27 அக்டோபர் 2019

மலாய் டிலாமா - The Malay Dilemma

பேஸ்புக் - 09.10.2019

1981-ஆம் ஆண்டு துன் மகாதீர், மலேசியாவின் 4-ஆவது பிரதமர் பொறுப்பை ஏற்றார். அதற்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-ஆம் ஆண்டில் மலாய் டிலெம்மா (The Malay Dilemma) எனும் நூலை எழுதினார்.



மலாய்க்காரர்களின் அடிப்படை உரிமைகள் தற்காக்கப்பட வேண்டும் என்பதின் பிரசாரக் கருவியாக அந்த நூல் அமைந்தது.

அவர்களின் தன்னாட்சி உரிமைகள் நிலைப்படுத்த வேண்டும்; அவர்களின் பொருளாதார முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும்; அவர்களின் மேல் ஆதிக்கத்தில் உறுதிப்பாடு வேண்டும்; அரசுத் துறைகளில் அவர்களின் ஆளுமையில் கூடுதல் பிரதிநித்துவம் வேண்டும் என்பதையே அந்த நூல் வலியுறுத்துகிறது.

மலாய் மக்களின் வாழ்வியல் உரிமைகள் பாதிக்கப் படலாம் என்கிற ஒரு பொதுவான காட்சியை அந்த நூல் சித்தரித்துக் காட்டுகிறது.

அந்த நூல் வெளியிடப்படும் போது துன் மகாதீர் தன்னுடைய கோத்தா ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்து இருந்தார். 1969-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்.

அந்தத் தொகுதியில் இருந்த சீனர்கள் அம்னோவிற்கு வாக்கு அளிக்காமல் பாஸ் கட்சிக்கு வாக்கு அளித்து மகாதீரைத் தோல்வி அடையச் செய்ததாக ஓர் ஆதங்கம் நிலவியது.


தொடர்ந்து 1969 இனக் கலவரம். துங்குவை மகாதீர் வெளிப்படையாக எதிர்த்துப் பேசினார். அதனால் அம்னோ கட்சியில் இருந்து மகாதீர் விலக்கப் பட்டார்.

அதன் பின்னர் தான் மலாய் டிலாம்மா எனும் நூலை எழுதினார். அந்த நூல் மலாய்ச் சமூகத்தவர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமராக இருந்த துங்குவின் அதிருப்தியையும் தேடிக் கொண்டது.

இந்த நூல் மலேசிய வரலாற்றையும்; மலேசிய அரசியலையும் இனவாத அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது. பின்வரும் அடிப்படை நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறது:

1. மலாய் இனம் மலேசியாவின் பழங்குடி மக்கள் (பூமிபுத்திரர்கள்).

2. ஒரே தேசிய மொழி மலாய் மொழி. அந்த மொழியை மற்ற அனைத்து இனங்களும் கற்க வேண்டும்.

3. மலாய்க்காரர்களின் சகிப்புத் தன்மையினால்; பிரிட்டிஷாரின் ஒத்துழைப்புடன்; மலாய்க்காரர்களின் சொந்த நிலத்திலேயே அவர்களை அடிபணிய வைத்து உள்ளது.

4. வணிகத் துறையில் மலேசிய சீன மேலாதிக்கத்தைச் சரி செய்ய உறுதியான நடவடிக்கைத் திட்டம் தேவைப் படுகிறது.




இந்த நூல் மகாதீரின் தோற்றத்தை ஒரு பேரினவாதி என்று உறுதிப் படுத்தியது. இருப்பினும் அவர் தனது சொந்த இனத்தின் பற்பல தவறுகளையும் இந்த நூலில் பகுத்துப் பார்க்கிறார். அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான கொள்கைகளை மலேசிய அரசாங்கம் காலப் போக்கில் ஏற்றுக்கொண்டது. மலேசிய புதிய பொருளாதாரத் திட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த நூல் உண்டாக்கிய தாக்கமும் மாறவில்லை. அதை எழுதியவரும் மாறவில்லை.

 

 பேஸ்புக் பதிவுகள்


Tanigajalam Kuppusamy: பெரும்பாலோர் அறிந்த தகவல்கள் தான். ஆனால் மலாய்க்காரர் கௌரவம் பற்றிய மாநாடும் அதில் வெளியிடப்பட்ட இனவாத முடிவுகளும் மகாதிரின் உரையின் உள்ளடக்கமும் பரவலாக மற்ற இனத்தவரால் விமரிசிக்கப்படும் இவ்வேளையில் இப்பதிவு, இன்றைய மலேசியாவின் இனவாத கொள்கைகளுக்கு அடித்தளம் எது என்பதை நினைவுப்படுத்த காலத்தின் அவசியம் தான்.


Perumal Ponnusamy: அவர் ஒரு மலாய்காரர் இல்லை. ஆதலால் வேசம் போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். உதாரணமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பிறமொழி நடிகர்கள் தங்களைப் பச்சை தமிழ் என்று அடையாளப் படுத்துவது போல. அவர் நினைத்ததைச் சாதித்து விட்டார். ஏனோ மோகம் தீரவில்லை. மலாய்காரர்களை முட்டாளாக்கித் தன் வாரிசுகளை உருவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார். மலாய்காரர்கள் விழித்து எழுந்தால் நன்மை.


Bala Sena >>> Perumal Ponnusamy: சரியான கருத்து.. அவர் மலாய்க்காரர் அல்ல.. தன்னை தன் பதவியை தற்காத்துக் கொள்வதற்காக மலாய் இனத்திற்காக உதவுகிறார்.. பிற இனத்தை எப்போதுமே கீழேயே வைத்திருக்க வேண்டும் என அடக்கு முறையில் நடந்து கொள்வதில் அவரது குணம் தெரிகிறது.. மூன்று சமூக ஒப்பந்தத்தில் தானே கையொப்பமிட்டு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது..


Karunaharan Karuna: கடந்த 14-வது பொது தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை துன் அவர்கள் மறந்து விட்டார். மலேசியாவை இனி இன ரீதியில் வழி நடத்த முடியாது. நாம் அனைவரும் மலேசியர் ஜோகூர் சுல்தான் கூட இதை உறுதி படுத்தினர்.


Dorairaj Karupiah >>> Karunaharan Karuna: மாறாதையா மாறாது இவன் மனமும் குணமும் மாறாது


Mahdy Hassan Ibrahim: உலகம் மதிக்கும் ஒரு தலைவர்!


Varusai Omar >>> Mahdy Hassan Ibrahim:
அது யாருப்பா? எங்களுக்கு எல்லாம் தெரியாத உலகம் மிதிக்கும் தலை வேறாய்? புதுசா எவனாச்சும் நாட்டுக்குள்ளாற பூந்துட்டானா?

Ramarao Ramanaidu: Yaaru ivanaa? (யாரு இவனா)


Sethudon Boykah: ivan oru...


Santhanam Baskaran: நல்லதே நடக்க பிரார்த்தனைகள். மாற்றம் ஒன்றே மாறாதது.


Kalai Selvam: நன்றி ஐயா. அவர் எப்பொழுது தான் மாறுவார்????


Mbs Maniyam: என்ன வருசை அண்ணா, நீங்களுமா! நமது சகோதரிகளை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Varusai Omar >>> Mbs Maniyam: எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர் என்று புரியவில்லையே தம்பீ மணியம்?


Varusai Omar: என்னா தம்பி Mbs Maniysm... ஒன்னும் பதிலைக் காணோம்?


Manickam Nadeson: மாறதையா மாறாது, மனமும் குணமும் மாறாது.


Dorairaj Karupiah >>> Manickam Nadeson: நண்பா நயவஞ்சகத்தின் உருவம் சரியாகச் சொன்னீர்கள்...


Indra Indrani: இனியும் மாற போவதில்லை..


Mageswary Muthiah: இனிய காலை வணக்கம்.


Rajoo Veeramuthu: அன்புடன் இனிய இரவு வணக்கம்.


Krishnan ATawar:
Vanakkam ayya


Ramarao Ramanaidu: The Kaka dilemma


Kani Amuthan: Buku celaka by celaka


Ramany Krishnan: The Malay Dilemma it’s a mirror of Tun Dr. Mahathir .


Malathi Nair: Kaalai vanakam saar. original maaraatu.


Anbananthan Renga: ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன்...


Varusai Omar: இவர்களுக்கு, காலத்திற்கும் கை ஏந்திப் பிழைக்க வேண்டும் என்பது இவர்களுக்கு இறைவனால் விதிக்கப்பட்ட சாபக்கேடு! இன்னும் எத்தனை "ஒட்டு-மைக்கூட்டம் வரட்டுக் கூச்சல் போட்டாலும் தெய்வ சித்தம் ஒன்று மட்டுமே, நண்பா!

வரட்டுத் தவளைகள் என்-செய்யும்? மழை ஓய்ந்தும் அவற்றின் வரட் வரட் கூச்சலும் அடங்கி விடும்!

நமது சக கிழக்கு மலேசிய சபா சகோதரனின் கூற்றை கவனித்தீர்களா முத்து?

மலேசியா அனைத்து மலேசியர்களுக்கு சொந்தமே!

எந்தவொரு தனி சமூத்திற்கு மட்டும் உரியதல்ல, என ஆணித் தரமாக வலியுறுத்தி இருக்கிறான் நமது சபா சகோதரன்!

வாழ்த்துகிறோம் எங்கள் அன்பான சபா கடாஜான் - டூசுன் சோதரா!!!


Varusai Omar: அவருக்கு Selective amnesia தம்பி! அப்பப்போ அவருக்கு தனது வரலாறு மறந்து விடுகிறது!… பாவம் விடுங்கள். வயசு ஆயிட்டாலே இது மாதிரி ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லி... விடுங்க தம்பீ!

காடு வா வாங்குது... வீடு போ போங்குதூ! கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிங்க.

யானை தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது... சொந்த செலவுலே சூனியம் வச்சிக்குவது... அப்படினு எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிறது தம்பீ!


Dorairaj Karupiah: பொதுத் தேர்தல் முடிவிற்கு பிறகு... சீனர்களும் இந்தியர்களும் கால தாமதத்தின் போது... கால் கடுக்க காத்திருந்தோமே... பாம்பிற்குப் பால் ஊற்ற வா நண்பர்களே... வாழ்க மகா திமிர்

 


மலேசிய அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

தமிழ் மலர் - 08.10.2019

ம.இ.கா; ஐ.பி.எப்; பி.பி.பி; ம.சீ.ச; கெராக்கான் கட்சிகள்; 1எம்.டி.பி.-இல் இருந்து பணத்தைப் பெற்று இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திபா கோயா நேற்று அறிவித்தார்.




ம.இ.கா. தலைமையகம்; ம.இ.கா. கட்சி; புத்ரி ம.இ.கா; கெடா ம.இ.கா. தொடர்புக்குழு; பாலிங் ஐ.பி.எப்; ஆகியவை இந்த 1எம்.டி.பி. பணத்தைப் பெற்று இருக்கின்றன என்று அவர் கூறினார்.

அதே போல் கெடா மாநில பி.பி.பி. கட்சியும் விலாயா பி.பி.பி கட்சியும் இதைப் பெற்று இருக்கின்றன. அறநிறுவனங்கள், இயக்கங்கள் வரிசையில் ஐ.பி.எப். கட்டட நிதிக்கும் இப்பணம் பெறப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றச் சேவை மையமும் இந்தப் பணத்தைப் பெற்று இருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கமலநாதன் ஆவார்.

இதைத் தவிர ம.சீ.ச. கெராக்கான் கட்சிகளும் இதைப் பெற்று இருப்பதாக அவர் சொன்னார்.




மொத்தம் 80 தனிநபர்களும் நிறுவனங்களும் 420 மில்லியன் வெள்ளியை 1எம்.டி.பி.-இல் இருந்து பெற்று இருக்கின்றன என்று அவர் சொன்னார்.

தனிநபர்கள் பெற்ற பணம் ஆகக் குறைந்தது 5 லட்சம் வெள்ளி. உச்சக்கட்ட பணம் 25 மில்லியன் வெள்ளி என்றார் அவர்.

இந்தப் பணத்தை 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப் பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லத்திபா கோயா தெரிவித்தார்.


பேஸ்புக் பதிவுகள்



Devarajan Dev:
Tangkap mereka. Duit rakyat


Saravana Gugen: PH-க்கு ஆதரவாக இருக்க கோரும் மிரட்டலாகத்தான் இதைப்பார்க்கிறேன்.

M R Tanasegaran Rengasamy: அம்னோ, பாஸ் கட்சியிலே உள்ளவங்க எல்லாத்தையும் பிடிச்சிட்டீங்களா... இந்தியாக்காரன்னா வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வருவீங்களே...


Ramarao Ramanaidu >>> M R Tanasegaran Rengasamy: ஆதாரம் தேடுறாங்க ...


M R Tanasegaran >>> Rengasamy Ramarao Ramanaidu: அரசியலில் உள்ளவர்கள் யாரும் விதிவிலக்கு அல்ல. முன்னவர்கள் சிலரைத் தவிர... இந்தியர்கள் என்றால் பாய்ந்து வருகிறார்கள் புலி போல..


Ramarao Ramanaidu >>> M R Tanasegaran Rengasamy: புலி பாய்வது பலவீனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள் மீதுதான் ... வலிமையானவர்கள் மீது அல்ல ... மதம் ரீதியாக வலிமையானவர்கள் என நான் சொல்வது அவர்களைத்தான் ...


Rajandran Batumalai: Arrest all the UMNO leaders and put them behind bar and get the rest as well. All r free to move around and looks like the law for layman and not the top guns.


Selvi Sugumaran: IRON LADY BIG SALUTE


Periasamy Ramasamy: 1MDB ஆரம்பிக்கும் முன்னேயே கட்சியில அடிப்படை உறுப்பினர் கூட இல்லன்னு விலக்கி வெச்சுட்டாங்கன்னு சொல்லி தப்பிக்க சட்டத்துல ஓட்டை இருக்குங்களா அம்மணி?


Alex Mark II


Nathan Perumal


Inbachudar Muthuchandran: பணம் திரும்ப கிடைக்குமா?


Arivin Manickam: Kakaka


Varusai Omar: நாதா நாதா நாதா! இன்னாப்பா உனக்கு வந்த சோதனை?
இன்னாங்கடா இது? அதெல்லாம் அப்பவே...


Arivin Manickam: Raman or Ravennan... BN or PH... Indian no befits


Jesinnaa Jesinnaa: இனி இவர்கள் கதை கந்தல் தான்...


Chinas Palani: Don't tell do it

26 அக்டோபர் 2019

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்றுப் பேரரசு விருது

நாள்: 08.01.2019 (செவ்வாய்க் கிழமை)
நேரம்: மாலை மணி 4.00
இடம்: தோட்ட மாளிகை, பெட்டாலிங் ஜெயா 

 

மலேசியாவில் அமைதியாய் தமிழ்ச் சேவைகள் செய்து வரும் அமைப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கம் (Malaysian Indian Hairdressing Saloon Owners Association) எனும் அமைப்பும் ஒன்றாகும். மலேசியாவில் நிறையவே சேவைகள் செய்து வரும் மலேசிய இந்தியர் அமைப்பு.

இந்த அமைப்பு அண்மையில் ’வரலாற்றுப் பேரரசு’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஊடக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




இந்த நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் அமைச்சர் குலசேகரன் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. காலம் தாழ்ந்த பதிவு.

விருதும் 2000 ரிங்கிட் அன்பளிப்பும் வழங்கிச் சிறப்புச் செய்த ’மிண்டாஸ்’ (MINDAS) அமைப்பாளர்களுக்கும்; சங்கத்தின் தலைவர் மகேந்திரன்; துணைத் தலைவர் சுதந்திரன்; செயலாளர் ராஜசேகரன்; செயற்குழு உறுப்பினர்கள்; ஏற்பாட்டுக் குழுவினர்; வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியதற்காகவும்; மலேசியாவில் இதுவரை 2460 தமிழ்க் கட்டுரைகள் எழுதி சாதனைச் செயததற்காகவும் அந்த விருது வழங்கப் பட்டது. 
 

இலைமறைக் காய்களாய் வாழும் மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து ஆதரவு வழங்கி வரும் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினரின் சேவைகளை மலேசியத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும். வாழ்த்துகிறேன். நன்றி.


பேஸ்புக் பதிவுகள்


Gunasegaran Karuppiah: இனிய வாழ்த்துகள் நண்பரே.... இதன் முலம் இந்த விருது தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதாகவே நான் கருதுகிறேன்... அந்த அளவுக்கு தங்களின் பங்களிப்பு உள்ளது... தொடரட்டும்... வாழ்க... தமிழோடு வெல்க...


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி... மிக்க நன்றிங்க ஐயா...


Kodis Varan: ஒரு காலக் கட்டத்தில் "ஜப்பான் தமிழ் வானொலி" பற்றி நீங்கள் தமிழ் நேசன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையிலிருந்து நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இன்று வரை தொடர்கிறது. வாழ்த்துகள்!


Muthukrishnan Ipoh: 1970-ஆம் ஆண்டு நிகழ்ச்சி... நன்றாக நினைவு வைத்து இருக்கிறீர்கள்... நாம் அப்போது எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் தான்... இப்போது ஜப்பான் வானொலி, ஜெர்மன் வானொலி, ஆஸ்திரேலிய வானொலிகளில் தமிழ் ஒலிபரப்பு தொடர்கிறது... மிக்க நன்றிங்க...


சிமா. இளங்கோ: ஓர் உழைப்பாளியின் உண்மையான உழைபிற்கு ஏற்ற அங்கீகாரம் !!!

காலம் கடந்து கைக்கு வந்தாலும்...
கர்ணனுக்கு உரிய கவச குண்டலம் போல...
விஜயனுக்கு எட்டிய காண்டீபம் போல...
ஆக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!!

எழுதுத்தாயுதம் ஏந்திய எம்குல காண்டீபா !!!
சிந்தனைப் பசிக்கு வஞ்சனை இல்லாது வாரி வழங்கிய எங்கள் கர்ண மகாராஜே!

முத்துக்கிருஷ்ண மலாக்கா புத்தொளியே!
உனக்கிது பொருந்திய விருதான புகழ்!!!
வாழ்த்துனையா!!!


Muthukrishnan Ipoh ஐயா.. தங்கள் வாழ்த்துகள் ... மெய் சிலிர்க்க வைத்து விட்டன... மிக்க நன்றிங்க ஐயா... தங்களின் இந்தக் கவிதை வரிகள் விருதுகளையும் தாண்டிய இனிமைமிகு விழுமியங்கள்... நன்றி... நன்றி...


Sheila Mohan: வணக்கம் சார்... வாழ்த்துகள் சார்...
எழுத்துலகில் தங்களின்
பணி மேலும் சிறந்திட
வேண்டும்... இன்னும்
பல்லாண்டு காலம்
வரலாற்றுப் பேரரசாக
வலம் வர வேண்டும்...


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி... மிக்க நன்றி


Varusai Omar: தோழர் முத்து, இப்போது கண்டேன் தாங்கள்...  சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினரால் சிறப்பிக்கப் பட்டு பொற்கிளியும் கொடுத்தது அறிந்து வாழ்த்துகிறேன்! மேலும் பல விருதகளும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லா இறைவனிடம் இரு கரம் ஏந்துகிறேன் நண்பி!


Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க வருசை ஐயா... தாங்களும் மலேசிய எழுத்துலகிற்கும்; மலேசிய கலை உலகிற்கும் நிறையவே சேவை செய்து இருக்கிறீர்கள்... நிறைய கலைஞர்களை உருவாக்கி இருக்கிறீர்கள்... மேடை நாடகங்களுக்கு புதிய பரிமாணம் வழங்கி இருக்கிறீர்கள்... நினைவு கூர்கின்றேன்... தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...


Varusai Omar >>> Muthukrishnan Ipoh: ஆஹா! வழக்கம் போல உங்களது ஆய்வுச் சட்டையைப் போட்டுக் கொண்டு எங்கேயோ என்னைப் பற்றி கிளறி எடுத்தது போல் தெரிகிறதே? நன்றி நன்றி! ஆனால் உங்கள் அளவு படைப்பிலக்கியம் செய்யவில்லை என்பதே உண்மை!!!


Sukavarman Sukavarman: வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்... நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்பேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆளும் பா.ஜ.க. அரசு அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அன்றே சொன்னீர்கள். ஒற்றை அதிகாரம் அதை நோக்கி பயணிக்கிறது அரசு. முடிந்தால் அந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்க முடியுமா...

Muthukrishnan Ipoh: நன்றாக நினைவு வைத்து இருக்கிறீர்கள்... தங்களின் நினைவாற்றலுக்கு வணக்கம்... அந்தக் கட்டுரைகளை என் வலைத் தளத்தில் நாளை பதிவு செய்கிறேன் ஐயா... கருத்துகளுக்கு நன்றிங்க...


Sukavarman Sukavarman மிக்க நன்றி ஐயா


Malathi Nair: Yes sir. I have seen and wondering of ur smartness in computer. u are really intelligent. not praising telling the truth. Sybas Sir.


Muthukrishnan Ipoh: மிக்க நன்றி. தங்களின் பதிவு மென்மேலும் உற்சாகம் அளிக்கிறது. வாழ்த்துகள்...


Sathya Raman: நியாயமாகக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தான்... மென்மேலும் பல விருதுகளும் கௌரவிப்பும் நீங்கள் பெற்று சிறப்புற வாழ்த்துகள் சார்...


Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க... தாங்களும் நாடறிந்த எழுத்தாளர்... தங்களுக்கும் விருதுகள் கிடைக்க வேண்டுகிறேன்...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh நன்றிங்க சார்.🙏🙏🙏


Chitra Ramasamy: வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் எழுத்தின் மூலம் பல அருமையான தகவல்களை அறிய முடிந்தது / முடிகிறது... தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி...


Muthukrishnan Ipoh: மிக்க நன்றி...


Maana Mackeen: காலம் தாழ்ந்த பதிவு என்றாலும் எப்போதோ வரலாற்றுப் பேரரசராகி விட்டீர்கள். வாழ்த்துகள்.


Muthukrishnan Ipoh: நன்றிங்க தலைவரே... தங்களின் பதிவு மெய் சிலிர்க்க வைத்து விட்டது ஐயா...


Ganesan Nagappan: வாழ்த்துகள் ஐயா.... சரியான தேர்வு சிறந்த விருது. இன்னும் பல விருது காண வாழ்த்துகிறேன்... வாழியவே...


Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க ஐயா...


Raghavan Raman: மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகள்.


Muthukrishnan Ipoh: நன்றிங்க ஐயா...


Vel Paandiyan: வாழ்த்துக்கள் ஐயா.. ஓர் அங்கீகாரத்துக்கு கிடைத்த அலங்காரம்


Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க...


Mbs Maniyam: வாழ்த்துகள் ஐயா! பற்கலைகளை அறிந்த தாங்கள் மென்மேலும் உயர வாழ்த்துகள்.


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி...


Santhakumari Krishnan: இனிய நல்வாழ்த்துகள் அண்ணா. இன்னும் பல வரலாற்றுச் சாதனைகள் செய்ய வாழ்த்துச் சொல்லி வணங்குகிறேன்.


Muthukrishnan Ipoh: மிக்க நன்றி... தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்...


Periasamy Ramasamy: மென்மேலும் பல விருதுகள் குவித்திட வாழ்த்துகள் ஐயா...


Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு நன்றிங்க


Venogobaal Kuppusamy: மலேசிய மண்ணின் தன்னிரகற்ற தமிழ் வரலாற்றுப் பேராசான் தாங்களாகவே இருக்க இயலும்!

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி வெள்ளத்தின் உச்சத்தில் பேருவை பெறுகிறேன்... மிக்க நன்றிங்க ...

Letchumanan Nadason: தங்கள் சேவைக்குக் கிடைத்தப் பொருத்தமான விருது. வாழ்த்துக்கள்.


Muthukrishnan Ipoh: நன்றிங்க ஐயா... வாழ்த்துக்கள்.

மோஹன் Mohan: உங்களது படைப்புகளைப் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன்.... முகநூல் முன்பாகவே.... நண்பன் பத்திரிக்கையில் கணினி பற்றி நீங்கள் எழுதிய காலம் முதல்... நீங்கள் இந்த பட்டத்திற்குத் தகுதியானவர்... வாழ்த்துக்கள் ஐயா...


Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க... உங்களுக்கு மட்டும்... பெருமைக்காக அல்ல... கணினித் துறையிலும் இரு விருதுகள் கிடைத்து உள்ளன... எல்லாப் புகழும் தங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்களுக்கே...


Yogavin Yogavins: Congratulations


Muthukrishnan Ipoh: Thanks...


Mira Kannan: Congrats mama


Muthukrishnan Ipoh: Thanks Gayathri...


Marthandan Gmcboy: Congrats


Muthukrishnan Ipoh: Thanks


Sambu Simbu: Congratulations


Vally Jeeva: Congrats sir


PM Hari Dass: Congrats uncle


Rajeswari Rajes: Congratulations sir


Jayaraman Elakiya: Congratulations... wish you all the best God bless you and your family...


Muthukrishnan Ipoh: வணக்கம். வாழ்த்துகள். தங்களின் வாழ்த்துகளில் மனம் மகிழ்கிறேன். நன்றிங்க....


Parthipan Mariappan: SYABAS.. CONGRATS.


Muthukrishnan Ipoh மகிழ்ச்சி...


Sambasivam Chinniah: Vaazhga Valamudan ayyah. Congratulations... Melum pala viruthgal pertru Vaazhga Valamudan. (மேலும் பல விருதுகள் பெற்று வாழ்க வளமுடன்). God bless you Saar.


Muthukrishnan Ipoh: மிக்க நன்றி


Vani Sree: Vaalthukal sir


Rave Rajoo: VALLTUKEL SIR (வாழ்த்துகள் சார்)


Muthukrishnan Ipoh நன்றிங்க ரவி...


Melissa Elroi: Valtukkal


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி...


Santhiran Elloo: Sir Valthugal


Muthukrishnan Ipoh நன்றிங்க சந்திரன்...


Palar Thangamarimuthu: Vaazhtthukkal paaraaddukkal Malasiya Thamizhar varalaarru kurippukkalai aavanappadutthum aavanapErarasu Muthukirishnan. (வாழ்த்துகள்... பாராட்டுகள்... மலேசியத் தமிழர் வரலாற்றுக் குறிப்புகளை ஆவணப்படுத்தும் ஆவணப் பேரரசு முத்துக்கிருஷ்ணன்).


Muthukrishnan Ipoh: உற்சாகமான எழுத்துகள்... மிக்க நன்றி...


Mahdy Hassan Ibrahim: மனமார்ந்த வாழ்த்துகள்...


Intheren Suppiah: வாழ்த்துக்கள் ஐயா...


Muthukrishnan Ipoh: நன்றிங்க தம்பி...


Ramesh Yamuna: வாழ்த்துக்கள்...


Shasi சசி: வாழ்த்துகள் சகோதரரே...


Muthusamy Uthirapathi: வணக்கம்... வாழ்த்துகள் ஐயா...


Jegathesan Muniandi: வாழ்த்துகள் ஐயா...


Malar Veely: வாழ்த்துக்கள் சார்...


Santhanam Baskaran: மகிழ்ச்சி... வாழ்த்துகள்.


Vasanthi Mohanakumar: மகிழ்ச்சி..


Melur Manoharan: "வாழ்த்துகள்"...


Arumugam Sannappan: மகிழ்ச்சி. இனிய வாழ்த்துகள்.


Arjunan Arjunankannaya: வாழ்த்துக்கள் சகோ...


Ravi Purushothaman: வாழ்த்துகள் ஐயா...


Bala Sena: வாழ்த்துகள்... ஐயா


M R Tanasegaran Rengasamy: நல்ல சேவை. தொடரட்டும். வாழ்த்துகள்.


Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு நன்றிங்க....


சரஸ்வதி வீரப்புத்திரன்: வாழ்த்துகள் சார்


Muthukrishnan Ipoh: நன்றியும்.... மகிழ்ச்சியும்...


Letchmy Chengodam: வாழ்த்துகள் ஐயா.


Kanna CK Kanna Ck: வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் சேவை தொடரட்டும்.


Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...


Khavi Khavi: வரலாற்றின் பேரரசு..


Abdul Zabar இனிய நண்பருக்கு... அன்பு வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்.


Amz Harun: வாழ்த்துகள்.....


Vadivelu Vadivelu: Nalvalthukkal Aiyaa.


Muthukrishnan Ipoh: மிக்க நன்றி வடிவேலு சார்...


Athiletchumy Ramudu: வாழ்த்துகள் ஐயா...


Athiletchumy Ramudu >>> Muthukrishnan Ipoh: உங்கள் பதிவுகளை எல்லாம் தவறாமல் படிப்பேன்.. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..


பார்வதி ஸ்ரீ: வாழ்த்துகள் ஐயா!.


Nirojan Thavarasa: வாழ்த்துகள்


Mangala Gowri: மகிழ்ச்சி சார்


Muthukrishnan Ipoh: எனக்கும் மகிழ்ச்சி...


Mohan Gopal: வாழ்த்துக்கள்


Magentiran Nawamani: வாழ்த்துகள் ஐயா


Govind Bala: வாழ்த்துக்கள்.


Sandrajagran Ramasamy: Congratulations Mr Muthukrishnan Ipoh


Sandrajagran Ramasamy >>> Muthukrishnan Ipoh: your in depth knowledge on Malaysia and Malaysians history highly complimented


Muthukrishnan Ipoh: Thank you sir... thanks again for the compliments...


Sandrajagran Ramasamy >>> Muthukrishnan Ipoh: most welcome Sir


Vanaja Ponnan

No photo description available.


Thanabaal Varmen

Image may contain: flower and plant


Varusai Omar: தக்கார்க்கு தக்க நேரத்தில் கௌரவித்த தமிழ் படையினரைப் போற்றிப் புகழ் மாலை சூட்டுகிறேன்! வாழ்க வளமுடன்!!


Muthukrishnan Ipoh: தங்களின் மகிழ்ச்சி கண்டு எனக்குள் இனம் தெரியா பெருமிதங்கள்... நன்றிங்க தலைவரே...


Varusai Omar: ஹாஹாஹா!!! என்னா! பெரிசா எனக்குப்போய்... ஹும்!
வேணாம்...  வேணாம் ஐயா... இந்த "தலைவர்' பட்டம் எல்லாம்! ஏற்கனவே இப்படி நண்பர் மணிவாசகம் கூப்பிட்டு KL_ஐ விட்டு ஓட வச்சிட்டாரூ! இப்போ நீங்களுமா? உடம்பு தாங்காது ஐயா...


Sundaram Natarajan: மென்மேலும் பல விருதுகள் குவித்திட வாழ்த்துகள் ஐயா


Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...


Saravana Kumar: வாழ்த்துக்கள் ஐயா


Ruban Raja: வாழ்த்துக்கள் ஐயா


Arul Raja: வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி...


Rajaletchumy Manimegan: வாழ்த்துக்கள் ஐயா


Selvadurai Yoges: வாழ்த்துகள் ஐயா


Suthan Tiran: மிகச் சரியான விருது.


Dorairaj Karupiah: வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் சேவை நம் இளம் சமுதாயத்திற்குப் புரிந்து அறிந்த கொள்ள மிகவும் தேவை தொடரட்டும்...


Muthukrishnan Ipoh: நன்றிங்க... வாழ்த்துகள்...


Ghandhi Mohanadass: Vaazhtukkal ayya


Ghandhi Mohanadass >>> Muthukrishnan Ipoh: Ippo unggalai todarbu kollalama aiyya. 0167942209


Vanjithevan Somasanma: நல்வாழ்த்துகள் ஐயா


Manimaran Govindaraj: வாழ்த்துகள் ஐயா







மலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல்

மலேசியக் காவல் துறையின் தலைமையகம். அந்தத் தலைமையகத்தின் தலைவாசலில் மழையில் நனைந்து... வெயிலில் காய்ந்து... பனியில் உலர்ந்து... ஊன் மறந்து… உறக்கம் மறந்து… உறைவிடம் மறந்து… உறவினம் மறந்து என அனைத்தையும் மறந்த நிலையில்...


இந்தப் பெண்கள் தங்களின் கணவன்மார்களுக்காக அமைதி மறியல் செய்து வருகிறார்கள்.

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சாமிநாதன்; மதிப்புமிகு சந்துரு; மதிப்புமிகு சுரேஷ் ஆகியோருடன் மேலும் 9 பேர் சோஸ்மா தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று இரவு முதல் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு முன் இவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சோஸ்மா தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டும்.


குற்றம் நிரூபீக்கப்படும் வரையில் அந்த 12 பேரும் நிரபராதிகள் என்பது உறுதிபடுத்தப்பட்ட வேண்டும். இதுவே அவர்களின் எதிர்பார்ப்புகள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவுகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
22.10.2019

பேஸ்புக் பதிவுகள்


Periasamy Ramasamy: பட்டா இல்லாத கோவிலுக்காக சேர்ந்த கூட்டம் கூட இல்லையே என்பதுதான் என் வருத்தம். நம்மவர்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ள "அரசியல் தாதாக்கள்" ஒரு நாள் இதே போன்றதொரு முடிவை எதிர்கொள்ள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை.

Muthukrishnan Ipoh; இப்படி ஒரு வேதனையான செய்தி... இதற்கே 34 பேர் லைக் போட்டு இருக்கிறார்கள்... மன்னிக்கவும்... ஒரு பெண் புதுசா ஒரு சேலையைக் கட்டி ’என்னையும் பார் என் அழகையும் பார்’ என்று ஒரு படத்தைப் போட்டால் 1008 பேர் லைக் போடுகிற காலத்தில் வாழந்து கொண்டு இருக்கிறோம்...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: இது தான் இன்றைய தமிழர்களின் நிலை. இப்படி மானங்கெட்டு வாழ வேண்டிய அவசியம் ஏன், எதற்கு.


Ramala Pillai: அமைதி போராட்டத்திற்கும் போலீஸ் அனுமதி இருந்தால் இவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை! அல்லது போனால் இவர்களையும் சட்ட விரோத கூட்டம் என்று சொல்லி கைது செய்து விடப்போகிறார்கள்!


Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா... சட்ட விரோதக் கூட்டம் என்று சொல்லலாம்...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: நம்பி வாக்களித்தவர்கள் இன்று நடுத் தெருவில். இனியாவது விழித்துக் கொள்ளுவோம்.


Sugunesan Nesan: போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் # நிமிர்ந்து நிற்போம் தொடந்து செல்வோம் #


Muthukrishnan Ipoh வெற்றி பெற வாழ்த்துவோம் ஐயா...


Neela Vanam இந்நாட்டில் நாம் சிறுபாண்மையினர்


Varusai Omar >>> Neela Vanam: ஆமாய்யா... இப்படி சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுங்க... நேத்து வந்த வங்காளதேசி... வீதிக்கு 6 கடை திறந்து தொழில் செய்கிறான். நீங்கள் இன்னும் பஞ்சப் பாட்டு பாடுறீங்க!
வெட்கமா இல்லையா?

தமிழனின் சாபக்கேடு... தமிழினமே மட்டுமே! இனியாவது விழித்துக் கொள் என் தமிழினமே!


Muthukrishnan Ipoh அதற்கு தகுந்த மாதிரி நாமும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்...


மாரியப்பன் முத்துசாமி:
வாய்மையே வெல்லும்


Muthukrishnan Ipoh விவேகம் கலந்த வாய்மையாக இருந்தால் நன்மை பயக்கும்...


Hamba Mu Umar Umar >>> மாரியப்பன் முத்துசாமி: panam than vellum.. kaliyukam (பணம் தான் வெல்லும்... கலியுகம்)


KR Batumalai Robert: Neethi Vellatum. Atharavu. (நீதி வெல்லட்டும்... ஆதரவு)


Muthukrishnan Ipoh நீதி வெல்லும்...


Santhakumari Krishnan மிதிப்படும் சாலைகளாய்... கொட்டும் மழையும்
வெட்டும் மின்னலையும்... தாங்கும் சுமைதாங்கிகளாய் எம்மினம்!!! வேதனை அண்ணா.


Ravi Purushothaman சொந்தக் கட்சிக்காரங்கக் கூட பக்கத் துணை இல்லையே!!!


B.k. Kumar விதைப்பது விளையும் அறுவடை செய்யும் காலம் வரும்.


Varusai Omar மேலே 4 பேரது பதிவுகளைக் கண்டபோது... இவர்களைக் கண்ட போது இவர்களுக்காக பரிதாபம் கூட வரவில்லை!


Muthukrishnan Ipoh மனிதம் மரித்துக் கொண்டு வருகிறது ஐயா...


Varusai Omar >>> Muthukrishnan Ipoh: இல்லை ஐயா! மனிதம் இந்த பாழாய்ப் போன மனிதர்களால் "கொலை" செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது... இதுதான் நிஜம்.

நாம் தான் "இருட்டு அறையில் கருப்புப் பூனையை" துளாவிக் கொண்டு இருக்கிறோம். பலர் நிழல்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். ஏன்? நாம் கூட அப்படித் தானோ... முத்து?


Varusai Omar >>> Muthukrishnan Ipoh நாம் என்னதான் செய்யவது நண்பா?
கடுமையாக கடிந்து கொள்ளவும் முடியவில்லை. அப்படியே நல்ல முறையில் எடுத்துச் சொன்னாலும் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?… இல்லை, ஏதோ ஒரு மாட்டு முதுகில் வருண பகவான் வர்ஷித்த கதையாகி விடுமோ?

M R Tanasegaran Rengasamy இந்நிலை தொடர்ந்தால் தீபாவளிக்கு DAP இந்தியத் தலைவர்கள் எவரும் திறந்த இல்ல உபசரிப்பைத் தவிர்க்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.


Chandran S Rengasamy: Nenju porukutillaya inta sagothirikalai partal (நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்தச் சகோதரிகளைப் பார்த்தால்...)



Ramala Pillai: அமைதி போராட்டத்திற்கும் போலீஸ் அனுமதி இருந்தால் இவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை! அல்லது போனால் இவர்களையும் சட்ட விரோத கூட்டம் என்று சொல்லி கைது செய்து விடப்போகிறார்கள்!

Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா... சட்ட விரோதக் கூட்டம் என்று சொல்லலாம்....

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh:
நம்பி வாக்களித்தவர்கள் இன்று நடுத் தெருவில். இனியாவது விழித்துக் கொள்ளுவோம்.

மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம்

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தலைவர்கள் பலர் வந்தார்கள். பதவியில் அமர்ந்தார்கள். மக்களைப் பார்த்தார்கள். கைகுலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கண்ணீர் விட்டார்கள். கரைந்து விட்டார்கள். பெயர்கள் வேண்டாமே.


அவர்களில் சிலர் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கிறார்கள். கை எடுத்துக் கும்பிடும் அளவிற்கு சிகரம் பார்க்கிறார்கள். சொர்க்கத்தின் வாசலில் சொக்கத் தங்கங்களாய் ஒளி வீசுகின்றார்கள்.

இவர்களில் ஒரு சிலர் அரசியலுக்குள் கோடீஸ்வரர்களாக வந்தார்கள். கடைசியில் காமராசரைப் போல கையில் காசு இல்லாமல் மறைந்து போனார்கள். மனித மனங்களில் ஊழியூழி காலத்திற்கும் சமைந்து போனார்கள்.

இன்னும் சிலர் நீங்காத பங்கங்களின் நீர் ஊற்றுகளாய் கசிகின்றார்கள். சொன்னால் வெட்கம். சொல்லா விட்டால் துக்கம்.

மேலும் சிலர் அவர்களின் குடும்பங்களையே நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் மலேசிய இந்தியர்களின் நிதர்சனமான சாபக்கேடுகள். மன்னிக்கவும்.

மேலும் சிலர் நேற்று மழையில் நனைந்த ஆடுகளாய் இன்றும் ஒளிந்து நெளிந்து கொண்டு வருகிறார்கள் போகிறார்கள். இவர்களை நிரந்தரமான சாபக்கேடுகள் என்று சொல்ல முடியாது. மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரத்தின் எச்சங்கள் என்றும் சொல்ல முடியாது.

வேறு எப்படித் தான் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை. அதனால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
22.10.2019


பேஸ்புக் பதிவுகள்


Letchumanan Nadason ஆரம்பம் முதலே நமக்கு சரியானத் தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நாம் கண்டு அடையவில்லையா தெரியவில்லை. எப்போதும் நாம் ஒரு பதற்றத்துடனேயே வைத்திருக்கிறார்கள். சிறப்பானப் பதிவு. காலை வணக்கம்.


Muthukrishnan Ipoh ஆரம்பத்தில் இருந்தே நம் தலைவர்கள் நமக்கு விழிப்புணர்வுகளை வழங்கி இருக்க வேண்டும்... இப்படி மகா அரசியல்வாதிகள் வருவார்கள்... வந்து இப்படி குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை... இது நம் சமுதாயத்தின் தப்பு அல்ல...


Letchumanan Nadason >>> Muthukrishnan Ipoh உண்மை.


Periasamy Ramasamy யாரை குறை சொல்லி என்ன பயன்? சமுதாயத்திற்காக முன்னோக்குத் திட்டங்கள் கொண்டு வந்த தலைவர்(கள்) இருந்த போது, முன்னோக்குச் சிந்தனை நம்மிடையே துளிர் விட்ட நேரம் நம்மிடையே படித்தவர்கள் மிகக் குறைவு.

ஆனால், சுயநலப் போக்கு கொண்ட தலைவர்கள் வந்த பின்பு, படித்தவர்கள் மத்தியில் கூட தன் குடும்பம், தன் சொந்தம் மட்டுமே பாராட்டும் குறுகிய மனப்பான்மை வளர்ந்ததுதான் மிச்சம்.

நாட்டின் மொத்த நில உடைமையில் வெறும் 1% பங்கையே பெற்றிருக்கும் நமது தே.நி.நி.கூ.சங்கம் மட்டும் பேர் போட்டு கொண்டிருக்கிறது...

மற்றபடி, நமக்கென்று இருந்த தென்னிந்திய தொழிலாளர் சேமநிதி, TPCA விளையாட்டு அரங்கம், ஆகிய இருந்தவற்றையும், நிர்வாகத் திறன் அற்றவர்களை முன்மொழிந்து அடகு வைத்துத் தொலைத்த கட்சித் தலைவர்கள் பெயர் தான் மிஞ்சுகிறது.

தமிழ்ப் பள்ளிகள் குறைந்து, கட்சி அரசியல் நடத்தும் தனியார் கோவில்கள் நிறைந்தது தான் சாதனை.

இனி இருப்பதையும் பிடுங்காமல் விட மாட்டார்கள் என்பது போல ஓடிக் கொண்டிருக்கும் நாட்டின் சூழ்நிலை

https://www.freemalaysiatoday.com/.../peguam-fail-notis.../

நினைக்கவே... ஏற்பட்ட நடுக்கம் என்னை தொடர்ந்து எழுத விட மாட்டேன் என்கிறது...


Murugan Rajoo மனிதரில் மாணிக்கம், மக்களின் கண்ணீரைப் பார்த்து வெத்து வார்தைகள் கூறிய ஆயிரம் தலைவர்களின் அமரர் துன் டாக்டர் சம்பந்தன் ஒரு சகாப்தம். தலைநகரில் தமிழர்களின் தலை நிமிர வைத்த NLFCS கூட்டுறவு சங்கத்தின் வித்தகர்.


Muthukrishnan Ipoh
மலேசிய இந்தியர்களைப் பொருத்த வரையில் அவர் மனிதருள் மாணிகம்...


Parimala Muniyandy நமக்கு வாய்த்த தலைவர்கள்... நாம் வாங்கி வந்த வரம்... என்று நம்மை நாமே நொந்துக் கொள்ள வேண்டியது தான்... சிறப்பான பதிவு. நன்றி. காலை வணக்கம் அண்ணா.


Kumarasamy G P Govindasamy அறிந்த உண்மைகளை, மனக் குமறல்களை இப்படி எழுகிறீர்கள். சம்பந்தன் படத்தைப் பெரிதாக்கி சொல்லாமல் சொல்கிறீர்களே!


Velaydam Kannan >>> Kumarasamy G P Govindasamy: அந்த தமிழன் இல்லை என்றால் பல இந்திய குடும்பங்களில் திருவோடு நின்றிருப்பார் தெருவோடு.


Muthukrishnan Ipoh இப்போதைக்கு நம் கண்ணில் படும் ஒரு நல்ல தலைவர்...


Muthukrishnan Ipoh >>> Velaydam Kannan உண்மை... உண்மை... பல ஆயிரம் இந்தியர்களுக்கு வாழ்வு அளித்த ஒரு தெய்வம்...


Ramarao Ramanaidu சம்பந்தன் மலேசியாவில் பிறந்தவரா? விளக்கம் தேவை


Muthukrishnan Ipoh: BornThirunyanasambanthan s/o Veerasamy
16 June 1919, Sungai Siput, Perak


Tanigajalam Kuppusamy உண்மையான ஆதங்கத்தின் வெளிப்பாடு. தெய்வம் நின்று கொல்லும் என்று படித்திருக்கிறோம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Muthukrishnan Ipoh காலம் கடந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது சார்...


Muthukrishnan Ipoh அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் முறையாகப் பதில் அளிக்கிறேன்... எல்லா பதிவுகளும்... கருத்துகளும் அருமை...


Kumar Murugiah Kumar's வணக்கம் ஐயா காலை வணக்கம்


Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்


Santhanam Baskaran இனிய வணக்கம்.


Sheila Mohan இனிய காலை வணக்கம்... சார்... சிறப்பான பதிவு...


Muthukrishnan Ipoh நன்றிங்க... இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்...


Sambasivam Chinniah: Super Saar... Vaazhga Tamil. Good morning. Vaazhga Valamudan. Blessed tuesday morning. God bless you and your family. Take care...


Hamba Mu Umar: Umar Vaangi vantha varam..mikaum tavahru ayyah....amarar run sambanthan matrum amarar p pathu..ippoluthu nalla tahalamai tuhamam Malaysia tamillarku illai


Muthukrishnan Ipoh எவரையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை... அமரர் பட்டு மறக்க முடியாத ஒரு சகாப்தம்...


Ramarao Ramanaidu
ஆனால் இவரே நம்மை வந்தேறிகள் என்ற அடையாளத்தைக் கொடுத்தது நெஞ்சில் பதிந்த தழும்பு ...


Muthukrishnan Ipoh ஒட்டு மொத்த இந்திய இனத்திற்கும் அப்போதைக்கு விழிப்புணர்வு இல்லாமல் போனதும் ஒரு வகையில் காரணம் ஐயா...


Murugan Rajoo அன்று அவர் கூறியதை சப்பை கட்டும் சில மூடர்கள், இன்று ஒரு கிழட்டு அயோக்கியன் #வந்தேறிகள் என்று கூறுகிறான்... ஏன் மவுன ஆசாமிகளாய் உள்ளனர். தமிழர்களைக் குறை கூறுவது என்றால் உடனே கிளம்பி விட வேண்டியது...


Ramarao Ramanaidu >>> Murugan Rajoo: சரி ... நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள் ... போகிற போக்கில் நீங்களும் சொல்லிவிட்டுப் போக வேண்டாம் ... ஏதாவது போராட்டம் ஆர்ப்பாட்டம், மறியல் யாதேனும் செய்தீர்களா மகாதீருக்கு எதிராக? மூடர் எனச் சொல்வது உங்களையும் சேர்த்துத்தான் ... வார்த்தை உபயோகிப்பில் மரியாதை தேவை ...


Murugan Rajoo >>> Ramarao Ramanaidu: உங்கள் வார்தை கவனம். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் துன் சம்பந்தனை குறைகள் கூற... அவரைப் பற்றி பல நல்ல காரியங்கள் உள்ளது... அதை எல்லாம் அறியாத மூடர் தானே நீங்கள்...


Ramarao Ramanaidu >>> Murugan Rajoo: சரி ... துன் சம்பந்தன் பற்றி அதிகம் தெரிந்த அறிவிலி நீ என்பதை ஒத்துக் கொள்கிறேன் ...


Muthukrishnan Ipoh விழிப்புணர்வு இல்லாமல் போனது ஒரு காரணம்... எடுத்துச் சொல்ல சரியான தலைவர் இல்லாமல் போனது மற்றொரு காரணம்...


Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: thedungkal kidaipadum nallah thalaivar Tamil samuthayamthirku


Arjunan Arjunankannaya நெஞ்சில் உரமும் இன்றி... நேர்மை திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே... வாய் சொல்லில் வீரரடி... இது தான் தமிழன். அவனை யாரலும் மாற்ற முடியாது. 10 கோடி மக்கள் இருந்தும் ஒரு நாடு இல்லாதவர்கள். காரணம் துரோக குணம்


M R Tanasegaran Rengasamy ஆண்டவன் நமக்குத் தந்த வரத்தால் அந்த தலைவர்கள் நல்லது செய்யாவிடினும் நல்லா வாழ்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்களும் எல்லா வளமும் பெற்று வாழ்கிறார்கள். வரம் கொடுத்த சிவனே சமயங்களில் கதி கலங்கிடுவார். நாம் எம்மாத்திரம். சோறு போட்டவனின் குரல்வளையைப் பிடிக்கும் வன்மம் வளர்ந்துவிட்டது. தலைவர்களைத் தலைவர்களாக நாம் தான் காத்து வந்து இருக்கிறோம். அதுதான் உண்மை.


Moon Noom ஐயா வணக்கம் தங்களின் ஆதங்களை அறிந்தேன். என் செய்வது இன்றுள்ள தலைவர்கள் போல் அன்றில்லையே. மானமுள்ள தமிழனாக வாழ்வதற்கு ஒன்று சேர வேண்டும். ஒரே மலேசிய இந்தியனாக வாழ்வோம். நன்றி.


Tina Karan தலைவன் என்பவன் மக்களுக்குப் பணி செய்யும் சேவகன் என்று எப்பொழுது ஒருவன் நினைக்கிறானோ... அப்பொழுது தான் நாடும் வீடும் நன்மைப் பெறும் ஐயா! இங்கே நடப்பது என்ன? தலைவர் என்றாலே மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாக அல்லவா பார்க்கின்றனர்..! நல்ல தலைவர் (சேவகர்கள்) இருக்கின்ற போதிலும், கொஞ்ச கூட தகுதி இல்லாத தலைவர்களும் இருக்கின்றனர் என்பது நாம் வாங்கி வந்த வரம்...


Krishnan Sockalingam அருமை ஐயா


Maha Lingam வாழ்த்துகள்...


Soma Kulim: Nandu katthai sir... (நண்டு கதை சார்)


Varusai Omar >>> Sambasivam Chinniah: உங்கள் வாழ்த்தும் வணக்கமும் எனக்காக இருந்தாலும்... தோழர் முத்துவுக்காகவும் இருந்தாலும் சரி...


Kanna Kannan: Arumai sir... Tamilan sape kedu... Malaysia vela epadiye odrumaiya elama... Porama padu.. Aduthevane kadikodothu kudi kodothu eruthom Na... Vike veraivil sonthe nadule nadu aduruvargel ake paduvom...

(அருமை சார். தமிழன் சாபக்கேடு... மலேசியாவிலே இப்படியே ஒற்றுமை இல்லாமல்... படுகிறோமே பாடு... அடுத்தவனைக் காட்டிக் கொடுத்து இருந்தோம்னா... விக விரைவில் சொந்த நாட்டிலே நாடு அற்றவர்களாக்கப் படுவோம்...)


Bakivelu Ramaya: Without you stating their names we can assume whom you mean.