திருமதி.அமுதாதேவி, ரொம்பின், நெகிரி செம்பிலான் (ஊர் பெயர் மாற்றம் செய்யப்
பட்டுள்ளது)
கே: ஐயா, உங்களுடைய உதவி எனக்குத் தேவைப்படுகிறது. நான் ஒரு
சீனரின் பிலாஸ்டிக் நிறுவனத்தில் கிராணியாக வேலை செய்கிறேன். என் கம்பெனிக்கு
வந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் என் கணினியில்
சேமித்து வைத்து இருந்தேன். இன்று காலை கணினியைத் திறக்கும் போது அவை
அழிக்கப்பட்டு விட்டன.
Recycle Bin எனும் இடத்திலும் இல்லை. சுத்தமாகக் காலியாக இருக்கிறது. ஒரு சீனர் கம்பெனியில் ஒரு தமிழ்ப்பெண் கிராணி வேலை செய்வது பலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், எனக்குத் தொல்லைகள் கொடுப்பதற்காக இப்படி செய்கிறார்கள். இந்தத் தடவை என் யு.எஸ்.பியிலும் அந்த ஆவணங்களைச் சேமித்து வைக்கவில்லை.
என் முதலாளி எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்து இருக்கிறார். அதற்குப் பிறகு என்னை வேலையில் இருந்து நீக்கினாலும் நீக்கிவிடலாம். எனக்கு மூன்று குழந்தைகள். என் கணவருக்கு போன வருடம் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் அவருக்கு இப்போது வேலை இல்லை. நான் சம்பாதித்து என் குழந்தைகளையும் என் கணவரையும் கடந்த ஒரு வருடமாகப் பார்த்து கொள்கிறேன்.
கணினிக் கடைகளில் கேட்டால் 2000 வெள்ளி பணம் கேட்கிறார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. அழிந்து போன ஆவணங்களை மீட்டுக் கொடுங்கள். இல்லை என்றால் என் வேலை போய் விடும். இது ஓர் அபலையின் கண்ணீர்க் கதை. உங்களைத் தெய்வமாக நினைக்கிறேன். உதவி செய்யுங்கள் ஐயா?

ப: அன்புள்ள சகோதரி, நீங்கள்
என்னைத் தொலைபேசியில் அழைத்த அன்றே அந்தத் தகவல் மீட்பு நிரலியை மின்னஞ்சல் வழியாக
உங்களுக்கு அனுப்பி இருந்தேன். தகவல்களை மீட்டுவிட்டதாக அழைத்துச் சொன்னீர்கள்.
உங்கள் வேலையும் பாதுகாக்கப் பட்டது என்றும் சொல்லி அழுதீர்கள்.
தயவு செய்து அழுவதை நிறுத்துங்கள் அதுதான் நீங்கள் எனக்கு செய்யக் கூடிய ஒரு பெரிய உபகாரம். எவ்வளவு பணம் வேண்டும் என்றும் கேட்டு இருந்தீர்கள். உங்கள் வேலை நிலைத்துவிட்டது. உங்கள் குடும்பம் இப்போது சந்தோஷமாக இருக்கிறது.
அதுவே நம்முடைய வாசகர்களுக்கும் எனக்கும் நீங்கள் தரும் பணம், பொருள், சன்மானம் எல்லாம். உங்கள் கணவர் நலமுடன் மீண்டும் வேலைக்குச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.

சில நேரங்களில் கணினியில் பணிபுரியும் போது சில
முக்கியமான கோப்புகளைத் தவறுதலாக அழித்து விடுவோம். பிறகுதான அதன் முக்கியத்துவம்
நமக்குத் தெரியவரும். பின்னர் கவலைபடுவோம்.
கீழே காணும் இடத்தில் இழந்த கோப்புகளை மீட்டுக் கொடுக்கும் நிரலி இருக்கிறது.
அதன் முகவரி:
அதன் முகவரி:
http://www.4shared.com/file/89hymkuu/WinMend-Data-Recovery.html?
அந்த இடத்தில் Muat Turun என்பதைச் சொடுக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் அந்த நிரலியை நிறுவிக்
கொள்ளுங்கள். புகைப்படங்கள், வீடியோக்கள்,
ஆவணங்கள் என அனைத்தையும் மீட்டுவிடலாம்.
பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களையும் சொல்லுங்கள்.
சதா.சாமிநாதன், சிலிம் ரிவர், பேராக்
கே: USB Thumb Drive, Pen Drive, Flash Drive என்பதைத் தாங்கள் விரலி என்று அழைக்கிறீர்கள். விரலி என்பது
விரலி மஞ்சளைக் குறிப்பதாகும். தயவுசெய்து தவறான கலைச்சொல்லை உருவாக்கி தமிழ்மொழியைச்
சிதைக்க வேண்டாம்?
ப: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அப்புறம் தமிழில் எந்த ஒரு புதிய
கலைச்சொல்லையும் உருவாக்க முடியாது சகோதரரே! விரலி மஞ்சள் என்று இருப்பது உண்மை.
சாதாரணமாக வீட்டில் பயன்படுத்துகிறோமே மஞ்சள், அதற்குப் பெயர்தான் விரலி மஞ்சள்.
விரலைப் போல இருப்பதால் அதற்கு விரலி மஞ்சள் என்று பெயர் வந்தது. சரி. அதற்குத் தான் ஏற்கனவே மஞ்சள் என்று பெயர் இருக்கிறதே, அப்புறம் ஏன் விரலி என்று ஒரு முன்மொழியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் என்றோ மஞ்சா என்றோ எப்படியாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.
அது எல்லாம் சரி. நீங்கள் என்ன, கறிக்குப் போடும் மஞ்சளை விரலி மஞ்சள் என்றா சொல்கிறீர்கள். சொல்லியல் படி விரல்+இயக்கி என்பதை விரலி என்று அழைக்கலாம். தவறு இல்லை. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே அந்த யு.எஸ்.பி. சாதனத்தை ’விரலி’ ஏற்றுக் கொண்டு விட்டது. பயன்படுத்தியும் வருகிறது.
உலகத்தில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்புறம் ஏன் இந்தப் புகைச்சல். எதையும் ‘பாசிட்டிவாக’ எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் ஒன்று. தாசா கத்தியைப் பிடித்துக் கொண்டு யாரும் பாசா புலியைப் பிடிக்கப் போக மாட்டார்கள்.

தமிழ்வாணன் thamilvanan@yahoo.com
கே: உலகம் முழுமையும் கோடிக்கணக்கானோர்
பயன்படுத்தும் Pen Drive எனும் விரலியைக் கண்டுபிடித்தவர் ஒரு மலேசியர் என்று கேள்விப் பட்டேன.
உண்மையா சார். அந்த அளவிற்கு மலேசியாவில் கணினி மேதைகள் உள்ளனரா?
ப: Pen Drive எனும் விரலியைக் கண்டுபிடித்தவர் ஒரு மலேசியர் என்பது உண்மை. அவருடைய பெயர் புவா கெயின் செங். வயது 36.
சிலாங்கூர், செக்கிஞ்சானில் பிறந்தவர். அங்குள்ள சீனப் பள்ளியில் படித்தவர். மேல்
படிப்பிற்காக உள்ளூர் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பம் செய்தார்.
இப்போது அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் மலேசியப் பல்கலைக்கழகங்களினால் நிராகரிக்கப் பட்ட ஒரு சாதாரண மாணவர். ஓர் அறிவுக் களஞ்சியத்தை வேறு ஒரு நாட்டிற்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். இவர் மூலமாக தைவான் நாடு இதுவரை 90 பில்லியன் ரிங்கிட் சம்பாதித்து விட்டது.
அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு 25 பினாங்கு பாலங்களைக் கட்டிவிடலாம். 7 பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைக் உயர்த்தி விடலாம். இருந்தாலும் பரவாயில்லை.
ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். காபி, தேநீரை வடிகட்டலாம். ஆனால், மனித மூளையை மட்டும் வடிகட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பது ரொம்பவும் தப்புங்க ஐயா. இது என் கருத்து. அவரைப் பற்றிய செய்தி கீழ்க்காணும் இணைய முகவரியில் இருக்கின்றது:
Phua Kein Seng |
தகுதி இல்லை என்று
நிராகரிக்கப் பட்டார். மனம் வெறுத்துப் போய் தைவானுக்குச் சென்று பட்டப் படிப்பை
மேற்கொண்டார். தன்னுடைய அறிவியல் திறமையைப் பயன்படுத்தி USB Drive SoC எனும் விரலியை 2001ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். உலகம் முழுமையும்
கோடிக்கணக்கான விரலிகள் விற்பனையாகி விட்டன.
இப்போது அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் மலேசியப் பல்கலைக்கழகங்களினால் நிராகரிக்கப் பட்ட ஒரு சாதாரண மாணவர். ஓர் அறிவுக் களஞ்சியத்தை வேறு ஒரு நாட்டிற்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். இவர் மூலமாக தைவான் நாடு இதுவரை 90 பில்லியன் ரிங்கிட் சம்பாதித்து விட்டது.
அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு 25 பினாங்கு பாலங்களைக் கட்டிவிடலாம். 7 பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைக் உயர்த்தி விடலாம். இருந்தாலும் பரவாயில்லை.
ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். காபி, தேநீரை வடிகட்டலாம். ஆனால், மனித மூளையை மட்டும் வடிகட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பது ரொம்பவும் தப்புங்க ஐயா. இது என் கருத்து. அவரைப் பற்றிய செய்தி கீழ்க்காணும் இணைய முகவரியில் இருக்கின்றது:
அருமை..
பதிலளிநீக்குhello sir.i need your help.i want to know how to repair our laptop by ourselves when it was bloked when i take the password setting.please help me.if any informatio please send a message to my e-mail address.
பதிலளிநீக்குsathis.kumar071@gmail.com