Koovamal Koovum Kokilam
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே (கூவாமல்)
.
கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை பேதமில்லை - அன்பு
தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே
.
கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்த்தைகள் ஏனோ
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
மணமகள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ?
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே (கூவாமல்)
https://youtu.be/EJNnLfl7T0E
திரைப்படம்: வைரமாலை
ஆண்டு: 1954
பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்;
இயற்றியவர்: கண்ணதாசன்;
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி;
நடிப்பு: மனோகர், பத்மினி.
மீண்டும் பழைய ஞாபகம். அற்புதமானப் பாடல்! ஆனால் இயற்றியவர் கண்ணதாசன் என்பதில் சந்தகமே!
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குSuperb Tune And Dong
பதிலளிநீக்கு