16 ஏப்ரல் 2020

கொரோனா பரிசோதனைக் கருவி - வராது வந்த நாயகன்

தமிழ் மலர் - 13.04.2020

கொரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா இல்லையா. இது ஒன் மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். இப்போது எல்லாம் மில்லியன் எனும் சொல்லுக்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. 1MDB பிரபலம் அடைந்த பின்னர் கிண்டர்கார்டன் படிக்கும் சின்னச் சின்ன வாண்டுகள்கூட மில்லியன் எனும் சொல்லை மதிப்பது இல்லை.

அதனால் பில்லியன் டாலர் கேள்வி என்று தாராளமாகச் சொல்லலாம். டிரில்லியன் டாலர் கேள்வி என்றும்கூட சொல்லலாம். தப்பு இல்லை. ரோசாப்பூ ரோசம்மா கோபித்துக் கொள்ள மாட்டார். சரி.

தமிழ் மலர் - 13.04.2020
கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது இவ்வளவு நாளும் கோரோனா கிருமியைத் தவிர மற்ற எவருக்கும் தெரியாத இரகசியமாக இருந்தது.

அந்தக் வைரஸ் வருவதும் தெரியாது. வந்து ஒட்டிக் கொள்வதும் தெரியாது. உயிரை வாங்குவதும் தெரியாது. நிலைமை அப்படித் தானே போய்க் கொண்டு இருக்கிறது.

இருந்தாலும் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்க ஒரு கருவி இருக்கிறது. அந்தக் கருவியின் பெயர் ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit). தமிழில் துரித பரிசோதனைக் கருவி. அதைப் பற்றியது தான் இன்றைய கட்டுரை. இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. 



அண்மைய காலங்களில் தான் இந்த மாதிரியான கிருமி கண்டுபிடிப்புக் கருவிகள் புழக்கத்திற்கு வந்தன. 50 ஆண்டுகள் இடைவெளியைத் தான் அண்மைய ஆண்டுகள் என்று சொல்கிறேன். நூற்றுக் கணக்கான பரிசோதனைக் கருவிகள்.

இந்த்த துரிதப் பரிசோதனை என்பது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே மலேரியா, டெங்கி, மஞசள் காமாலை பி போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பல பயன்பாடுகள் உள்ளன.



இன்சுலின் பரிசோதனை; இரத்தத் துடிப்பு பரிசோதனை; கல்லீரல் இயக்கப் பரிசோதனை; இரத்தச் சிவப்பு அணுக்கள் அனிசோகுரோமியா (Anisochromia) பரிசோதனை; பென்ஸ் ஜான்ஸ் புரதம் (Bence Jones protein) பரிசோதனை; பெந்தாகாஸ்டிரின் கேஸ்ட்ரிக் (Pentagastrin) பரிசோதனை. இப்படி நிறையவே பரிசோதனைகள். இவற்றைக் கொண்டு வீட்டில் இருந்தவாறே நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள முடியும்.

உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் இப்போது உலகத்தை உலக்கிக் கொண்டு இருப்பது கொரோனா வைரஸ். அதைக் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனைக் கருவிதான் ரேபிட் டெஸ்டிங் கிட் - Rapid Testing Kit எனும் துரித பரிசோதனைக் கருவி. 



இந்தக் கருவிகளை நாம் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று SARS CoV-2 துரிதப் பரிசோதனைக் கருவிகள். நோயால் பாதிக்கப்படும் போது நம் உடலில் உருவாகும் antibodies எனும் பிறபொருள் எதிரிகளை அடிப்படையாகக் கொண்டது.

மற்றொன்று கொரோனா வைரஸின் nucleic acid எனும் நியூக்ளிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்டது.

துரிதப் பரிசோதனைக் கருவியின் பெயரைச் சொல்லி, பல உயிரியல் மருத்துவ நிறுவனங்கள் துரித பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்து இருக்கின்றன. அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலேயே விற்பனையும் செய்கின்றன. அவை எந்த அளவிற்கு நம்பகமாக அமைகின்றன என்பது எவருக்கும் தெரியாது



அதனால் மலேசிய அரசாங்கம் அனுமதிக்காத எந்த ஒரு பரிசோதனைக் கருவியையும் வாங்க வேண்டாமே. அவதிப்பட வேண்டாமே. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள் இருக்கும் வரையில் மீன்களுக்குத் தான் ஆபத்து.

இன்றைய கொரோனா கதிகாலத்தில் எவரும் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் கிருமியின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ. (DNA); அல்லது ஆர்.என்.ஏ. (RNA); மூலக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit) கருவியின் மூலமாகக் கண்டு அறிய முடியும்.

இப்போது இந்தக் கருவிக்கு உலகம் எங்கும் ரொம்பவுமே கிராக்கி. இதன் பயன்பாடு மருத்துவமனைகளுக்கு மட்டும் எனும் கட்டுப்பாட்டில் உள்ளது. 



சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நிறையவே போலிகளும் சந்தையில் கலந்து விட்டன. சொல்லி இருக்கிறேன்.

விரைவில் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கலாம். மலேசிய சுகாதார அமைச்சு போலிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சரி.

ஒரு வைரஸ் கிருமியின் மரபுத் தொகுதிக்கு ‘ஜெனோம்’ (genome) என்று பெயர். கொரோனா தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு SARS-CoV-2 என்று பெயர். 



ஆக இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட SARS-CoV-2 வைரஸ் கிருமியின் ஜெனோம் மரபுத் தொகுதியையும்; ஏற்கனவே இருந்த சார்ஸ் (SARS); மெர்ஸ் வைரஸ் கிருமிகளின் மரபுத் தொகுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டிற்கும் 70 விழுக்காடு ஒற்றுமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் தான் இப்போது உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிக்கும் சார்ஸ் (SARS) எனும் பெயர் ஒட்டிக் கொண்டது. இப்போதைய இந்த கொரோனா வைரஸ் கிருமி முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இந்தப் புதிய கொரோனா வைரஸ் கிருமியின் மரபு அணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்துப் பகுத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர் அந்த மரபு அணுக்களைத் துரித மூலக்கூறு மரபியல் பரிசோதனை (rapid molecular genetic tests) மூலமாக வடிவம் அமைத்தார்கள். 



மரபியல் பரிசோதனை என்பது குரோமோசோம்கள் (chromosomes), மரபணுக்கள் (genes) அல்லது புரதங்களில் (proteins) ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காணும் ஒரு வகை மருத்துவச் சோதனையாகும்.

(Genetic testing is a type of medical test that identifies changes in chromosomes, genes, or proteins)

இந்தப் பரிசோதனை தான் இப்போதைக்கு உலகம் எங்கும் பரவலாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில் அதற்கான மரபியல் பரிசோதனையை, அதன் மரபணுவில் உள்ள ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏன் தெரியுங்களா.



எல்லா உயிர்களின் மரபணுக்களும் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகளால் ஆனவை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

மனிதனாக இருக்கலாம். மிருகமாக இருக்கலாம். காற்றில் பறக்கும் பட்டாம் பூச்சியாக இருக்கலாம். பரவி நிற்கும் பயிர் பச்சையாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஓர் உயிர் என்றால் அதற்கு கண்டிப்பாக மரபணுக்கள் இருக்கும். இருக்க வேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த மரபணுக்களில் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகள் இருக்கும். ஆக, டி.என்.ஏ.; ஆர்.என்.ஏ. மூலக் கூறுகள் இல்லாமல் மரபணுக்கள் இல்லை. மரபணுக்கள் இல்லாமல் செல்கள் இல்லை. செல்கள் இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த உயிர்கள் இல்லாமல் நாம் மனிதர்களும் இல்லை. சரிங்களா.



ஆனாலும் கொரோனா வைரஸில் ஒரு பிடி இருக்கிறது. அதாவது ஒரு ’கேட்ச்’ இருக்கிறது. பெரும்பாலான வைரஸ் கிருமிகளின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக்கூற்றுகளால் மட்டுமே ஆனவை. கொஞ்சமாய் டி.என்.ஏ. இருக்கலாம்.

அந்த ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதியில் தான் கொரோனாவின் இரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. கொரோனா வைரஸின் செயல்பாடுகள்; வடிவ அமைப்புகள்; தன்மைகள்; பண்புகள்; இயக்கங்கள் என எல்லாமே மூலக்கூறுகள் வடிவில் அதன் ஆர்.என்.ஏ.-வில் எழுதப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம்மை ஆட்டிப் படைக்கிறதே இந்த SARS-CoV-2 ; இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்றதும் என்ன வகையான புரதங்களைத் தயாரிக்க வேண்டும்;

எப்படி தயாரிக்க வேண்டும்; மனித உடலின் மரபணுக்களை எப்படி உடைக்க வேண்டும் என்கிற வழிமுறைகள் எல்லாம் இந்த மரபணுக்களிடம் இருக்கும்.

 

அதாவது எழுதி வைத்தது போல இருக்கும். இந்த புரதங்கள் தான் கோரோனா கோவிட் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு காரணமாகவும் இருக்கின்றன.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன். புரதங்கள். எந்த மரபணுவாக இருந்தாலும் இந்தப் புரதங்கள் தான் சக்தி கொடுக்கும் பொருட்கள். ஆக கொரோனா வைரஸ்கள் அவற்றின் இந்தப் புரதங்களை வைத்துக் கொண்டே மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன. அது தான் அந்தக் கொரோனாவின் தில்லாலங்கடித் தனம்.

ஒருவருக்குத் தொண்டை வலி அல்லது இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் வரலாம். உடல் சோர்ந்து போகலாம். அந்த மாதிரி அறிகுறிகள் வந்தால் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அவரின் மூக்கு; தொண்டைப் பகுதிகளில் இருக்கும் திரவத்தைப் பஞ்சு மூலம் எடுத்து ஸ்வாப் (Swab) பரிசோதனை செய்வார்கள்.

அவ்வாறு எடுக்கப்படும் திரவ மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase chain reaction) எனப்படும் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.



இந்த பி.சி.ஆர். (PCR) பரிசோதனையின் மூலமாக கொரோனா வைரஸின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் எத்தனை மில்லியன்களாகப் பெருகிப் போகின்றன என்றும் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள் அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.

அப்படி எடுக்கப்படும் மூலக் கூறுகளின் எண்ணிக்கையில் ஆர்.என்.ஏ. இருந்தால் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்புறம் என்ன. உடனே அட்மிட் செய்து விடுவார்கள்.

இதை வைத்துத் தான் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த விசயத்தில் கொரோனா கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள்தான் அந்தக் கிருமியையே காட்டிக் கொடுக்கின்றன.



ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் அந்தக் கொரோனா வைரஸில் உள்ள எதிர்ப்புத் திறனூட்டியை (Antigen) எதிர்க்க, அவரின் உடலில் எதிர்ப்புரதம் (Antibodies) உருவாகும்.

அதனை எதிர்க்க ஐ.ஜி.எம் (Immunoglobulin M (IgM); (Immunoglobulin G (IgG); ஐ.ஜி.ஜி. என்கிற இரு வகையான எதிர்ப் புரதங்கள் உருவாகும்.

இதில் ஐ.ஜி.எம். என்பது கொரோனா வைரஸ் நம் உடலில் நுழைந்ததும் அதனை எதிர்க்க உடலில் உருவாகும் முதல் எதிர்ப்புரதம் ஆகும்.

மற்றொன்று  ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம். இரண்டுமே நம் உடலில் உருவாகும் எதிர்ப் புரதங்கள்.

இதில் ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம் இருக்கிறதே இந்தப் புரதம் கொரோனா வைரஸ் நம் உடலில் இருந்து போன பிறகு உருவாகும் எதிர்ப் புரதம். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி.

இந்த ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம் நம் உடலில் எப்போதும் இருக்கும். மீண்டும் கொரோனா வைரஸ் உடலில் புக முயற்சி செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐ.ஜி.ஜி. எதிர்ப் புரதம் கொரோனா வைரஸ்களுடன் போராடி அவற்றைத் துரத்தி விடும்.

ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் கிருமிகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்ய உலக சுகாதார நிறுவனம் ஒரு சில வரையறைகளை வகுத்து உள்ளது. அவை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒருவரின் உடலில் கொரோனா இருக்கும். ஆனால் அதற்கான ஆர்.என்.ஏ. எண்ணிக்கை அவரின் உடலில் இருக்காது. இந்தப் பிரிவு நோயாளிகளை கொரோனா நெகடிவ் என்று முடிவு செய்கிறார்கள்.

இந்த துரித பரிசோதனைக் கருவியின் முடிவுகளைத் தாராளமாக நம்பலாம். ஆனால் பரிசோதனை முடிவுகள் கிடைக்கத் தான் தாமதம் ஆகும். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகும்.

இப்படித்தான் கொரோனா துரித பரிசோதனைக் கருவி (Rapid Testing Kit) செயல் படுகிறது. இப்போது கொரோனா தொற்றை உறுதி செய்வதற்கு இந்தக் கருவி பெரிய அளவில் உதவி செய்யும். நம்புவோம். எதிர்பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.04.2020




இன்றைய சிந்தனை 16.04.2020 - இந்தியா மலேசியா நல்லிணக்கம்


இந்தியா மலேசியா இருநாடுகளும் மறுபடியும் கைகோர்த்து பயணிக்கத் தொடங்கி விட்டன. ஒரு மில்லியன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை மலேசியாவிற்கு இந்தியா அனுப்பி வைக்கிறது. முதல் கட்டமாக ஒரு இலட்சம் மாத்திரைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

கொரோனாவை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் மருந்தாக ஹைட்ராக்சி குளோரோ குயின் பயன்படுகிறது.

தொட்டால் சிணுங்கி போல எட்டி நின்ற இரு நாடுகளும் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. அதே போல சாமானிய மனிதர்களும் செய்யலாமே. பழைய பிணக்குகளை மறக்கலாமே. புதிய நட்புறவில் நலம் பார்க்கலாமே.

ஆகவே முடிந்து போன பிரச்சினைகளை மறப்போம். கசப்பான நினைவுகளைத் தவிர்ப்போம். வருவதைத் துணிந்து எதிர்கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.04.2020


பேஸ்புக் பதிவுகள்
16 April 2020

Rajendra Kumar: I'm proud to be Indian ayya. Rajendran from Coimbatore, Tamil Nadu.

Muthukrishnan Ipoh வாழ்க பாரதம்...

Sathya Raman இவ்வேளையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள மனமாட்சிரியங்களை ஒதுக்கி வைத்து இன்னுயிர் காக்க இந்தியாவின் உதவியை நாடி இருப்பது வரவேற்கத் தக்கது. இது மலேரியாவிற்கான மருந்து என்றாலும் இந்த வைரஸின் வீரியத்தைக் குறைத்து நோயுற்ற உலக மக்கள் குணமடைய வேண்டுவோம். 🙏 நல்ல தகவல்... நன்றிங்க சார்.

Muthukrishnan Ipoh ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகள் சார்ஸ் சம்பந்தமான நோய்களை ஓரளவிற்குக் கட்டுப்படுத்துவது தெரிய வந்ததால் தான் அதற்குப் பெரும் கிராக்கி...

அதிபர் டிரம்ப் இந்தியாவையே மிரட்டும் அளவிற்கு அந்த மருந்து பிரபலம் அடைந்தது... இந்திய மக்களையும் இந்தியாவையும் உலகத் தலைவர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்... குறிப்பாக பிரேசில் அதிபர்... மிகையாகவே பாராட்டி இருக்கிறார்...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உலக மக்கள் துயருற்று இருக்கும் போது இந்தியாவிடம் அதற்கான உபயம் இருப்பது மெய்சிலிர்ப்பே. ஏளனமாக பார்த்தவர்களுக்கு எல்லாம் பாரதம் இன்று பரமனாகத் தெரிகின்றது என்கிற போது தொப்புள் கொடி உறவுகளான நமக்கு பெருமையே சார். 🙏

Muthukrishnan Ipoh: Malaysia had asked India for more than 1 million hydroxychloroquine tablets

https://www.reuters.com/.../exclusive-india-agrees-to...

Doraisamy Lakshamanan: ஒரு நாட்டின் பல்துறை வளர்ச்சி அந்நாட்டின் பிரதமர்களின் அன்பான அணுகுமுறையினால் உருவாவதே! உலக நாடுகள் மலேசியாவை உலகின் முன்னுதாரண நாடாக, பன்மொழிப் பள்ளிகளுடன் பல்லிப் பண்பாட்டையும் பெற்று பழுத்த அனுபவம் பெற்ற ஆசிய நாடுகளின் பெருமை மிக்க புகழைப் பெற்ற நாடு என்பதைப் பிரதமர்கள் பிரதிபலித்தே வந்துள்ளனர்! தொடர வாழ்த்துகள்!

Muthukrishnan Ipoh உண்மைதான் ஐயா... ஒரு நாட்டின் தலைவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே நாடுகளின் இணக்கப் போக்கும் அமைகின்றது... தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அனைத்துலக அளவிற்குக் கொண்டு போனால் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள்... நாட்டின் வணிக வளப்பங்கள் பாதிப்பு அடையலாம்...

Doraisamy Lakshamanan >>> Muthukrishnan Ipoh நன்றி ஐயா! வாழ்த்துகள்!

Parimala Muniyandy நல்லதே நடக்க வேண்டும்... இனிய காலை வணக்கம் அண்ணா🙏

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... வாழ்த்துகள்

Malathi Nair: Good morning anna. Pray for all countries to have peace among each others and good health to whole world.

Muthukrishnan Ipoh: உலகம் அமைதியாய்ப் பயணிக்க பிரார்த்திப்போம்... வாழ்த்துகள்...

Sheila Mohan: மனிதநேயம் நிலைக்கட்டும்...

Muthukrishnan Ipoh அதுவே பலரின் எதிர்பார்ப்பு...

Bala Sena நல்லதே நடக்கட்டும்.. மனிதநேயமே நிலைக்கட்டும்..

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... நல்லது நடக்க வேண்டும்...

Tanigajalam Kuppusamy இறுதியில் உள்ள வாழ்த்து மனதை நெருடுகிறது.
🙏🌺

Muthukrishnan Ipoh எந்த வாழ்த்து என்று தெரியவில்லை தணிகா...


Tanigajalam Kuppusamy:
Image may contain: flower, plant, text and nature

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி...

Anbarasan Shanmugam: மதச் சிந்தனை கொண்டவர்களால் இரு நாட்டையும் விழ வைத்தது... மனிதநேயம் ஒன்று இணைத்து உள்ளது... வாழ்க மனிநேயம்...

Muthukrishnan Ipoh:
பல்லின அமைப்பில் தீவிரமான மதச் சிந்தனைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்...

Anbarasan Shanmugam >>> Muthukrishnan Ipoh:
அருமை..

Nagappan Arumugam >>> Anbarasan Shanmugam: தீவிரமான மதசிந்தனை உடையவர் யார் எனச் சொல்லும் துணிவு உங்களுக்கு உண்டா?

Anbarasan Shanmugam >>> Nagappan Arumugam: பாபர் மசூதியை இடிக்கக் காரணமாக இருந்த இந்நாள் இந்திய பிரதமர்... மலேசிய அரசியல் அமைப்பை மதிக்காத சக்கிர் நாயரைக் கைதி செய்யாத முன்னாள் மலேசிய பிரதமர்... என்னை இதில் எப்படியாவது சிக்க வைக்கத் துடிக்கும் நீங்கள்... உட்பட...

இப்படித் தான் மதவாதிகள் மற்றவர்களை எதிலாவது சிக்க வைக்க துடிக்கிறார்கள்... அதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டு பட்டை போட்ட நீங்கள்...

Tilaga Koboi Muniandy: அன்பு என்ற உணர்வு இல்லை என்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லாமல் வாழ்கை சுமையாகிவிடும... அன்பை மட்டும் கொடுத்து மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றும் அன்புடன் இனிய காலை வணக்கம்... Have A Lovely Day'

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Balamurugan Balu வணக்கம்! நல்லதே நடக்கட்டும்!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்

Kumar Murugiah Kumar's வணக்கம் ஐயா

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்

Jayanthi Bala ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Mangala Gowri
வணக்கம் சார். நலமா

Muthukrishnan Ipoh
நலம்... தாங்களும் நலத்துடன் பயணிக்க வாழ்த்துகள்...

Mangala Gowri Muthukrishnan Ipoh நன்றிங்க சார்

Samugam Veerappan அருமை சார். நல்ல கருத்துகளை மக்களுக்கு தெளிவு படுத்தினீர்கள்.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Persatuan Kabaddi Johor
Image may contain: 1 person, text

Muthukrishnan Ipoh
நன்றி... வாழ்த்துகள்

Sundaram Natarajan இனிய காலை வணக்கம் அண்ணா

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

Jsr Chandra


Gunasegaran Karuppiah நல்ல செய்தி..தொடரட்டும் நட்பு...தழைக்கட்டும் மனித நேயம்...

Muthukrishnan Ipoh: நல்லிணக்கம் நன்மை தரும்...

Thulasi Vasan:
Image: 'வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க தவறாதீர்கள்! இனிய காலை வணக்கம்!'

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...

Gowri Suthagaran

Muthukrishnan Ipoh
நன்றி...

Tana Letchumy

Muthukrishnan Ipoh நன்றி...

Tana Letchumy >>> Muthukrishnan Ipoh Tq. Iyah.

Persatuan Kabaddi Johor
Image may contain: 1 person, standing

Muthukrishnan Ipoh கம்பீர நடை...

K.V. Rajoo Kaliapa


Devarajan Dev
Kaalai vanakkam aiya

Muthukrishnan Ipoh
இனிய வணக்கம்...

Balamurugan Bala
சிறந்த வாழ்வியல் தத்துவம்...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி ஐயா

Yogeswary Jaganathan

Muthukrishnan Ipoh
நன்றி...

Gunasegaran Karuppiah


Muthukrishnan Ipoh நன்றி...

TP Bala


Muthukrishnan Ipoh நன்றி...

Moon Noom மதம் போதிப்பது உண்மையாய் இரு ஆனால் சில மனிதர்கள் போதிப்பது வன்மையாய் இரு

சிமா. இளங்கோ: நல்ல பதிவு! நலமே சூழ நல்வாழ்த்துகள்!!!--

Muthukrishnan Ipoh இனிய வணக்கம் ஐயா...

Mageswary Muthiah இனிய காலை வணக்கம்.🌞

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Thanirmalai Muthusamy

Muthukrishnan Ipoh நன்றிங்க...

Panneerselva Murugaiya Good morning

Manickam Nadeson நீங்க சொன்னா சரிங்க, நாங்க கேட்டுக்குறோம்.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்... நன்றிங்க மாணிக்கம் சார்...

Vanaja Ponnan விட்டு கொடுப்பதால் கெட்டுப் போக மாட்டோம்.
மறப்போம் மன்னிப்போம்... என ஏற்றுக் கொண்டால் சிறப்பு ஐயா

Muthukrishnan Ipoh உண்மை... ஆனால் சில நாடுகளின் தலைவர்களுக்கு புரியவில்லையே... மடு போய் மலையை மோதலாமா...

Mgrkalaimagal Poonkodi உலக மக்களுக்காக நாம் அனைவரும் ஒன்று இணைந்து பிரார்த்தனை செய்வோம்.

Muthukrishnan Ipoh மக்களின் நலமே உலக அமைதி...

Inbachudar Muthuchandran இரு நாடுகளும் நட்பு நாடுகள் தானே இடையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கருத்துரையால் ஏற்பட்ட விரிசல் தானே

Muthukrishnan Ipoh பழையதை மறந்து விடுவோம்... புதிய நல்லிணக்கத்தில் பயணிப்போம்...

Nagappan Arumugam அமெரிக்க அதிபர் இந்தியாவை மிரட்டினார் என்பதற்குச் சான்று உண்டா? மூலத் தரவுகளைச் சரியாகக் கேளுங்கள்! தமிழ்நாட்டு ஊடகங்கள் பிஜேபி எதிரணிகள்!

Muthukrishnan Ipoh: India has lifted its near-total ban on the export of hydroxychloroquine after being threatened by President Donald Trump.
https://www.businessinsider.my/india-lifts...

Muthukrishnan Ipoh https://www.dw.com/.../coronavirus-trump-warns.../a-53043798
Coronavirus: Trump warns India of retaliation over 'game-changer' drug | DW | 07.04.2020
dw.com

Muthukrishnan Ipoh https://www.indiatoday.in/.../donald-trump-india...

Did Donald Trump actually threaten India with retaliation over hydroxychloroquine?

Thanirmalai Muthusamy ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு பொய்யில்லா பழமொழி!

Muthukrishnan Ipoh உலகத் தத்துவ மொழி...

Thanirmalai Muthusamy >>> Muthukrishnan Ipoh

Melur Manoharan "அருமை" வாழ்த்துகள் ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Palar Thangamarimuthu: Image text that says 'Teach me how to trust my heart, my mind, my intuition, my inner knowing, the senses of my body, the blessings of my spirit. Teach me to trust these things so that may enter my sacred space and love beyond my fear, மதுரை and thus walk in balance with the passing of each glorious sun. தமிழ் காலை வணக்கம் Good Morning MADURAI Lakota Prayer Medilations Bcauliful Polograpli ဟဟ'

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்...

Palar Thangamarimuthu >>> Muthukrishnan Ipoh

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி

Thanabaal Varmen
Image may contain: cloud, sky, outdoor, nature and water

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...



15 ஏப்ரல் 2020

நிபோங் திபால் மர்ம மாளிகை - 2

தமிழ் மலர் - 04.08.2019

முன்பு எல்லாம் இந்த மாளிகையைப் பார்க்க அதிகம் பேர் வருவது இல்லை. கறுப்பு தாஜ் மகால் போல காட்டுக்குள் கண்ணாமூச்சி காட்டி வந்தது. அண்மைய காலங்களில் தான் கொஞ்சமாய் வெளிச்சம் படுகிறது. 




ஆய்வு பணிகளுக்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஆசிரியர்க் கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். காலையில் வந்து மாலையில் போய் விடுகிறார்கள். இரவில் யாரும் தங்குவது இல்லை.

சமயங்களில் பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். பொதுவாக இங்கு வருபவர்கள் மாளிகையைப் படம் பிடிப்பதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். செல்பி மேல் செல்பி எடுத்து சொந்த பந்தங்களைத் தெறிக்க விடுகிறார்கள்.

அந்த மர்ம மாளிகையின் வரலாறு என்ன சொல்கிறது. 1860-ஆம் ஆண்டுகளில் ஜான் வில்லியம் ராம்ஸ்டன் (John William Ramsden) என்பவரால் இந்த மாளிகை (99-Door Mansion) கட்டப் பட்டது. 1850-களில் பத்து காவான், நிபோங் திபால் பகுதிகளில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 



ஜான் வில்லியம் ராம்ஸ்டன்
வால்டோர் தோட்டம், சுங்கை பாக்காப் தோட்டம், கலிடோனியா தோட்டம், பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், சங்காட் தோட்டம், ஜாவி தோட்டம், சிம்பா தோட்டம், கிரியான் தோட்டம் போன்ற பெயர்கள் பலரின் நினைவுக்கு வரலாம்.

அந்தத் தோட்டங்களை வெள்ளைக்கார நிர்வாகிகள் நிர்வகித்து வந்தார்கள். அப்போதே இந்த மர்ம மாளிகைக்கு கலிடோனியா மாளிகை என்று பெயர்.

சுற்று வட்டாரத் தோட்டங்களின் தலைமை அலுவலகமாக அந்த மாளிகை விளங்கி இருக்கிறது. பக்கத்திலேயே ஒரு விமான ஓடுபாதையும் இருந்து இருக்கிறது. 




நிபோங் திபாலில் எனக்கு இரு நெருங்கிய நண்பர்கள். ஒருவர் கவிஞர் வாசு குப்புசாமி. பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர். பதவி ஓய்வு பெற்று உள்ளார்.

மற்றும் ஒருவர். தமிழ் ஆர்வலர். கலிடோனியா தோட்டம் கண்டெடுத்த எழுத்தாளர் பி.எஸ்.துரைசாமி. அவர் இப்படிச் சொல்கிறார்...

19-ஆம் நூற்றாண்டில் பைராம் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டமாக இருந்தது. 1880-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலையில் சீனியின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் இந்தத் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.

1960-களில் ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் செம்பனை பயிருக்கு மாற்றம் கண்டது. 




முன்பு விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தோட்டம் தான் இப்போது பைராம் தோட்டம் என்று அழைக்கப் படுகிறது என்று சொன்னார். சரி.

முன்பு காலத்தில் வெள்ளைக்கார முதலாளிகள், மலாயாவில் கால் வைக்காமலேயே இங்கிலாந்தில் இருந்தவாறே மலாயாவில் இருந்த தோட்டங்களை நிர்வாகம் செய்து வந்து இருக்கின்றனர். பெரிய சாதனை. ஒன் மினிட் பிளீஸ்.

இங்கிலாந்தை ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியார் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் இந்தியாவில் கால் வைக்காமலேயே; இந்திய மக்களைப் பார்க்காமலேயே; இந்தியா கறுப்பா சிகப்பா என்று தெரியாமலேயே  இந்தியாவின் மகாராணியாராக ஆட்சி செய்தவர். அவருடைய பெயரே விக்டோரியா தோட்டத்திற்கும் பெயர் வைக்கப் பட்டது. 



நிபோங் திபால் ஆற்றில் படகுகள்
இருப்பினும் அந்த மகாராணியாரின் பெயரைச் சொல்லி, மலாயா ரப்பர் தோட்டங்களை நிர்வாகம் செய்ய வெள்ளைக்கார இளம் நிர்வாகிகளை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களும் நல்லபடியாக லாபத்தைக் காட்டி வந்து இருக்கிறார்கள். முதலாளிகளுக்கு லாபம் வந்தால் போதும். அவர்களுக்குத் தலையும் வாலும் அது தானே. அப்புறம் என்ன.

அப்போது கட்டப்பட்டது தான் இந்தக் கலிடோனியா மாளிகை (Caledonia House). இந்த மாளிகைக்கு ஏன் 99 வாசல் கதவுகளை வைத்து கட்டினார்கள் என்று தெரியவில்லை. வினோதமாக இருக்கிறது. விசித்திரமாகவும் இருக்கிறது.

மாளிகையின் மேலேயும் கீழேயும் பத்துப் பன்னிரண்டு அறைகள் உள்ளன. இருந்தாலும் ஒவ்வோர் அறைக்கும் ஏழு எட்டு வாசல் கதவுகள் இருக்கின்றன. மண்டை குழம்பிப் போகிறது.




தவிர முன்பு காலத்தில் மாளிகைக்கு அருகிலேயே ஒரு சின்ன மதுபான விடுதியும் இருந்து இருக்கிறது. மாலை நேரங்களில் பக்கத்துப் பக்கத்துத் தோட்டங்களின் நிர்வாகிகள் எல்லாம் ஒன்றுகூடி இருக்கிறார்கள். ஜின், விஸ்கி, பிராண்டி போன்ற மதுபானங்களைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

மது ஊற்றிக் கொடுப்பதற்கு வெள்ளைக்காரிகள் கிடைக்கவில்லை போலும். சீனத்திகளை வேலைக்கு வைத்துக் கொண்டார்களாம். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை, மத்தியான நேரத்திலேயே ஒரு சில வௌவால்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தன.

மாளிகையைக் கட்டியவர் ஜான் வில்லியம் ராம்ஸ்டன். அவரின் இறப்பிற்குப் பின்னர் அவருடைய ஒன்றுவிட்டச் சகோதரரின் மகன் ஜான் செயிண்ட் மவுர் ராம்ஸ்டன் (John St. Maur Ramsden) என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவர் கொஞ்ச காலம், அந்த பங்களாவில் தங்கி தோட்ட நிர்வாகங்களைக் கவனித்து வந்துள்ளார். (Penang Rubber Estates Group)




ஒரு முக்கியமான நிகழ்ச்சி. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் நடந்த நிகழ்ச்சி. வில்லியம் ராம்ஸ்டன் இதே மாளிகையில் தான் கொலை செய்யப் பட்டார். 1948-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அவருடைய தலையின் பின்பாகத்தில் இரு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து இருக்கின்றன. மாளிகையின் மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் சுடப்பட்டு இருக்கிறார்.

இந்தக் கொலை சம்பந்தமாகப் பல நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றன. ஆனால் தீர்க்கமாக ஒரு முடிவு கிடைக்கவில்லை. அந்தக் கொலை ஒரு புரியாத புதிராகவே இன்று வரை தொடர்ந்து போகிறது.

கம்யூனிஸ்ட் போராளிகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் ஒரு காரணம் சொல்கிறார்கள்.

வில்லியம் ராம்ஸ்டனின் கார் டிரைவரின் அக்காளுடன் உறவு வைத்து இருந்தது கண்டிபிடிக்கப் பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். 




இவருடைய உடல் இப்போது பினாங்கு ஜார்ஜ் டவுன் இடுகாட்டில் (Georgetown’s Western Road cemetery) புதைக்கப்பட்டு இருக்கிறது.

வெகு காலமாக அந்த மாளிகை அனாதையாகக் கிடந்தது. 1950-ஆம் ஆண்டுகளில் ஒரு மலாய்க்கார மந்திரவாதி அந்த மாளிகையில் தங்கி மந்திர வேலைகள் செய்து வந்ததாகவும் சொல்லப் படுகிறது

சில கிராமவாசிகள் துணிந்து சென்று அந்த மந்திரவாதியைப் பார்த்து இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிராக மந்திரம் செய்யச் சொல்வார்களாம்.

தவிர இந்த மாளிகையில் இருந்து விநோதமான சத்தங்கள் வருவதாகவும் சிலர் சொல்கிறார்கள். மனிதர்கள் சித்ரவதை செய்யப்படும் போது எப்படி சத்தம் போடுவார்கள். அந்த மாதிரி சத்தங்கள் வருமாம். 




மத்தளம் அடிக்கும் சத்தமும் கேட்குமாம். அந்தச் சத்தம் பக்கத்தில் இருக்கும் காடுகள் வரை கேட்குமாம். பெரும்பாலும் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் அங்கே போவது இல்லை.

உய் உய்யின்னு சத்தம் கேட்குமாம்... கதவு அடிச்சுக்குமாம்... மின் விளக்கு ஆடுமாம்... திடீர் திடீர்னு சாமான் சட்டி எல்லாம் உடையுமாம்... சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் வசனம் தெரியும் தானே. அந்த மாதிரி தான்.

இன்னும் ஓர் அதிர்ச்சியான தகவல். இரவு 12 மணிக்கு மேல் திடீரென்று 100-ஆவது வாசல் கதவு தோன்றி மறையுமாம். இரண்டு மூன்று பேர் பார்த்து இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘சீக்கர்ஸ்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் ஒருநாள் இரவு முழுவதும் தங்கி பேய் வேட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குப் பேய் பிடித்து சில நாட்கள் சித்தம் கலங்கிப் போனதாகவும் சொல்லப் படுகிறது.




மர்ம மாளிகையின் சுவர்களில் யாருடைய பெயரையும் எழுதக் கூடாது என்றும் சொல்கிறார்கள். உங்களுக்குப் பிடிக்காதவரின் பெயரை எழுதி வைத்தால் அந்தப் பெயரைக் கொண்டவருக்குப் பைத்தியம் பிடித்து விடுமாம்.

உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது இருந்தால் இந்த விஷப் பரீட்சையில் தாராளமாக இறங்கலாம். ஆனால் ஒரு கண்டிசன். இராத்திரி 12 மணிக்கு நீங்கள் மட்டும் தனி ஆளாக அந்தப் பேய் பங்களாவுக்குப் போக வேண்டும். ஓர் இராத்திரி அங்கேயே தங்க வேண்டும். எப்படி வசதி.

துணைக்கு தயவு செய்து என்னை மட்டும் அழைக்க வேண்டாம். வேறு யாராவது ஏமாந்த வடிவேலு கிடைப்பார். அவரை ஒரு வழி பண்ணி விடுங்கள். சரிங்களா.

1960-ஆம் ஆண்டுகளில் கலிடோனியா தோட்டமும்; பக்கத்தில் இருந்த மற்ற மற்ற தோட்டங்களும் நிபோங் திபால் நகரில் அடகுக் கடையை நடத்தி வந்த (Tye Sin Pawnshop) சீனரிடம் விற்கப் பட்டன. அவர் அந்த நிலங்களைத் துண்டு துண்டுகளாகப் போட்டு விற்று விட்டார்கள். 




மர்ம மாளிகை இருக்கும் 54 ஏக்கர் நிலம் மட்டும் பினாங்கைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியிடம் விற்கப் பட்டது. 1974-ஆம் ஆண்டில் இருந்து 1982 வரையில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய பெயர் நிங் சுவீ சிங் (Ng Swee Ching).

கொஞ்ச நாள் கழித்து, அந்த மர்ம மாளிகை திரும்பவும் தை சின் அடகுக் கடைக்கு கை மாறியது.

கடைசியில் 1961-ஆம் ஆண்டு ஈப்போவைச் சேர்ந்த லீ எனும் சீனர், அந்தத் மர்ம மாளிகைத் தோட்டத்தை வாங்கிக் கொண்டார். அவரும் இறந்து விட்டார். வெளிநாடுகளில் இருக்கும் அவருடைய பேரப் பிள்ளைகள் மர்ம மாளிகைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். 




தமிழ்நாட்டில் இருந்து சஞ்சிக்கூலிகளாக இங்கு வந்த தமிழர்கள், ஒரு நூற்றாண்டுக் காலம் அருகாமையில் இருக்கும் ரப்பர் தோட்டங்களில் பணி புரிந்து உள்ளனர். அந்த ரப்பர் மரங்களின் வெள்ளை நிறத்துப் பால் அவர்கள் சிந்திய சிகப்பு நிறத்துச் செங்குருதியின் பிரளயச் சங்கீர்த்தனங்கள்.

கால மாற்றங்களின் காரணமாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் குடிபெயர்ந்து விட்டார்கள். இப்போது வங்காளதேசிகளும், இந்தோனேசியர்களும் ஒப்பந்தக் கூலிகளாய்க் கோலோச்சுகின்றனர்.

இந்தத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க் கல்வி பெற்றதும் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். 

இந்த மர்ம மாளிகை விசயம் மலேசியர்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். மனதில் பட்டதைச் சொல்கிறேன். கோபித்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பயிர் பச்சைகளின் அழகு தெரியாது. அவை சொல்லும் கதைகளும் சரியாகக் கேட்காது. 




ஆனால் அமேசான் காட்டில் ஒரு காட்டுப் புலி கரகாட்டம் ஆடுகிறது என்று சொல்லிப் பாருங்கள். கடன் வாங்கியாவது படை எடுத்துப் போவார்கள். சிலரைத் தான் சொல்கிறேன்.

நம் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதை எல்லாம் விட்டுவிட்டு, கப்பலேறி வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. போக வேண்டாம் என்று சொல்லவில்லை. போங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதே சமயத்தில் மலேசியாவையும் சுற்றிப் பாருங்கள். அப்புறம் வெளிநாடுகளுக்குப் போங்கள். அடிக்கடி ‘பாரீன்’ போகும் கலாசாரத்தைக் கொஞ்சம் மாற்றி மலேசியாவையும் சுற்றிப் பாருங்கள்.

உங்கள் நாட்டிற்கு முதல் மரியாதை கொடுங்கள். அதுவே உங்கள் தாயக நாட்டிற்கு நீங்கள் செய்யும் முதல்  மரியாதை!

நிபோங் திபால் மர்ம மாளிகையின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள். சரி. இந்த மாளிகையைப் போல நம் நாட்டில் பல மர்ம மாளிகைகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அறிமுகம் செய்கிறேன்.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.08.2019


சான்றுகள்:

1. https://www.thestar.com.my/news/nation/2006/07/15/exmca-rep-used-to-own-mansion/

2. https://www.penang-traveltips.com/99-door-mansion.htm

3. https://en.wikipedia.org/wiki/Nibong_Tebal

4. ‘Mystery of Rubber Estate Manager's Murder' Penang Heritage Trust (PHT) Newsletter, April 2012

5. 99-door Mansion Left to Rot’ The Star, 14 July 2006


பேஸ்புக் பதிவுகள்
15 April 2020


Samundiiswari Muniandy: என் (பாரிட் புந்தார்) பக்கத்துப் பட்டணம்... முதல் முறை இந்த அரண்மனையைப் பற்றி கேள்விப் படுகிறேன்... அருமையான தகவல்.

Muthukrishnan Ipoh:
பாரிட் புந்தார் என்று சொன்னதும்... ஒரு முறை பட்டர்வர்த்தில் இருந்து புறப்பட்டு பாரிட் புந்தாரில் இரவு 9 மணிக்கு... சிக்கிக் கொண்டேன்... தங்க அறை கிடைக்கவில்லை... இருந்தாலும் ஒரு மலாய்க்காரர் உதவி செய்தார்... நள்ளிரவில் தைப்பிங் வந்து சேர்ந்தேன்... 2017-இல் நடந்தது... தெய்வங்கள் மனித வடிவில் வருவது உண்மை...

Samundiiswari Muniandy >>> Muthukrishnan Ipoh: முற்றிலும் உண்மை ஐயா...

Sai Ra >>> Muthukrishnan Ipoh: Unmaitaan. En vaalvilum ippadi miga nalla mun pin arimugam illata malaikaarargalai paartirukkireen. Ellaa Inattilum Manita Teivanggal Undu. Atanalthan innmum Malai peigiratu, bumi nanaigiratu.

(உண்மைதான். என் வாழ்விலும் இப்படி மிக நல்ல... முன்பின் அறிமுகம் இல்லாத மலாய்க்காரர்களைப் பார்த்து இருக்கிறேன். எல்லா இனத்திலும் மனிதத் தெய்வங்கள் உண்டு. அதனால் தான் இன்னமும் மழை பெய்கிறது... பூமி நனைகிறது.)

Muthukrishnan Ipoh: அவரை முன்பின் பார்த்தது இல்லை... என்நிலையை அறிந்து உதவி செய்ய முன் வந்தார்... அவருடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாரிட் புந்தார் நகரில் தங்கும் விடுதிக்காக அலைந்து... கடைசியில் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்... பஸ் ஏற்றி விட்டார்... உண்மையிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சி...

Samundiiswari Muniandy >>> Muthukrishnan Ipoh: இனிமேல் பாரிட் புந்தாரில் தங்களுக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் ஐயா... உதவி செய்ய நான் மட்டும் அல்ல... இங்கு அதிகமானோர் இருக்கிறோம்... தர்மம் தலை காக்கும் என்பார்களே... அதுதான் அன்றைய நாளில் தங்களுக்கு நடந்து உள்ளது.

Muthukrishnan Ipoh >>> Samundiiswari Muniandy: மிக்க நன்றிங்க... தங்களின் அன்பான ஆதரவான உணர்வுகளுக்குச் சிரம் தாழ்த்திய நன்றிகள் 🙏🙏

Prem Rani: Full of informative sir. Tq very much.

Muthukrishnan Ipoh; நன்றி... மகிழ்ச்சி...

Ramani Naguran:
முதல் முறையாக இந்த மாளிகையின் வரலாற்றை அறிகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி .

Muthukrishnan Ipoh நன்றி... நன்றி....

Vanitha Ganapathy: இரண்டு பாகங்களையும் படித்து விட்டேன் ஐயா.. மிக்க நன்றி

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சியான செய்தி...

Sundar Senglrayan: Migaa arumaiyana pathivu ayya (மிக அருமையான பதிவு)

Muthukrishnan Ipoh: மிக்க நன்றி...

Melur Manoharan: "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh: நன்றி... மகிழ்ச்சி...

Maha Lingam: பார்க்க வேண்டிய ஒரு மாளிகை...

Muthukrishnan Ipoh: ஆமாம்... வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Sri Kaali Karuppar Ubaasagar: அருமை அண்ணா வாழ்துக்கள்🙏🏼🌹

Muthukrishnan Ipoh: தங்களுக்கும் வாழ்த்துகள்...

Janaki Raman: Very good article... another Vadivelu really makes me laugh. Thanks sir.

Muthukrishnan Ipoh: கொஞ்சம் நகைச்சுவை 😆

Poovamal Nantheni Devi: தெரியாத தகவல். தெரிந்து கொண்டேன்

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Sinappan Dass: அருமை....

Muthukrishnan Ipoh: மகி்ழ்ச்சி...

Balamurugan Balu: அருமை!

Muthukrishnan Ipoh நன்றி... மகிழ்ச்சி...

Sooria Kumari Xavier: நன்றி ஐயா..

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி

Maha Lingam: அழகோ அழகு....

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி...

Mageswary Muthiah உங்கள் கட்டுரையை மிகவும் சுவாரசியமாக சில இடங்களில் நகைச்சுவை பாணியில் எழுதி இருக்கிறீர்கள்... அருமையாக இருக்கிறது.

Muthukrishnan Ipoh: நன்றி... தயிர் சாதத்திற்கு ஊறுகாய் நன்றாக இருக்கும்... 😋😋

Vani Yap: எனது பதினான்காவது வயதில் இந்த மாளிகையைப் பற்றி அம்மா சொல்லி உள்ளார். நாளிதழில் இந்த மாளிகை பற்றிய தகவல் வந்து உள்ளது. அதை அம்மா பத்திரப் படுத்தி வைத்துள்ளார். கதை கேட்கும் போதே மிக பயமாக இருக்கும். நீங்களாவது வடிவேல் பற்றி கொஞ்சம் நகைச்சுவையாக சொன்னீர்கள்.

ஒரு முறை அம்மா இன்னும் சிலர் அந்த மாளிகையைப் பார்க்க சென்று இருந்தார்கள், மர்மங்கள் நிறைந்த மாளிகை என்றும் சொன்னார் அம்மா. அந்த மாளிகையின் மேல், மொட்டை மாடி இருந்ததாகவும், அங்கே டென்னிஸ் கோட் இருக்கிறது என்றும் சொன்னார்.

நீங்கள் சொல்வது போல், மறைக்கப்பட்ட உண்மைகள் இன்றளவும் தெரியவில்லை.. மர்மம்.. பல வருடங்களுக்கு பின் உங்கள் கைவண்ணத்தில் இந்த மாளிகை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.. அங்கு நடந்த பல விசயங்கள் பற்றி சொல்லி  உள்ளீர்கள். மிக்க நன்றி

Muthukrishnan Ipoh
இதே போல பத்துகாஜாவில் கெல்லிஸ் காசல் மாளிகை உள்ளது... இதிலும் பற்பல மர்மங்கள்... பற்பல இரகசியங்கள்... ஆனாலும் பழைய வரலாறு மறைந்து வருகிறது... இப்போது ஒரு வணிகத் தளமாக மாறி விட்டது...

Vani Yap: வணக்கம்.. மன்னிக்கவும்... நான் தவறாகப் பதிந்து விட்டேன். நீங்கள் சொன்ன மாளிகை கெல்லிஸ் காசல் என்று எண்ணி விட்டேன். குழப்பம் 'பத்து காஜா, பத்து காவானில் ஆரம்பித்து உள்ளது. நல்ல வேளை நீங்கள் இங்கே கெல்லிஸ் காசல் என்ற பெயர் உச்சரிப்பில் என் தவற்றைப் புரிந்து கொண்டேன்... மன்னிக்கவும், நன்றி

Muthukrishnan Ipoh:
நிபோங் திபால் மாளிகையைப் போல பத்து காஜா கெல்லிஸ் காசல் மாளிகையும் மர்மங்கள் கொண்டது... குழப்பங்கள் தெளிந்தமையில் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Indra Balakrishnan: பதிவுக்கு நன்றிங்க ஐயா. முதல் முறையாக இந்த மாளிகையின் வரலாற்றை அறிகிறேன்.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... போய்ப் பாருங்கள்... தனியாக வேண்டாமே...

Karan Mayan Mayan
: Do you have the English version of this write up sir?

Muthukrishnan Ipoh: விரைவில் மொழிபெயர்த்துப் பதிவு செய்கிறேன்...

Athiletchumy Ramudu: நீங்கள் சொன்னது உண்மை தான். இந்த மாளிகையைப் பற்றி துளி அளவும் யாம் அறியோம். பிரமிப்பாக உள்ளது.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Ponni Veerappan: கதை அருமை ஐயா

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... மகிழ்ச்சி... விரைவில் வேறு ஒரு பேய்க் கட்டுரை வரும்...😃😃





14 ஏப்ரல் 2020

நிபோங் திபால் மர்ம மாளிகை - 1

தமிழ் மலர் - 03.08.2019

ஒரு செம்பனைத் தோட்டம். வயதாகிப் போன மரங்கள். அங்கே ஒரு 150 ஆண்டு கால மர்ம மாளிகை. பாழடைந்த நிலையில் அனாதையாக நிற்கிறது. அந்த மாளிகையில் மழைக் குருவிகள், ஊர்க் குருவிகள், ஆந்தைகள், வௌவால்கள், குட்டிக் குட்டிப் பாம்புகள், சின்ன பெரிய பல்லிகள், ஜாவா மலைக்காட்டு அரணைகள் மாயா மச்சேந்திரா மாதிரி ஊர்க்கோலம் போகின்றன. 

 

கூடவே நாலு கால் பாய்ச்சலில் எட்டுகால் பூச்சிகள். ஊர்ந்து போகும் சின்னச் சின்ன ஆயிரம் கால் அட்டைகள். ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா. அந்த மாதிரி  அவை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து நீண்ட காலம் கூட்டுக் குடும்பம் நடத்தி இருகிக்ன்றன. ஆயிரக் கணக்கான பேரன் பேத்திகள் எடுத்து விட்டன.

அந்தக் காலத்துத் தமிழக மன்னர்களின் அரண்மனைகள் நினைவுக்கு வருகின்றன. மாளிகைக்குப் பக்கத்திலே சின்ன ஒரு கோயில். மாரியம்மன் கோயிலா மதுரைவீரன் கோயிலா. தெரியவில்லை.

பைராம் செம்பனைத் தோட்டம் (Byram Estate). நிபோங் திபால் நகருக்கு அருகில் இருக்கிறது. அங்கே தான் இந்த மர்ம மாளிகை கம்பீரமாய்க் காட்சித் தருகிறது. எடுத்த எடுப்பிலேயே ஒரு மிடுக்கான தோற்றம். நெஞ்சத்தை லேசாகக் கிள்ளியும் பார்க்கிறது.




அந்த மிடுக்கில் மாளிகையைக் கட்டியவரின் செல்வச் செருக்கு நன்றாகவே தெரிகிறது. அந்தக் காலத்தில் இந்த மாளிகை எப்படி இருந்து இருக்கும். யோசித்துப் பார்க்கிறேன்.

மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் எந்தப் பரபரப்பும் இல்லை. மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. ரொம்பவும் அமைதி. பக்கத்தில் சின்ன ஓர் ஓடை சன்னமாய்ச் சலசலத்து ஓடுகிறது. வெளியே மிக அமைதியான சூழல். உள்ளே தான் பிரச்சினை.

அந்தக் காலத்து ஆங்கிலேய மன்னர்கள் கட்டிய மாளிகையைப் போன்ற கட்டமைப்பு. இந்த மர்ம மாளிகை ஒரு பெரிய வரலாற்றையே பின்னணியாகக் கொண்டு உள்ளது. அதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன். அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வரும். பிறகு அந்த மாளிகையைக் கட்டியவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்னர் அவருக்காகச் சற்று நேரம் அஞ்சலி செய்வோம். 




நிபோங் திபால் மர்ம மாளிகையில் ஆவிகள் உலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆசைகள் நிறைவேறாத ஆன்மாக்கள் நிம்மதி அடைவது இல்லையாம்.

அப்படி ஒரு நம்பிக்கை. பாழடைந்த மாளிகைகளில் பாழடைந்த ஜீவன்கள் வாழ்கின்றன என்பது காலா காலத்து ஐதீகம். மனித மனங்களில் அந்த ஐதீகங்கள் இன்றும் சலனங்களை ஏற்படுத்தி வருகின்றன. சரி. கதை சொல்ல நான் தயார். நீங்கள் ரெடியா.

நிபோங் திபால் மர்ம மாளிகை 99 வாசல் கதவுகளைக் கொண்ட மாளிகை. அதனால் அதற்கு ’99 வாசல்கதவு மாளிகை’ என்ற பட்டப் பெயரும் உண்டு.

1860-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ராம்ஸ்டன் (Ramsden) எனும் ஆங்கிலேயர் அந்த மாளிகையைக் கட்டினார் என்று வரலாறு சொல்கிறது.




இந்த மாளிகையில் பத்து அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் ஐந்து அல்லது ஆறு கதவுகள். மேல்மாடம், நடன அறை, சமையல் சரக்கு அறைகளில் ஏறக்குறைய 40 கதவுகள் உள்ளன.

ஒரு கதவில் நுழைந்து இன்னொரு கதவின் வழியாக அடுத்த அறைக்குப் போய் விடலாம். கதவுகள் போடும் சத்தத்தில் அங்கே சந்திரமுகியின் கால் கொலுசுகளின் சத்தம் கேட்கிறது. பேய் பங்களா என்று சொல்வார்களே... அதே அதே… அந்த மாதிரிதான் அங்கேயும் மர்மத்தின் உரசல்கள்.

ஈப்போ மாநகருக்கு அருகில் இருக்கும் பத்துகாஜாவில் ’கெல்லி காசல் பேய் பங்களா’ இருக்கிரது. அந்தப் பங்களா பரவாயில்லை போலத் தெரிகிறது. இங்கே இந்தப் பங்களாவிற்குள் உடலை உறைய வைக்கும் அமைதி. உள்ளத்தை உரசிப் பார்க்கும் நிசப்த ஜாலங்கள். 

 


எங்கோ தூரத்தில் ஆந்தைகள் கத்துகின்றன. அந்தச் சமயம் பார்த்து திடீரென்று ஜன்னல் கதவுகள் ‘படார்’ ‘படார்’ என்று அடித்துக் கொள்கின்றன. சமயங்களில் ’ஊய் ஊய்’ எனும் விசில் ஒலி வேறு. எங்கே இருந்து வருகிறது என்றே தெரியவில்லை.

கீழ் வராந்தாவில் நடந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடன் வந்த இரு நண்பர்களும் மாளிகைக்கு வெளியே நிற்கிறார்கள். நான் மட்டும் உள்ளே போனேன்.

பக்கத்தில் யாரோ பின்னால் நின்று மூச்சு விடுகிற மாதிரி பிரமை. கொஞ்சம் தள்ளிப் போனால் யாரோ தோளில் கையைப் போடுகிற மாதிரி உணர்வு. திரும்பிப் பார்த்தால் சுவரில் வரைந்த டிராகுலா படங்கள் பல்லைக் காட்டிச் சிரிக்கின்றன. எப்படி இருக்கும்.




துணிச்சலைத் திணித்துக் கொண்டு உள்ளே போனால் காற்று இல்லாமலேயே முன்னாடி இருக்கின்ற கதவுகள் ஆடுகின்றன. வேண்டாங்க… லக லக லக… சத்தம் கேட்கிற மாதிரி இருக்கிறது.

நல்லவேளை எனக்கு நெஞ்சுவலி இல்லை. இருந்து இருந்தால் கதையே வேறு. ஆக உங்களுக்கு நெஞ்சுவலி இருந்தால் பத்திரம். சந்திரமுகி சத்தம் போடலாம். சொர்ணமுகி கட்டிப் பிடிக்கலாம்.

சுற்றிப் பார்க்க வேண்டுமா. துணைக்கு கண்டிப்பாக ஓர் ஆள் வேண்டும். இல்லை என்றால் வடிவேலுவிற்கு ஏற்பட்ட நிலைமை வரலாம். தனியாகப் போக வேண்டாங்க பிளீஸ்.

இந்த மாளிகையில் மூலைக்கு மூலை கதவுகள். அதனால்தான் இதற்கு 99 மர்ம மாளிகை என்று பெயர் வைத்தார்களோ. தெரியவில்லை. மாளிகையைச் சுற்றி மேலேயும் கீழேயும் தாழ்வாரங்களைக் கொண்ட நடைபாதைகள். எந்த நேரமும் ‘ஜிலு ஜிலு’ செம்பனைக் காற்று. மனசுக்கும் ஜிலுஜிலுப்பு. 




மேல்மாடிச் சுவர்களில் காதல் கிறுக்கன்களின் கைவந்த சுவரெழுத்துகள். ஆங்கில மொழியிலும் சுடச்சுட காதல் ரசனைச் சொற்கள். அதில் ஒரு கிறுக்கல் இந்த மாதிரி தமிழில் வருகிறது.

’மைனா நன் உனைக் கதலிக்கிரன். நீ எனை கதலிக்கிரயா?’ மொழியில் பிழை இருந்தாலும் பரவாயில்லை. மனசில் உள்ளதைக் காதலன் கொட்டித் தீர்த்து இருக்கிறான். அவளிடம் போய்ச் சொல்லி இருக்க வேண்டியது தானே.

அதற்கு அவள் என்ன சொல்லி இருப்பாளோ தெரியவில்லை. ‘தமிழைச் சரியாக எழுதத் தெரியாத உனக்கு, காதல் ஒரு கேடா’ என்று சொல்லி இருக்கலாம். அப்படியும் நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் ஒரு காதல் கிறுக்கு. ‘அன்பே இந்த அரண்மனையை உனக்காக வாங்கித் தருகிறேன். என்னைத் தவிக்க விடாதே’. வார்த்தைகள் நெஞ்சைத் தொடுகின்றன. இந்த வசனம் மேல்மாடியில் ஓர் ஓரமான அறையில் பரிதாபமாய்க் காட்சி தருகின்றது.




இந்தப் பங்களா பல மாமாங்கங்களாகப் பாழ் அடைந்து போய்க் கிடக்கிறது. இதையா காதலிக்கு வாங்கிக் கொடுப்பது. புதுசா ஒரு தாஜ்மகாலைக் கட்டிக் கொடுக்க வேண்டியது தானே.

ஆக இந்த மாதிரி நிறைய வாசகங்கள். சீன மொழியிலும் காதல் ஓவியங்கள் சிரிக்கின்றன. அங்கே உடும்புகள் நடந்து போன சுவடுகளும் தெரிகின்றன.

சொந்தக்காரரைப் போல பெரிய பெரிய பெருச்சாளிகளும் சாகவாசமாய் ஊர்வலம் போகின்றன. பேரன் பேத்திகள் எடுத்து விட்ட நினைப்பில் ஓடிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடுகின்றன. மாமன் மச்சான் பெருச்சாளிகளாக இருக்கலாம். ரொம்ப சந்தோஷமாக குடும்பம் நடத்துகின்றன.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது உண்மையிலேயே அதற்குப் பேய் பங்களா என்று ஒரு நல்ல சான்றிதழ் கொடுக்கலாம். இருந்தாலும் புனரமைப்புச் செய்தால் ஒரு சுற்றுலாத் தளமாக அமையும். பேய் பங்களா எனும் அடைமொழி மறைந்து போகலாம்.




இந்த மாளிகையைப் பினாங்கு பாரம்பரிய பாதுகாப்பு அறவாரியம், தத்து எடுத்து புனரமைப்புகள் செய்து வருகிறது.

முன்பு பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் வாசு குப்புசாமி அதைப் பற்றிய தகவல்களைக் கூறினார். வாசு குப்புசாமி என்னுடைய நெருங்கிய நண்பர். என்னுடன் இந்தப் பேய் மாளிகைக்கு வந்தவர்.

பினாங்குத் தீவையும் பெருநிலத்தையும் இணைக்கும் இரண்டாவது பினாங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இந்த மாளிகைக்கு விடிவுகாலம் பிறந்து இருக்கிறது.

இரண்டாவது பாலத்திற்கு இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் தள்ளி இந்த மாளிகை இருக்கிறது. இப்போது இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம். வாகனப் போக்குவரத்துகளும் அதிகமாகி வருகின்றன. 




இந்த மாளிகை பொதுமக்களின் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. விரைவில் மேலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று வாசு குப்புசாமி சொல்கிறார்.

இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியர்கள் இந்த மாளிகையை ’கலிடோனியா மாளிகை’ என பெயர் வைத்து அழைத்தனர். இராணுவத்தின் தலைமை அலுவலகமாக அதைப்  பயன்படுத்தினார்கள். அப்போது பலரைச் சிரச் சேதம் செய்து இருக்கிறார்கள். அது தானே அவர்களின் கை வந்த கலை.

அதனால் ஆவிகள் உலாவுவதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம். ஈப்போவில் சிபில் கார்த்திகேசுவை அடைத்து வைத்த ஒரு பள்ளியில் ஆவிகள் உலாவுவதாக மக்கள் சொல்லவில்லையா. அந்த மாதிரிதான் இங்கேயும் இருக்கலாம்.

கீழே ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு தமிழ் மூதாட்டி வாழ்ந்து வருகிறார். பெயர் முனியம்மா. 80 வயது. 2005-ஆம் ஆண்டில் அவருடைய கணவர் 91-வது வயதில் இறந்து போனார். 




அதில் இருந்து அந்த மூதாட்டி மட்டும் தனியாக அந்த மாளிகையைப் பார்த்து வருகிறார். 2016-ஆம் ஆண்டில் நான் அங்கே போன போது அந்த மூதாட்டி இருந்தார். அவரைப் பற்றிய அண்மைய விவரங்கள் கிடைக்கவில்லை.

இந்த மாளிகையில் பேய் இருக்கிறதாகப் பலர் சொல்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ’அது எல்லாம் பொய்... பேயும் இல்லை பிசாசும் இல்லை… எல்லாம் பொய்... இருந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று ரொம்பவும் அசத்தலாகப் பதில் சொன்னார். அவருடைய துணிச்சலைப் பார்த்து நானே அசந்து போனேன்.

அதற்கு முன்னர் அவரும் அவருடைய கணவரும் அந்த மாளிகையைப் பராமரித்து வந்தார்கள். ஒரு சீனர் முதலாளியாக இருந்தார். இப்போது அவர் வருவது இல்லையாம். அவருடைய பேரப் பிள்ளைகள் மட்டும் வந்து இவரிடம் காசு கொடுத்துவிட்டுப் போவதாக முனியம்மா சொல்கிறார். 




அவருக்குத் துணையாக அவருடைய பேரன் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகிறார். ஆனால் தங்குவது இல்லை. முனியம்மா மட்டும் இரவில் தனியாகத் தங்கி இருக்கிறார்.

இந்த மாதிரி துணிச்சலான பெண்ணைப் பார்த்த பிறகு, நமக்கும் ஒரு வரட்டுத் துணிச்சல் வந்து விடுகிறது. இருந்தாலும் மாளிகையின்  மிக அமைதியானச் சூழ்நிலை இருக்கிறதே, அதுதான் லேசாகக் காய்ச்சலை வரவழைத்து உதறல் எடுக்க வைக்கிறது.

மாளிகையைப் பார்க்கும் போதே ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் சுவடுகள் நன்றாகத் தெரிகின்றன. பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு போல இந்த மாளிகையின் கட்டமைப்பும் உள்ளது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அரச பிரிட்டிஷ் படையினர் தங்கும் மனைவீடுகள் இப்போதைய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகப் பகுதியில் இருந்தன. அதையும் நினைவு படுத்தி விடுகிறேன். 

இந்த மாளிகையில் ஓர் அதிசயம் என்ன தெரியுமா. இது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது. அதாவது 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வருமாம். அப்படிப் பட்ட தொழில்நுட்பத்தில் மாளிகையின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய சுழல் அச்சு இருந்தது. 




எப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த மாளிகை சுற்றுவது எல்லாம் இல்லை. நாம் தான் அதைச் சுற்றி வரவேண்டும்.

இப்போது அந்தச் சுழல் அச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் என்றால் மாளிகையின் அடிப் பாகத்திற்குச் செல்ல வழி இருப்பதாகவும் தெரியவில்லை. மேலே வெளிச்சம் இருக்கும் இடத்தில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது. இதில் மாளிகையின் அடிப்பாகத்தில் இறங்கிப் பார்ப்பதா. வேண்டாங்க சாமி. 

இந்த மாளிகையின் சுவரில் உங்களுக்குப் பிடிக்காதவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு வந்தால் அந்தப் பெயரைக் கொண்டவருக்குப் பைத்தியம் பிடித்து விடுமாம். பக்கத்து கிராமத்தில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. அதைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

03.08.2019



பேஸ்புக் பதிவுகள்

Don Samsa: இது எனது பால்ய நண்பனின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். அவன் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறான்.

பினாங்கு மாநில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த போது... ஒரு நாள் அந்த மாளிகையில் போதைப் பித்தர்களைப் பிடிக்க சென்றிருந்த போது... ஒரு போதை பித்தரை மேல் மாடி வரை துரத்திக் கொண்டு சென்ற போது...

எதிர்ச்சையாக அந்த மாளிகை மேல்மாடி அறை ஒன்றில் அழகிய இந்தியப் பெண்மணி ஒருத்தி சேலை அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து இருந்ததை கண்டு அதிர்ந்துப் போனதாக என்னிடம் கூறினான்.

பின்னர் சக காவல்துறை நண்பரோடு மீண்டும் அந்த அறைக்குச் சென்று பார்த்தப் போது அந்தப் பெண் அங்கு காணவில்லை என மேலும் கூறினான். அன்று இரவு துக்கத்தில் இருந்த போது நண்பரின் கனவில் அதே பெண்மணி தோன்றி என்னை எங்கு கண்டீர்களோ அதே அறைக்கு மீண்டும் நீங்கள் வாருங்கள். தனியாக வாருங்கள். உடன் யாரையும் அழைத்து வர வேண்டாம் எனக் கூறி மறைந்தாளாம் அந்தப் பெண்.

ஆனால் நண்பர் ஏதேனும் விபரிதமாக ஆகிவிடும் என முடிவு செய்து அந்த மாளிகை பக்கமே போகவில்லையாம். ஆனால் அந்தப் பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் கனவில் வந்து... வந்து அழைத்துக் கொண்டு இருந்தாளாம்.

பிறகு நண்பனின் அண்ணன் அவனை அழைத்துக் கொண்டு தாய்லாந்து சென்று வழிபாட்டு செய்த பிறகே அந்தப் பிரச்சனை தீர்ந்தது என கூறி முடித்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 2000-ஆம் ஆண்டில். நானும் அந்த மாளிகைக்குச் செல்ல பலமுறை நினைத்து உள்ளேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் மனம் அங்கு செல்ல வேண்டாம் என தடுக்கிறது.

எனக்கும் அந்த மாளிகைக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது போல் ஓர் உணர்வு. பகிர்ந்து கொள்ள எண்ணம் வந்தது எழுத்துக்கள் மூலமாக இங்கு எழுதி விட்டேன். திருப்தி. நன்றி

Ganesan Pachappan >>> Don Samsa அது பாழடைந்த பங்களா. நாம் அங்கு போகும் போதே மனதில் ஒருவித பய உணர்வு வந்து விடுகிறது. அதுவே நம் உடலைச் சிலிர்க்க வைத்துவிடும். அது போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் இரண்டு மூன்று நண்பர்களுடன் செல்வது நல்லது.

Parimala Muniyandy வணக்கம் ஐயா. இது போன்ற திகில் தகவல்களை அதிகம் பகிரவும். மர்ம மேடை கதை கேட்பது போல இருந்தது. அருமை... நன்றி.

Muthukrishnan Ipoh 😆😆 சந்திரமுகி படத்தின் தாக்கங்கள் தான்...

Sri Ram Krishnan ஐயா என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்றது போல உணர்கிறேன்... லக லக வசனம் சூப்பர்... எழுத்துகளுக்கு உயிர் கொடுப்பதில் நீங்கள் பலே ஐயா... அடுத்தச் சுற்றுப் பயணத்தில் என்னை மறந்து விடாதீர்கள்...

Muthukrishnan Ipoh லக லக வசனம் சூப்பர்.... கருத்துகளுக்கு நன்றி... நன்றி 😆

Prema Rajaram Prema Rajaram வணக்கம். தங்களுடைய கட்டுரை அருமை ஐயா... அந்த மாளிகையின் தோற்றத்தை... மிகவும் அற்புதமாக... தங்கள் எழுத்துக்கள் கூறுகின்றன...

ஐந்தாண்டுகளுக்கு முன்பு... நானும் ஒரு முறை... அந்த மர்ம மாளிகையை... சென்று கண்டது உண்டு... ஆனாலும்... அங்கே புதைந்து கிடக்கும் உண்மைகள் தான் என்ன... என்பதுதான்... இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது ஐயா...!!

Muthukrishnan Ipoh மலேசியாவில் மர்மங்கள் புதைந்த மாளிகைகள் 10 இருக்கலாம்.. அவற்றில் இதுவும் ஒன்று

Thennarasu Sinniah மாளிகையை விட நீங்கள் சொல்வதில் தான் அதி பயங்கரமாக உள்ளது... நானும் வரேன்.. நீங்களும் வாங்க.. சேர்ந்தே போவோம்..

Muthukrishnan Ipoh அப்படீங்களா தம்பி... நேராக போய்ப் பாருங்கள்... உடலில் உரசல்கள் இருக்கும்... 😆😆

Joseph Sebastian  அந்த மாளிகைக்கு நான் சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளேன். நிறைய அறைகள் இருக்க அதைச் சுற்றிப் பார்க்க நேரமின்மையால் திரும்பி விட்டேன். அடுத்த முறை பார்ப்போம்

Muthukrishnan Ipoh அறைக்குள் சென்று பார்க்க வேண்டும்... உச்சக் கட்டமே அங்கேதான் இருக்கிறது...

Joseph Sebastian நன்றி அடுத்த முறை பார்ப்போம்

Sivalingam Muniyandi: நல்லதொரு * screen writing style*.

Muthukrishnan Ipoh கருத்திற்கு நன்றிங்க...

Santhakumari Krishnan அழகான மாளிகை. ம்ம்ம்... ஆபத்துகள் நிறைந்த அமைதியான மாளிகை. தகவல் தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.

Muthukrishnan Ipoh வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Santhakumari Krishnan "ஐயோ வேண்டாம் அண்ணா" நான் வரவில்லை இந்த விபரீத விளையாட்டுக்கு!"

Muniandy Yellai சுற்றுலா தளமாக உருவாக்கினால் நாம் பேய்களைச் சந்திக்கலாம்

Muthukrishnan Ipoh பேய்களைப் பார்க்க அவ்வளவு விருப்பமா... 😆

Santhanam Baskaran அரிய தகவல்கள். நன்றி. அனைவருக்கும் இனிய அன்பு வணக்கங்களுடன் வார இறுதி நாள் இனிதாக அமைய வேண்டுகிறேன்.

Muthukrishnan Ipoh நன்றிங்க...

Viji Nijtha அருமையான பதிவு... அந்த மாளிகையை பார்க்க ஆவலாய் இருக்கிறது.


Viji Nijtha >>> Muthukrishnan Ipoh: Ungalai than udan alaithu sellanum 😀😀 (உங்களைத் தான் அழைத்துச் செல்லணும்)

Muthukrishnan Ipoh >>> Viji Nijtha: பிரச்சினையே இல்லை... பேய் பிசாசு கண்ணில் பட்டால் நான் முதலில் ஓடுகிறேன்... என் வேகத்திற்குப் பின்னால் ஓடி வர முடிந்தால் சரி...

Arul Jsr மறுபடியும் கிடைக்காத வாழ்க்கை...

Muthukrishnan Ipoh 😆😆

Tamil Zakir பேய்படம் பார்த்தது போல் இருக்கு

Muthukrishnan Ipoh 😆 அப்படீங்களா

Baakialetchumy Subramaniam காலை வணக்கம் சகோதரரே அருமையான தகவல். ஒரு முறையேனும் சென்று பார்த்திட வேண்டும்

Muthukrishnan Ipoh வணக்கம்... கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்...

Baakialetchumy Subramaniam >>> Muthukrishnan Ipoh நன்றி

Jayanthi Bala படிக்கும் போதே பயமா இருக்கு சார்!!!!

Muthukrishnan Ipoh நேராகப் பார்க்கும் போது கொஞ்சம் பய்மாக இருக்கவே செய்யும்

Kumar Murugiah Kumar's: Wonderful story ❤️

Muthukrishnan Ipoh நன்றிங்க

Sambasivam Chinniah: Arumai ayyah.

Muthukrishnan Ipoh நன்றிங்க

Nagoor Bhanu: Aarvattai thundividdathu ayya.... Itupole butterworth oru periye vedu ullathu... Ipoluthu konja naadkalai aal madamaddam undu... Iraivil paarke konjam bayamagethan irukum... 🤐

(ஆர்வத்தைத் தூண்டி விட்டது ஐயா... இது போல் பட்டர்வர்த்தில் ஒரு பெரிய வீடு உள்ளது... கொஞ்ச நாட்களாய் ஆள் நடமாட்டம் உண்டு... இரவில் பார்க்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கும்...)

Muthukrishnan Ipoh தகவலுக்கு நன்றிங்க ஐயா

Rajendran Perumal அருமை...

Muthukrishnan Ipoh நன்றிங்க

Malathi Nair 1st time hearing.

Sathya Raman இந்த கட்டுரையைப் படிக்கும் போது மெய்யாலுமே சந்திரமுகி படத்தை மீண்டும் பார்த்த உணர்வு தான் தோன்றியது. ஆரம்பத்தில் மாளிகை மகத்தானதாகத் தான் இருந்திருக்க வேண்டும். இடையில் இந்த மந்திர வாதியின் சூனிய வேலைகளால் வெறிப் பிடித்த மாளிகையாக மாறி இருக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த மாளிகையை பார்க்கவே விரும்புகிறேன். நல்ல தகவல் மிக்க விவரத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க சார் 🙏

Tana Letchumy: Nantri iyah

Don Samsa வணக்கம் தலைவரே... கட்டுரை அருமை. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளது. உங்களுக்கு ஒரு தகவல்.

இந்த மாளிகையை பற்றி எழுதப் போகிறேன் என நீங்கள் நம் புலனத்தில் குறிப்பிட்டீர்கள். 2016-ஆம் ஆண்டில்.இன்னும் என் நினைவில் உள்ளது. அப்போது நீங்கள், நான் மற்றும் டொல்பின் மூவரும் இந்த மாளிகையைப் பற்றி புலனத்தில் எழுத்துக்கள் மூலமாகப் பகிர்ந்த போது... இப்போது அதனை மெய்யாக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி தலைவரே. இன்னொரு சம்பவம் கூறுகிறேன்.

Jothy Subramaniam நிபோங் திபாலின் மர்ம மாளிகை. இந்த மாளிகையைப் பற்றி அந்தக் காலத்து மனிதர்கள் பல பல கதைகளைச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். இங்கே ரொம்ப பக்கத்தில் தான். ஆனால் இன்னமும் போனதில்லை. பயம் தான். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.

Muthukrishnan Ipoh பயப்பட வேண்டாம்... பேய் வந்தால் நீங்களும் லக லக என்று சத்தமாக சத்தம் போடுங்கள்... எனக்குப் போட்டியா என்று பேய் ஓடி விடும்...

Jothy Subramaniam >>> Muthukrishnan Ipoh: சரி சரி.. அடுத்த முறை நீங்கள் சொன்ன மாதிரியே செய்து விடுகிறேன்..











13 ஏப்ரல் 2020

Thank you Google


உலகளாவிய முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள் ஆயிரம்
கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தின் போது முன்னணிச் சேவையாளர்களாய்ச் சேவைகள் வழங்கி வரும்...

மருத்துவர்கள்,
தாதிமார்கள்,
மருத்துவ உதவியாளர்கள்,
மருத்துவ ஊழியர்கள்,
மகப்பேறு உதவியாளர்கள்,
அவசர உதவியாளர்கள்,
மருத்துவ உணவு விநியோகிப்பாளர்கள்,
தனியர் காப்புக் கருவி தயாரிப்பாளர்கள் (ppe),
அஞ்சல்துறை ஊழியர்கள்,
சிறை அதிகாரிகள்,
பொதுப் போக்குவரத்து ஊழியர்கள்,
சுகாதாரப் பணியாளர்கள்,
போலீசார்,
இராணுவ வீரர்கள்,
ரேலா உறுப்பினர்கள்,
தீயணைப்புப் படை வீரர்கள்,
நகராண்மைக் கழகச் சேவையாளர்கள்,

மற்றும் இதர அத்தியாவசியச் சேவையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்... நன்றிகள்...

மக்கள் சேவையே மகேசன் சேவை என தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் இவர்கள் மலேசிய மக்களின் மனங்களில் நடமாடும் தெய்வங்களாய் வணங்கப் படுகிறார்கள்.

வாழும் காலத்திலேயே அவர்களைப் பற்றி வரலாறு பேசுகின்றது. காலா காலத்திற்கும் மலேசியர்கள் அவர்களை நினைத்துப் பார்ப்பார்கள்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் சேவை செய்து வரும் அன்பார்ந்த முன்னணிச் சேவையாளர்களே...

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களின் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம். இருகரம் கூப்பி நன்றி கூறுகிறோம். நன்றிகள் ஆயிரம்.

#மலாக்காமுத்துக்கிருஷ்ணன்
13.04.2020

#GoogleDoodle