08 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 04.07.2019 - தவறுகளை மறப்போம்

தவறுகள் தான் நமக்கு புதிய அனுபவங்களைத் தருகின்றன.... அந்தப் புதிய அனுபவங்கள் தான் புதிய தவறுகளைக் குறைக்கச் செய்கின்றன...


தவறுகளை மறப்போம்... தவறு செய்தவர்களை மன்னிப்போம்... அதுவே மனுக்குலத்தின் நியதி...

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Manickam Nadeson அனுபவப் பாடம் ஒருவர திருந்துவதற்கு தான், ஆனால் ஒரு சிலர் என்ன தான் அனுபவ பாடம் கற்றாலும் திருந்தவதே இல்லை, செய்த தவற்றை மீண்டும் மீண்டும் தொடர்வதே, வேதனையாக இருக்கிறது.

Muthukrishnan Ipoh சிலர் திருந்துவதே இல்லை... என்ன செய்யலாம் சார்.... தண்ணீர் இல்லாத காட்டிற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கலாம் என்று நண்பர் சொல்கிறார்....😆😆

Neela Vanam >>> Muthukrishnan Ipoh வணக்கம் ஐயா பொறுப்பாக எழுதுவோருக்கு பொறுப்பாகவும் இடக்கு முடக்காக எழுதுவோருக்கு அவர் பாணியிலம் எழுதலாம் பிடிக்க வில்லை என்றால் தவிர்த்து விடலாம் அதற்காக தண்ணீர் இல்லாத இடத்துக்கு அனுப்பி எழுதுபவரின் ஆர்வத்தை மட்டுப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன் தவறாக தோன்றினால் மன்னிக்கவும்

Barnabas மன்னிப்பதும் மறப்பதும்மட்டுமல்ல மன்னிப்பை ஏற்றுக்கொள்வதும் மனித மாண்பு.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக