14 செப்டம்பர் 2019

கேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்கள்

1920-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலைக் காடுகளில் சாலை அமைக்கப் போன தமிழர்கள் சிலர் அங்குள்ள ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். அது ஒரு வரலாற்றுச் சுவடு. இந்தச் செய்தி எத்தனைப் பேருக்குத் தெரியும்.

1.CH Road Construcation 1928

1926-ஆம் ஆண்டு தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க மலாயா ஆங்கிலேய அரசு திட்டம் வகுத்தது. பத்து மில்லியன் மலாயா டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி பார்த்தால் முன்னூறு நானூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும்.

சாலை அமைப்பிற்கு போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1930 நவம்பர் 14-ஆம் தேதி முடிவுற்றது.

2.CH Road Construcation 1929

அது ஒரு சவால் மிக்க நிர்மாணிப்புப் பணி. குதிரை அல்லது மாட்டு வண்டிகளில் தளவாடப் பொருட்கள் தாப்பா நகரில் இருந்து கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் மூலமாக இரும்புத் தளவாடப் பொருட்கள் மேலே கொண்டு செல்லப் பட்டன.

கல் பாறைகளை உடைப்பதற்கு அதி நீர் அழுத்தத்தில் பாறை உடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். சாலையின் நீளம் 51 மைல்கள்.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தார்கள். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் பட்டார்கள். சிலர் காடுகளிலேயே இறந்தும் போனார்கள்.

3.CH Road Construcation 1930

ஒரு சில தமிழர்கள் காட்டுக்குள் போய் காணாமல் போனார்கள். போனவர்கள் அப்படியே காட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெளியே வரவில்லை.

பல மாதங்கள் ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள். அப்படியே ஓராங் அஸ்லி பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு மறைவு வாழ்க்கை. சாலை நிர்மாணிப்புப் பணிகள் முடிந்தததும் இவர்களும் வெளியே நடமாட ஆரம்பித்தார்கள்.

ஆனால் சொந்த ஊர்களுக்கு அவர்கள் செல்லவில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு காட்டிலேயே குடும்பம் அமைந்து விட்டது. விட்டுப் போக மனம் இல்லாமல் அவர்கள் ஓராங் அஸ்லி போல வாழ ஆரம்பித்தார்கள்.

4.Cameron Highlands Tanah Rata 1940

அந்த மாதிரி காட்டுக்குள் போன நம்ப மன்மத ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனை பேருக்குத் தெரியும்

அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். இந்திய லாவண்யம் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும்.

சும்மா சொல்லக் கூடாது. இந்தியச் சாமுத்திரிகா இலட்சணம் எங்கே எல்லாம் போய் விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா. பெருமையுடன் பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப் பட்டது. அதாவது ரிங்க்லெட் வரையில். அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள்.

5.Tapah CH 22.11.1950

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப் பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேமரன் மலையில் வீடுகள், பங்களாக்களைக் கட்டிக் கொண்டார்கள்.

1929-இல் போ தேயிலைத் தோட்டம் உருவானது. அப்புறம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

காட்டுக்குள் மாயமாய் மறைந்து போன தமிழர்களின் வாரிசுகளைத் தேடிப் பிடிப்பதும் பெரிய வேலை. அந்த ஒராங் அஸ்லி தமிழர்களின் வரலாற்றை எழுதுவதும் பெரிய வேலை. வரலாறு எழுதப்பட்டு வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்

1. Shennan, Margaret (2000). Out in the Midday Sun: The British in Malaya 1880–1960. John Murray (Publishers) Ltd. p. 128.

2. ROAD TO CAMERON'S HIGHLANDS, The Straits Times, Tuesday, 3 March 1931. p. 12.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Thayalan Muniandy Hi... I’m tour guide... Used to do a tour in Cameron highland... But this is a new information about orang asli

Muthukrishnan Ipoh This truth is known to many...but the upper hands had subdued the realm...

Kanayaran Papaiah Interesting historical data Syabas well done Sir

Manimaran Govindaraj ஆண்டது ஆண்டியாவதும் ஆண்டியானது ஆண்டதும் ஊழ்தானே?

Kumaravel Muthu Goundan கடந்த 70 வருடங்களுக்கு மேல் கேமரன் மலையில் வசிக்கும் நான் அறிந்திடாத பல அரிய தகவல்களுக்கு நன்றி.

கேமரன் மலையின் இன்றைய வளர்ச்சிக்கு தமிழர்களின் அபரிமிதமான உழைப்பும் பங்களிப்பும் முக்கியமானவை... புதைந்து கிடக்கும் கேமரன் மலை தமிழர்களின் சரித்திரத்தை வெளிக் கொணர நீங்கள் முயற்சிக்க வேண்டும்.


Muthukrishnan Ipoh கேமரன் மலை தமிழர்களைப் பற்றி ஆய்வு செய்தால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம் சார்... தமிழர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்...

Kumaravel Muthu Goundan Muthukrishnan Ipoh உண்மைதான் அய்யா.... கேமரன் மலை தமிழர்களின் சரித்திரம்... கடந்த 90 வருடங்களில்... மலேசியாவில் ஒரு மாவட்டமே தமிழர்களின் கடும் உழைப்பால் வளர்ச்சி அடைந்தது என்றால் அது கேமரன் மலை மாவட்டமாக த்தான் இருக்கும்.

அத்தகைய உழைப்பாளித் தமிழர்களின் சரித்திரம் வெளிவர நானும் எனது நண்பர்களும் உங்களுக்கு துணை வருவோம்.


Muthukrishnan Ipoh முயற்சி எடுத்து களத்தில் இறங்க வேண்டும்... பார்ப்போம் ஐயா...

Sathya Raman என் குழந்தை பருவம் முதல் குமரிப் பருவம் வரை கேமரன் மலை போ தோட்டத்தில் தான் வசந்த காலமாய் அமைந்தது. கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட இந்த ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலையில் நிரம்பி வழிந்தனர். 
சென்ரல் டிவிசனில் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டப் படும் தமிழ் திரைப் படங்களை காண்பதற்காகத் தியேட்டரில் முதல் இரண்டு வரிசையில் போய் அமர்ந்து கொண்டு அமர்களப் படுத்தும் அஸ்லிகாரர்களை மறக்கவே முடியாது. 
ஆனால் அவர்கள் பிடிக்கும் சுருட்டின் வாடையை மட்டும் இப்போது நினைத்தாலும்????? ஊவே. 🙆🙆🙆



Kalai Mani அருமையான வரலாற்றுப் பதிவு. வேறு யாரும் எழுத முன்வராத தமிழர்கள் வாழ்ந்த சுவடுகளை திரைப் படம் போல் கண் முன்னே கொண்டு வந்த பெருமை ஐயா முத்து அவர்களையே சாரும்.

Muthukrishnan Ipoh மலேசியாவில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் தமிழர்களைப் பற்றிய ஒரு வரலாறு இருக்கிறதுங்க...

Palar Thangamarimuthu Arumai vaazhtthukkal thodaraddum Thamizhar payanitthlla vaazhkkaippathivugal (அருமை... வாழ்த்துகள்... தொடரட்டும் தமிழர் பயணித்த வாழ்கைப் பதிவுகள்)


Sathya Raman தங்களின் அயராத தேடல்கள் பிரமிக்க வைக்கிறது சார். இதற்காக நீங்கள் செய்யும் வீட்டுப் பாடங்கள் அளப்பறியது. தொடருங்கள் சார். உங்களின் பகிர்வுகளைப் படித்துப் படித்து ஞாபக சக்தியை உசுப்பேற்றுகிறோம்.🙏 


Sri Kaali Karuppar Ubaasagar அருமையான தகவல் அண்ணா..வாழ்க தமிழர்களை பற்றிய உங்கள் ஆய்வுகள்🙌🙏🏵 


Rajaletchemy Hemy ஆண்ட நம் இனம் ஆளப் பெற்றது 


Ganabaskaran Nadason தமிழர்களின் வரலாற்றினை மிகவும் சிரமப்பட்டு தேடி சிறப்பாக வழங்கிவரும் தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Melur Manoharan தங்களின் "வரலாற்று" பதிவு "பிரமிப்பாக" இருந்தது...! நன்றி...! 

Veerayah Gopal தெரிந்து கொள்ள வேண்டியவை. முன்னாள் மாணவர்கள் இயக்கம் SRJK(T) சுப்பரமணிய பாரதி, பினாங்கு.

M R Tanasegaran Rengasamy தமிழன் தடம் பதித்த இடங்களெல்லாம் தங்கமாய் மிளிர்கின்றன. நல்ல பதிவு. வாழ்த்துகள்.

Manickam Nadeson என்னை மாதிரியே கேமரன் மலையில யாரையோ ஓராங் அஸ்லிய பாத்ததா என் நண்பர் சொன்னாரு, அது இதுவா இருக்குமோ???

Muthukrishnan Ipoh உணமை ஐயா... ஒருவர் அல்ல... ஐந்து ஆறு பேர் உங்க மாதிரியே இருக்காங்களாம்... எதற்கும் ஒற்றுமைத் துறை அமைச்சரிடம் சொல்லி வைப்போம்... 😆😆😆 


Thanga Raju அற்புதமான பதிவுகள் தலைவரே

Raily Muniandy மறைந்து போன தமிழரின் தடங்களைக் கண் முன் நிறுத்தி உள்ளீர்கள் ஐயா. நன்றி. 


Mageswary Muthiah இன்னும் எவ்வளவு ரகசியம் புதைந்த கிடக்கிறது நம் மலேசிய தமிழர்களை பற்றி. ?

Maana Mackeen வாழ்க நீ எம்மான் - ஆய்வில் முக்குளிப்பதற்காக..

Krishnan Ramiah சிறப்பான வரலாற்று பதிவுக்கு நன்றி ஐயா.

Inbachudar Muthuchandran ஒர் அருமையான தொகுப்பு

Mydeen Saleem அருமையான தகவல் (வரலாறு)

Jeya Balan அருமை ஐயா உங்கள் சேவை அளப்பரியது ! வாழ்த்துகள்.

மாரியப்பன் முத்துசாமி மாரியப்பன் முத்துசாமி அற்புதமான பதிவு. உங்களை நிறையவே பாராட்டலாம்

Bala Sena தங்களது ஒவ்வொரு பதிவையும் படித்து அறிந்து கொள்ள சுவையான தகவல் ஐயா

Macho Bala அருமையான ஒரு வரலாற்றுப் பதிவு

Letchumanan Nadason நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பு. அருமையான பதிவு. நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மலேசிய நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றியவர்கள்  இந்தியர்கள்...

Samugam Veerappan கடந்த கால சிறப்புகள் கண் முன்னே தெரிந்து கொள்ள முடிகிறது.

K.V. Rajoo Kaliapa அருமையான👌வரலாற்று பதிவு...வாழ்த்துகள்

Ramaiah Paidiah மாமா ஒரு பல்கலைக்கழகம் !!

Raghavan Raman மற்றும் ஒரு புதிய தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி.

Ganabaskaran Nadason 👏 உங்களது அரும்பணிக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Vejaya Kumaran amerikawil aaprikargalai (அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை)
kodumai (கொடுமை)
paduttiyathu (படுத்தியது)
pol ithuvum britis (போல் இதுவும் பிரிட்டிஷ்)
arasaanggam (அரசாங்கம்)
tamilargaluku (தமிழர்களுக்கு)
seithathu kodumaye.ulagil (செய்தது கொடுமையே. உலகில்)
ulla tamil (உள்ள தமிழ்)
sonthanggaluku (சொந்தங்களுக்கு)
yetho oru (ஏதோ ஒரு)
wagaiyinil (வகையினில்)
nadanthathu (நடந்தது)
kodumaiye.... (கொடுமையே)
jappaaniyar (ஜப்பானியர்)
malaayavil potta (மலாயாவில் போட்ட)
aaatanggal (ஆட்டங்கள்)
kathayai (கதையை)
konjam koorawum (கொஞ்சம் கூறவும்)
ayyaa... (ஐயா)


Murugan Rajoo தமிழர்கள் உலகை வணிக ரீதியில் பயணித்து பொருளாதார வலு பெற்று செம்மையாக வாழ்ந்தனர்.

ஆரிய அயோக்கியர்களின் தீய செயலும், யூதர்களின் திருட்டு வேலைகளும் தமிழினத்தையும், தமிழர்களின் தொன்மைகளையும் திட்டமிட்டழித்து சின்னா பின்னம் ஆக்கினர்.

பிறகு வந்த கொடுங்கோல் ஆட்சியான பிரிட்டிசு காலணி ஆட்சியோ தமிழர்களை பல நாடுகளுக்கு கூலி அடிமைகளாய் கொண்டு சேர்த்தனர்.

ஆங்காங்கு கொண்டு சென்ற தமிழர்களை வைத்து காடுகளை அழித்து சாலைகளை அமைத்து, தோட்டங்களை உருவாக்கி, கட்டிடங்களை கட்டி, அந்த அந்த நாட்டை பொன் படுத்தி வளங்களையும், செல்வங்களையும் கொள்ளை அடித்தனர்.

இறுதியாக தமிழர்களை நட்டாற்றில் விட்டு விட்டு சென்றனர் பிரிட்டிசு கயவர்கள்


Muthukrishnan Ipoh மலேசியத் தமிழர்களின் காலச் சுவடுகள் கண்ணீரில் எழுதப்பட வேண்டியவை...

Yogavin Yogavins Wow... Good job sir

Rajandran Arasan சரியான போடு. வாழ்த்துக்கள்.

Sinnappn Sinnappan அற்புதம்

Sivalingam Muniyandi ஓர் உற்சாகம் கொடி கட்டிப் பறக்கிறது, அந்தரங்க சோகங்களுடன்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக