17 டிசம்பர் 2019

மலேசிய இந்திய அமைச்சர்கள் எங்கே போனார்கள் - 23.10.2019

மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் மலேசியச் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். உலகம் அறிந்த விசயம்.


இது தொடர்பாக புக்கிட் அமான் தலைமையகத்தின் வாசலில், நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சி. 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டார்கள். கொட்டும் மழையிலும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி தொடர்ந்தது.

அந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ்; சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ; மற்றும் பொதுமக்கள் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தினார்கள்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் தவறு செய்து இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; சான்றுகள் இருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தார்கள்.



மலேசிய இந்தியர்களுக்கு இப்போது ஓர் இக்கட்டான நிலைமை. ஓர் இக்கட்டான காலக் கட்டம். இப்படி ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் இந்திய அமைச்சர்கள் தான் முன்நிற்க வேண்டும். உதவிக் கரம் நீட்ட வேண்டும். முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

நேற்றைய நிகழ்ச்சியில் எங்கே போனார்கள்? பிசி... அல்லது மீட்டிங்... இருந்து இருக்கலாம். சொல்ல முடியாது.

பொதுவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எவரும் கொடி பிடிக்க வேண்டாம். கட்டிப் பிடிக்க வேண்டாம். பதாகை ஏந்த வேண்டாம். பாட்டுப் பாட வேண்டாம். மைக் டெஸ்டிங் செய்ய வேண்டாம்.

சும்மா ஒரு மனிதநேய ஆதரவு போதுமே. நீயும் மனுசன்... நானும் மனுசன் என்கிற அந்த நினைப்பு போதுமே. எங்கேயா போனது மனிதாபிமானம். எங்கேயா போனது சமுதாய அனுதாபம். எங்கேயா போனது சமுதாய அக்கறை.

போன தேர்தலில் மலேசிய இந்தியர்கள் அள்ளிக் கொட்டிய வாக்குகள் தானே பக்காத்தான் அரசாங்கம் அமைய உதவின. அமைச்சர் பதவிகள் ஒன்றுக்கு மூன்று என்று நான்காய்க் கிடைத்தன. அதை மறக்கலாமா?

ஆக அதே அந்த மலேசிய இந்திய மக்களுக்கே ஆபத்து என்றால் அதைவிட பதவிகள் என்னங்க ரொம்ப முக்கியம்.

வீடு எரிகிறது. வீட்டின் உள்ளே இருக்கும் உயிர்களைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும். காயங்களுக்கு மருந்து போட வேண்டும். அப்புறம் தான் படம் பிடித்து பேப்பரில் போட வேண்டும்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். சுவர் உடை படுகிறது என்றால் சுவருக்கு அரணாக அல்லவா நிற்க வேண்டும்.



பொதுவாகச் சொல்கிறேன். சுவரை வைத்துச் சித்திரம் வரைந்து விட்டு... அந்தச் சித்திரத்தை வைத்து காசு பார்த்து விட்டு... அந்தச் சித்திரத்தை வைத்து என்னையும் பார் என் அழகையும் பார் என்று பாவ்லா காட்டி விட்டு... உடைந்தால் உடையட்டும் என்று வாளா இருப்பதில் நியாயமே இல்லை. சுத்தமாகச் சொன்னால் மனித தர்மமே இல்லை. சரி.

சீனச் சமூகச் சேர்ந்த தலைவர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு கணபதிராவ் அவர்களைத் தவிர வேறு இந்தியத் தலைவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. வேதனைக்குரிய விசயம்.

நிறையவே சீனச் சமூகத்து அன்பர்கள். அவர்களின் பிரதிநிதிகள்; இளைஞர்கள். மகிழ்ச்சிக்குரிய விசயம்.

மலேசிய இந்திய அமைச்சர்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளில் முதலில் கவனம் செலுத்துங்கள். இன, சமூக உணர்வுகளுக்கு முதலில் மதிப்பு அளியுங்கள்.

மலேசியாவில் நாம் சிறுபான்மை இனத்தவர். நமக்குள் ஒற்றுமை அவசியம். நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு; நம் வாரிசுகளுக்குத் தான் இன்னல்கள்... தொல்லைகள். நினைவில் கொள்வோம்.

சூசம்மாவுக்கும் சோசும்மாவுக்கும் மரியாதை செய்பவர்களுக்கு அட்வான்சாக ரோசாப்பூ மரியாதைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Muthukrishnan Ipoh: சொல்லி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன... சொன்னது ஒன்று செய்வது ஒன்று...

Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: atuhan mahatin arasial vilayathu (அதுதான் மகாதீரின் அரசியல் விளையாட்டு)

Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: Ivan oru kedu kettavan

Hamba Mu Umar Umar: Tamil INA thuroki

Francis Arokiasamy: அமைச்சர்கள் அனைவரையும் மகாதீர் ஆட்டிப் படைக்கிறது... அவர்களுடைய கௌரவம் வீரம் இலக்கு சேவை அனைத்தும் அவரது பாக்கெட்டில் இருக்கிறது

Muthukrishnan Ipoh: அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி எதையும் செய்ய முடியாத நிலையில் கட்டுப் போடப் பட்டு இருக்கிறார்கள்...

Perumal Thangavelu: கூட்டணிக் கட்சிகளை அமைத்து ஆட்சியை பிடித்த பிறகு தோழமை கட்சிகளை கண்டு கொளவதே இல்லை, மகாதீர். அது தான் அவரது சாணக்கியம்.

முனியாண்டி ராஜ்: நாற்காலியின் நான்கு கால்களும் முக்கியம் அல்லவா ...

Muthukrishnan Ipoh: அவர்களைக் குற்றம் சொல்லி ஒன்றும் இல்லை... அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை...

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: முடியவில்லை என்றால், பதவியை தூக்கி எறிய வேண்டியது தானே, புடுங்கிறதுக்கா அங்கேயே உக்காந்துக்கிட்டு இருக்கானுவ. ஏழை மக்களின் சாபம் அவர்களை மட்டுமல்ல அவர்களது பரம்பரையையே நாசமாகப் போகும். அது தான் கர்மாவின் பணி. அனுபவிப்பார்கள், பொறுத்திருந்து பார்ப்போம். கடுப்பேத்துறானுங்க மை லார்ட்.

Manickam Nadeson: வாலையும் வேலையும் சுருட்டி கால்களுக்கு இடையில் சொருகிக் கொண்டு ஒதுங்கி ஒளிந்துக் கொண்டார்களோ???

Muthukrishnan Ipoh: அவர்களுடைய நிலையில் இருந்து நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்...

Varusai Omar >>> Manickam Nadeson: இன்னா பன்றதூ? பெரிய "தல"க்கு பயந்தாகனுமே? "அவரே" பிடி வாத குணமுடையவர். தான் சொன்தை மட்டுமே கேட்கனும் பின்பற்ற வேண்டுமென அடம் 'பீ'டிப்பவர். பாவம் நம்மாளுக. கெழுத்தி மீன முழுங்கின மாதிரி நெளியிதுங்க! விடுங்கப்பா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!! Ok!Ok!!

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: யோசிக்க எதுவும் இல்லை, அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு... அன்று சோறு தின்றார்கள். இன்று என்ன தின்கிறார்கள். அறிவு என்ன விலை போய் விட்டதா?? இன்றைய நிலை சரி இல்ல என்றால் பதவியை விட்டு விட வேண்டியது தானே, எதற்கு அதை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிழைக்க வேறு வழியா இல்லை, எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு. தூ தூ தூ

Kalai Mani: சரியாக சொன்னீர்கள் முத்து ஐயா.

Kalai Mani: இக்கலியுகத்தில் தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடான காலம்.

Hamba Mu Umar Umar: Menteri menteri tenggah Lena

Ramarao Ramanaidu: காணவில்லை விளம்பரம் போடலாம் என்று இருக்கிறேன் ... சட்டத்தில் இடம் உண்டா?

Hamba Mu Umar Umar: 85% tamilkalaiyum vitru than thetaarkal ..nanri ketravarkal...

Varusai Omar: Maybe முன்பிருந்த மக்கள் இல்லாக் கட்சியினரின் மனோ நிலை? (Mindset of the former Indian leaders' mindset)

Manickam Nadeson: சரக்கில்லாத சக்கைகள், இருப்பதும் இல்லாததும் ஒன்று தான். தனமானத்தை தாரை வார்த்து விட்டார்கள் போலும்.

Varusai Omar >>> Manickam Nadeson: இருக்கலாம். அன்று இருந்தவர்கள் பொது நல நோக்கோடும் சமூக சிந்தனையை முன் வைத்தும் வந்தார்கள்... வந்தாரைய்யா வந்தாரு...  சல்லிக் கணக்குக்கு வந்தாரூ!! வந்தாரு!!!

Varusai Omar >>> Manickam Nadeson: இனி வரும் காலங்களில் இவர்களை கண்டு கொள்ளாமல் நம் வழியே செல்வதே சிறப்பாகும்! எதற்கு இந்த குடுமி பிடிச்சண்டை?… அதிலும் சிலரின் கீழ்த்தர வசவு மொழிகள்! முன்பு அவை இறக்குமதியாகிக் கொண்டு இருந்தது. இப்போ?... இங்கேயே தயாரிப்பு  நடக்கிறது!

Varusai Omar: இப்போது புதிய ஆளுங்கட்சி இந்திய குட்டித் தலைவர்களும் அதையே கெட்டியாகப் பற்றிக் கொண்டரோ?

Ramarao Ramanaidu: I think they should not use the word "tolong" ... Use the word bebaskan ... Why beg?

Hamba Mu Umar Umar: Menteri menteri tenggah Lena tidur...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக