மலேசியாவில் பெரும்பாலும் இப்போது 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மலேசியா 5ஜி தொழில்நுட்பத்திற்கு வந்துவிட்டாலும் இன்னும் முறையாக அமலுக்கு வரவில்லை. இன்னும் சில காலம் பிடிக்கலாம். தொடக்கச் சோதனைகள் எல்லாம் முடிந்து விட்டன.
நீங்கள் பயன்படுத்தும் அண்ட்ரோயிட் திறன்பேசிகள் 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. பெரும்பாலானவை. ஏன் என்றால் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொண்டால் 5ஜி தொழில்நுட்பத்தையும் உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. கவலை வேண்டாம்.
சமயங்களில் சில வகை திறன்பேசிகள் 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளா. ரொம்பவும் பழைய மாடலாக இருந்தால் அந்தப் பிரச்சினை வரலாம். தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசா ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பழைய மாட்டுக் காடியை ஏன் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு போக வேண்டும்?

நாம் நாட்டில் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் மெக்சிஸ், செல்கோம், டிஜி, யூ மொபைல், டியூன் டால்க், ரெட் டோன் மொபைல் போன்றவை. இவை தான் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. 5ஜி தொழில்நுட்பம் வந்ததும் உங்களுடைய திறன்பேசி ‘ஆட்டோமெட்டிக்’காக அந்த 5ஜி-யை ஏற்றுக் கொள்ளும்.
அப்புறம் என்ன. நாலைந்து விநாடிகளில் ஒரு திரைப்படத்தை உங்கள் திறன்பேசிக்குள் பதிவிறக்கம் செய்து விடலாம். பார்க்கத் தான் உங்களுக்கு நேரம் இருக்காது.
அப்புறம் என்ன. நாலைந்து விநாடிகளில் ஒரு திரைப்படத்தை உங்கள் திறன்பேசிக்குள் பதிவிறக்கம் செய்து விடலாம். பார்க்கத் தான் உங்களுக்கு நேரம் இருக்காது.
இன்னும் ஒரு விசயம். Mobile Data பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Wifi பயன்படுத்தினால் கவலையே இல்லை. அதற்காக வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு பார்க்கச் சொல்லவில்லை. புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்காகச் சொல்ல வருகிறேன். (முகிணன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக