வயதான ஒரு தாத்தாவின் மீது ஒரு சுவர் சரிந்து விழுந்தது. அவர் இறந்து விட்டார். சுவரைக் கட்டிய கொத்தனார் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’என் மீது தவறு இல்லை. மண்ணையும் சிமெண்டையும் குழைத்தவன் தான் சரியாகக் குழைக்கவில்லை’
மண்ணைக் குழைத்தவன் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’நான் தவறு செய்யவில்லை. தண்ணீர் ஊற்றும் பானை வாய் அகலம். அதனால் தவறு நடந்து விட்டது’ என்றான்.
பானைக்காரன் மீது வழக்கு போடப் பட்டது. அதற்குப் பானைக்காரன் சொன்னான் ‘நான் பானையை ஒழுங்காகத் தான் செய்தேன். அப்போது ஒரு நாட்டியகாரி அந்த வழியாகப் போனாள். அதனால் தான் பானை இப்படி ஆகிவிட்டது’ என்றான்.
நாட்டியக்காரி மீது வழக்கு போடப் பட்டது. அதற்கு அவள் ‘நான் ஒரு வண்ணானிடம் துணி துவைக்க கொடுத்து இருந்தேன். அதை வாங்கத் தான் அந்த வழியாகப் போனேன்’ என்றாள்.

வண்ணான் மீது வழக்கு போடப் பட்டது. வண்ணான் சொன்னான் ’நான் சலவை போடும் கல்லின் மீது ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் தான் காரணம்’ என்றான்.
முனிவரிடம் போய் கேட்டார்கள். பாவம் அவர். அமைதியாகத் தியானத்தில் இருந்தார். ’இந்த ஆள்தான் காரணம்’ என்று சொல்லி அவரைக் கொன்று விட்டார்கள்.
யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிக்கும் காலம் இது. அதற்குப் பெயர் தான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக