22 செப்டம்பர் 2019

மலாயா தோட்டத்துப் பெண்கள் - 1907






இந்தப் படங்களைப் பற்றி பலவிதமான கருத்துகள். பலவிதமான ஆருடங்கள். அந்தக் காலத்து மலாயா ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் படங்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. ஒரு பொதுவான பார்வை.

மலாயாவில் எந்த இடத்தில் எப்போது எடுத்த படங்கள் என்று பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய படங்கள் என்றுகூட சொல்லலாம். உண்மையில் இவை ரப்பர் தோட்டத்தில் எடுத்த படங்கள் அல்ல. ஒரு கரும்புத் தோட்டத்தில் எடுத்த படங்கள்.

இந்தப் படங்களின் உண்மையான வரலாறு தெரிய வரும்போது வியப்பு கலந்த அதிர்ச்சிகள் ஏற்படலாம்.

அப்போதைய புரோவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley); இப்போதைய செப்ராங் பிறை பகுதியில் இருந்த சங்காட் தோட்டத்தில் 1907-ஆம் ஆண்டு எடுத்த படங்கள். (Changkat Kledang).

அப்போது சங்காட் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டம். அந்தத் தோட்டத்தை 1851-இல் இருந்து 1914 வரையில் The Penang Sugar Estates Ltd எனும் கரும்புத் தோட்ட நிர்வாகம் நடத்தி வந்தது.

பின்னர் 1917-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டம் ஒரு ரப்பர் தோட்டமாக (changkat estate) மாற்றம் கண்டது.

நிபோங் திபால் கலிடோனியா தோட்டம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்போது இது ஒரு செம்பனைத் தோட்டம். 1960-களில் அது ஒரு ரப்பர் தோட்டம். 1863-ஆம் ஆண்டில் அது ஒரு கரும்பு தோட்டம். அங்கே மூன்று கரும்பு ஆலைகள் இருந்து இருக்கின்றன.

1900-ஆம் ஆண்டில் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள்.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபால் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி.

முதலில் சொல்லப்பட்ட சங்காட் கரும்புத் தோட்டம்... அங்கே தான் செபராங் பிறையின் முதல் தமிழ்ப்பள்ளி உருவானது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்று: The Penang Sugar Estates, Ltd., and the Malayan Sugar Industry, 1851-1914, Lynn Hollen Lees; The Business History Review - Vol. 81, No. 1 (Spring, 2007), pp. 27-57


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Malathi Nair Sir as for now u are the only person who with proof and dare to write the truth even thoe ppl hurt u.respect u

Muthukrishnan Ipoh Thank you for your kind words ... Our research works will continue despite obstacles.

Mangala Gowri நன்றி ஐயா. அந்தப் பெண்கள் அமர்ந்திருக்கும் கோலம் ஏதோ போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு என்றே அமர்ந்து இருப்பதால், உண்மை கதை தெரியாமல் போயிற்று. சார் உங்கள் தொடர்பு எண்கள் வேண்டும். வரலாறு குறித்த சில தகவல்களை தங்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும்...

Muthukrishnan Ipoh உண்மையிலேயே படம் பிடிக்கும் போது என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது... 111 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்... இருப்பினும் நமக்கு என ஒரு வரலாற்றுப் பதிவு கிடைத்து இருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம்.

Sri Kaali Karuppar Ubaasagar இந்த மாதிரி சரித்திர நிகழ்வுகளை..உங்களால் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் நன்றி அண்ணா🙏

Thennarasu Sinniah ஐயா, உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது...வாழ்க பல்லாண்டு...

Muthukrishnan Ipoh நன்றி... நிறைய படிப்பதினால் பல புதிய தகவல்கள் தெரிய வருகின்றன...

Ganesan Nagappan Muthukrishnan Ipoh படிப்பதினால் பல 'புதிய' தகவல்கள் தெரிய வருகின்றன... படிப்பதினால் பல 'பழைய' தகவல்கள் தெரிய வருகின்றன... இதில் எது சரி !? Just kidding ஐயா...

Muthukrishnan Ipoh இரண்டுமே சரிதாங்க... தகவல்கள் தாம் முக்கியம்... பழைய தகவலாக இருந்தாலும் சமகாலத்தில் அறிவிக்கப்படும் போது அது ஒரு புதிய செய்தியாகவே தெரிய வருகிறது....

Kumar Tamil Iyya ஐயா,நெகிழ்வாய் உள்ளது.தொடர்ந்து பதிவிடுங்கள்

Aaravayal Periyaiah நல்ல தகவல்! நன்றி!

Arojunan Veloo மகிழ்ச்சி; பயன்மிகுந்தத் தகவல்

Mageswary Muthiah அருமை அருமை எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

Chitra Ramasamy வணக்கம் ஐயா.. உங்கள் கட்டுரைகள் மூலம் பல வரலாறுகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது..  நன்றி ஐயா

Mahdy Hassan Ibrahim உங்கள் நாட்டு வரலாற்றைத் தொலைவில் இருக்கும் நாமும் சிறிது அறிந்து கொள்ள வழிவகுக்கும் சிறந்த பதிவு!

Muthukrishnan Ipoh நன்றிங்க தலைவரே... உங்களின் நினைவுகள் இலங்கை வானொலியை எப்போதும் நினைவு படுத்துகின்றன...

Bala Sena தெரியாத விடயங்கள் உங்களால் தெரியப் படுகிறது ஐயா..

Inbachudar Muthuchandran நல்ல ஒரு தொகுப்பு அய்யா.நிறைய புதிய விடயங்களை தந்துள்ளீர்கள்.

Chithra Vijayan பல அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

DJbala Bala ஐயா, உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது...வாழ்க பல்லாண்டு...

Tamil Zakir வரலாற்று சுவடுகளை கண்முன்னே நிறுத்தும் கதாமகன் நீங்கள் வாழ்க பல்லாண்டுகள்

Muthiah Sundaram வரலாற்றுச் செய்தி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக