22 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 17.07.2019 - சுறுசுறுப்பு டானிக்

இன்றைக்கு ஒரு குட்டிக் கதை... அது ஒரு தெருச் சந்தை. அங்கே ஓர் இளைஞன். கையில் சின்னச் சின்னப் பாட்டில்கள்.

சுறுசுறுப்பு டானிக்… சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு தேக்கரண்டி... மாலையில் ஒரு தேக்கரண்டி... அம்புட்டுத்தான்... நாள் பூராவும் சுறுசுறுப்பாக இருக்கலாம்... என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டு இருந்தான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள். சாப்பிட்டார்கள். சந்தோஷப் பட்டார்கள்.

கொடுத்த காசு வீண் போகவில்லை. சுறுசுறுப்பான டானிக் தான். தீர்ந்து போனதும் அவனைத் தேடிப் போனார்கள். ஆள் அட்ரஸ் இல்லை. காணாமல் போய் விட்டான்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அதே அந்த இளைஞன் சந்தையில் மிட்டாய் விற்றுக் கொண்டு இருந்தான்.

அடடா தம்பி... உங்களை எங்கே எல்லாம் தேடுவது. அந்தச் சுறுசுறுப்பு டானிக் இன்னும் வேண்டும்... இத்தனை நாளும் எங்கே போனாய்...

ஜெயிலில் இருந்தேன்...

ஏன்... என்னாச்சு...

போலி மருந்து விற்றதுக்காக இரண்டு வருசம் ஜெயில்...

உங்க மருந்து போலி மருந்தா... எவன் சொன்னது... உங்க மருந்தைச் சாப்பிட்டு நான் ரொம்பவும் சுறுசுறுப்பா இருந்தேன் தெரியும்...

அது எல்லாம் இல்லீங்க... வெறும் பச்சை தண்ணியிலே சீரகம், சீனி, சோம்பு, வெந்தயத்தை இடிச்சி போட்டு விற்றேன்...

அப்படின்னா... எங்களுக்குச் சுறுசுறுப்பு கொடுத்தது...

அது உங்கள் நம்பிக்கை அண்ணாச்சி...

நம்பிக்கை என்பது மருந்து மாத்திரை இல்லைங்க. அது தான் வாழ்க்கையின் உந்து சக்தி. நம்பிக்கை இருக்கும் வரையில் இழந்தவை எல்லாம் கிடைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் சரியாகிவிடும் என்று இயங்குங்கள. எல்லாமே அழகாகி விடும். நம்புங்கள் நல்லதே நடக்கும்.

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Mageswary Muthiah
Image may contain: text, outdoor and nature


Raja Mutukumar
Image may contain: flower, text and nature


Tamil Zakir
Image may contain: outdoor and nature


Thanabaal Varmen
Image may contain: tree, outdoor and nature

Manickam Nadeson நம்பிக் கையை வச்சேன் இப்போ சிறையில இருக்கேன்... ஆமாம் ஐயா சார்... நான் கையை வச்சது கே.எப்.சி. கல்லாவுல.


Muthukrishnan Ipoh கிண்டல் மன்னன் மாணிக்கம் அவர்களுக்கு வணக்கம்... வாழ்த்துகள்...

Manickam Nadeson Muthukrishnan Ipoh பட்டம் வேற குடுத்துட்டீங்களா, நன்றி ஐயா சார். எப்ப பணமுடிப்பு தருவீங்க??? கையில காசு வேற இல்லீங்க ஐயா சார்.

Sheila Mohan இனிய வணக்கம். தன்னம்பிக்கை மிக்க குட்டிக்கதை , அருமைங்க சார்....!!

Santhanam Baskaran இனிய வணக்கம் ஐயா.
இந்நாள் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகட்டும்.


Rajaletchumy Manimegan வணக்கம் சார்.....குட்டி கதையாக இருந்தாலும் அதில் உள்ள கருத்து உணர்வு பூர்வமானது நன்றி சார்...

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Image may contain: indoor


Indra Balakrishnan வணக்கம்...M R Tanasegaran Rengasamy எது எப்படியோ... இளைஞன் விற்ற சீரகம், சீனி, சோம்பு, வெந்தயக் கலவை நமது முன்னோர்களின் ஐந்தறைப் பெட்டி நாட்டு மருந்துதான்... என்றாலும் கதையில் வரும் நம்பிக்கை விதை கைகண்ட மாமருந்து. சிறப்பு...

Letchumanan Nadason தன்னம்பிக்கையூட்டும் அருமையான குட்டிக்கதை.

Barnabas இனிய காலை வணக்கம். நம்பிகைக்கு ஒரு நல்ல குட்டிக்கதை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக