28 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: எறும்புத்தின்னி காரணமா?

கொரோனா கோவிட் வைரஸ் கிருமியை மரபியல் தொழில் நுட்பம் (genetic engineering) வழியாக மனிதன் உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். சிலர் உண்மை என்கிறார்கள். பலர் தவறு என்கிறார்கள்.
 

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது ஒரு கலை. ஆயல் கலைகளில் அறுபத்து ஆறாவது கலை என்று நான் சொல்ல மாட்டேன். சிலர் சொல்கிறார்கள்.

அலுங்கு, வௌவால் போன்ற விலங்குகளிடம் இந்தக் கொரோனா கோவிட் வைரஸ், காலம் காலமாய்க் குடியிருந்து வந்து இருக்கிறது என்பது தான் உண்மை.

வௌவால்களிடம் இருந்து அலுங்கு எனும் எறும்புத் தின்னியிடம் பாய்ந்து இருக்கலாம். பின்னர் மனிதனிடம் பாய்ந்து இருக்கலாம். அல்லது அந்தப் பரவலுக்குப் புனுகுப் பூனை (Civet); மரநாய் (ferret) போன்ற விலங்குகள் இடைத் தரகர்களாக இருந்து இருக்கலாம்.
 

சான்று: Kristian G. Andersen, Andrew Rambaut, W. Ian Lipkin, Edward C. Holmes, Robert F. Garry. The proximal origin of SARS-CoV-2. Nature Medicine, 2020.

எப்படி இந்தக் கொர்ரோனா கிருமிகள் உலகளாவிய நிலையில் பரவின. அதற்கு சரியான பதிலையும் சீன ஆய்வாளர்கள் மறைக்காமல் சொல்கிறார்கள்.

வௌவால், பாங்கோலின் (Pangolin) எனும் அலுங்கு தான் மூல காரணம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அலுங்கு என்பதைச் சிலர் அழுங்கு என்றும் சொல்கிறார்கள். சரியான சொல் அலுங்கு.
 

Pangolin sales plunge in Gabon over coronavirus fears

அது ஓர் எறும்புத்தின்னி. வெப்ப மண்டல மலைக் காடுகளில் அதிகமாய் வசிக்கின்றன. இவற்றின் உடலின் மேல்பகுதி கடினமான உறுதியான செதில்களால் (Perils) ஆனவை. எதிரிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பந்து போல் சுருண்டு கொள்ளும்.

அலுங்கு மிகவும் விரும்பி உண்ணும் உணவு எறும்புகள், கரையான்கள். சாதுவான பிராணி. எவருக்கும் தீங்கு விளைவிக்காது. உலகில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் வூஹான் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாக விற்று வந்தார்கள். இனிமேல் விற்பார்களா. தெரியவில்லை. பட்டது போதும் என்று சுருண்டு போய்க் கிடக்கிறார்கள்.

https://www.medicalnewstoday.com/…/coronavirus-pangolins-ma…

கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான். கண்டதைத் தின்னவன் என்ன ஆவான். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020


பேஸ்புக் பதிவுகள்


Janakiraman Raman தோட்டப்புறங்களில் வாழ்ந்தது மறக்க முடியவில்லை. மாடுகள் மேய்ச்சலுக்கு அனுப்புவது. மாலையில் பால் கரந்து தோட்ட லயங்களில் கொடுப்பது இரவில் பிள்ளைகளுக்கு டுவிசன் வகுப்புக்கள் நடத்துவது.

Sathya Raman >>> Janakiraman Raman உண்மைதான் சார். இரவில் டியூசன் வகுப்புகள் நடக்கும். தோட்டத்திலுள்ள மாணவர்கள் அனைவரும் ஒரேஒரு டியூசன் சொல்லிக் கொடுப்பவர் வீட்டில் தான் மூன்று, நான்கு மணி நேரம் இரவு வகுப்புகளில் செலவிடுவோம்.

டியூசன் சொல்லிக் கொடுப்பவரும் பட்டதாரி ஆசிரியரோ, மெத்தப் படித்தவரோ இல்லை. அன்றைய எம்.சி.இ. வரை படித்தவரோ கொஞ்சம் விபரம் தெரிந்தவராகத் தான் இருப்பார்.

நிஜமாக இப்பவும் நினைத்து, நினைத்து ஏங்கும் அந்தத் தோட்டப்புற வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க வாய்ப்பே இல்லாத போது வருத்தங்கள் மட்டுமே எஞ்சியவை. 😢

Muthukrishnan Ipoh எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. மாதம் பத்து வெள்ளி கட்டி ஆங்கிலம் படித்த நினைவுகள்... ஆனால் பெரிய புலமை எதுவும் வந்துவிடவில்லை... சிட் டவுன்... ஸ்டேண்ட் அப்... இந்த ரெண்டையும் நன்றாகக் கற்றுக் கொண்டேன்...

Janakiraman Raman >>> Muthukrishnan Ipoh 🙏

Sathya Raman முன்பு தோட்டப் புறங்களில் கூட நம்பவர்கள் பலரிடம் இந்த அலுங்கு சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது சார். கூடவே அதனுடைய கடுமையான ஓட்டை பிரித்தெடுத்து சின்ன, தின்னதாய் வெட்டி, உரசி குழந்தைகளின் கைகளில் கட்டி விடுவார்கள்.

இந்த அலுங்கு ஓட்டுக்கு காத்து கருப்பு பில்லி சூன்யம், தோஷம் போன்றவை பக்கத்திலேயே அண்டாதாம். அதற்காகவே குழந்தைகள் கைகளில் கட்டுவார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.

அது மட்டும் அல்ல. உடும்பு, தவளை, முயல், ஆமை என சீனர்கள் மட்டுமல்ல நம் தமிழர்கள் பலரும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இப்போதும் இருக்கிறார்கள் சார்.

Muthukrishnan Ipoh உண்மைதான். 50 வருடங்களுக்கு முன்னர் தோட்டத்தில் மழை பெய்து ‘திட்டி’ என்றால் சிலர் அலுங்கு வேட்டை; உடும்பு வேட்டை; பன்றி வேட்டை என்று கிளம்பி விடுவார்கள். பலர் வீட்டில் அலுங்கு கறி வேகும்.

பலவிதமான காட்டுப் பொருள் சமையல்கள். அந்த விருந்துகளில் நானும் கலந்து கொள்வேன். தோட்டப்புற வாழ்க்கை தனித்துவமான வாழ்க்கை.

Muthukrishnan Ipoh எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக் கூடாது; அதற்கு ஒரு வரையறை வேண்டும்... மனிதர்களுக்கு காலம் சொல்லிக் கொடுக்கும் பாடம்...

Manickam Nadeson பலர், பல விதமான ஆதராங்களை முன் வைக்கும் போது , இந்த விசக் கிருமியை சீனா வேண்டும் என்றே தயாரித்து மற்ற நாடுகளை அழிக்க எண்ணி உள்ளதை நன்கு உணர முடிகிறது. சில ஆண்டுகளுக்காவது சீனாவை எல்லா நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

Muthukrishnan Ipoh அதே சந்தேகம் எனக்கும்... ஆனால் மூடி மறைத்து வாழும் அந்த நாட்டில் இருந்து எந்த ஓர் உண்மையான தகவலும் கிடைக்கப் போவது இல்லை... கருத்துகளுக்கு நன்றிங்க தலைவரே...

Sathya Raman >>> Manickam Nadeson உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை சார். வேண்டுமென்றே வணிக நோக்கத்திற்காக சீனா பார்த்த நாச வேலைதான். அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தானே?

அதோடு இன்னொரு தகவல்களும் கசிந்து வருகிறது. வூகான் நகரில் உள்ள துணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலையில் இருந்து இத்தாலிக்கு பல வருடமாக துணிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது சீனா. இன்று கொத்துக் கொத்தாய் மரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தாலிக்கு அந்தத் துணிகள் மூலமாகவே இந்த கொரோனா வைரஸைப் பரப்பியதாக பேச்சும் உள்ளது.

மேலும் சீனாவை சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் அதிகம் பரவாத இந்த கிருமி பல்லாயிரம் கீலோ மிட்டருக்கு அப்பால் உள்ள மற்ற 200 மேற்பட்ட நாடுகளுக்கு வேகமாக பரவி எங்கும் உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருப்பதையும் ஊர்ந்து கவனித்தால் இதற்கு பின்னால் பல உண்மைகள் உடைப்படும்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர்கூட சீனாவின் கைப்பாவை என்ற குற்றம் சாட்டும் உள்ளது. எது எப்படியோ ஈழத்தில் ஏற்படுத்தப்பட்ட உயிர்ப் பலிகளை இந்த உலகம் உதாசீனப்படுத்திய மாதிரி, அணுஆயுதம் இன்றி, பயங்கர இயற்கை பேரிடர் இன்றி ஒரேயொரு வைரஸ் மூலமாக இன்று மனிதக் குலத்தையே முட்டாள்களாக நினைத்து காரியம் சாதித்த கேடுக் கெட்ட சாகசக்காரர்களை உலக நீதிமன்றம் தண்டித்தே ஆக வேண்டும் சார் 🙏

Sambasivam Chinniah: Vaazhga Valamudan en iniya kaalai vanakam ayyah . God bless you. (வாழ வளமுடன்... என் இனிய காலை வணக்கம்)

Sambasivam Chinniah >>> Muthukrishnan Ipoh: nandri ayyah. (நன்றி ஐயா)

Kumar Murugiah Kumar's வணக்கம் ஐயா! அந்த தோட்ட ஏக்கம் இன்னும் இருக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும்.

Muthukrishnan Ipoh தோட்டப்புற வாழ்க்கை இனிமையான வாழ்க்கை... மறக்க முடியாத அனுபவங்கள்...

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... வாழ்த்துகள்...

Ganesan Pachappan உடனுக்குடன் தகவல்களைச் சேகரித்து பதிவிட்டு வருகிறீர்கள் நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Letchumanan Nadason முன்பு மனிதர்கள் சாப்பிட்ட உணவெல்லாம்
இன்று கிருமி பரப்பியாய் ஆனதெப்படி? தங்கள் பதிவுகள் சிறப்பு. நன்றி

Shiva Ramanna Thank you

M R Tanasegaran Rengasamy அண்மையில் ஒரு ஆவணப் படம் பார்த்தேன். அதில் ஒரு வகை வௌவால்கள் மாட்டின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால் மாட்டிறைச்சியிலும் கோவிட்- 19 வைரஸ் இருக்க வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் அதிகம் பாதிப்புள்ளாக வாய்ப்புண்டு தானே சார்.

Muthukrishnan Ipoh புதிய தகவல்... நன்று....

Selva Mani இது சீனாவின் சித்து விளையாட்டுதான்! போலி அரிசி, முட்டை, காய்கறிகள் என மனிதாபிமானற்ற செய்த சீனா கொஞ்சம் பெரிய அளவில் விளையாடுகிறது!

Shanker Muniandy எனக்கு தெரிந்து பல ஆண்டுகளாக மலேசியாவிலும் கூட அலுங்கு மூசாங் முள்ளம்பன்றி வொளவால் போன்ற பிராணிகளை சிலர் சாப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது மட்டும் கொரோனா வைரஸ் பரவியது ஏன் சார்?

Muthukrishnan Ipoh சுத்தம் இல்லாத இடங்களில் அடைபட்டு இருக்கும் விலங்குகளில்... வைரஸ்கள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்புகள் அதிகம்...

Jainthee Karuppayah 30 ஆண்டுக்கு முன்னர் தோட்டத்தில் இதை உணவுக்காக இந்த அலுங்கு... பார்த்திருக்கிறேன்.... வறுமை ஆம் ... அப்போது எந்த நோயும் அண்டவில்லை.... பசி கொடுமையான காலங்களில் ஈசலைக் கூட வறுத்து சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டியதாக ... என் மாமியார் கூறியது நினைவுக்கு வருகிறது.

Muthukrishnan Ipoh இந்த வைரஸ்கள் பல கோடி ஆண்டுகள் அமைதியாக இருந்தவை... Dormant என்று சொல்வார்கள்... சரியான வெப்பத்தில், சரியான் வேதியல் மாற்றங்கள் ஏற்படும் போது அந்த வைரஸ்கள் உயிர்ப்பு பெறுகின்றன... நாளைய தமிழ் மலர் நாளிதழில் இதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh
நன்றி

Malathi Nair: Im sure inimeel atai kandaale oodivivaargal nammavagalum. (இனிமேல் அதை கண்டாலே ஓடி விடுவார்கள் நம்மவர்களும்)

Muthukrishnan Ipoh ஆப்பிரிக்கா கெபோன் நாட்டில் அலுங்கு வியாபாரம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. இப்போது யாரும் வாங்குவது இல்லையாம். ஒரு விலங்கினம் பிழைத்தது.

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh: ok







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக