14 ஜூலை 2019

இந்திரா பார்த்தசாரதி பிறந்தநாள் 10.07.2019

தமிழ் உலகத்தின் பிரபலமான படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy). அவரின் பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவருக்கு வயது 90.

Image may contain: 1 person, eyeglasses and closeup

# சென்னையில் (1930) பிறந்தவர். கும்பகோணத்தில் வளர்ந்தவர். கும்பகோணத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி.

# எழுத்தாளர் தி.ஜானகிராமனின் மாணவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்.

# சின்ன வயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம். ஆனந்த விகடன் வார இதழில் முதன்முதலாக ‘மனித இயந்திரம்’ சிறுகதை.

# தன் மனைவியின் பெயர் இந்திரா. அதை இணைத்துக் கொண்டு ‘இந்திரா பார்த்தசாரதி’ எனும் பெயரில் எழுதத் தொடங்கினார்.



# கல்கி, கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எழுதினார். இவரின் இரு நாவல்கள் கால வெள்ளம், தந்திர பூமி ஆகியவை வரவேற்பைப் பெற்றன. சிறந்த படைப்பாளியாக அடையாளம் காணப் பெற்றார்.

# எதார்த்த நிகழ்வுகளைத் தனித்துவம் வாய்ந்த முறையில் எழுதுவது இவரின் சிறப்புப் பாணி. பெரும்பாலும் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்ட படைப்புகள்.

# நடுத்தர வர்க்க மக்களின் மனக்குழப்பங்கள், உறவுப் பிறழ்ச்சிகளைக் காணலாம். விரக்தி, தற்கொலை, மரணம், தோல்வி, தனிமை, நோய், துன்பம், மனஉளைச்சல் எனும் கூறுகள் மிகுதியாக வெளிப்படுவதைக் காணலாம்.


# அரசியல் சீர்கேடுகளையும், அரசியல் தந்திரங்களையும் விமர்சிப்பதில் வல்லவர்.

# ஆழ்வார்கள் பற்றி ஆய்வுகள் செய்து டில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

# திருச்சி கல்லூரியில் 1952-ஆம் ஆண்டில் ஆசிரியராகப் பணி. டில்லியில் தமிழ் ஆசிரியராகப் பணி. 1962-ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர். தொடர்ந்து இணைப் பேராசிரியர். அடுத்து பேராசிரியராக 40 ஆண்டு காலச் சேவை.

# 1981-ஆம் ஆண்டில் இருந்து 1986-ஆம் ஆண்டு வரை போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவம், பண்பாட்டு பாடப் பிரிவுக்கான வருகைதரு பேராசிரியராகப் பணி.

# இதுவரை 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார். 2010-ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ, சரஸ்வதி சம்மான் விருதுகளைப் பெற்றார்.


# இவரின் குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பாரதிய பாஷா பரிஷத் விருதுகளையும் பெற்றார்.

# முதுபெரும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இன்று 90-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். வாழ்த்துவோம். மேலும் நீண்ட காலம் பயணிக்க இறைஞ்சுவோம்.


இவரின் புதினங்கள்:

ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
சத்திய சோதனை
குருதிப்புனல்
தந்திர பூமி
சுதந்தர பூமி
வேதபுரத்து வியாபாரிகள்
கிருஷ்ணா கிருஷ்ணா
மாயமான் வேட்டை
ஆகாசத்தாமரை
கிருஷ்ணா கிருஷ்ணா
அக்னி
தீவுகள்
வெந்து தணிந்த காடுகள்
வேர்ப்பற்று
திரைகளுக்கு அப்பால்
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன

ஒபாமா பாவம்

தொழில்நுட்ப உலகில் கணினியை வைத்துக் கொண்டு என்ன என்னவோ தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்களுக்கு நேரம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. முகச் சவரம் செய்வதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை என்று பல அதிபர்கள் கவலைப் பட்டு இருக்கிறார்கள்.
 
Image may contain: 4 people, people smiling, text

அப்படி இருக்கும் போது 2014-ஆம் ஆண்டு தீபாவளிக்கு கணினித் தொழிநுட்பக் கில்லாடிகள் ஒபாமா குடும்பத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். 

அவருக்கு வேட்டி கட்டி; அவருடைய மனைவி மிச்சேலுக்கு பட்டுச் சேலை கட்டி; பிள்ளைகள் மலியா, ஷாசாவுக்கு தாவணிகள் போட்டு அமர்க்களம் பண்ணி விட்டார்கள். 

போட்டோசாப் நிரலி மூலமாக அந்த மாற்று வேலையைச் செய்து இணைய உலகத்தையே மிரள வைத்து விட்டார்கள்.
 
Image may contain: 4 people, people smiling, people standing

ஒபாமா குடும்பத்தை ஓர் ஐயர் குடும்பமாக மாற்றிக் காட்டிய கணினித் தொழிநுட்பவாதிகளைப் பற்றி என்ன தான் சொல்வது. கணினி உலகம் கரை தெரியாமல் காட்டுக்குள் திசை தெரியாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுங்களா. படத்தை அவருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். படத்தை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

(முத்துக்கிருஷ்ணன்)

https://www.news18.com/…/photo-meet-the-obama-iyers-as-bara



Mu Ta Neelavaanan Muthuvelu எனக்கும் இந்த ஆசை உண்டு. ஆனால் தொழில் நுட்பம் தெரியாது.

சில மாதங்களுக்கு முன்

" ஜொலோவை " நான் கண்டுபிடித்து விடுவேன் என்று முன்னால் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடீன் பத்திரிகைகளில் அறிக்கை விட்ட போது ,,,,
அவரை " ஜேம்ஸ் பாண்ட் " தோற்றத்தில் கிண்டல் பண்ண ஆசைப்பட்டேன்.

Muthukrishnan Ipoh செய்து காட்டுவோமே...
Image may contain: 1 person, text


M R Tanasegaran Rengasamy Muthukrishnan Ipoh சார் இது தொழில் நுட்பத்தின் உச்சக்கட்டம். இன்று சில இடங்களில் வட்டி முதலைகள் இதைத்தான் மெனுவலாக செய்து வருகிறார்கள். தங்களிடம் கடன் வாங்கி, வட்டி கட்டாதவர்களின் படங்களை வீதிக்கு வீதி ஒட்டி வைக்கிறார்கள் . நமது அரசாங்கம் திரு. நீலவாணனின் கருத்தையும், உங்களின் உத்தியையும் பயன்படுத்தினால் ஜோலாவை விரைவில் பிடித்துவிடலாம். உங்கள் உத்திக்கு copyright செய்துவையுங்கள் சார்

Mu Ta Neelavaanan Muthuvelu M R Tanasegaran Rengasamy
நான் நினைத்தது வேறு வகை.
ஜேம்ஸ் படத்தை பார்த்திருப்பீர்கள் அல்லவா. கறுப்பு கோட்,
கையில் துப்பாக்கி வாணத்தை நோக்கி,பக்கத்தில் சாய்ந்த படி ஓர் அழகி,
007 எண்கள் ,,
ஜேம்ஸ் பாண்ட் முகத்திற்கு பதிலாக
நமது முன்னாள் தற்காப்பு அமைச்சர் !
கற்பனை பண்ணிபாருங்கள்.

Muthukrishnan Ipoh ஓ... அப்படிங்களா... முன்னாள் தற்காப்பு அமைச்சரின் படத்தைப் போட்டு... பின்னர் நம் இருவரையும் ‘வாண்டட்’ பட்டியலில் சேர்த்து விடுவார்கள்...வேண்டாம் ஐயா....

Muthukrishnan Ipoh M R Tanasegaran Rengasamy ஜோலோ இருக்கும் இடம் முக்கியமானவர்களுக்குத் தெரியும்... ஜோலோ வந்தால் அவர் உயிருக்கு ஆபத்து என்பதும் அவர்களுக்கும் தெரியும்... சரியான நேரத்திற்காகக் காத்து இருக்கிறார்கள்... புந்தோங் மார்கெட்டில் கசிந்த இரகசியம்... 😂😂


Manickam Nadeson Muthukrishnan Ipoh அங்குள்ள அரசியல் நாடகமா??

Sathya Raman இந்த கூத்துக்களையும் தான் அன்று முகநூல் மற்ற,மற்ற,புலனங்களில் பதிவேற்றம் பண்ணிஆள் ,ஆளுக்கு மெய்சிலிர்த்து உலக தமிழர்களை உச்சிகுளிரவைத்தது எல்லாம் வெறும் உல்டாவா? இந்த நவீன தொழில்நுட்பத்தால் இன்னும் என்ன,என்ன கண்றாவியை எல்லாம் இந்த உலகம் வருங்காலத்தில் காணப்போகிறதோ கடவுளே?

Don Samsa ஒபாமா வைத்தார் நமக்கு பெரிய ஆப்பு 2014 இல். மறந்துவிடாதிர்கள். அத்தோடு இவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்


இன்றைய சிந்தனை 11.07.2019 - பெண்ணின் அழகு

ஓர் ஆணைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் அழகு என்பது அவனுடைய மனம் சார்ந்தது. 
 
 Image may contain: 1 person

ஆயிரம் கிளியோபாட்ராக்கள் வரலாம். ஆயிரம் சம்யுக்தாக்கள் வரலாம். ஆயிரம் ஐஸ்வர்யாக்கள் வரலாம். 

எவர் வந்தாலும் ஓர் ஆணின் மனதில் புதைந்து இருக்கும் பெண் மட்டுமே அழகாகத் தோன்றுவாள். அதுவே அழகின் ஆராதனை.

கங்கை, காவேரி, சிந்து, யமுனா, சரஸ்வதி, நர்மதா, சுபர்ணா, மேகனா, சபர்மதி என பெண்களின் பெயர்கள் நதிகளுக்கு வைக்கப் பட்டதும் அழகின் ஆராதனைகளே!

இன்றைய சிந்தனை 12.07.2019 - விதியின் கைகள்

கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள்

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் மாறுமோ
எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும்... 
 
Image may contain: 1 person

அதே போல பூர்வ ஜென்ம உறவுகளும் மாறுவது இல்லை... தொடர்ந்து வரும்.
விதி அதன் வேலையைச் செய்கிறது... நாம் ஒன்றுமே செய்ய முடியாது. இதை நினைவில் கொண்டால் போதும். நிம்மதி தானாக வரும்.

ஜப்பான் காலத்தில் தமிழர் அஞ்சல்தலை

1942-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படையெடுத்து வந்தார்கள். நாட்டைப் பிடிக்க வந்தவர்கள் அந்த நாட்டுத் தமிழரைச் சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு தமிழர்களுக்குப் பெருமை செய்து இருக்கிறார்கள். இந்தத் தகவல் மலேசியாவில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.


ஜப்பான் நாடு மலாயாவில் இருந்து 5000 கி.மீ. தொலைவில் உள்ளது. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி ஜப்பானியர்கள் மலாயா, கிளந்தான், கோத்தாபாரு நகரில் தரை இறங்கினார்கள். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி ஒட்டு மொத்த மலாயாவையும் கைப்பற்றினார்கள். 69 நாட்கள் தான். சிங்கப்பூர் தீவும் வீழ்ந்தது.

மலாயாவைக் கைப்பற்றிய கையோடு ஆங்கிலேய வெளியீடுகள் அனைத்தையும் சுவடுகள் இல்லாமல் அழித்தார்கள். ஆங்கிலப் பள்ளிகளை மூடினார்கள். ஆங்கிலத் திரைப் படங்களுக்குத் தடை விதித்தார்கள்.


அதன் பின்னர் 1942-ஆம் ஆண்டு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை நடத்தினார்கள். மலாயா, சிங்கப்பூரைச் சித்தரிக்கும் ஐந்து வடிவங்கள் தேர்வு செய்யப் பட்டன. அவற்றில் இரு அஞ்சல் தலைகள் மலாயா தமிழர் ரப்பர் மரம் சீவும் படங்கள்.

1942-ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் 3 சென் அஞ்சல் தலை வெளியிடப் பட்டது. 1943-ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1 சென் அஞ்சல் தலை வெளியிடப் பட்டது. அஞ்சல் தலைகள் கோலாலம்பூரில் அச்சிடப் பட்டன. அதுவே ஜப்பான் காலத்தில் மலாயா நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.


எங்கு இருந்தோ வந்த ஜப்பான்காரர்கள், மலாயா தமிழர்களுக்கு மரியாதை செய்தது பெருமையாக உள்ளது. அதே சமயத்தில் தமிழ்ப் பள்ளிகளை மூடுங்கள் என்று இப்போதைய அரசியல்வாதிகள் சிலர் சொல்வது வேதனையாக உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

1. https://www.malaysiadesignarchive.org/1942-japanese-occupation-stamp/?print=print

2. https://commons.wikimedia.org/wiki/File:Stamp_Malaya_Japan_occupation_1943_3c.jpg

3. http://kayatana.com/index.php?main_page=index&cPath=84_773