27 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - குடும்பத்தார் சந்திப்பு - 27.10.2019

மலேசியா சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்களின் குடும்பத்தார், அவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2019), புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சந்தித்தார்கள்.

அனைத்துக் கைதிகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் சற்றே பதற்றமான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.


மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன். இவரின் மனைவி வி.உமா தேவி. இவர் தன் கணவரைச் சந்தித்துப் பேச முடிந்ததாக கூறினார். தன் கைக்குழந்தையையும் கொண்டு சென்றார்.

தன் கணவர் சாமிநாதனுக்குப் பிடித்தமான தோசை மற்றும் முறுக்குப் பலகாரங்களைக் கொண்டு சென்றார்.




தன் கணவரின் உடல் எடை சிறிது குறைந்து விட்டதாகவும், அவர் சற்றே கலக்கம் அடைந்து இருந்ததாகவும் உமாதேவி கூறினார்.

12 கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பார்க்கும் நேரம்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை... ஒவ்வொருவருக்கும் இரண்டு மணி நேர இடைவெளி... கட்டம் கட்டமாக வழங்கப் பட்டது.




கைது செய்யப் பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தாரில் இருவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

அந்தக் குடும்பத்தாரில் ஒருவர் பேசும் போது ‘என் தம்பி எங்களைப் பார்த்து அழுதான். தன்னை விரைவில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறான்’ என்று சொன்னார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலை செய்யப் படுவார்கள் என்று இன்றைய நன்னாளில் பிரார்த்திப்போம்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(27.10.2019)



பேஸ்புக் பதிவுகள்



M R Tanasegaran Rengasamy: அனைத்து பன்னிரண்டு குடும்பத்தாரின் வருத்தங்கள் வேதனைகள் நம்மை வெகுவாகப் பாதித்து உள்ளது. மனஉறுதியை இழந்து விடாதீர்கள். ஒரு குற்றமுமே இழைக்காத ஸ்ரீராமரை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்கள். தெய்வப் பிறவியான அந்த சத்திய வந்தனுக்கே அந்தக் கொடுமை நிகழ்ந்து உள்ளது. சோஸ்மா சட்டப்படி ஒருவரை விசாரணை இன்றி 28 தினங்கள் சிறையில் வைக்க முடியும். இந்தக் காலக் கட்டத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுவிக்கப் படுவார்கள் என நம்புவோம். இது எங்கிருந்தோ ஏவப்பட்ட கணை. முனை முறியும், வினை விதைத்தவர் வீழ்வர். நாளை நமதே எனக் காத்திருப்போம்.

Muthukrishnan Ipoh: அரசியல் பின்னணியில் நடைபெறும் ஒரு நாடகம் ஐயா... அப்பாவி மக்களைப் பிடித்துத் துன்புறுத்துவதில் நியாயமே இல்லை... நம்முடைய பிரார்த்தனைகள் நல்ல ஒரு முடிவிற்கு வழி வகுக்கும் என நம்புவோம்... கருத்துகளுக்கு நன்றி...

Inbachudar Muthuchandran: சட்டப்பூர்வாக அவர்களை விடுதலை செய்வதற்கு ராம் கர்ப்பால் பெரு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்.அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்

Muthukrishnan Ipoh பன்னிருவரும் தவறாகத் தடுத்து வைக்கப் பட்டார்கள் என்பது உறுதியானால்... சிவில் வழக்கு தொடர்ந்து நஷ்டயீடு கேட்க முடியுங்க...

Don Samsa அடுத்தவாரம் தெரிந்துவிடும் அவர்களின் தலையெழுத்து தொடர்ந்து எப்படியிருக்கும் என.. குற்றம் அவர்கள் மீது சுமத்தப்படுமா அல்லது அதற்கு எதிர்மாறாக விடுதலை ஆவார்களா என. பொருத்திருந்து பார்ப்போம்.

Muthukrishnan Ipoh: அவ்வளவு எளிதில் விடுவார்களா... இருப்பினும் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்...

Don Samsa >>> Muthukrishnan Ipoh: பார்ப்போம் தலைவரே. உண்மையே தலைவரே, எல்லோரும் போதுமான ஆதரத்துடனே கைது செய்யப் பட்டார்கள். ஆக நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டிட எந்தப் பிரச்சினையும் இருக்காது.

Muthukrishnan Ipoh >>> Don Samsa: இயங்காத ஓர் இயக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்டது ஒரு நாடகம் போல தெரிகிறது... என்ன இருந்தாலும் நீதிமன்றம் இருக்கிறது... இறுதி முடிவு என்ன என்று கவனிப்போம்... பொறுமை காப்போம்...

Muthukrishnan Ipoh:
புக்கிட் அமான் தலைமையகத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பின்னர் பதிவேற்றம் செய்கிறேன்...

Muniandy Yellai:
அனைவரும் மன அமைதியுடன் இருக்கவும்

Muthukrishnan Ipoh:
இப்போதைக்கு இதை மட்டுமே நம்மால் செய்ய இயலும்...

Kalai Selvam: நன்றி ஐயா. அனைத்து குடும்பங்களும் நமது தீபாவளி வாழ்த்தினை அறிவித்துக் கொள்வோம்.

Arojunan Veloo:
அப்பாவிகள் தண்டிக்கப் படக்கூடாது....! விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்!

Bala Sena: கண்டிப்பாக வெளி வந்து விடுவார்கள்..

Varusai Omar:
மதத்தின் பெயரால் பிச்சை யெடுக்கும் ஜாக்கீர் நாயக். அந்த எத்தனை நம்பி ஆட்டு மந்தையாய் பின் தொடரும் கிளந்த்தானின் மதி கெட்ட... . இவன்களுக்கு கூஜா தூக்கி ஜால்ரா அடிக்கும் ஒரு இந்திய தருதலை ஜம்ரீ வினோத்... இவன் கதை, "ஆதியிலும் முஸ்லீமில்லே... பாதியிலும் முஸ்லீமில்லே... பஞ்சத்துக்கும் பசிக்காகவும் மதம் மாறி வாய்ச் சவடாலடிக்கும் இராப் பிச்சை வினாத்து!

Pon Chandran: நம் சகோதர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள். விரைவில் விடுதலை கிடைக்கும். பிரார்த்தனை செய்வோம்

கரிகாலன் ஞா.சி: Please support them release my people

Muthukrishnan Ipoh: தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்று இருக்கும்... என்னதான் நடக்கும்... பார்ப்போமே... நன்றிங்க ஐயா...

Dorairaj Karupiah: அந்த ஒரு இந்திய குற்றவாளிக்காக 12 மலேசிய குடிமன்கள் பலி

Muthukrishnan Ipoh:
காலத்தின் கொடுமை....

R Murugesh >>> Keela Poovani >>> Dorairaj Karupiah: யார் அந்த ஒருவர்!?

Gobinathan Kuppan: Yaar antha nabar nanbare?

Muthukrishnan Ipoh: மலேசியாவில் வாழும் இந்தியர்களே... திரும்பி இந்தியாவுக்கே போங்கள்... மலேசிய இந்தியர்கள் மலேசியாவுக்கு விசுவாசம் இல்லாதவர்கள் என்று சொன்ன மகா தலைவரின் மகா நண்பர்...

Varusai Omar:
கிழத்துக்கு போதாத காலம் போல! இனி எல்லாமே அகால....
(நீங்களே நிறைவு செய்துதூ கொள்ளுங்கள் நண்பர்களே)

Varusai Omar: "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்ற பழைய மொழியை இப்படி மாற்றிக் கொள்வோமா முத்து"?
கேடு வரும் பின்னே(துன்னு)
மதிக்கொழுப்பு வரு முன்னே!"
நல்லாருக்கா முத்து?
ஹஹஹாஹாஹாஹிஹிஹீஹீ!"

Jaleel Rahman >>> Muthukrishnan Ipoh:
இக்கட்டான சூழ்நிலையில் மலேசியா வாழ் தமிழர்களால் இனி வாழவே முடியாது என உங்களை விரட்டினால் தாராளமாக தமிழகம் வாருங்கள். எங்கள் தொப்புள் கொடி உறவுகளை அன்புடன் வரவேற்கிறோம்.

Muthukrishnan Ipoh >>> Varusai Omar:
சபிக்க வேண்டாமே சார்...

Muthukrishnan Ipoh >>> Jaleel Rahman: மலேசியா நாங்கள் பிறந்து வளர்ந்த புண்ணிய பூமி... இந்த நாட்டை விட்டால் வேறு நாடு எங்களுக்குத் தெரியாது... கடைசி வரை எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்பதே எங்களின் நிலைப்பாடு... தங்களின் ஆதரவான அரவணைப்பான சொற்களுக்குத் தலை வணங்குகிறோம் ஐயா... நன்றி... நன்றி...

Varusai Omar >>> Jaleel Rahman:
அடேய் மதிகெட்ட முட்டாளே... முடைநாற்றம் அடிக்கும் உங்கள் கேடு கெட்ட அரசியல் எங்களுக்குத் தெரியாதா"... BJP/RSS நாய்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது எங்களுத் தெரியாதாடா?

Varusai Omar >>> Muthukrishnan Ipoh: யார் அந்த சமூக துரோகி முத்து?
அவனது கேடு கெட்ட மாஜி தலைவன் போல பிறரையும் நினைத்து விட்டானா? அடையாளம் காட்டுங்கள். அந்த நாதாரியை நடுவீதியில் வைத்து செருப்பால் அடிக்கிறோம்.

Jaleel Rahman >>> Varusai Omar: என்ன ஆகிவிட்டது உங்களுக்கு... நான் என்ன சொல்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்... ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நலம்.

Sinnathambi Sinna: Ithu pondra neraththil manauruthi vendum... engiruntho evappatta ambu oru naal eithavaraiye thaakkakudum... geethai sonnathu pol ithuvum kadanthu pogum... amaithi kaapeer....

(இது போன்ற நேரத்தில் மன உறுதி வேண்டும். எங்கிருந்தோ ஏவப்பட்ட அம்பு ஒரு நாள் எய்தவரையே தாக்கிடும். கீதை சொன்னது போல் இதுவும் கடந்து போகும். அமைதி காப்பீர்.)

Siva Balan: எதற்காக கைது செய்யப் பட்டார்கள்

Saravanan Kandasamy: Y arrest that peoples!












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக