02 அக்டோபர் 2019

தாமரை கோபுரம்

தாமரை மலர் இந்துக்களின் தேவதை சரஸ்வதியின் சிம்மாசனம். இந்திய சமயத் தத்துவத்தின் தலைவாசல். சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை என்றும் செந்தாரகை தான். ஆன்மீகத்தின் தலை மலர் அல்லவா. அதுவே தனிப் புகழ்மாலை அல்லவா.
 

தாமரைக் கோபுரம் (Lotus Tower), தாமரை மலருக்குச் சிறப்பு செய்யும் கோபுரம். இந்தியப் பாரம்பரிய மலருக்குச் சிறப்பு சேர்க்கும் கோபுரம். இலங்கையில் உள்ளது.

உலகிலேயே உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று. இரு வாரங்களுக்கு முன்னதாக, 2019 செப்டம்பர் 16-ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப் பட்டது.

தமிழர்கள் சிலருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும் கலை நயத்துடன் தாமரைக் கோபுரத்தைப் பார்ப்போம். போற்றுவோம். கலையை ரசிப்போம். அதுவே தமிழர்களின் பண்பாடு. ஒருவருடைய நற்சேவைகளைப் பாராட்டும் பழக்கம் நமக்கு வேண்டும். அதுவே நல்ல ஒரு மனிதப் பாண்பு.

 

தாமரைக் கோபுர நிர்மாணிப்புப் பணிகள் 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. கட்டி முடிக்க 7 ஆண்டுகள்.

மொத்தம் 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு. சீனாவின் எக்சிம் வங்கி 67 மில்லியன் கடனாகக் கொடுத்து உதவியது.

தாமரைக் கோபுரத்தில்...

- 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய வசதி

- 50 வானொலி நிலையங்கள்

- 50 தொலைக்காட்சி நிலையங்கள்

- 20 தொலைத்தொடர்பு நிலையங்கள்

- கொழும்பு நகரத்திற்குள் செல்லும் ஒவ்வொருவரின் கண்களுக்கும் எட்டிய தூரத்தில் இருந்து தெரியக் கூடிய கோபுரம். 




- கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டர்.

- கட்டடத்தின் 215 மீட்டர் வரை லிப்ட் வசதி.  90 மாடிகள் உச்சிக்குச் செல்ல 2 நிமிடங்கள். அதி வேகமான லிப்டுகள்.

- உலகிலேயே 19-ஆவது உயரமான கோபுரம். ஆசியாவில் 11-வது உயரமான கோபுரம்.

- கோபுரத்தின் மேல் பகுதியில் 400 பேர் அமரும் வசதி கொண்ட மாநாட்டு மண்டபம்; திருமண வரவேற்பு மண்டபம்; ஆடம்பரமான தங்கும் அறைகள்.




-  6-ஆவது மாடியில் சுழலும் உணவகம். கொழும்பு நகர் முழுவதையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.

- 8 மின்தூக்கிகளை (லிப்ட்) கொண்டது. நொடிக்கு 7 மீட்டர் உயரும் வேகம். படு வேகம்.

- கோபுரத்தின் அடித்தளத்தில் மண்ணுக்கு அடியில் நான்கு மாடிகள்.

கூடுதல் தகவல். மலேசியாவின் கோலாலம்பூர் கோபுரம் (Kuala Lumpur Tower) 421 மீட்டர் உயரம் (1,381 அடி). தாமரைக் கோபுரத்தை விட 44 மீட்டர்கள் கூடுதலான உயரம். 




உலகில் 7-ஆவது உயரமான கோபுரம். 54 விநாடிகளில் உச்சியைச் சென்று அடையும் மிக வேகமான மின்தூக்கிகள்.

1995 மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டி முடிக்கப் பட்டது. மலேசியாவின் NTV7 இங்கு இருந்து தான் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2109



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
VT Rajan அற்புதமான தகவல் சகோதரரே... தமிழ் மலர் நாளிதழ் நான் வாங்கி படிப்பதற்கு காரணமே,...உங்களின் அற்புதமான படைப்புகள் தான் காரணம்... வாழ்க வளமுடன்... தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி...
 
M R Tanasegaran Rengasamy உலகில் உயர்ந்த கோபுரங்களைக் கட்டும் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் மனங்களை மடு அளவே முடக்கிக் காட்டுவது வேதனையாய் உள்ளது. ஆனால் வழக்கம் போல் உங்கள் பதிவில் இதுவொரு கோபுரம் சார்.
 
Muthukrishnan Ipoh வார்த்தைச் சாரங்களில் (ஜாலங்களில்) தனசேகரன் சாரை மிஞ்சமுடியாது போலும்... நறுக்கென்று ஏதாவது இருக்கவே செய்யும்...
Sathya Raman M R Tanasegaran Rengasamy கருத்துக்களில் எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது சார் .
 
M R Tanasegaran Rengasamy Sathya Raman உண்மைதான். அவர்கள் கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும் உயர்ந்தே காணப் படுகிறது. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற எம். ஜி.ஆர். பாடலில் ஒரு அடி வரும். "கோபுரத்தின் மேல் நீக்க வச்சாலும்..." இப்பாடலை முழுதாகக் கேட்டால் கவிஞர் சில கழிசடைகளின் முகத்திரையை அப்பொழுதே கிழித்திருப்பார்.
 
Sathya Raman M R Tanasegaran Rengasamy சில மனிதப் பெருச்சாளிகளுக்கு எத்தனை தத்துவங்களையும், தன் முனைப்புகளையும் அள்ளி வீசினாலும் திறந்த மனதோடு ஏற்று திருந்திவிடவா போகிறார்கள் சார்...
 
Muthukrishnan Ipoh Sathya Raman >>> எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது >>> நல்ல கருத்து... அருமை... 

Muthukrishnan Ipoh M R Tanasegaran Rengasamy >>> கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும் உயர்ந்தே காணப்படுகிறது >>> அருமையான கருத்து... அருமையான சொல் வடை...
Muthukrishnan Ipoh Sathya Raman மனிதப் பெருச்சாளிகள் என்றாலும்... பணப் பெருச்சாளிகள் என்று சொன்னாலும் இரண்டுமே ஒன்றுதான் சகோதரி...
Mahdy Hassan Ibrahim இந்தக் கோபுரம் உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட போதும் முழுமையாகப் பூரணத்துவம் அடைய இன்னும் காலம் செல்லும்! காத்திருப்போம்!
Muthukrishnan Ipoh நன்றிங்க.... இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாக நானும் கேள்விப் பட்டேன் ஐயா...
Don Samsa பயனுள்ள தகவல் தலைவரே.. நன்றி
Sathya Raman சொந்த காசில் வாழ்வாதாரத்தை வளப்படுத்த முடியாமல் இந்த தனிமனிதன் கடன் பட்டு காலத்திற்கும் கலங்கிக் கொண்டு இருக்கிறான் என்றால், உலக நாடுகள் சிலதும் ஊர் மெச்ச உலகம் மெச்ச உயரமான கட்டிடங்களைக் கட்டி மன உளைச்சல்களில் மாட்டி சிக்கி தவிப்பது எதனால்?

இலங்கையில் தாமரை கோபுரத்தை பௌத்த சமயத்தை முன் நிறுத்தி புத்தரும் தாமரை மலரும் என்ற நோக்கத்தில் பெயர் சூட்டி இருக்கலாம். கடன் வாங்கி கட்டியது தானே என்னப் பெயர் வைத்தால் என்ன?

எம் இனத்தைக் கொன்று குவித்த நாடு என்பதால் அதன் இன்றைய முன்னேற்றத்தைகூட முழுமனதோடு ஏற்க முடியவில்லை சார். காடுகளை அழித்து எத்தனை உயரமான கட்டிடங்களை எழுப்பி ,உலகத்தையே அண்ணார்ந்து பார்க்கிற பரவச நிலைகளை அந்த நாடு பெற்றாலும் நம் தொப்புள் கொடி உறவுகளின் ஓலங்களும், ஒப்பாரிகளும் அந்த உயரங்களை உடைத்தெறிந்து தகர்த்து விடுகிறதே???? என்ன செய்ய?

Kumar Murugiah Kumar's Sathya Raman அதுதான் நிதர்சனமான உண்மை...
Muthukrishnan Ipoh Sathya Raman ஊர் மெச்ச உலகம் மெச்ச உயரமான கட்டிடங்களை கட்டி மன உளைச்சல்களில் மாட்டி சிக்கித் தவிப்பது எதனால்.... நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். தங்களின் பொது அறிவுத் திறன் மலைக்க வைக்கிறது...

என் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றிங்க....

Neela Vanam நன்றிங்க ஐயா!
Selvi Sugumaran SUPER SIR AND SALUTE
Melur Manoharan ஆஹா... அருமையான தகவல்கள் ஐயா...!

M Kabilan Mohan வணக்கம் நல்ல கட்டுரை sir... வாழ்த்துகள்...
Periasamy Ramasamy 1972 வரை உலகின் மிக உயரமான கட்டிடமாகத் திகழ்ந்து வந்தது Empire State Building தொடங்கி (அதற்கு முன்னமே அமெரிக்கர்களின் பொருளாதார வளர்ச்சிப் பின்னணியைப் பிரதிபலிக்கும் பல உயரமான கட்டிடங்கள் அந்நாட்டில் தொடர்ந்து எழுப்பப் பட்டு ஒன்றை ஒன்று மற்றதன் உயரத்தினை தாண்டும் போட்டா போட்டி நிலவியது வேறு விஷயம்). 

உலகின் மற்ற நாடுகளும் தத்தம் பங்கிற்கு உயரமான கட்டிடத்தைக் கொண்டிருத்தல் அரசியல் அவசியமாக்கிக் கொண்டன என்பதுதான் உண்மை. ஆயினும், அவை யாவும் தத்தம் நாட்டு பொருளாதார மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டை முன்னெடுத்து செய்யப்பட்டனவா என்பதுதான் இன்று கேள்விக் குறியாகி உள்ளது. 

நமது எண்ணெய் இயற்கை வளம் தந்த மேம்பாட்டுக் குறியீட்டை மீறிய இலக்கை வைத்து கட்டப் பட்ட கட்டிடம் இரட்டை கோபுரம். இன்றைய பொருளாதார சரிவை சரி செய்யும் அளவுக்கு நமது நாட்டு அந்நிய செலாவணியைத் மீட்டெடுக்கும் நிலையில் தன்னிச்சையாக இயங்க வேண்டிய தேசிய எண்ணெய் நிறுவனம் அரசியல் உட்பூசலுக்குக் களமாக அமைந்திருப்பது இன்னொரு வேடிக்கை..
 
Muthukrishnan Ipoh  அருமை... அருமை... அருமையான கருத்துகள்... தாங்களும் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்... நிறைய சமகாலத் தகவல்கள்... ஆழமான தேடல்கள் பளிச்சிடுகின்றன... நன்றிங்க ஐயா... தொடர்ந்து பயணியுங்கள்...
 
Periasamy Ramasamy தங்களை விடவா? ஏதோ கேட்டறிந்த ஒன்றை பகிர்ந்து கொண்டேன்.... அதை விடுங்கள். நம்ம வீட்டு சங்கதியை கொஞ்சம் அலசுவோம். ... 

பெரிய பெரிய கோவில்கள் கட்டி அங்கு கருவறைக்குத் தகுந்தாற் போன்று மூர்த்தங்கள் அமைத்து "மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது" என்று அழகு பார்த்த நாம், இப்போது என்னவென்றால், அந்த கோவில்களுக்கு வெளியே, பக்தர்கள் கொண்டு கொட்டும் பணத்தில், உலகிலேயே உயரமான சுவாமி சிலை(களை) உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருகிறோமே! இது எங்கு போய் முடியுமோ என்றுதான் கவலையாக இருக்கிறது.
 
Varusai Omar நான் மனமாச்சரியங்களுக்கு அப்பாற் பட்டவன். அனைத்து மத போதனைகளையும் மதிப்பவன். எந்த மதமுமே தீயதை போதிக்கவே இல்லை. கேடு கெட்ட மாந்தரே தமது சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக மட்டுமே பிரித்தாளும் யுக்தியைக் கையாண்டு மனிதத்தைக் கூறு போட்டான்.

பௌத்த மதம் சமாதானத்தைத் தானே போதித்தது?

இருந்தும், பௌத்தம் போற்றுவோம் என்று காவிக்குள் மறைந்து கொண்டு கொடூரமாக கொலை கொள்ளை அடிக்கிறார்களே இலங்கையில் சிங்களவரும் மியன்மாரில் பர்மியர்களும்? இதுவா போதி சத்வர் கற்பித்த அறம்?

புத்தம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி!!!




30 செப்டம்பர் 2019

சாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில்

சாகுவாரோ (Saguaro) மலர். கற்றாழை இனத்தைச் சேர்ந்த மலர். அமெரிக்கா அரிசோனா பாலவனத்தில் காணப்படும் அரிதிலும் அரிதான மலர். தற்சமயம் அரிசோனா மாநிலத்தின் மாநில மலராகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள்.



இது பாதுகாக்கப்பட்ட அமெரிக்கத் தேசியத் தாவரம். அறிவியல் பெயர் Carnegiea gigantea. 60 அடி உயரம் வரை வளரும். 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.

இந்தக் கற்றாழையைக் கேமரன் மலையில் முதலில் பயிர் செய்து பார்த்தார்கள். அமெரிக்கா அரிசோனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரவே மிகவும் சிரமப் பட்டுப் போனார்கள். 1970-களில் நடந்த நிகழ்ச்சி.

அரிசோனா அரசாங்கமும் மலேசிய அரசாங்கமும் வெள்ளைப் பேபரில் கையெழுத்துப் போட்ட பிறகு தான் கொண்டு வரப்பட்டது. 




முதலில் ரிங்லெட் பகுதியில் வளர்த்துப் பார்த்தார்கள். ஆரம்பத்தில் ஓகே. போகப் போக இந்தச் சாகுவாரோ கற்றாழை, மாவீரர் செகுவாரா மாதிரி அடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐந்தே ஐந்து அடி வளர்ந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் சொல்வது அதாவது அசல் சாகுவாரோ கற்றாழை. அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்றாழை.

மற்றபடி கேமரன் மலையில், டூப்ளிகேட் சாகுவாரோ கற்றாழைகள் நிறையவே உள்ளன. தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் கற்றாழைகள் வழுக்கி வழுக்கி விழுகின்றன.




அமெரிக்காவில் இந்தக் கற்றாழையை வெட்டி எடுப்பதும் குற்றம். தோண்டி எடுப்பதும் குற்றம். இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் தோண்டி எடுத்துவிட முடியாது. இதன் எடை சமயங்களில் 500 கிலோ கிராம் வரை தாண்டிப் போகும். அதாவது அரை டன். எப்படி உங்கள் வசதி.

அப்படித் தான் 1982-ஆம் ஆண்டு. டேவிட் குருண்ட்மேன் என்பவர் ஒரு பாலைவனத்தில் இந்த மாதிரி ஒரு கற்றாழையைத் தோண்டி இருக்கிறார். அது ஒரு பெரிய கற்றாழை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது மாதிரி தான்.

அதன் அடிப்பாகத்தைத் தோண்டிக் கொண்டு இருக்கும் போது, அதன் கிளைப் பாகம் ’படார்’ என்று உடைந்து ’டபார்’ என்று அவர் மேலேயே விழுந்து இருக்கிறது. கற்றாழைக்கு அவர் மீது சரியான கோபம் வந்து இருக்கலாம். சொல்ல முடியாது. ஆள் அபேஸ்.


அதன் எடை 230 கிலோ. அவரையும் நசுக்கி அவரின் காரையும் நசுக்கிப் போட்டு விட்டது. மரத்தின் கிளை விழுந்தே மனுசன் செத்துப் போகிறான் என்றால் மரம் விழுந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். வெங்காயச் சட்ணி.

தொட்டால் சிணுங்கி என்று சொல்வார்களே அந்த மாதிரி செல்லமாக வளரும் கற்றாழை. மெதுவாகத் தான் வளரும். வெப்பம் குறைந்தாலும் இறந்து விடும். கூடினாலும் இறந்து விடும்.

கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் நன்றாக வளரும். சரியான தட்ப வெப்ப நிலை தேவை. அது வளரும் காலத்தில் முதல் 75 ஆண்டுகள் வரை அதற்கு கிளைகள் முளைக்காது.

மலேசியாவில் இணையம் மூலமாக (லசாடா) 258 ரிங்கிட்டிற்கு ஆர்டர் செய்து  வாங்கலாம். ஆனால் அது அசலானதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால் அசல் கற்றாழைக்கு அமெரிக்காவில் தடை செய்து இருக்கிறார்கள்.

இந்தக் கற்றாழையை மரபணு மாற்றங்கள் மூலமாகச் சின்னதாக வடிவம் செய்து விட்டார்கள். தைவான் நாட்டில் முதலில் செய்து இருக்கிறார்கள். அதையே சீனா கடத்திக் கொண்டு போய் பெரிய அளவில் காசு பார்த்துக் கொண்டு இருக்கிறது.




மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட கற்றாழைகளை, கேமான் மலையில் தானா ராத்தா, பிரிஞ்சாங் பகுதியில் விற்கிறார்கள். அங்கே என்ன... மலேசியா பூராவும் விற்கிறார்கள்.  விலை 20 ரிங்கிட்.

எல்லாமே மரபணு மாற்றங்கள் செய்யப் பட்டவை. ஓரிஜினல் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. 




மரபணு மாற்றங்கள் என்று சொல்லும் போது ‘எதைத் தான் விட்டு வைத்தார்கள்’ எனும் பொன் மொழி வருகிறது. பணம் என்று வந்தால் மனுசனையே மடித்துச் சுருட்டி... சுருட்டு மாதிரி Buy one Free One என்று விற்று விடுவார்கள்.

நல்ல வேளை. அமெரிக்கா கற்றாழைகள் செய்த புண்ணியம். அரசியல்வாதிகள் கண்களில் படவில்லை. மலேசிய அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. ரொம்ப ரொம்ப நல்லவர்கலைப் பற்றி விமர்சனம் செய்வது பாவம் இல்லையா?

சான்றுகள்:

1. The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species.

2. (https://en.wikipedia.org/wiki/Saguaro)

3. Life Cycle of the Saguaro" (PDF). Arizona-Sonora Desert Museum.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.09.2019
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
M R Tanasegaran Rengasamy இச்செடியை நட்டவனின் எத்தனையாவது தலைமுறையைச் சார்ந்தவன். அதன் அஸ்தமக் காலத்தைப் பார்க்க இயலும். சாகுவாரா என்பதற்குப் பதிலாக சாகாவேரா எனப் பெயரிட்டு இருக்கலாம்.
 
Muthukrishnan Ipoh சாகாவேரா... நன்றாக இருக்கிறது ஐயா... கற்றாழைகளில் இப்போது மினி மினி கற்றாழைகள் எல்லாம் வந்துவிட்டன... பெரும்பாலும் மரபணு மாற்றங்கள் செய்யப் பட்டவை...
 
Sathya Raman கேமரன் மலையில் நீங்கள் குறிப்பிட்ட கற்றாழை வகைகளை அதிகமாகவே காணலாம். அதுமட்டும் அல்ல. கைக்கு அடக்கமாகச் சின்ன சின்னப் பிளாஸ்டிக் குப்பியில் குட்டி குட்டிக் கற்றாழைகளைப் பேரங்காடிகளில் கூட விற்பனை செய்கிறார்கள்.

நம் தமிழர்கள் வாஸ்துப்படி இருவித குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.
கற்றாழைச் செடியை வீட்டில் வளர்த்தால் தூயச் சக்திகள் வீட்டிற்குள் வராது எனவும் அதனை வளர்ப்பதால் காத்து கருப்பு, கண் திருஷ்டி,பேய் பிசாசைக் கதிகலங்க ஒட வைக்கும் என்பன போன்ற எதிர்மறையான கருத்துகள்.

ஆனாலும்
கற்றாழையைப் பற்றிய உங்கள் பதிவு பிரமிக்க வைக்கிறது சார். 500 கிலோ வரை அதன் பாரம் என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

குளோனிங் முறையைத் தாவரங்களுக்கும் பயன்படுத்தும் படுபாதகச் செயல் எல்லாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். ஒட்டு கட்டிப் பழக்கப் பட்டவர்கள் அடுத்த கட்டமாய் மரபணு முறையைச் செய்தால் தான் நிறைய பணம் பண்ணலாம். மனிதன் மாறி விட்டான்... பணத்தில் மூழ்கி விட்டான்.

எதுவாயினும் உலக சட்டாம் பிள்ளையான அமெரிக்க இந்த ஒரிஜினல்
கற்றாழைச் செடியைப் பாதுகாக்கும் செய்தியைச் சொன்னதற்கு நன்றி சார்.

சீனாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். மெலாமைன் (Melamine) என்ற இரசாயனத்தைக் குழந்தைகளின் பால்பவுடரில் கலந்து 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற வியாபாரிகள் மலிந்து விட்ட நாடு. அங்கே நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

250 கிலோ
கற்றாழை மரம் ஆளையே அபேஸ் பண்ணும் செய்தி எல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது சார். மற்றும் ஓர் இயற்கையின் இம்சையை இந்தக் கற்றாழை ஏற்படுத்திய விதத்தைக் கட்டுரையாக்கிய தங்களுக்கு... 🙏🙏🙏
 
Muthukrishnan Ipoh நல்ல அருமையான பதிவு... இந்தப் பின்னூட்டம் வலைத் தளத்தில் இணைக்கப் படுகிறது. உலகளாவியத் தகவல்களை நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

சீனாவில் மெலாமைன் பயன்படுத்தி உலகத்தையே கதிகலங்கச் செய்த ஊழல் விவகாரத்தை ’சீனாவின் பால் ஊழல் 2008’ - (2008 Chinese milk scandal) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சீனாவில் மட்டும் 300,000 பேர் பாதிப்பு அடைந்தார்கள். ஆறு குழந்தைகளுக்குச் சிறுநீரகக் கற்களினால் இறப்பு. 54 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
நன்றிங்க.. சகோதரி...

(Nearly 53,000 Chinese children sick from milk. Associated Press. 10 February 2014.)

(China seizes 22 companies with contaminated baby milk powder". Xinhua News Agency. 16 September 2008)
 
Sathya Raman Muthukrishnan Ipoh சீனாவில் பால் பவுடர் ஊழல் சம்பந்தப்பட்ட கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றிங்க சார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம். இதயத்தை உறைய வைத்த சம்பவம்.

"மனித நாகரீகங்கள் இயந்திரங்களால் உருவாக்கப் பட்டவை அல்ல. மாறாக நற்பண்பாளர்களால் ஏற்படுத்தப் பட்டவை"

இந்தக் கேடு கெட்ட பணத்தாசை மனித ஜென்மங்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் உயிரை எடுக்கும் அளவிற்கு பண்பு கெட்ட தனத்தை எந்த வேதத்தில் அறிவுறுத்தி இருக்கிறார்கள்?

"பேராசை ஒருவித அமிலம். அது விழும் இடத்தைவிட இருக்கும் இடமே ஆபத்தானது. பெரிய அளவில் பணம் பண்ண எண்ணும் பேராசைக்காரர்கள் அத்தோ பொம்மையைவிட ஆபத்தானவர்கள் சார்.
  
Muthukrishnan Ipoh பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை... இந்த மூன்று ஆசைகளும் நியாயமான ஆசைகளாக இருக்க வேண்டும். எதுவும் வரம்பு மீறிப் போகக் கூடாது. ஆசைகள் மிஞ்சினால் ஆபத்து.

போதும் என்பதே ஆசைகளின் அளவுகோலாக இருக்க வேண்டும்... கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க.
 



29 செப்டம்பர் 2019

தாய்லாந்து வனவிலங்குகள் பாதை

தாய்லாந்தில் அண்மையில் ஒரு நெடுஞ்சாலை கட்டினார்கள். அதன் பெயர் பிரச்சின்புரி (Prachin Buri) நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலை இரு வனப் பூங்காக்களைக் குறுக்காக வெட்டிச் செல்கிறது. அந்த இரு வனப் பூங்காக்கள்:

1. தாப் லான் வனப் பூங்கா (Thap Lan National Park).

2. காவோ யாய் வனப் பூங்கா (Khao Yai National Park).
 

அதனால் வனவிலங்குகள் வாகன விபத்துகளுக்கு உள்ளாகின்றன. நிறையவே விபத்துகள். இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வனவிலங்குகள் கடக்கும் பாதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இரு வனப் பூங்காக்களும் ஒன்றாய் இணைக்கப் பட்டன. இது ஒரு பெரிய சாதனை. உலகச் சாதனை என்றுகூட சொல்லலாம்.

இதுதான் மனிதன் உருவாக்கிய உலகின் முதல் வனவிலங்குகள் கடக்கும் பாதை ஆகும். பாதை என்றால் ஒற்றையடிப் பாதை என்று நினைத்துவிட வேண்டாம். அந்தப் பாதையின் அகலம் நான்கு கிலோ மீட்டார்கள். அவ்வளவு அகலம்.
 

அந்த நான்கு கி.மீ. பாதைக்கு அடியில் நெடுஞ்சாலைச் சுரங்கம் அமைக்கப் பட்டு உள்ளது. அந்தச் சுரங்கப் பாதைகள் வழியாகத் தான் வாகனங்கள் செல்கின்றன. மேலே வனவிலங்குகள் இடம் பெயர்கின்றன.

வனவிலங்குகள் கடக்கும் பாதையில் புற்களை மட்டும் நட்டு வைத்து இருக்கிறார்கள். மரங்களைத் தவிர்த்து விட்டார்கள்.

பாதையின் இருபுறமும் வேலிகள் அமைத்து இருக்கிறார்கள். வன விலங்குகள் தடம் மாறி நெடுஞ்சாலைக்குள் வந்து விடாமல் இருப்பதற்காக அந்த வேலிகள்.

இந்தப் பாதை நான்கு கி.மீ. அகலமாக இருப்பதால் விலங்குகள் கடந்து செல்வதை வாகனமோட்டிகள் பார்க்க இயலாது.
 

வாயில்லா ஜீவன்களைப் பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் பொறுப்பு. அதுவே மனிதர்களின் விலங்கு நேயக் கடமை.

ஒரு செருகல். நம் மலேசிய நாட்டில் சில இடங்களில் காடுகளை அழித்து வருகிறார்கள். என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. ஈப்போ கிளேடாங் மலை அடிவாரம் அழிக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம்.

மலையின் அடிவாரத்தில் என் இல்லம் உள்ளது. அழகிய பச்சை மலை. நீல வானம். சூரியன் மறையும் போது இன்னும் பத்து வருசம் கூடுதலாக வாழ வேண்டும் என்கிற ஆசை வரும் அளவிற்கு இயற்கைச் சூழல். அப்பேர்ப்பட்ட இடம். 

அங்கே இருந்து பார்த்தால், அந்தக் காட்டு அழிப்பு தெரியவே தெரியாது. அவ்வளவு பக்காவாக செய்து இருக்கிறார்கள்.

விசயம் தெரிந்து ஆளாளுக்குக் கண்டனம் தெரிவிக்க... நிறுத்தி விட்டார்கள். விடுவோமா நாங்கள்.

காட்டில் பேய் இருப்பதாகச் சொல்வார்கள். அது எல்லாம் கிடையாதுங்க. அக்கம் பக்கத்தில் தான் மனிதப் பேய்களும் மனிதப் பிசாசுகளும் இருக்கின்றன. அதனால் தான் சிலரைப் பார்த்ததும் நாய்கள் ஊளையிடுகின்றன. ஆராய்ச்சி பண்ணிப் பார்க்க வேண்டும். சரி.

மலேசியாவில் காடுகள் ஆங்காங்கே அழிக்கப் படுகின்றன. அதற்கு மூலக் காரணம் யார் தெரியுங்களா. சில அரசியல்வாதிகள் தான். எல்லோரும் அல்ல.
 

முன்பு அரசியல்வாதிகள் மக்களுக்காக வாழ்ந்தார்கள்; தெய்வத்திற்கு நிகராய்ப் போற்றப் பட்டார்கள். இப்போது மிகவும் குறைவு. இருக்கிறார்களா என்றுகூட தெரியவில்லை. எதற்கும் அனைத்துலக 007 ஜெம்ஸ் பாண்டுகளைக் கூப்பிட்டு தேடச் சொல்ல வேண்டி உள்ளது.

இப்போதைய அரசியல்வாதிகளில் சிலர் பாவம்... அரசியல் வியாதிகளால் ரொம்பவுமே அவதிப் படுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அரசியல் வியாதி அம்புலன்ஸ்கள் தேவை படுகின்றன. ஆர்டர் கொடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் அந்த ஆர்டரை அடுத்த பொருளாதாரத் திட்டத்தில் சேர்க்காமல் இருந்தால் சரி. ஏன் என்றால் அதிலும் ஆட்டை போடும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.09.2019

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Perumal Thangavelu சிங்கையிலும் இது போன்ற, மிருகங்கள் கடக்க வழித்தடம் அமைத்து உள்ளார்களே.
 
Muthukrishnan Ipoh மண்டாய் வனக் காப்பகத்தில் அமைத்து இருக்கிறார்கள். வேலைகள் இன்னும் முடிவு அடையவில்லை... இந்த ஆண்டு இறுதி வாக்கில் பூர்த்தி பெறும்... 50 மீட்டர் அகலம்...
 
Image may contain: grass and outdoor 
 
Vejaya Kumaran singapore rilum ithu pondru amaika pattullathe (சிங்கப்பூரிலும் இது போன்று அமைக்கப்பட்டு உள்ளதே)
 
Muthukrishnan Ipoh ஆமாம் ஐயா... மண்டாய் வனக் காப்பகத்தில் அமைத்து இருக்கிறார்கள். வேலைகள் இன்னும் முடிவு அடையவில்லை... இந்த ஆண்டு இறுதி வாக்கில் பூர்த்தி பெறும்... 50 மீட்டர் அகலம்... தகவலுக்கு நன்றி...

Image may contain: sky, bridge, tree, plant, outdoor, nature and water
 
Image may contain: 1 person, text 
 
Muthukrishnan Ipoh விலங்கினமும் நம்மைப் போல உயிரினங்கள் தான்... அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மனித நேயத்தின் கடமைகளில் ஒன்றாகும்...
 
Perumal Thangavelu அமேசான் காட்டுத்  தீ, உலக மக்களை ஈர்த்த போது விலங்குகளும் மனித சுபாவம் கொண்டவை என்பதை உணர்த்தியது. மனித நேயம் நெகிழ்ந்தது... ஈர விழிகளை நனைத்தது...
 
Sathya Raman சிறப்பான ஆய்வு கட்டுரை சார். காடுகளைப் பற்றியும் அதன் மகத்துவத்துவத்தைப் பற்றியும் கொஞ்மேனும் கவலைப் படாமல் அவற்றை அழித்து வரும் இந்த உலக மகா அரசியல்வாதிகளையும் அவர்களுக்குள் இருக்கும் பேராசையையும் நீங்களோ, நானோ தடுத்து விட முடியாது சார்.

ரொம்ப வேண்டாம். இன்று கேமரன் மலைக்குச் சென்று வருபவர்கள் முன்பு போல் அங்கே குளிர்ச்சி இல்லை என்கிற குற்றசாட்டுகளையே முன் வைக்கிறார்கள் என்றால் அங்கே அழிந்து வரும் காடுகளால் தான். நான் அங்கே வளர்ந்து படித்தவள்.

என் பள்ளி நாட்களில் ஒரு தடவைகூட  குளிர்ச் சட்டையை அணியாமல் சென்றது இல்லை... இருந்ததும் இல்லை. வருட இறுதியில் உதிரத்தை உறைய வைக்கும் குளிராக இருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இன்று மழைக் காலங்களில் கூட உடல் சூடாவதை உணர்கிறோம்.

நமக்கு கிடைத்த அரிய, பெரிய பொக்கிஷங்களை இன்று பணத்திற்காகத் தனி மனிதப் பெரு வாழ்வுக்காக இழந்து வரும் அவலம். காடுகளை அழிப்பதால் காட்டு மிருகங்கள் மனிதர்களின் குடியிருப்புகளைத் தேடி வராமல் என்ன செய்யும்?

வீட்டைக் குளிர்விக்க, குளிர்ச்சாதனப் பெட்டி வாங்குகிறோம். ஆனால் பூமியைக் குளிர்விக்க மரக் கன்றுகளை நடுவதில்லை. மாறாக அழித்து வருகிறார்கள். கோபமும், புயலும் ஓரே மாதிரி தான். அடங்கிய பின் தெரியும். எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தியது என்று.

அதேப் போல் தான் இந்த அரசியவாதிகளின் செய்கைகளால் நம் நாடும் பல இயற்கையின் எழில்களை இழப்புகளாய் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

 
Muthukrishnan Ipoh தங்களின் நீண்ட விளக்கத்தைக் கண்டு வியந்து போனேன்... என்னுடைய வலைத் தளத்தில் தங்களின் பின்னூட்டங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்... தங்களின் நல்ல நல்ல கருத்துகள் இணையத்தில் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும்... நன்றிங்க...
Malathi Nair Realy thanks to Sathya Raman for your braveness.Yes support you. This is the only way we can voice out.everywhere politician playing game on people.

தாய்லாந்து விரைவுச்சாலை

தாய்லாந்து நாட்டில் இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாக்க இப்படிப்பட்ட விரைவுச் சாலைகளைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்...


இங்கே அப்படியா நடக்கிறது... இருக்கிற காடுகளை எல்லாம் அல்லவா அழித்துக் கொண்டு வருகிறார்கள்...