குமாரி. பிலோமினா, ஆங் மோ கியூ, சிங்கப்பூர்
கே: வணக்கம். நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இங்கே எங்களுக்கு தமிழ் முரசு நாளிதழ் மட்டுமே கிடைக்கிறது. சென்ற வாரம், ஜொகூர் பாருவில் இருக்கும் என் தோழி ’தினக்குரல்’ ஞாயிறு நாளிதழை எனக்கு அறிமுகம் செய்தாள். இப்படி ஒரு நாளிதழ் வருவது எங்களுக்குத் தெரியாது. தினக்குரல் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

ஐயா, உங்களிடம் கணினி தொடர்பான கேள்வி. Drive SnapShot எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நம்முடைய கணினி crash ஆகி, மோசமாகப் பழுது அடைந்து விடுகிறது. அப்போது அந்த ’டிரைவ் சினேப் சாட்’ நிரலியைப் பயன்படுத்தி, கணினி எப்படி இருந்ததோ அதே மாதிரி, பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். என் அலுவலகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தனியாக சிங்கப்பூரில் கிடைக்கவில்லை. மலேசியாவில் கிடைக்கிறதா. அதன் விலை என்ன? அதைப்பற்றி கொஞ்சம் விளக்கம் செய்யுங்கள்.
ப: முதலில் என்னுடைய வாழ்த்துகள். சிங்கப்பூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். சிங்கப்பூரிலும் தினக்குரல் கிடைக்கிறது. மகிழ்ச்சி. ஒரு சில மாதங்களுக்கு முன்னால், இந்தோனேசியாவின் பாத்தாம் தீவிற்குப் போன போது, சிங்கப்பூர் குடிநுழைவுப் பகுதியில் ’தினக்குரல்’ நாளிதழைப் பார்த்து அதிசயித்துப் போனேன். தினக்குரல் எட்டு திக்கும் வெற்றிக் கொடி கட்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். அதுவே எல்லோருடய ஆசையும்கூட. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
Drive SnapShot என்பது கணினியைப் பாதுகாக்கும் ஒரு நிரலி. கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போதே backup system எனும் நகலமைப்பு செய்து விடுகிறது. கணினிப் பதிவகத்தில் உள்ள எல்லா தரவுகளையும், படம் பிடித்து வைத்துக் கொள்கிறது. 24 மணி நேரத்திற்கு ஒரு தடவை படம் பிடிக்கிறது. அந்த நகலமைப்பை உங்களுடைய விரலியில் வைத்துக் கொள்ளலாம். external hard disk எனும் வெளியே இருக்கும் வன்தட்டிலும் பதிந்து கொள்ளலாம். சரியா.
கணினிக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய சுனாமியே வந்து தீர்த்தாபிஷேகம் செய்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள். இல்லை உங்கள் வீட்டில் இருக்கும் வாண்டுகளில் ஒருவர், நீங்கள் இல்லாத போது, கணினிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, தீபாவளிக் குளியல் செய்து விட்டார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் ஆவணங்கள், தரவுகள் எல்லாமே அப்படியே இருக்கும். அந்த நிரலிதான் ஏற்கனவே, உங்கள் கணினியின் தரவுகளைப் படம் பிடித்து வைத்து இருக்கிறதே. ஆக, கணினியைப் பயன்படுத்த முடிகிறதோ இல்லையோ, உங்களின் விலை மதிப்பற்ற தகவல்களுக்கு ஒன்றும் ஆகாது.
வேறொரு கணினியில் அந்த நிரலியைக் கொண்டு போய், பழைய கணினியின் இயக்கத்தை மறுபடியும் கொண்டு வந்துவிடலாம். இதைத்தான் Drive SnapShot என்று சொல்கிறார்கள். தமிழில் மொழி பெயர்த்தால் ’நொடிப்பெடுப்பு’ என்று வருகிறது. அதற்கு ஒரு நல்ல சொல்லைத் தேர்ந்தெடுத்து பிறகு சொல்கிறேன்.
அந்த நிரலியின் விலை 89 யூரோ டாலர்கள். மலேசிய காசிற்கு 450 ரிங்கிட். அதைத் தயாரித்தவர்கள் என்னவோ 200,000 டாலர்கள் செலவு செய்து இருக்கிறார்கள். ஆனால், இரண்டு மில்லியன் சம்பாதித்து விட்டார்கள். அந்த நிரலியைக் கனடாவில் உள்ள ஒரு கணினியாளர் அனுமதி உரிமையுடன் எனக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
வேண்டும் என்பவர்கள் எனக்கு அழையுங்கள். அல்லது என்னுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறேன். சும்மா இலவசமாகக் கிடைக்கவில்லை. சேவைக் கட்டணம் உண்டு. இருந்தாலும் பரவாயில்லை. தினக்குரல் வாசகர்களுக்காக இலவசமாக வழங்குகிறேன். இன்னும் ஒன்று. இது கைப்பேசியின் மூலமாக அனுப்புகிற சங்கதி இல்லை. மின்னஞ்சல் மூலமாகத்தான் அனுப்ப முடியும்.
கதிரவன் கலைமகள், தாமான் பெர்த்துவா, ஈப்போ
கே: என்னுடைய கணினியில் தொடர்ந்து ’பீப் பீப்’ ஒலி நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கணினியைத் திறந்ததும் அந்தச் சத்தம் வருகிறது. பயந்து கொண்டு, நான் கணினியை அடைத்துவிட்டேன். சில நாட்களாகத் திறக்கவே இல்லை. என்ன கோளாறு என்று தெரியவில்லை. கணினிக்கு பெரிய கோளாறு எதுவும் இல்லை என்று சொல்லுங்கள். அப்போதுதான் என் மனசு சந்தோஷம் அடையும்.
ப: பெரிய கோளாறு எதுவும் இல்லை. இப்ப சந்தோஷம்தானே! அந்த மாதிரி தொடர்ந்து Beep… Beep... சத்தம் வந்தால், உங்களுடைய தட்டச்சுப் பலகையில் கோளாறு என்று நினைத்துக் கொள்ளுங்கள். தட்டச்சுப் பலகை என்றால் Keyboard. அதில் ஏதோ ஒரு பொத்தான் அல்லது சில பொத்தான்கள் பயங்கரமான கீழறுப்பு வேலைகளைச் செய்து கொண்டு இருக்கின்றன என்று நினைத்துக் கொள்ளுங்கள்

அந்தத் தட்டச்சுப் பலகையை அப்படியே கழற்றி, கீழே தரையில் வைத்து, அதன் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டுங்கள். சின்னதாக ஒரு தட்டு போதும். அதற்கு என்று உங்கள் ஆத்திரத்தை எல்லாம் அதன் மேல் காட்ட வேண்டாம். வாயில்லாத ஜீவன். பாவம், அதற்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் தட்டச்சுப் பலகையை, கணினியில் இணைத்துப் பாருங்கள். பிரச்னை தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப நாளைக்கு முன்பு, அந்த மாதிரி ஒரு தீவிரமான ஆராய்ச்சி பண்ணி, ஒரு பெரிய சாதனை பண்ணியதாக ஒரு நினைப்பு எனக்கு இன்னும் இருக்கிறது.
அப்படியும் ஒன்றும் சரிபட்டு வரவில்லை என்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என்ன வழி தெரியுமா. புதிதாக ஒன்றை வாங்கி விடுவதுதான். அதைவிட சிறந்த வழி இல்லை. சரிங்களா. விலை என்ன… ஒரு 15 லிருந்து 35 ரிங்கிட்டிற்குள் இருக்கும். எவ்வளோ பண்றோம். இதை பண்ண முடியாதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக