கோவையில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவை மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தனமணி வெங்கட் என்ற பெண் உறுப்பினர்
தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்; தமிழர்கள் லெமூரியா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என தமிழர்களை இழிவாகப் பேசி இருக்கிறார்.
அதற்குப் பதிலடி கொடுத்த கவிஞர் தாமரை இது தமிழர் மண்... ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறி இருக்கிறார்.
இது தமிழர் மண்; தமிழே இங்கு மொழி; தமிழ்த் தேசியமே எங்கள் அரசியல்; *தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம்*. இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என கவிஞர் தாமரை ஆவேசம் காட்டியுள்ளார்.
நெடுநாட்களாக திரைப்படத் துறையில் ஆண் கவிஞர்களே கோலோச்சி வந்த சூழலில், ஆபாசம் – அயல்மொழி கலப்பின்றி பெண்ணிய உணர்வுப் பாடல்களை எழுதி தேர்ந்தவர் கவிஞர் தாமரை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டவர். அத்தகைய தாமரை, காட்டமான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.
“தமிழகத்திலேயே தமிழர்களை வந்தேறிகள் என்றும், தெலுங்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்றும் ஓர் அரசியல்வாதியால் பேச முடிகிறது என்றால் திராவிட தேசியம் தனக்கான கடைசி ஆப்பையும் வைத்துக் கொண்டது என்று பொருள்.
தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்; தமிழர்கள் லெமூரியா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என தமிழர்களை இழிவாகப் பேசி இருக்கிறார்.
அதற்குப் பதிலடி கொடுத்த கவிஞர் தாமரை இது தமிழர் மண்... ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறி இருக்கிறார்.
கவிஞர் தாமரை |
எதோ தாமரைக்காவது ரோசம் வந்ததே அது வரைக்கும் மகிழ்ச்சி!
பதிலளிநீக்கு