15 ஆகஸ்ட் 2016

ஜன கண மன


இந்திய நாட்டுப்பண். வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றியது. இந்தக் கீதத்தை முழுவதாகப் பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கும். 
தாகூர் இதை எழுதிய காலத்தில் வங்கப் பிரிவினை அமலில் இருந்தது. அந்த வலியோடு இப்பாடலை இயற்றினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை 'God save the queen' என்கிற பாடலைத் தான் பாடிக் கொண்டு இருந்தார்கள்.

ஜன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா
தவ சுப நாமே சாகே
தவ சுப ஆசிச மாகே
காகே தவ செய காதா
ஜன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா
செய கே, செய கே, செய கே
செய செய செய, செய கே

1911-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது இந்தப் பாடல் பாடப் பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

இந்தப் பாடலைப் பாடியவாறே விடுதலைப் போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் இந்தப் பாடலைப் பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது. 

இந்தப் பாடலை 1919-இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ் கவிஞர் ஆந்திராவில் பாடினார். அதைத் தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் பிரார்த்தனைப் பாடலாகப் பாட... தாகூர் அந்த பாடலைத் தானே ஆங்கிலத்தில் "The Morning song of India " என்று மொழிபெயர்த்து இசையும் அமைத்தார் .

1943-இல் ஜன கண மன... நேதாஜி உருவாக்கிய இந்திய தேசியப் படையின் தேசியப் பாடலானது. 1950-ஆம் வருடம் ஜனவரி 24 தேதி இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக... தேச பக்தியின் அடையாளமாக... உயர்ந்து நிற்கிறது.

’என் பொன் வங்கமே’ என்கிற பொருளில் தாகூர் எழுதிய மற்றும் ஒரு பாடல் ’அமர் சோனா பங்களா’... 1971-இல் வங்காள தேசத்தின் தேசிய கீதமானது.




1950-ஆம் ஆண்டு ஜனவரியில் ’ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும்...’ வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும்... இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப் பட்டது. (தொகுப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் -*தமிழ் முத்துகள்*-)

1 கருத்து: