18 மே 2020

தெலுக் இந்தான் 1910-ஆம் ஆண்டு தென்னிந்தியர்கள் - 1

தமிழ் மலர் - 18.05.2020

இத்தாலியில் பைசா கோபுரம். மலேசியாவில் தெலுக் இந்தான் கோபுரம். அழகாய்ச் சரித்திரம் பேசும் சாய்ந்த கோபுரம். இப்படி ஒரு வேறு கோபுரம் ஆசியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

இனி ஒரு கோபுரம் அப்படி சாய்ந்து நிற்கப் போவதும் இல்லை. சரித்திரம் பேசப் போவதும் இல்லை. 


தமிழ் மலர் - 18.05.2020

ஆக அந்தத் தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Teluk Intan) காலா காலத்திற்கும் சாய்ந்து கொண்டுதான் இருக்கும். மர்மக் கதைகளைப் பேசிக் கொண்டுதான் நிற்கும். நாமும் கேட்டுக் கொண்டுதான் இருப்போம்.

அந்தக் கோபுரத்திற்கு அப்படி ஓர் அமைப்பு. அப்படி ஒரு கவர்ச்சி. பேராக் மாநிலத்திற்கு மட்டும் அல்ல. மலேசியாவிற்கே அது ஒரு கவர்ச்சித் தளம். பெருமைப் படுவோம். தெலுக் இந்தான் மக்கள் மட்டும் அல்ல. மலேசியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். சலாம் போட வேண்டும்.

கோபுரத்தைக் கட்டி முடித்த போது நன்றாகத்தான் நிமிர்ந்து நின்றது. கட்டிய கொஞ்ச நாளில் அதற்கு வெட்கம் வந்துவிட்டது போலும். குனிந்த தலை நிமிரவே இல்லை. அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. என்ன என்பதைப் பார்ப்போம்.



Teluk Anson 1910

இந்தக் கோபுரம் 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிய பிறகு அதிகமான பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டவர்கள் தென்னிந்தியர்கள். ஒரு செருகல்.

தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்; இவர்களைத் தான் தென்னிந்தியர்கள் என்று சொல்கிறோம்.

ஓய்வு எடுப்பதற்காக தெலுக் இந்தான் திடலுக்குப் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு அடியில் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். மரங்களுக்கு அடியில் வெற்றிலை பாக்கு போட்டு அப்படியே சாய்ந்தும் கொள்வார்கள்.

நம்மவர்கள் மரங்களுக்கு எப்படி இளைப்பாறுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். 120 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மவர்களின் ஓய்வுத் தலங்கள் எப்படி இல்லாம் இருந்து இருக்கின்றன. அதையும் நினைத்துப் பாருங்கள்.



Telugu Seventh-day Adventist Church 1930
 
மலாயாவில் நம் மூதாதையர்கள் கால் பதித்த போது அவர்கள் எதிர்பார்த்த மலாயா வேறு. அவர்கள் பார்த்த மலாயா வேறு. அவர்கள் பார்த்த மலாயா இப்படித் தான் இருந்து இருக்க வேண்டும்.

தெலுக் இந்தான் பகுதியில் நீண்ட சதுப்பு நிலக் காடுகள்; உட்பகுதிகளில் நெடிந்து வளர்ந்து வானுயர்ந்த பச்சைக் காடுகள்; நிறையவே இருந்தன. அப்படிப்பட்ட காடுகள் மலாயா முழுமைக்கும் பரந்து விரிந்து கிடந்தன. ஆங்கிலேய நிறுவனங்கள் இந்தக் காடுகளைக் கூறுபோட்டுத் தோட்டங்கள் வளர்த்தார்கள்.

 
St. Anthony's School, Teluk Intan  1932

தெலுக் இந்தான் வட்டாரத்தில் ஜெண்ட்ராட்டா, செலாபா, கோலா பெர்னாம், ரூபானா, நோவா ஸ்கோசியா, சவராங், மெலிந்தாங், பாகன் டத்தோ, கோக்கனட் என நிறைய தோட்டங்கள். இந்தத் தோட்டங்களில் தென்னிந்தியர்கள் ஆயிரக் கணக்கில் குடியேறினார்கள். ரப்பர், காபி, தென்னை, கொக்கோ தோட்டங்களில் வேலை செய்தார்கள்.

சிலர் தெலுக் இந்தான் நகரத்திற்கு வந்து உடலுழைப்பு வேலைகளையும் செய்தார்கள். அப்படி வந்தவர்கள் தான் தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தின் பராமரிப்பு வேலைகளையும் செய்து இருக்கிறார்கள். சரி.



Teluk Anson 1950
 
ஜப்பானில்கூட ஒரு சாய்ந்த கோபுரம் இருக்கிறது. ஆனால் தெலுக் இந்தானில் இருப்பதைப் போல ஏழு பாகை சாய்ந்து நிற்கவில்லை. ஜப்பான் கோபுரம் மூன்றே மூன்று டிகிரி தான் சாய்ந்து நிற்கிறது. இருந்தாலும் பாருங்கள்… ஜப்பானிய மக்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் பார்த்துப் பெருமை படுகின்றனர்.

ஜப்பானில்கூட ஒரு சாய்ந்த கோபுரம் இருக்கிறது. ஆனால் தெலுக் இந்தானில் இருப்பதைப் போல ஏழு பாகை சாய்ந்து நிற்கவில்லை. ஜப்பான் கோபுரம் மூன்றே மூன்று டிகிரி தான் சாய்ந்து நிற்கிறது. இருந்தாலும் பாருங்கள்… ஜப்பானிய மக்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் பார்த்துப் பெருமை படுகின்றனர்.

மூன்று பாகை சாய்ந்ததற்கே அப்படி ஓர் ஆர்ப்பாட்டம் என்றால் தெலுக் இந்தான் கோபுரம் மாதிரி ஏழு பாகை சாய்ந்து நின்றால் என்னவாகி இருக்கும். சொல்லுங்கள். ஒட்டு மொத்த ஜப்பானே திரண்டு போய் நிற்கும். அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.



Teluk Anson 1970
 
என்ன செய்வது. தெலுக் இந்தான் அதிசயத்தைப் பார்க்க உள்ளூர் மக்களில் பலருக்கு நேரம் இல்லையாம். வெளிநாடுகளுக்குப் பறந்து போக மட்டும் நேரம் கிடைக்குமாம். பார்த்துவிட்டு வந்து வருசக் கணக்கில் கதைகள் பேசுவார்களாம்.  அவர்களின் வசன ஜாலங்களைக் கேட்டு நாமும் கைதட்டிச் சிரிக்க வேண்டுமாம். என்னங்க இது…

வெளிநாடுகளுக்குப் போங்கள். போக வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் வயிற்றுப் பிள்ளையைப் பாருங்கள். அப்புறம் வேண்டும் என்றால் ஊரான் பிள்ளைகளை ஊட்டி ஊட்டி வளருங்கள். மனசில் சின்ன ஓர் ஆதங்கம். கொட்டி விட்டேன்.

மனிதர்கள் கட்டிய எந்த ஒரு கோபுரமும் ஐந்து பாகை வரை சாய்ந்து வரலாம். ஆனால் அதற்கு மேல் சாயக் கூடாது. 1993-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் உலு கிள்ளானில் ஒரு 12 மாடி அடுக்குக் கட்டடம் சாய்ந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 



Teluk Anson 1950
 
மண் அரிப்பின் காரணமாகச் சாய்ந்து போனது. 48 பேர் இறந்து போனார்கள். பலர் காணாமல் போனார்கள். அந்தக் கட்டடம் பத்து பாகைக்கும் மேல் சாய்ந்து போனது. அதுதான் முக்கியக் காரணம்.

நம்முடைய பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பற்றிய ஓர் அரிய தகவலைச் சொல்லிவிட்டு தெலுக் இந்தான் பக்கம் வருகிறேன். உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்று பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள். இந்தக் கோபுரங்கள் எப்பேர்ப்பட்ட நில நடுக்கத்தையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.

2011-ஆம் ஆண்டு ஜப்பானை ஒரு நிலநடுக்கம் தாக்கியது. தோகோக்கு நிலநடுக்கம் என்று அழைக்கிறார்கள். நினைவுக்கு வரலாம். நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் ஒன்பது. அந்த அளவுக்கு இங்கே ஒரு நிலநடுக்கம் வந்தாலும்… வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு பெரிய ஆபத்துகள் எதுவும் வருவது இல்லை. அந்த அளவிற்கு உள்கட்டுமானத்தில் வடிவமைப்பைச் செய்து இருக்கிறார்கள். 




பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களில் 60வது மாடிக்கு மேலே இருக்கும் 30 மாடிகளும் ஒரே சமயத்தில் அப்படியும் இப்படியும் அசைந்து கொடுக்கும். அப்படி ஒரு தனி ஆற்றல் பெற்றவை. சுவர்க் கடிகாரத்தில் இருக்கும் ‘பெண்டலம்’ மாதிரி… அப்படி இப்படி ஆடும். ஆனால் சாயாது. கண்ணாடிகள் நொறுங்கி விழலாம். இரும்புச் சட்டங்கள் பெயர்ந்து விழலாம்.

ஆனால் கட்டடங்கள் மட்டும் அப்படியே குத்துக்கல் மாதிரி நிற்கும். ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் அப்படி இப்படியும் அசையலாம். பன்னிரண்டு பாகை வரையில் அசைந்து கொடுக்கலாம்.

மறுபடியும் சொல்கிறேன். பன்னிரண்டு பாகைகள். எப்பேர்ப்பட்ட தொழிநுட்பச் சாதனை பாருங்கள். அந்த மாதிரி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு விசயம். தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயம். அந்தப் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களில் ஒரு கோபுரத்திற்குக் கட்டுமான வடிவமைப்பு செய்து கொடுத்தவர் யார் தெரியுமா.

ஒரு தமிழர். அதுவும் மலேசியத் தமிழர். பெயர் டான்ஸ்ரீ ஏ.கே. நாதன். ரவாங்கில் இருக்கும் எவர்சென்டாய் நிறுவனத்தை உருவாக்கியவர். 




இந்தியாவிற்குப் படிக்கப் போய்… காசு கட்ட முடியாமல்… திரும்பி வந்தவர். படித்து முடிக்க முடியவில்லையே என்று அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவரிடம் முயற்சி… உழைப்பு… நம்பிக்கை என்கிற மூன்று தாரக மந்திரங்களும் இருந்தன. அந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே முன்னுக்கு வந்தவர். இப்போது பல கோடிகளுக்கு அதிபதி. மலேசியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

சரி. நம்ப தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்திற்கு வருவோம். தெலுக் இந்தான் நகரின் பழைய பெயர் தெலுக்கான்சன். இன்றும் பலர் தெலுக்கான்சன் என்றே அழைக்கிறார்கள். இந்த நகரின் பிரதான சாலைகளில் ஒன்று ஜாலான் பாசார் சாலை. அதற்குப் பக்கத்தில் ஜாலான் ஆ சோங் இருக்கிறது. அங்கேதான் இந்தச் சாய்ந்த கோபுரமும் இருக்கிறது.

இந்தக் கோபுரத்தைச் சுற்றி எப்போதும் ஒரு சுற்றுலாக் கூட்டம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கும். ராத்திரி பத்து மணியாக இருந்தாலும் சரி; பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி; யாராவது ஒருவர் ’பளிச் பளிச்’ என்று படம் பிடித்துக் கொண்டுதான் இருப்பார். 



Teluk Anson 1960

அந்தக் கோபுரத்திற்கு அப்படி ஓர் அமைப்பு. அப்படி ஒரு கவர்ச்சி. பேராக் மாநிலத்திற்கு மட்டும் அல்ல. மலேசியாவிற்கே அது ஒரு கவர்ச்சித் தளமாகவும் விளங்கி வருகிறது.

கோபுரத்தைக் கட்டி முடித்த போது நன்றாகத்தான் நிமிர்ந்து நின்றது. கட்டிய கொஞ்ச நாளில் அதற்கு வெட்கம் வந்துவிட்டது போலும். குனிந்த தலை நிமிரவே இல்லை. அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்.

தெலுக் இந்தான் நகரின் பழைய பெயர் தெலுக்கான்சன். இன்றும் பலர் தெலுக்கான்சன் என்றே அழைக்கிறார்கள். இந்த நகரின் பிரதான சாலைகளில் ஒன்று ஜாலான் பாசார் சாலை. அதற்குப் பக்கத்தில் ஜாலான் ஆ சோங் இருக்கிறது. அங்கேதான் இந்தச் சாய்ந்த கோபுரமும் இருக்கிறது.



Teluk Anson 1920
 
இந்தக் கோபுரம் 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அந்தச் சமயத்தில் தெலுக் இந்தான் நகரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா. 800 பேர். ஆயிரம் பேர்கூட இல்லை. இப்போது 120 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

பேராக் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது. கோபுரம் கட்டப் படும் போது தெலுக் இந்தான் நகரில் தீயணைப்பு படை இல்லை.

ஆக நகரில் நெருப்பு எதுவும் பற்றிக் கொண்டால் அணைப்பதற்கு தண்ணீர் வேண்டுமே. அதற்காகத்தான் அந்தக் கோபுரத்தைக் கட்டி அதன் மீது தண்ணீர் தாங்கியை ஏற்றி வைத்தார்கள்.

அது மட்டும் இல்லை. மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படலாம். அந்தச் சமயத்தில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தாங்கிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். நல்ல முன் ஏற்பாடுகள்.



Coronation Road 1920
 
மலேசியாவில் எஸ். துரைசிங்கம் என்பவர் மிகவும் பிரபலமான வரலாற்று ஆசிரியர். அவர் ஒரு நூலை எழுதி இருக்கிறார். ’மலாயா சிங்கப்பூரில் நூறு வருட யாழ்ப்பாணத்தவர்கள்’ (A Hundred Years of Ceylonese in Malaya and Singapore).

அதில் தெலுக் இந்தான் கோபுரத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். இந்தக் கோபுரம் கட்டப் படுவதற்கு மூவர் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். ஒருவர் சீனர். அவருடைய பெயர் லியோங் சூன் சியோங் (Leong Choon Chong).

தெலுக் இந்தானில் மிகப் பிரபலமான வணிகர். ஈயச் சுரங்க முதலாளி. நல்ல ஒரு நன்கொடையாளர். தெலுக் இந்தான் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார்.

மற்ற இருவரும் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் காசி கந்தையா. நிறைய நிதியுதவிகளைச் செய்து இருக்கிறார். அவருக்குச் சில காபி, ரப்பர் தோட்டங்கள் இருந்து இருக்கின்றன. அரசாங்கத்தின் கட்டுமானக் குத்தகைகள் கிடைத்து இருக்கின்றன. 



Indians in 1960s

தெலுக் இந்தான் சுற்று வட்டாரங்களில் சாலை நிர்மாணிப்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலும் ஈடுபாடுகள் இருந்து இருக்கின்றன.

இவர் தெலுக் இந்தான் மக்களுக்கு பலவழிகளில் உதவிகள் செய்து இருக்கிறார். காசி கந்தையா மேலும் அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாற்று ஆவணங்களை அலசிப் பார்த்து விட்டேன். காசி கந்தையா வாழ்ந்தது 1890-களில்… அதையும் நினைவு படுத்துகிறேன்.

ஆக தெலுக் இந்தான் கோபுரத்தைக் கட்டியது யார் என்று யாராவது கேட்டால் இந்தியரின் பங்கு இருப்பதை மறவாமல் நினைவு படுத்துங்கள்.

அடுத்து இன்னும் ஓர் இந்தியர் வருகிறார். இவர் பண உதவிகள் செய்யாவிட்டாலும் கோபுரத்தின் படத்தை வரைந்து கொடுத்தவர். அவருடைய பெயர் ராஜசிங்கம். மலாயா வரலாற்றுச் சுவடுகளில் இந்த ராஜசிங்கம் எனும் தமிழரின் பெயரும் மறைந்து போய் நிற்கிறது.

இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இவரைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் காலனைத்துவ ஆட்சியில் மலாயா மக்களுக்கு பற்பல சமூக உதவிகளைச் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் வரலாற்றுச் சுவடுகளில் இருந்து மறைந்து நிற்கின்றன.

தெலுக் இந்தான் போனால் இந்தக் கோபுரத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.

1910-ஆம் ஆண்டு கார்ல் கிளிங்ரூத் (Kleingrothe, Carl Josef, 1864 -1 925) எனும் டச்சுக்காரர் போய் இருக்கிறார். அப்படியே அவர்களைப் படம் எடுத்து விட்டார். 

கார்ல் கிளிங்ரூத் எடுத்த இந்தப் படம் இப்போது நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University Library Netherlands); தென்கிழக்காசியக் கழகத் துறையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது.

நெதர்லாந்து பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அந்த வரலாற்று படத்தைப் பாருங்கள். நம் இனத்தவரை நினைத்துப் பெருமைப் படுங்கள்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.05.2020

சான்றுகள்:

1. Jasbindar, Freddie Aziz. "Peristiwa Serangan Gajah Di Teluk Intan, Perak Pada 1894". www.orangperak.com.

2. Kleingrothe, Carl Josef, 1864 -1 925

3. https://archive.is/20130204200016/http://www.tourmalaysia.com/2009/02/27/teluk-intans-pride-an

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக