ப்பிரேட் சாமியார்தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி, ஞானி, இந்திய ஞான மரபில் வந்தவர் என்று சொல்லிக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற ஆன்மீகக் கர்த்தாக்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி இலட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வையும் மேற்கொண்டனர்.
சான்று: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1206/12/1120612015_1.htm

ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் ‘எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். எனக்கு நித்திதான் வேண்டும்’ என்று சொல்லி  அந்தப் பெண், நித்யானந்த ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது ‘போகட்டும்’ என்று சொன்னார் நித்யானந்தர். புத்தர் துறவியாக மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டாராம். சான்று: http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=77945


இந்தக் கட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி. அந்தத் தெய்வ மகான் தன்னுடைய 29ஆவது வயதில் யசோதராவை  விட்டு விலகிச் சென்றார். லௌகிக வாழ்க்கையை மறுத்து துறவறம் பூண்டார். ஆனால், நித்யானந்தர் என்ன செய்தார். தன்னுடைய 32ஆவது வயதில் ரஞ்சிதாவை இல்லறத்தில் இணைத்துக் கொண்டார். துறவறத்தைத் துறந்து லௌகித்தில் லயித்துப் போனார்.
சான்று: http://www.manithan.com/news/20120517102697
 
Ram Rahim Singh
நித்யானந்தரின் பக்த கோடிகள் எல்லாருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல அவர் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சுயமான சிந்தனை என்பதே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் இவர்களும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறார்கள், செய்கிறார்கள்’ என்று ஒரு தமிழகத் தாளிகை குற்றம் சொல்கிறது.

ஆனால், அதே தாளிகைதான் “ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” எனும் தொடரை இரண்டு வருடங்களுக்கு கடுகு தாளிப்பு செய்தது. அதை உலக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் துணுக்குகளைப் பாருங்கள்.


“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா அவன் மேல விழுற முதல் விளக்குமாறு நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”
சான்று: http://www.envazhi.com/நித்யானந்தா-மீது-அப்படிய/

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியாரை பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…” என்று அந்தத் தாளிகையே நக்கல் செய்கிறது. வாழ்ந்தால் ஒரு பேச்சு. தாழ்ந்தால் ஒரு பேச்சு. நல்ல ஒரு ஜால்ரா.


உலகில் இரண்டு வகை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஒன்று பிடிபட்ட சாமியார். இன்னொன்று பிடிபடாத சாமியார். இதில் எந்தச் சாமியார் மரண அடி இல்லாமல் தப்பிக்கின்றாரோ, அந்தப் பக்கமாகச் சாய்வதற்கு ஒரு செம்மறியாட்டுக் கூட்டமே காத்து இருக்கும். இப்படி நான் சொல்லவில்லை. அமிழ்தா எனும் வலைப்பதிவில்  ’பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை’ எனும் கட்டுரையில் எழுதப்பட்டு இருக்கிறது.
சான்று: http://amizhtha.wordpress.com/2010/03/10/பிரேமானந்தா-முதல்-நித்யா/.

ஒரு காலத்தில் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும் என்று சாமியார்கள் சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தார்கள். எதற்கும் அதிகமாக ஆசைப்படவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எல்லா சாமியார்களையும் குறை சொல்லவில்லை. இப்போதைக்கு மாட்டிக் கொண்டு இருப்பது கார்ப்பரேட் சாமியார்கள்தான். கார்ப்பரேட் அல்லாத சாமியார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சரி.
 

இப்போது நடப்பது என்ன. கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆடம்பரமான விளம்பரங்கள். அவர்கள் நடக்கின்ற பாதையில் எல்லாம் பூமாலைகள். உடுத்துகின்ற காவி உடைகளில் எல்லாம் முழுக்க முழுக்க பன்னீர்ப் புஷ்பங்கள். சந்தனச் சவ்வாதுகள்.

காலையில் இந்தியா. மாலையில் மாலைத்தீவு. ராத்திரியில் அரபுகடல் அபிஷேகம். அவர்களின் கஜானாக்கள் கோடிக் கோடிகளில் நிறைகின்றன. தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்துப் பூஜிக்கச் சொல்கிறார்கள். சாமிகள் செய்ய முடியாததைச் சாமியார்கள் செய்ய முடியும் என்று பகதர்களையும் நம்ப வைக்கின்றனர். அது பெரிய பாவம். இப்போது தெரியாது.
 

யாரோ ஒருவருக்கு எப்போதோ ஒரு நல்லது நடந்து இருக்கும். அதை அவர் அடுத்தவரிடம் சொல்ல, அடுத்தவர் அதை மற்றவரிடம் சொல்ல, அது அப்படியே பரந்து விரிந்து பாய்மரக் கப்பலில் பயணம் செய்கிறது. இதை ஒரு Domino Effect என்றும் சொல்லலாம்.
சான்று: http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3243.html

கடவுளை மிஞ்சி எதுவும் இல்லை. அவர் செய்யாததை எந்தச் சாமியாராலும் செய்ய முடியாது. ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” என்று தொடர் எழுதிய ஓர் ஆன்மீகவாதி, ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று தன்னுடைய ரஞ்சித பாசத்தால் நிரூபித்து இருக்கிறார். அவருடைய எழுத்துகளுக்கும், செயலுக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


Asharam Bapu

கார்ப்பிரேட் சாமியார்களின் தோற்றம் இருக்கிறதே அது ஒரு மாயை. அதற்கு அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கும் அற்புதமான விளம்பர ஜோடனைதான் அதற்கு மூலகாரணம். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகார மையங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், ஆன்மீக வகுப்புகள் எல்லாம் கலந்த ஒரு கூட்டாஞ்சோறுதான் இன்றைய கார்ப்பிரேட் சாமியார்கள்.
சான்று: http://everyonelovesvj.blogspot.com/2010_03_13_archive.html

இந்தக் கார்ப்பிரேட் சாமியார்களின் குரு யார் தெரியுமா? அவர்தான் தீரேந்திர பிரம்மச்சாரி. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது தீரேந்திரரின் பயணம் தொடங்கியது. இந்திராகாந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் ஆகிய இருவரும் பக்கா எதிரிகள். இருந்தாலும் பிரம்மச்சாரியார் இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருந்தார். தனக்கு வேண்டியதைச் சாணக்கியமாகச் சாதித்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் கார்ப்பிரேட் சாமியார்களின் மன்மத மந்திரங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது.
 
Maharishi Mahesh Yogi
அதன் பின்னர் சந்திராசாமி வந்தார். இப்போது பெயர் போட்டுக் கொண்டு இருக்கும் கார்ப்பிரேட் சாமியார்களுக்கு அந்தச் சந்திராசாமிதான் நல்ல ஒரு ரோல் மோடல். இவர் நரசிம்ம ராவ், சந்திரசேகர் காலங்களில் கோடிக் கோடியாகப் பணம் சம்பாதித்தார். அடுத்து வந்த இந்திய அரசு இவர் மீது வழக்கு போட்டது. அவர் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவாறு அவரின் கடப்பிதழையும் முடக்கி வைத்தது. அது ஒரு பெரிய கதை. அப்புறம் ரஜ்னீஷ் வந்தார்.

இவர்  கொஞ்சம் வித்தியாசமானவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். இவரைச் ’செக்ஸ் குரு’ என்றும் சொல்வார்கள். இவர் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்.’

என்ன அபிரிதமான கண்டுபிடிப்பு. நோபல் பரிசு கொடுத்து இருக்கலாம். யாரும் சிபாரிசு செய்யவில்லை. இவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஆசிரமங்களைக் கட்டினார். அவற்றை அமெரிக்க அரசு பறிமுதல் செயதது. அதுவும் ஒரு பெரிய நீண்ட கதை.
 
ிக்ரம் பாப
இந்தக் கட்டத்தில்தான் சாய்பாபா வந்தார். வெறும் கையில் விபூதி வரவழைப்பது. மோதிரத்தை வரவழைத்து பரிசாகக் கொடுப்பது. பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுப்பது. இவை அனைத்தும் சித்து வேலைகள் என்று லண்டன் பி.பி.சி.யும் நார்வே நாட்டு என்.ஆர்.கே. தொலைக்காட்சி நிலையமும் பிரபலப்படுத்தின. Seduced By Sai Baba எனும் நாடகம் சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.  
சான்று: http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba#Criticism_and_controversy

தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும், அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பிரேமானந்தா. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளியது. 14 ஆண்டுகள் சிரையில் இருந்தார்.
 
Radhe Maa

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சிறையிலேயே இறந்தும் போனார். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகின்றன. கல்கி எனும் சாமியார் மீதும் ஏராளமான புகார்கள் இருக்கின்றன. சான்று: http://ta.wikipedia.org/wiki/பிரேமானந்தா

ஆக, ரஜ்னீஷின் மெகா ஆசிரமங்கள், சந்திராசாமியின் அரசியல் அதிகாரப் பிடிகள், அடுத்து சாய்பாபாவின் சமூக நலச் சேவைகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கூட்டிப் பாருங்கள். அதில் ஒரு கலவை வரும். அந்தக் கலவையில்தான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் வந்து நிற்கிறார்கள். சில கார்ப்பரேட் சாமியார்கள் அரசியல் தரகர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். சிலர் கருப்புப் பண வங்கிகளாக இருக்கிறார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். (சான்று: திகுதிகு திகம்பர சாமிகள். ப.திருமாவேலன். 17.03.2010 ஆனந்த விகடன்.)

படு மோசமான தொழில்களைக் காவி உடையில் கார்ப்பரேட் செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக ஒரு சமயம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நம்பும்படி  பல்வேறு மாஜிக் மாய்மாலங்களைச் செய்து வருகிறார்கள். கோடிக் கோடிகளாகக் குவிக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,

தேவநாதன் எனும் சாமியாரின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இருபது ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இருந்தும் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் சர்வலோக குருவாக வலம் வர முடிகிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” கார்ப்பரேட் சாமியார்கள் பெரிய பெரிய தத்துவங்களைப் பற்றி மேடையில் பேசலாம். ஆனால், கடைசியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சிற்றின்பப் பிரியர்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அவர்களை ஆண்டவனாகப் பார்ப்பது பேதைமையிலும் பேதமை ஆகும்.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும்கூட!

சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.



நடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2

19.05.2016 ினத்ந்தி நாளிில் வெளியானட்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று தான் ஜமாய்க்கா (Jamaica). இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள். நிறையவே கரும்புத் தோட்டங்கள். கறுப்பர்கள் நிறைய பேர் அடிமைகள். கரும்புத் தோட்டங்களின் முதலாளிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்.

முதலாளிகளுக்கும் திண்டாட்டம்
தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்

இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கு திண்டாட்டம் தொழிலாளிகளுக்குத் திண்டாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி ஒருவர் இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் கட்டப் பட்டது. 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர். வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. 
 

'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க... வாங்க... என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு... தயவு செஞ்சு... பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க... வேண்டாங்க சாமி... அது விவகாரமான விசயமா மாறி… அப்புறம் கொலையில் தான் போய் முடியும்... வேண்டாங்க சாமி...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துப் புத்தி சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். கேட்ட மாதிரி பதிவுசாகப் பக்குவமா… ஒன்னும் தெரியாத பாப்பா மதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

இரவோடு இரவாக கடலில் நீந்திப் போய்

அதையும் மீறி பாருங்கள்... ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. படியுங்கள். மன்மதக் குஞ்சு இல்லை. மன்மதக் குஞ்சு ராசா. சொன்னது எல்லாம் அதன் மரமண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம் கொஞ்சம் கொப்பளித்து விட்டது.
 

அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள்.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும் என்பது அங்கே ஊறிப் போன விஷயம். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமையும் பரவி இருந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
 

தப்பாக நினைக்க வேண்டாம். நானும் ஒரு தமிழன்தான். சமயங்களில் லகர ளகரப் பிரச்சினைகள் வருவது உண்டு. 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பிரச்சினை இல்லை. பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மதனின் மனசும் வெள்ளை. ஆக, அந்த வெள்ளை வேகத்தில் போய் மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு பதினைந்து வயது பெண் அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது. 
 

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து அதற்கு மப்பு மந்தாராமாகிப் போனது. இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்துச் சிரிக்க... அவள் இவனைப் பார்த்துச் சிரிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைந்தது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.
 

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம். சுற்றிக் கிடந்த செடி கொடிகளை கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டி… படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து… இரண்டு பேருமே அன்றிரவு அங்கே தங்கி இருக்கிறார்கள். 
 

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்து உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டமே போட்டு வைத்து இருக்கிறது. அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். 
 

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து... இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது… பாருங்கள். 

அவளுடைய பிடிவாதம் அவளுடைய துணிகரமான முடிவு… உள்ளூர் சுதேசி மக்களையே அசர வைத்தது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள். உடனே அவளைப் பிடித்து ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கிருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஓர் ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது. அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.
 

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைக்கப் பட்டு இருந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைபட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறாள். அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள்.

அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை. தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டாரன். சுதேசி மக்களின் பெரிய ஆள்பலத்தை மூன்று பேர் எப்படி சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த மற்றவர்களும் களம் இறங்கி விட்டார்கள். 
 

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 19. புத்தகங்களைத் திருடியதற்காக சிறைக்குப் போனவன். நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16.
 

இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா... இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க… தொடர்ந்து படியுங்கள்.

இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன் தான் தீனா எனும் தலைவன்.

அவனுடைய பழைய பெயர் ஊட்டு. கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா,  கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலுக்கு வந்த தலைவன் அங்கிருந்த கத்தரிக்கோல் தான் தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்து தான் எல்லாரும் தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே... அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 
 

ஆக, வேறு வழி இல்லாமல் ‘இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய விருந்து.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது. இருந்தாலும் இப்போது காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். கள்ளுக்கடை கந்தசாமி புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்கலாமே. சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டனர். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள் மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தியின் இயற்கையான சொர்க்கத் தன்மை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டனர்.  ஆளாளுக்கு வக்கனையாகப் பத்தொன்பது கசையடிகள். அதில் மன்மத ராசா குயிந்தாலும் ஒருவர்.

ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம் ஒரே ஆர்ப்பரிப்பு. ஊர் மக்கள் அடங்கிப் போயினர். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.