14 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 16.07.2019 - நேற்றைய கவலை

நேற்றைய கவலையை நேற்றோடு மறப்போம். இன்றைய பொழுதை மகிழ்ச்சியுடன் பார்ப்போம். சரி. இன்றைக்கு ஒரு குட்டிக்கதை...

அடை மழை. துறவிகள் இருவர். ஒரு குடிசையின் கீழ் நிற்கின்றனர். மழை நின்றது. இருப்பிடத்தை நோக்கி நகர்கின்றனர்.


அப்போது ஓர் அழகான இளம் பெண். சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றாள். துறவிகளில் ஒருவர் என்னாச்சு... உதவி தேவையா என்று கேட்கிறார்.

சாலை முழுவதும் சகதி. பட்டுப் பாவாடை பாழாகிவிடும் என்கிறாள். கவலை வேண்டாம்... என் தோள்களில் ஏறிக்கொள் என்று கூறி உதவி செய்கிறார்.

மற்ற துறவி கோபமாக ’ஒரு பெண்ணை ஒரு துறவி தொட்டுத் தூக்கியது தவறு’ என்கிறான்.

உதவி செய்த துறவி சொல்கிறார். அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கி விட்டு வந்து விட்டேன். நீ தான் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய் என்கிறார்.

அதே போல நாமும் நம் வாழ்வில் மற்றவர் ஏற்படுத்திய வேதனைகளை ஒவ்வொரு நாளும் தூக்கிக் கொண்டு அலைகிறோம். வேண்டாமே... தூக்கி எறியுங்கள். புதிய சிந்தனை... புதிய பாதை... புதிய மலர்ச்சி. போய்க் கொண்டே இருங்கள். நீங்கள் நீங்களாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Doraisamy Lakshamanan உலகமக்கள் அனைவரோடும் இணைந்திருக்கக் கற்றுக் கொடுங்கள் ஐயா. உங்கள் பேரறிவின் பெருந்துணையால் உலகத் தமிழினம் உயர்க் கல்வி பெற்று உலக மக்களுடன் நிகராக நிலைத்து வாழ உங்களால் மட்டுமே முடியுமென உறுதியாக நம்புகிறோம் ஐயா திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களே!

 
Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றி... எழுத்துகளின் வழி இயன்றதைச் செய்வோம்...நல்லவற்றைச் செய்வோம் ஐயா...

Thennarasu Sinniah அருமை..வாழ்வியல் உண்மை.

Bala Sena குட்டிக்கதையாக இருந்தாலும் அர்த்தம் நிறைந்தது ஐயா..

Chitra Ramasamy வணக்கம்.. குட்டி கதை தான் ஆனால் வாழ்வில் நிறைய அர்த்தங்களை கொடுக்கk கூடிய ஒன்று

Barnabas இனிய வணக்கம். புரிதலில்லையேல் (நாய் குரைப்பதை கண்டு கொள்ளாதது போல் விலகிச் செல்வது புத்திசாலித்தனம். புரிந்து கொண்ட நாய் சத்தியமாய் குரைக்காது.) நாம் ஏன் கவலைப்பட்டு நம் நிம்மதியை இழக்க வேண்டும்?

Image may contain: indoor 

Image may contain: 1 person 

No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக