27 அக்டோபர் 2019

மலாய் டிலாமா - The Malay Dilemma

பேஸ்புக் - 09.10.2019

1981-ஆம் ஆண்டு துன் மகாதீர், மலேசியாவின் 4-ஆவது பிரதமர் பொறுப்பை ஏற்றார். அதற்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-ஆம் ஆண்டில் மலாய் டிலெம்மா (The Malay Dilemma) எனும் நூலை எழுதினார்.



மலாய்க்காரர்களின் அடிப்படை உரிமைகள் தற்காக்கப்பட வேண்டும் என்பதின் பிரசாரக் கருவியாக அந்த நூல் அமைந்தது.

அவர்களின் தன்னாட்சி உரிமைகள் நிலைப்படுத்த வேண்டும்; அவர்களின் பொருளாதார முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும்; அவர்களின் மேல் ஆதிக்கத்தில் உறுதிப்பாடு வேண்டும்; அரசுத் துறைகளில் அவர்களின் ஆளுமையில் கூடுதல் பிரதிநித்துவம் வேண்டும் என்பதையே அந்த நூல் வலியுறுத்துகிறது.

மலாய் மக்களின் வாழ்வியல் உரிமைகள் பாதிக்கப் படலாம் என்கிற ஒரு பொதுவான காட்சியை அந்த நூல் சித்தரித்துக் காட்டுகிறது.

அந்த நூல் வெளியிடப்படும் போது துன் மகாதீர் தன்னுடைய கோத்தா ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்து இருந்தார். 1969-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்.

அந்தத் தொகுதியில் இருந்த சீனர்கள் அம்னோவிற்கு வாக்கு அளிக்காமல் பாஸ் கட்சிக்கு வாக்கு அளித்து மகாதீரைத் தோல்வி அடையச் செய்ததாக ஓர் ஆதங்கம் நிலவியது.


தொடர்ந்து 1969 இனக் கலவரம். துங்குவை மகாதீர் வெளிப்படையாக எதிர்த்துப் பேசினார். அதனால் அம்னோ கட்சியில் இருந்து மகாதீர் விலக்கப் பட்டார்.

அதன் பின்னர் தான் மலாய் டிலாம்மா எனும் நூலை எழுதினார். அந்த நூல் மலாய்ச் சமூகத்தவர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமராக இருந்த துங்குவின் அதிருப்தியையும் தேடிக் கொண்டது.

இந்த நூல் மலேசிய வரலாற்றையும்; மலேசிய அரசியலையும் இனவாத அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது. பின்வரும் அடிப்படை நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறது:

1. மலாய் இனம் மலேசியாவின் பழங்குடி மக்கள் (பூமிபுத்திரர்கள்).

2. ஒரே தேசிய மொழி மலாய் மொழி. அந்த மொழியை மற்ற அனைத்து இனங்களும் கற்க வேண்டும்.

3. மலாய்க்காரர்களின் சகிப்புத் தன்மையினால்; பிரிட்டிஷாரின் ஒத்துழைப்புடன்; மலாய்க்காரர்களின் சொந்த நிலத்திலேயே அவர்களை அடிபணிய வைத்து உள்ளது.

4. வணிகத் துறையில் மலேசிய சீன மேலாதிக்கத்தைச் சரி செய்ய உறுதியான நடவடிக்கைத் திட்டம் தேவைப் படுகிறது.




இந்த நூல் மகாதீரின் தோற்றத்தை ஒரு பேரினவாதி என்று உறுதிப் படுத்தியது. இருப்பினும் அவர் தனது சொந்த இனத்தின் பற்பல தவறுகளையும் இந்த நூலில் பகுத்துப் பார்க்கிறார். அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான கொள்கைகளை மலேசிய அரசாங்கம் காலப் போக்கில் ஏற்றுக்கொண்டது. மலேசிய புதிய பொருளாதாரத் திட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த நூல் உண்டாக்கிய தாக்கமும் மாறவில்லை. அதை எழுதியவரும் மாறவில்லை.

 

 பேஸ்புக் பதிவுகள்


Tanigajalam Kuppusamy: பெரும்பாலோர் அறிந்த தகவல்கள் தான். ஆனால் மலாய்க்காரர் கௌரவம் பற்றிய மாநாடும் அதில் வெளியிடப்பட்ட இனவாத முடிவுகளும் மகாதிரின் உரையின் உள்ளடக்கமும் பரவலாக மற்ற இனத்தவரால் விமரிசிக்கப்படும் இவ்வேளையில் இப்பதிவு, இன்றைய மலேசியாவின் இனவாத கொள்கைகளுக்கு அடித்தளம் எது என்பதை நினைவுப்படுத்த காலத்தின் அவசியம் தான்.


Perumal Ponnusamy: அவர் ஒரு மலாய்காரர் இல்லை. ஆதலால் வேசம் போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். உதாரணமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பிறமொழி நடிகர்கள் தங்களைப் பச்சை தமிழ் என்று அடையாளப் படுத்துவது போல. அவர் நினைத்ததைச் சாதித்து விட்டார். ஏனோ மோகம் தீரவில்லை. மலாய்காரர்களை முட்டாளாக்கித் தன் வாரிசுகளை உருவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார். மலாய்காரர்கள் விழித்து எழுந்தால் நன்மை.


Bala Sena >>> Perumal Ponnusamy: சரியான கருத்து.. அவர் மலாய்க்காரர் அல்ல.. தன்னை தன் பதவியை தற்காத்துக் கொள்வதற்காக மலாய் இனத்திற்காக உதவுகிறார்.. பிற இனத்தை எப்போதுமே கீழேயே வைத்திருக்க வேண்டும் என அடக்கு முறையில் நடந்து கொள்வதில் அவரது குணம் தெரிகிறது.. மூன்று சமூக ஒப்பந்தத்தில் தானே கையொப்பமிட்டு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது..


Karunaharan Karuna: கடந்த 14-வது பொது தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை துன் அவர்கள் மறந்து விட்டார். மலேசியாவை இனி இன ரீதியில் வழி நடத்த முடியாது. நாம் அனைவரும் மலேசியர் ஜோகூர் சுல்தான் கூட இதை உறுதி படுத்தினர்.


Dorairaj Karupiah >>> Karunaharan Karuna: மாறாதையா மாறாது இவன் மனமும் குணமும் மாறாது


Mahdy Hassan Ibrahim: உலகம் மதிக்கும் ஒரு தலைவர்!


Varusai Omar >>> Mahdy Hassan Ibrahim:
அது யாருப்பா? எங்களுக்கு எல்லாம் தெரியாத உலகம் மிதிக்கும் தலை வேறாய்? புதுசா எவனாச்சும் நாட்டுக்குள்ளாற பூந்துட்டானா?

Ramarao Ramanaidu: Yaaru ivanaa? (யாரு இவனா)


Sethudon Boykah: ivan oru...


Santhanam Baskaran: நல்லதே நடக்க பிரார்த்தனைகள். மாற்றம் ஒன்றே மாறாதது.


Kalai Selvam: நன்றி ஐயா. அவர் எப்பொழுது தான் மாறுவார்????


Mbs Maniyam: என்ன வருசை அண்ணா, நீங்களுமா! நமது சகோதரிகளை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Varusai Omar >>> Mbs Maniyam: எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர் என்று புரியவில்லையே தம்பீ மணியம்?


Varusai Omar: என்னா தம்பி Mbs Maniysm... ஒன்னும் பதிலைக் காணோம்?


Manickam Nadeson: மாறதையா மாறாது, மனமும் குணமும் மாறாது.


Dorairaj Karupiah >>> Manickam Nadeson: நண்பா நயவஞ்சகத்தின் உருவம் சரியாகச் சொன்னீர்கள்...


Indra Indrani: இனியும் மாற போவதில்லை..


Mageswary Muthiah: இனிய காலை வணக்கம்.


Rajoo Veeramuthu: அன்புடன் இனிய இரவு வணக்கம்.


Krishnan ATawar:
Vanakkam ayya


Ramarao Ramanaidu: The Kaka dilemma


Kani Amuthan: Buku celaka by celaka


Ramany Krishnan: The Malay Dilemma it’s a mirror of Tun Dr. Mahathir .


Malathi Nair: Kaalai vanakam saar. original maaraatu.


Anbananthan Renga: ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன்...


Varusai Omar: இவர்களுக்கு, காலத்திற்கும் கை ஏந்திப் பிழைக்க வேண்டும் என்பது இவர்களுக்கு இறைவனால் விதிக்கப்பட்ட சாபக்கேடு! இன்னும் எத்தனை "ஒட்டு-மைக்கூட்டம் வரட்டுக் கூச்சல் போட்டாலும் தெய்வ சித்தம் ஒன்று மட்டுமே, நண்பா!

வரட்டுத் தவளைகள் என்-செய்யும்? மழை ஓய்ந்தும் அவற்றின் வரட் வரட் கூச்சலும் அடங்கி விடும்!

நமது சக கிழக்கு மலேசிய சபா சகோதரனின் கூற்றை கவனித்தீர்களா முத்து?

மலேசியா அனைத்து மலேசியர்களுக்கு சொந்தமே!

எந்தவொரு தனி சமூத்திற்கு மட்டும் உரியதல்ல, என ஆணித் தரமாக வலியுறுத்தி இருக்கிறான் நமது சபா சகோதரன்!

வாழ்த்துகிறோம் எங்கள் அன்பான சபா கடாஜான் - டூசுன் சோதரா!!!


Varusai Omar: அவருக்கு Selective amnesia தம்பி! அப்பப்போ அவருக்கு தனது வரலாறு மறந்து விடுகிறது!… பாவம் விடுங்கள். வயசு ஆயிட்டாலே இது மாதிரி ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லி... விடுங்க தம்பீ!

காடு வா வாங்குது... வீடு போ போங்குதூ! கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிங்க.

யானை தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது... சொந்த செலவுலே சூனியம் வச்சிக்குவது... அப்படினு எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிறது தம்பீ!


Dorairaj Karupiah: பொதுத் தேர்தல் முடிவிற்கு பிறகு... சீனர்களும் இந்தியர்களும் கால தாமதத்தின் போது... கால் கடுக்க காத்திருந்தோமே... பாம்பிற்குப் பால் ஊற்ற வா நண்பர்களே... வாழ்க மகா திமிர்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக