18 டிசம்பர் 2019

கறுப்பு தீபாவளி மலேசியா 2019




நம்ப வீட்டுப் பெண் பிள்ளைகள் நடுத் தெருவில்… மழையிலும் பனியிலும் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்...

எங்கள் கணவன்மார்களை விடுவியுங்கள்... என்று இரைஞ்சுகின்றார்கள்...

எங்கள் கணவன்மார்களைக் காப்பாற்றுங்கள்... என்று ஏங்கித் தவிக்கிறார்கள்...

இந்த நிலையில் மலேசிய இந்தியர்களுக்கு தீபாவளி அவசியம் தானா...

அப்படிப்பட்ட ஒரு தீபாவளி நமக்குத் தேவை தானா…

நமக்கும் இன மான சமூக உணர்வுகள் இருக்கு தானே?




பேஸ்புக் பின்னூட்டங்கள்


Sukumaran Suppiah: நிச்சயம் இனப்பற்று உள்ளவர்கள் செல்ல மாட்டார்கள்! நம் சகோதரர்களுக்காகப் பிரார்த்திக்கவும் மறக்க மாட்டார்கள்! அரசாங்கம் நம்மைக் கிள்ளுக்கீரையாகக் கூட மதிப்பதில்லை எனபதற்கோர் சிறந்த உதாரணம்! ஒற்றுமையே பலம்! ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருணம் இது! சிந்திப்போம்! செயல்படுவோம்!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க...

Sivaguru Sithambaram: அரசாங்கம் ஏற்பாடு செய்யும் எந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.

Nagappan Arumugam >>> Sivaguru Sithambaram: பரவட்டும் செய்தி!

Letchumanan Nadason: தீபாவளி வேண்டாம். அரசாங்க தீபாவளி விருந்து நிகழ்வுகளை புறக்கணித்து நம் உணர்களை வெளிப்படுத்துங்கள்.

ஏகாம்பரம் கன்னி >>> Letchumanan Nadason: உண்மைதான் ஐயா.

Manickam Nadeson: எங்கள் பேராக் மாநிலத்தில் 10 மாவட்டங்களிலும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி கொண்டாடப் போரானுங்கலாம். யார் வீட்டுப் பணத்தில்? அவனுங்க அப்பன் வீட்டு காசில கொண்டாட்டடும். பொது மக்கள் வரிப் பணத்தில் இப்படி தீபாவளி கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? பதவியில் இருந்தால் மக்கள பணத்தை தன் விருப்பத்திற்கு செலவு பண்ண் முடியுமா?

ஏகாம்பரம் கன்னி >>> Manickam Nadeson: நமது தமிழா்கள் கண்டிப்பாக இவனுங்க உபசாிப்பை புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

Perry Muthan: My humble opinion is we need Deepavali but boycot Deepavali functions organized by PH government and its leaders.

Johnanthonysamy John: well said Mr. Muthan. As we all indian celebrating this Deepavali but this we all boycot this PH government open house celebration, to support our sisters family at the roadside under the rain. No sence on new malaysia to abolish SOSMA and prihatin pada rakyat selepas menang PR 14 Bullshet, pembohong menteri2 wakil india dan kerajaan PAKATAN.

Manikam Kuppusamy: உண்மை ஐயா, அரசாங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் எந்த தீபாவளி நிகழ்ச்சிகளிலும், நாம் புறக்கணிக்க வேண்டும்,

Thanabaal Varmen: இந்தத் தீபாவளியை, நாம் கறுப்பு தினமாக ஏற்றுக் கொண்டாலும் தவறில்லை என்றே உணர்கிறேன்!!!

Thina Karan: தீபாவளியை புறக்கணிப்பு செய்வதால் அது எத்தகைய அழுத்தத்தை ஆளும் அரசுக்கு தரக்கூடும் என்பதையும் தெளிவாக கூறவும். பாதகமா அல்லது சாதகமா? மாறாக தீபாவளி பண்டிகை புறக்கணிப்பு செய்யப் பட்டால் பாதிக்கப் படப்போவதும் நமது வியாபாரிகள் தானே. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

Doraisamy Lakshamanan: மலேசிய இந்தியர்கள் அனைவரின் மன வேதனையை நன்கு உணர்ந்துள்ள நம் பிரதமர் மனம் இறங்கினால் தீபாவளியை பாதிக்கப் பட்டவர்களும் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடியபின் சம்பந்தப் பட்டவர்களின் வழக்கை விசாரிக்க ஏற்பாடு செய்யக் கூடும் பொறுமை காப்போம்! இன்னும் 24 மணிநேரம் இடைவெளியில் எதுவும் நல்ல முறையில் ஏதாவது நடக்காதா என எல்லோரும் எதிர்பார்போம். அதுவரை உண்ணா நோன்பில் உள்ள சகோதரிகளுக்கு சட்டத் துறைச் சகோதரி அம்பிகா அம்மையார் தொலைபேசி வழியாவது ஆறுதலாக உண்ணாவிரதத்தை கை விடுமாறு எடுத்துரைப்பார்களா?

Khavi Khavi: கொடிய விலங்குகள், உயிர்கொல்லி விஷப் பூச்சிகள், ஆறுகள் மற்றும் அடர்ந்த மலைக் காடுகளை அழித்து சாலைகள் அமைத்து, மலைகளை குடைந்து தண்டவாளங்களை அமைத்து, ரப்பர் செம்பனைத் தோட்டங்களில் தோய்ந்து இம்மலையகம் மேன்மை அடைந்திட, இம்மண்ணின் மைந்தர்கள் இன்பமாய் கழித்திட தனது இன்னுயிரையும் இரைத்திங்கு தொடர் சந்ததிகளாய் இன்னும் இங்கேயே நாதியற்று வாழ்கின்ற அவலம். "எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகட்கு..!"

Malathi Nair: Pray for them frm bottom of my heart. at least today we hear good news frm who ever responsible for this.

Arjunan Arjunankannaya: நம்மை பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது

Arojunan Veloo: நாம் ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது....!

Muniyandy Veerasamy: அரசாங்க தீபாவளி விருந்து நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள்

Pon Vadivel: நமது சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நாடு தூய்மை பெற வீரத் திலகங்களாக அமையும்

Gunasegar Manickam: உண்மை ஐயா.... இந்த தீபாவளியை கொண்டாட மூடே இல்லை.... நமது சகோதரிகள் படும் துன்பங்கள் வேதனையாக இருக்கிறது.

Selva Mani: எட்டப்பன்களும், சகுனிகளும் நம் சாபக் கேடுகள்!

KR Batumalai Robert: Unmai. Deepavali Ellai. Vethanai.

Karuna Jayaraman: உண்மை அண்ணா உண்மை அண்ணா

Jsr Chandra: Parithapam intha kudumpanggal

Santha Arumugam: Ya.

Kumar Murugiah Kumar's: நானும் என் குடும்பத்தார் அனைவரும் உங்களுடன் !

Shree Rau: May God Bless

Periasamy Ramasamy: மன்னிக்கவும். இங்கு பகிர்ந்துள்ள கருத்துக்களில் இருந்து சற்று மாறு பட விழைகிறேன். சமீப காலமாக இந்திய அரசின் வர்த்தக நெருக்கதலுக்கு உள்ளாகி இருக்கும் தருவாயில் கூட, நம் நாட்டுத் தலைவர் பிடிவாதமாக அனைத்துலக மேடையில் வெளியிட்ட இந்தியாவுக்கு எதிரான தனது கருத்தை மீட்டுக் கொள்ள மறுப்பதும், உள் நாட்டில், துங்குவின் அரசு 1957-இல் ’வந்தேறிகளுக்கு’ குடியுரிமை கொடுத்து தவறு இழைத்து விட்டதாக வெளிப்படையாகவே பேசி வருவதும், LTTE இயக்கம் பயங்கரவாத பட்டியலில் இருந்து அகற்றப்பட்டு இருப்பது தெரிந்து இருந்தும், இங்கே தேவை இல்லாமல் குறிப்பாக நம்மவர்களை அதனுடன் சம்பந்தப் படுத்தி எடுத்து இருக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கையில், நம்மவர்களைப் 'பணயமாக' வைத்து இந்தியாவிற்கு ஒரு மருட்டல் விடுவது போலத் தெரிகிறது.

ஆகவே, நமது அரசியல் பார்வையை நாம் சற்றே மாற்றி கொள்வது விவேகமாகப் படுகிறது. "புறக்கணிப்பு" என்னும் எதிர்மறை மனவோட்டத்தைத் தவிர்த்து, இதற்கும், நாம் சற்றே அமைதி காத்தோமானால், காலம் ஒரு நல்ல முடிவைத் தரும் என்று நிச்சயமாக நம்புவோம்.

மேலும் நமது இந்தியப் பிரதிநிதிகளின் உண்மையான நிலைப்பாடு தெளிவாக தெரிந்து கொள்ளாமல், நமக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதும், விமர்சிப்பதும் பொருத்தமற்றது என்றே நினைக்கத் தோன்றுகிறது

தீபாவளியை எப்போதும் போல அமைதியாக, எல்லா இன நண்பர்களுடன், கட்சி அரசியல் பேதமும் இன்றி எல்லா சக இந்திய பிரதிநிதிகளின் திறந்த இல்ல உபசரிப்புக்களில் சந்தர்ப்பம் வாய்த்தால் பங்கு கொள்வோம்.

https://www.malaysiakini.com/news/497348?utm_source=dlvr.it&utm_medium=facebook&fbclid=IwAR3rxssYjqWiOicBEOysflzIchCj5cwmmeH7FH_mCdVsID7RHwnKNLPNXAs

A million unqualified non-indigenous people given citizenship, says PM
malaysiakini.com

Manickam Nadeson:
அது சரி, பாக்காத்தான் ஹராப்பான் கட்சியின் இந்திய அமைச்சர்கள், மற்றும் மாநிலங்களில் உள்ள நம் இனத்தைச் சேர்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எங்கே போனார்கள். ஆனந்தமாக, மகிழ்ச்சியாக தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட தங்களது இல்லங்களில் விளக்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த சுயநலக் குள்ளநரிகள் இன்று தடுப்புக் காவலில் இருப்பவர்களைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லையே. செய்யாத மக்கள் நலன்களை தாங்கள் தான் செய்ததாக பொய் சொல்லி விளம்பரம் தேடித் திரியும் இந்தப் புறம்போக்கு அரசியல் வியாதிகளை இப்பொழுதாவது அடையாளம் கண்டு, இந்த நாடோடி தெருநாய்களின் தோலை சுத்தமாக உரிக்க வேண்டும். கடுப்பு ஏத்துரானுங்க மை லார்ட்.

Varusai Omar: அவலை நினைத்து உரலை இடித்த கதைதான் நினைவிற்கு வருகிறதூ!

Shamy Appalasamy: சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நாடு தூய்மை பெற வீரத்திலகங்களாக அமையும்

Ram Subra: தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் பல இந்திய தலைவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனரே..

Dorairaj Karupiah: கரு மேகங்கள் என்று விலகுமோ அன் நாளே நன்நாள் பொறுத்திரு மகளே... சேங்கோல் சூத்திரதாரியிடம்

Raani Nair: தமிழ் இன மக்களின் ஒற்றுமையை இதன் மூலம் நன்கு அறியப்பட்டு உள்ளது.. ஒரு நாதியற்ற நிலை இது... இனி நம் சமுதாயம் என்னவெல்லாம் காணப்பட வேண்டிய சூழல் உண்டாகுமோ?



17 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - பெண்களின் பரிதாப நிலை - 24.10.2019

உலகமே தீபாவளி கொண்டாட்டத்தில்... ஆனால் மலேசியாவில் மூன்று பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்... நெஞ்சம் பதறுகிறது. கண்ணீர் வருகிறது.

மலேசியாவின் ஆளும் பக்காத்தான் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் இரு இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். அவர்களுடன் மேலும் 10 பேர் கைது.




எங்கே கோளாறு... எப்படி நடந்தது; ஏன் நடந்தது என்பது ஒரு புறம் சற்றே ஒதுக்கி வைப்போம்.

அந்த 12 பேர் கைது செய்யப் பட்டது குற்றவியல் சார்பிலான குற்றமா; அல்லது சோஸ்மா சார்பிலான குற்றமா; அல்லது அது ஓர் அரசியல் நாடகமா; அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை. உண்மை நமக்கும் தெரியாது. இன்னும் தெரியாத நிலை.

ஆனால் பாதிக்கப்பட்ட அந்த 12 பேரில், மூவரின் மனைவிமார்கள் நடுத் தெருவில் நின்று கொண்டு ‘எங்கள் கணவன்மார்களை விடுவியுங்கள்; எங்கள் கணவன்மார்களைக் காப்பாற்றுங்கள்’ என்று அழுது புலம்புகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.




அவர்களின் நிலைமை மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களைப் பிழிந்து எடுக்கிறது. உலகத் தமிழர்களை வாட்டி வதைக்கின்றது.

மலேசிய இந்தியர்களை மட்டும் அல்ல மற்ற சகோதரச் சீனர்கள்; சகோதர மலாய்க்காரர்கள் பலரும் வேதனைப் படுகின்றார்கள். அந்தப் பெண்களைப் பார்த்து விம்மிச் செல்கின்றார்கள். உதவி செய்ய முடியவில்லையே என்று வெதும்பிப் போகின்றார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதே தலையாயக் குற்றச்சாட்டு.

ஒன்றை இங்கே மறந்துவிட வேண்டாம். அமைதி மறியல் செய்யும் அந்த மூன்று பெண்களின் கணவன்மார்கள் ஜனநாயக செயல் கட்சியை (ஜ.செ.க.) சேர்ந்தவர்கள். ஆளும் பக்காத்தான் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றைச் சார்ந்தவர்கள்.




இந்த ஜ.செ.க.வில் பெரிய பெரிய அரசியல் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

சீனச் சமூகத்தைச் சார்ந்த லிம் கிட் சியாங்; லிம் குவான் எங்; தோனி புவா; அந்தோனி லோக், மலாய்ச் சமூகத்தைச் சார்ந்த துங்கு ஜுல்பூரி ஷா; இந்தியச் சமூகத்தைச் சார்ந்த எம்.குலசேகரன்; கோபிந்த் சிங்; சிவகுமார்; சார்ல்ஸ் சாந்தியாகோ; ராம் கர்பால்; ராயர்;

இவர்களில் யாராவது ஒருவர் நேரடியாகக் களத்தில் இறங்கி முயற்சிகள் செய்யலாமே. ஏதாவது ஒரு தீர்வு காண முயற்சிகள் செய்யலாமே.

இதற்கு முன்னர் ஜ.செ.க.வின் சீனத் தலைவர்கள் வந்தார்கள். மெழுகுவர்த்தி பிடித்தார்கள். வீடியோ எடுத்தார்கள். ஆதரவு தெரிவித்தார்கள். அனுதாபம் தெரிவித்தார்கள். அப்படியே போய் விட்டார்கள்.




குறை சொல்லவில்ல. ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் ஆர்ப்பரிக்கிறேன்.

ஏங்க தெரியாமல் தான் கேட்கிறேன். நம் இந்தியர்கள் நடுத் தெருவிற்கு வரும் அளவிற்கா நம் மலேசிய இந்தியர்களின் நிலைமை அப்படி மோசமாகி விட்டது. நடுத் தெருவில் நிறுத்தி வைத்து அனுதாபம் தெரிவிக்கும் அளவிற்கா நம் நிலைமை இப்படி மோசமாகி விட்டது.

ஒரு சின்னக் கேள்வி. இந்த ஜ.செ.க. தலைவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். எங்கே போய் விட்டார்கள். பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஆயிரம் ஆயிரம் அல்வாக்களை அள்ளி வீசினார்களே... ஆயிரம் ஆயிரம் சத்தியம் பண்ணினார்களே... இப்போது எங்கே போனார்கள். எங்கே... எங்கே...

ஒரே வார்த்தை... இவர்கள் அரசியல் செய்கிறார்களா அல்லது அரசியல் கூத்து நடத்துகிறார்களா. தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.




மலேசியாவின் ஒட்டு மொத்த இந்தியர்களையும் கேவலமாக நினைக்கிறார்கள். கேலிக்கூத்துப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய அரசியல் உள்நோக்கம் உள்ளது. மலேசிய இந்தியர்களை முன் வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களின் அதே அரசியல் கூத்துகளில் மலேசிய இந்தியர்கள் பகடைக் காய்களாகவும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இதை இதோடு நிறுத்திக் கொள்வோம்.

இப்போதைய பெரிய பிரச்சினை... அந்த மூன்று பெண்களின் பிரச்சினை தான்.

மலேசிய இந்தியத் தலைவர்களே... அந்தப் பெண்கள் மூவரும் நடுத் தெருவில் அனாதைகளாக நிற்கின்றார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது நல்ல தீர்வைக் காணுங்கள்.

அவர்கள் இப்படி இராத்திரி முழுவதும் தூங்காமல் கொள்ளாமல் விடிய விடிய மெழுகுவர்த்தி பிடித்து... அனாதைகள் கோலத்தில் அழுது புலம்புவது இந்த மலேசிய மண்ணுக்கே அடுக்காது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.10.2019


பேஸ்புக் பதிவுகள்



M R Tanasegaran Rengasamy: ஆட்சியில் உள்ளவர்களையே ஆட்டிப் படைப்பது இந்நாட்டு வரலாற்றில் நடைபெறாத ஒன்று. இந்தியர்களை ஒட்டு மொத்தமாக அந்நியப் படுத்தும் முயற்சியா... எவ்வளவு நம்பிக்கை துரோகம்... நிச்சயம் இது மாறும்.

Hamba Mu Umar Umar >>> M R Tanasegaran Rengasamy: tamilar onru pattal undu vazvuh (தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

Muthukrishnan Ipoh: உண்மையிலேயே நம்பிக்கைத் துரோகம் ஐயா... மலேசிய வரலாற்றில் ஒரு துரோகத்தின் காலச்சுவடு...

Hamba Mu Umar Umar: Ekonomik Malaysia turun

KR Batumalai Robert: India Thalaivarhal Udanadiyaha Kalathil Erunggi Nalla Mudivu Katavendum. Thuniveh Thunai.

Sangapillai Sangapillai: India arasialvathigalin kathi vilavilaya intha alukural

Hamba Mu Umar Umar: 12 perum karupu aduhu.. arasial paligadah.. mannikaum ayyah... Memang la anak sundal mesti happy atas derita orang lain

Ihwan Jainool Bin Firdose: தீவரவாதிகளை விசாரணை நடந்துவது இயல்பு தான்...








மலேசிய இந்திய அமைச்சர்கள் எங்கே போனார்கள் - 23.10.2019

மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் மலேசியச் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். உலகம் அறிந்த விசயம்.


இது தொடர்பாக புக்கிட் அமான் தலைமையகத்தின் வாசலில், நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சி. 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டார்கள். கொட்டும் மழையிலும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி தொடர்ந்தது.

அந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ்; சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ; மற்றும் பொதுமக்கள் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தினார்கள்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் தவறு செய்து இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; சான்றுகள் இருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தார்கள்.



மலேசிய இந்தியர்களுக்கு இப்போது ஓர் இக்கட்டான நிலைமை. ஓர் இக்கட்டான காலக் கட்டம். இப்படி ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் இந்திய அமைச்சர்கள் தான் முன்நிற்க வேண்டும். உதவிக் கரம் நீட்ட வேண்டும். முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

நேற்றைய நிகழ்ச்சியில் எங்கே போனார்கள்? பிசி... அல்லது மீட்டிங்... இருந்து இருக்கலாம். சொல்ல முடியாது.

பொதுவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எவரும் கொடி பிடிக்க வேண்டாம். கட்டிப் பிடிக்க வேண்டாம். பதாகை ஏந்த வேண்டாம். பாட்டுப் பாட வேண்டாம். மைக் டெஸ்டிங் செய்ய வேண்டாம்.

சும்மா ஒரு மனிதநேய ஆதரவு போதுமே. நீயும் மனுசன்... நானும் மனுசன் என்கிற அந்த நினைப்பு போதுமே. எங்கேயா போனது மனிதாபிமானம். எங்கேயா போனது சமுதாய அனுதாபம். எங்கேயா போனது சமுதாய அக்கறை.

போன தேர்தலில் மலேசிய இந்தியர்கள் அள்ளிக் கொட்டிய வாக்குகள் தானே பக்காத்தான் அரசாங்கம் அமைய உதவின. அமைச்சர் பதவிகள் ஒன்றுக்கு மூன்று என்று நான்காய்க் கிடைத்தன. அதை மறக்கலாமா?

ஆக அதே அந்த மலேசிய இந்திய மக்களுக்கே ஆபத்து என்றால் அதைவிட பதவிகள் என்னங்க ரொம்ப முக்கியம்.

வீடு எரிகிறது. வீட்டின் உள்ளே இருக்கும் உயிர்களைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும். காயங்களுக்கு மருந்து போட வேண்டும். அப்புறம் தான் படம் பிடித்து பேப்பரில் போட வேண்டும்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். சுவர் உடை படுகிறது என்றால் சுவருக்கு அரணாக அல்லவா நிற்க வேண்டும்.



பொதுவாகச் சொல்கிறேன். சுவரை வைத்துச் சித்திரம் வரைந்து விட்டு... அந்தச் சித்திரத்தை வைத்து காசு பார்த்து விட்டு... அந்தச் சித்திரத்தை வைத்து என்னையும் பார் என் அழகையும் பார் என்று பாவ்லா காட்டி விட்டு... உடைந்தால் உடையட்டும் என்று வாளா இருப்பதில் நியாயமே இல்லை. சுத்தமாகச் சொன்னால் மனித தர்மமே இல்லை. சரி.

சீனச் சமூகச் சேர்ந்த தலைவர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு கணபதிராவ் அவர்களைத் தவிர வேறு இந்தியத் தலைவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. வேதனைக்குரிய விசயம்.

நிறையவே சீனச் சமூகத்து அன்பர்கள். அவர்களின் பிரதிநிதிகள்; இளைஞர்கள். மகிழ்ச்சிக்குரிய விசயம்.

மலேசிய இந்திய அமைச்சர்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளில் முதலில் கவனம் செலுத்துங்கள். இன, சமூக உணர்வுகளுக்கு முதலில் மதிப்பு அளியுங்கள்.

மலேசியாவில் நாம் சிறுபான்மை இனத்தவர். நமக்குள் ஒற்றுமை அவசியம். நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு; நம் வாரிசுகளுக்குத் தான் இன்னல்கள்... தொல்லைகள். நினைவில் கொள்வோம்.

சூசம்மாவுக்கும் சோசும்மாவுக்கும் மரியாதை செய்பவர்களுக்கு அட்வான்சாக ரோசாப்பூ மரியாதைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Muthukrishnan Ipoh: சொல்லி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன... சொன்னது ஒன்று செய்வது ஒன்று...

Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: atuhan mahatin arasial vilayathu (அதுதான் மகாதீரின் அரசியல் விளையாட்டு)

Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: Ivan oru kedu kettavan

Hamba Mu Umar Umar: Tamil INA thuroki

Francis Arokiasamy: அமைச்சர்கள் அனைவரையும் மகாதீர் ஆட்டிப் படைக்கிறது... அவர்களுடைய கௌரவம் வீரம் இலக்கு சேவை அனைத்தும் அவரது பாக்கெட்டில் இருக்கிறது

Muthukrishnan Ipoh: அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி எதையும் செய்ய முடியாத நிலையில் கட்டுப் போடப் பட்டு இருக்கிறார்கள்...

Perumal Thangavelu: கூட்டணிக் கட்சிகளை அமைத்து ஆட்சியை பிடித்த பிறகு தோழமை கட்சிகளை கண்டு கொளவதே இல்லை, மகாதீர். அது தான் அவரது சாணக்கியம்.

முனியாண்டி ராஜ்: நாற்காலியின் நான்கு கால்களும் முக்கியம் அல்லவா ...

Muthukrishnan Ipoh: அவர்களைக் குற்றம் சொல்லி ஒன்றும் இல்லை... அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை...

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: முடியவில்லை என்றால், பதவியை தூக்கி எறிய வேண்டியது தானே, புடுங்கிறதுக்கா அங்கேயே உக்காந்துக்கிட்டு இருக்கானுவ. ஏழை மக்களின் சாபம் அவர்களை மட்டுமல்ல அவர்களது பரம்பரையையே நாசமாகப் போகும். அது தான் கர்மாவின் பணி. அனுபவிப்பார்கள், பொறுத்திருந்து பார்ப்போம். கடுப்பேத்துறானுங்க மை லார்ட்.

Manickam Nadeson: வாலையும் வேலையும் சுருட்டி கால்களுக்கு இடையில் சொருகிக் கொண்டு ஒதுங்கி ஒளிந்துக் கொண்டார்களோ???

Muthukrishnan Ipoh: அவர்களுடைய நிலையில் இருந்து நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்...

Varusai Omar >>> Manickam Nadeson: இன்னா பன்றதூ? பெரிய "தல"க்கு பயந்தாகனுமே? "அவரே" பிடி வாத குணமுடையவர். தான் சொன்தை மட்டுமே கேட்கனும் பின்பற்ற வேண்டுமென அடம் 'பீ'டிப்பவர். பாவம் நம்மாளுக. கெழுத்தி மீன முழுங்கின மாதிரி நெளியிதுங்க! விடுங்கப்பா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!! Ok!Ok!!

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: யோசிக்க எதுவும் இல்லை, அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு... அன்று சோறு தின்றார்கள். இன்று என்ன தின்கிறார்கள். அறிவு என்ன விலை போய் விட்டதா?? இன்றைய நிலை சரி இல்ல என்றால் பதவியை விட்டு விட வேண்டியது தானே, எதற்கு அதை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிழைக்க வேறு வழியா இல்லை, எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு. தூ தூ தூ

Kalai Mani: சரியாக சொன்னீர்கள் முத்து ஐயா.

Kalai Mani: இக்கலியுகத்தில் தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடான காலம்.

Hamba Mu Umar Umar: Menteri menteri tenggah Lena

Ramarao Ramanaidu: காணவில்லை விளம்பரம் போடலாம் என்று இருக்கிறேன் ... சட்டத்தில் இடம் உண்டா?

Hamba Mu Umar Umar: 85% tamilkalaiyum vitru than thetaarkal ..nanri ketravarkal...

Varusai Omar: Maybe முன்பிருந்த மக்கள் இல்லாக் கட்சியினரின் மனோ நிலை? (Mindset of the former Indian leaders' mindset)

Manickam Nadeson: சரக்கில்லாத சக்கைகள், இருப்பதும் இல்லாததும் ஒன்று தான். தனமானத்தை தாரை வார்த்து விட்டார்கள் போலும்.

Varusai Omar >>> Manickam Nadeson: இருக்கலாம். அன்று இருந்தவர்கள் பொது நல நோக்கோடும் சமூக சிந்தனையை முன் வைத்தும் வந்தார்கள்... வந்தாரைய்யா வந்தாரு...  சல்லிக் கணக்குக்கு வந்தாரூ!! வந்தாரு!!!

Varusai Omar >>> Manickam Nadeson: இனி வரும் காலங்களில் இவர்களை கண்டு கொள்ளாமல் நம் வழியே செல்வதே சிறப்பாகும்! எதற்கு இந்த குடுமி பிடிச்சண்டை?… அதிலும் சிலரின் கீழ்த்தர வசவு மொழிகள்! முன்பு அவை இறக்குமதியாகிக் கொண்டு இருந்தது. இப்போ?... இங்கேயே தயாரிப்பு  நடக்கிறது!

Varusai Omar: இப்போது புதிய ஆளுங்கட்சி இந்திய குட்டித் தலைவர்களும் அதையே கெட்டியாகப் பற்றிக் கொண்டரோ?

Ramarao Ramanaidu: I think they should not use the word "tolong" ... Use the word bebaskan ... Why beg?

Hamba Mu Umar Umar: Menteri menteri tenggah Lena tidur...








ரியூனியன் தமிழர்கள் - 1

தமிழர்கள் வாழாத இடமும் இல்லை. வாழத் தெரியாமல் வாழ்கின்ற இடமும் இல்லை. ஆர்க்டிக் வட துருவத்தில் இக்ளு பனிக்கட்டிகளில் வாழ்கிறார்கள். அட்லாண்டிக் தென்துருவத்தில் ரோஸ் பனிக்கட்டிகளில் வாழ்கிறார்கள். அமேசான் காட்டுத் தலைவெட்டிக் கும்பல்களுடன் வாழ்கிறார்கள். அனாகொண்டா பாம்புகளுடன் கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள். 



உலகின் எந்த ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கே ஒரு தமிழர் கண்டிப்பாக இருக்கவே செய்வார். பாரதியாரைப் பற்றியும் பாரதிதாசனைப் பற்றியும் மணிக்கணக்கில் நாட்கணக்கில் பெருமைகள் பேசுவார். ஆனாலும் தமிழர்கள் என்று சொல்லிப் பெருமை கொள்ளும் அளவிற்கு அவர்களுக்குத் தனி ஒரு நாடு இல்லை.

இருப்பதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இல்லாததைப் பற்றி வீரவசனம் பேசுவதே தமிழர்களின் தனிக்குணம். சுட்டுப் போட்டாலும் அவர்களை விட்டுப் போகாத பிறவிக் குணம். மன்னிக்கவும்.




தமிழர்கள் அவர்கள் வாழும் இடங்களில் தமிழ் மொழி பேசுகின்றார்களா; தமிழ் கலாசாரத்தோடு வாழ்கின்றார்களா; தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்ற அவர்களுக்கு வசதிகள் இருக்கின்றனவா; அதுவே இப்போதைக்கு ஒரு பெரிய கேள்வி.

ஆனாலும் நம்மில் பலரும் அறியாத ஓர் அழகிய தீவில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இன்றைய தகவல். கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் மொரிசியஸ் தீவிற்கு அருகே ரியூனியன் என்கிற தீவு இருக்கிறது. 




இங்கே தான் தமிழர்கள் இலட்சக் கணக்கில் இன்றைய வரைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரைத் தொடரில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ரியூனியன் தீவு ஆப்பிரிக்கா கண்டத்திற்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது. அருகில் மொரிசியஸ் தீவு.

ரியூனியன் தீவின் மொத்தப் பரப்பளவு 2500 சதுர கி.மீ. ஏறக்குறைய எட்டரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்களில் தமிழர்கள் 2 இலட்சம் பேர். 




1797-ஆம் ஆண்டில் இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை 56,800. வருடத்தைக் கவனியுங்கள். அவர்களில் வெள்ளைக்காரர்கள் 10,400 பேர்; அடிமைகள் 44,800 பேர். அப்போது அங்கே இருந்த தமிழர்கள் அனைவருமே அடிமைகள். பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு போகப் பட்டவர்கள். 1848-ஆம் ஆண்டு வரை தமிழர்கள் அங்கே அடிமைகளாகவே வாழ்ந்தார்கள்.

1850-ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை 1,10,891 பேர். 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழர்கள் இந்தத் தீவில் குடியேறி வருகிறார்கள்.

2010-ஆம் ஆண்டு கணக்குப்படி ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு லட்சம் பேர் தமிழர்கள். இந்தத் தீவு இன்றைய வரைக்கும் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 




180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டு காலனித்துவத்தின் கீழ் இருந்தது. அப்போது இந்த ரியூனியன் தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய பாண்டிச்சேரி தமிழர்கள் பலர் அழைத்து செல்லப் பட்டார்கள்.

அந்தத் தோட்டங்களில் அவர்கள் மிக மோசமாக அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். பின்னர் காலத்தில் அவர்களுக்குப் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை கிடைத்தது. மனிதத் தன்மையுடன் பார்க்கப் பட்டார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்வியல் நிலையும் உயர்ந்தது. இப்போது நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பெருமைப் படுவோம்.




ரியூனியன் தீவில் வாழும் தமிழ் மக்கள்; பிரெஞ்சு - தமிழ்க் கலாசாரக் கலவையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைய காலங்களில் தமிழர்களின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இருந்தாலும் தங்களால் இயன்ற வரை தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

ரியூனியன் தீவு மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ. தொலைவிலும் மொரிஷீயஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மொரிஷீயஸை விடக் கொஞ்சம் பெரியது. அதன் தலைநகரம் செயிண்ட் டெனிஸ். 




மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாக்கடலில் ஒரு பெரிய எரிமலை வெடித்தது. அந்த எரிமலை கக்கிய குழம்பால் உருவானதுதான் இந்தத் தீவு. பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை மலைகள்; பச்சை ஆறுகள்; அருவிகள்; குளங்கள்; குட்டைகள்; இனம் மொழி தெரியாத தாவர இனங்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீவு சொர்க்கத்தில் இருந்து கிள்ளிக் கொண்டு வரப்பட்ட ஓர் அழகுச் சொப்பனம்.

ரியூனியன் தீவு பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஓர் உறுப்பு நாடாக இயங்கி வருகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை உள்ளது. பிரான்ஸ் நாட்டுத் தேர்தல்களில் வாக்கு அளிக்கிறார்கள்.




மாசில்லா மண்வளமும் தூசில்லா மழைவளமும் கொண்ட அழகிய தீவு. அதிகக் குளிரும் இல்லை. அதிக வெப்பமும் இல்லை. மிதமான தட்ப வெப்ப நிலை. சுற்றிலும் நீல நிறக் கடல். தீவிச் சுற்றிலும் மலைகள். பச்சைக் காடுகள். எப்போதுமே மூலிகைத் தாவரங்களின் மணம். ஆங்காங்கே தாதுப் பொருட்கள் கலந்த நீர் ஊற்றுகள்.

அந்தத் தீவை இயற்கை அன்னை அமைத்துக் கொடுத்த மூலிகைப் பூங்கா என்றும் தாராலமாகச் சொல்லலாம். அவ்வளவு மூலிகைப் பொருட்கள் மலிந்து கிடக்கின்றன. அதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மூலிகை வைத்தியத்திற்கு இந்தத் தீவைத் தேடிச் செல்கிறார்கள்.

இந்தத் தீவு 1520-ஆம் ஆண்டு போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி வந்தது. ஆகக் கடைசியாக 1816-ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் நிரந்தரமாகவே வந்துவிட்டது. 




ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித் தமிழர்கள் இந்திய மாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். அப்போது இந்தத் தீவைப் பார்த்து இருக்கலாம். தங்கி இருக்கலாம். இளைப்பாறி இருக்கலாம்.

ஆனாலும் தமிழர்களோ மற்ற மற்ற இந்தியர்களோ 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தத் தீவில் நிரந்தரமாகக் குடியேறவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்கார முதலாளிகள் இந்தத் தீவிற்கு வந்தார்கள். 




இந்தத் தீவைப் புனரமைக்க வேலையாட்கள் தேவைப் பட்டனர். ஆப்பிரிக்காவின் காப்பிரி இன மக்களையும் மடகாஸ்கர் தீவின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்தார்கள். கரும்பு, சோளத் தோட்டங்களை உருவாக்கி அவற்றில் அவர்களைப் பணி செய்ய வைத்தார்கள்.

சர்க்கரை ஆலைகளைக் கட்டி அங்கேயும் வேலை வாங்கினார்கள். 1848-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் அடிமை முறை ஒழிக்கப் பட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டி வந்தது. எதிர்பாராத இந்தத் தாக்கத்தினால் தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போனது. 

கரும்பு உற்பத்தியைப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த வெள்ளை முதலாளிகளை அடிமை ஒழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்தது. அதனால் இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களில் இருந்து தமிழர்களை ரியூனியன் தீவிற்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். 




ஆனால் 1828-ஆம் ஆண்டில் சிலர் இந்தியாவில் இருக்கும் கோவா பகுதியில் இருந்தும் அடிமைகளாக போய் இருக்கின்றனர். அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்தும் 15 பேர் போய் இருக்கின்றனர். இவர்கள் தான் ரியூனியனுக்குப் போன முதல் ஆந்திராக்காரர்கள்.

ஆக அந்த வகையில் பார்த்தால் 1848-ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு இருந்த இந்தியர்களின் எண்ணிக்கையே மொத்தம் 4200 பேர் தான். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி; அவர்கள் அனைவரையும் தமிழர்கள் என்றே அழைத்தனர்.

அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தனர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் அதிகமாக வேலை செய்தனர். முதலாளிகளின் வீடுகளில் சமையல்; எடுபிடி வேலைகளைச் செய்து வந்தனர். 




இது 1848-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எல்லா இடங்களிலும் தமிழர்களே இருந்ததால் புதிதாகப் போன இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்தார்கள். இப்படித்தான் ரியூனியன் தீவில் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது. ரியூனியன் தமிழர்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

 (தொடரும்)

 (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

 
1. Tabuteau, Jacques (1987). Histoire de la justice dans les Mascareignes (in French). Paris: Océan éditions. p. 13. ISBN 2-907064-00-2.

2. Beesoon, Sanjay; Funkhouser, Ellen; Kotea, Navaratnam; Spielman, Andrew; Robich, Rebecca M. "Chikungunya Fever, Mauritius, 2006". 14 (2): 337–338.

3. Bollée, Annegret (2015). "French on the Island of Bourbon (Réunion)". Journal of Language Contact. 8 (1): 91. doi:10.1163/19552629-00801005.

4. Réunion - The severe island - Official French website (in English)


29 நவம்பர் 2019

குவாந்தான் ஜெராம் கொள்கலன் தமிழ்ப்பள்ளி

அத்தாப்புக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஆயாக் கொட்டகையில் ஒரு தமிழ்ப்பள்ளி; இரும்புக் கிடங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஈச்சம் ஓலைக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி. 


இந்த மாதிரியான நிலையில் மலேசியாவில் நிறையவே தமிழ்ப்பள்ளிகள். அந்த வகையில் அந்தக் காலத்துக் காலனித்துவச் சீமைத் துரைகளுக்கு முதல் மரியாதை செய்வோம்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகி விட்டன. நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது. இருந்தாலும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க...

எப்படியாவது தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தலை நிமிர்ந்து வீரவசனம் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள். ஊட்டி ஊட்டி வளர்க்கப் பட்டவர்களுக்கு உதறல் எடுத்துக் காய்ச்சல் வரும் அளவுக்கு தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் தொடர்கின்றன. 



ஒரு பக்கம் தமிழ்ப் பிள்ளைகளின் புதுப் புது அறிவியல் கண்டுப்பிடிப்புகள். புதுப் புதுச் சாதனைகள். இன்னொரு பக்கம் தீராத விளையாட்டுப் பிள்ளையின் கறுப்பு வெள்ளை சப்பாத்து ஆராய்ச்சிகள். பாவம் அந்தக் கல்விமான்.

சாதனைகள் செய்து வரும் தமிழ்ப்பள்ளிச் செல்லங்களுக்கும்; தமிழாசிரியர்ச் செல்வங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

ஓர் அதிர்ச்சியான தகவல். ஓர் இரும்புக் கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது எத்தனைப் பேருக்குத் தெரியும். மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் இதுவும் ஒரு பெரிய சாதனை. 



பகாங் மாநிலத்தின் தலைநகரம் குவாந்தான். அந்த நகரில் இருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் பெயர் ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி (SJKT Ladang Jeram).

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொள்கலன் எனும்  ‘கொண்டெய்னர்’க்குள் (Container) இயங்கி வருகிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். அது மலேசியத் தமிழர்களின் தலையெழுத்து. தொடர்ந்து படியுங்கள்.

இந்த மாதிரி  ‘கொண்டெய்னர்’களைப் பெரும்பாலும் கட்டடங்கள் கட்டும் கட்டுமானப் பகுதிகளில் பார்த்து இருக்கலாம். தற்காலிக அலுவலகங்களாகச் செயல்படும். வேலை முடிந்ததும் கழற்றி எடுத்துக் கொண்டு போய் கசாப்புக் கடைகளில் கடாசி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் இந்த மாதிரி ஒரு ‘கொண்டெய்னர்’ கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி கடந்த 22 ஆண்டுகள் இயங்கி வந்து இருக்கிறது என்றால் அதிர்ச்சியான விசயம் தானே. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கரிசல் காட்டுச் சுவடு தானே.



19521-ஆம் ஆண்டில் இந்த ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. Jeram Estate Sdn Bhd என்கிற நிறுவனம் கட்டிக் கொடுத்தது.  தகரக் கூரைகள் வேய்ந்த சாதாரணப் பலகைப் பள்ளி. அவ்வளவுதான்.

வாழையடி வாழையாக வந்த மலேசியத் தமிழ்க் கல்வியின் பழைய ஒரு பரிமாணங்களில் ஒன்று. பெரிசாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள எதுவும் இல்லை.

(The original wooden structure of the school, built by Jeram Estate Sdn Bhd in 1952, was torn down when the estate was sold to Pasdec for a residential project in the mid 1990s.)

1997-ஆம் ஆண்டு. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பள்ளிக் கட்டடம் பழுது அடைந்து போனது. சீர் செய்ய முடியாத நிலை. புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்கிற நிலை. அதனால் கொள்கலனுக்குள் தற்காலிகமான வகுப்புகள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல.



கொள்கலனில் முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை வகுப்பு அறைகள். ஒவ்வொரு கொள்கலனிலும் ஒரு வகுப்பு. மூன்று கொள்கலன்களின் நீளம் 40 மீட்டர். அகலம் 30 மீட்டர்.

1990-களில் ஜெரம் தோட்டம் பாஸ்டெக் (Pasdec) எனும் வீடமைப்பு  நிறுவனத்திடம் விற்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டது. அதில் இருந்து மாணவர்கள் கொள்கலன் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அந்த நிறுவனம் பயன்படுத்திய கொள்கலன் அலுவலகத்தில் 4-ஆம் வகுப்பில் இருந்து 6-ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு அறைகள். மொத்தம் 49 மாணவர்கள்.  12 ஆசிரியர்கள். இதுதான் உண்மை.

1998-ஆம் ஆண்டில் இருந்து பல தடவைகள் புதிய பள்ளி கட்ட வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் நடயாய் நடந்து அவர்களின் முட்டிக் கால்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம். 



பள்ளி வாரியத்தின் தலைவர் டத்தோ நடேசன்; பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத் தலைவர் கே. ஜனார்த்தனம். இவர்களின் தலைமையில் கட்டிட முயற்சிகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. இவர்களும் இவர்களின் குழுவினரும் விடாமல் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.வாழ்த்துகள்.

ம.இ.கா.வும் தன் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. தங்களால் இயன்றதைச் செய்து இருக்கிறார்கள்.

புதிய கட்டடம் கட்டுவதற்கான பனிப்போர் நடந்து கொண்டு இருந்த போது கல்வித் துணையமைச்சராகக் கமலநாதன் இருந்தார் என்பதை நினைவில் கொள்வோம். 



அவரும் முடிந்த வரையில் காய்களை நகர்த்தி இருக்கிறார். எப்படித் தான் நகர்த்தினாலும் மேலிடத்தில் நிறையவே இழுபறிகள். பழைய குருடி கதவைத் திறடி கதைதான். இழுபறி நிலை தொடர்ந்தது.

மண்ணின் மைந்தத்தின் தலையாய மேலிடங்கள் கண்டு கொள்வதில் பிணக்கங்களில் சுணக்கங்கள். சக்களத்தி வீட்டுப் பிள்ளை சாக்கடையில் விழுந்தால் என்ன. சடக்கு ரோட்டில் புரண்டால் என்ன.

கொள்கலன் பள்ளியில் வேலிப் பாதுகாப்பு மட்டும் இல்லை. மற்றபடி மின்சாரம், நீர், இணைய வசதிகள் உள்ளன. பாதுகாப்பு காவலர்கள் இருவர் உள்ளனர்.

புதிய பள்ளிக்கூடத்தைக் கட்டுவதற்கு ’தெண்டர்’ (Tender) எடுத்த குத்தகையாளருக்கும் பிரச்சினை. அவருக்கும் ஒரு சட்டச் சிக்கல். சமயங்களில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். பள்ளிக்கூடம் கட்ட முடியாத இழுச்சான் பறிச்சான் நிலை.

இப்போது இயங்கிவரும் கொள்கலன் பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதிய கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 2003-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தச் செலவுத் தொகை 14.8 மில்லியன் ரிங்கிட். இடத்தின் நில உரிமையிலும் பிரச்சினை.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமே கட்டி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். நில உரிமை இழுபறிகள் தொடர்ந்தன. பின்னர் 2018-இல் முடிய வேண்டியது. அப்படி இப்படி என்று கட்டிடப் பணிகள் இன்னும் தொடர்கின்றன. இதை எழுதும் போது புதிய தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
29.11.2019