ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று.
அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில்.
அதற்கு குரங்கோ, "மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.
அதற்கு குரங்கோ, "மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.
அழகாக பாடி மனிதர்களைச் சந்தோசப் படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலைக் கேட்டு மகிழ்கின்றனர்.
அவர்களைச் சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்தக் குயிலே இறைவனின் அற்புதப் படைப்பு" என்றது.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்று கத்தத் தொடங்கியது. அதன் கர்ண கொடூரச் சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்துத் தோப்புக்குள் விரட்டினார்கள் .
நீதி: பிரபுதேவாவால் பாலசுப்பிரமணியம் போல பாட முடியாது. பாலசுப்பிரமணியத்தால் பிரபுதேவா போல ஆட முடியாது.

உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையே இல்லை.
நம்மளுடைய திறமையை நாமே வைத்துக்கொண்டு என்ன செய்வது? அடுத்தவர் சொல்வதை வைத்தே நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்! நம்மளுடைய திறமை 100 % சரியானதா என்பதை யார் நிற்னைப்பது?
பதிலளிநீக்குநீதியின் உவமை அருமை ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குஇந்த உவமைக்கு சொல்லப்பட்டவர்கள் இருவருமே தமிழர்கள் கிடையாது என்ன செய்வது தமிழ்த்திரையுலகில் தமிழரை தேட வேண்டியநிலை.