07 டிசம்பர் 2020

பத்துமலை காபி தோட்டம் 1883

பத்துமலையின் அடிவாரத்தில் 1883-ஆம் ஆண்டில் ஒரு காபி தோட்டம் இருந்தது. இது பலருக்கும் தெரியாத தகவல். அந்தத் தோட்டத்தின் பெயர் பத்துமலை காபி தோட்டம் (Batu Caves Estate). ஆண்டைக் கவனியுங்கள். 140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.


There was a coffee plantation in 1883 at the foot of Batu Caves, Kuala Lumpur. Unknown information to many. The name of the estate was Batu Caves Coffee Estate. Note the year. This took place some 140 years ago at the next door Kuala Lumpur.

பசுமையான குகைக் குன்றுகள் நிறைந்த மலைத் தொடர். வானுயர்ந்த வனங்கள். வற்றாத மூலிகைப் புதர்கள். அலைமோதும் அரிய வகைப் பறவைகள். அத்தனையும் நிறைந்த அழகிய அற்புதமான பூமி. பத்துமலை புண்ணிய பூமி. கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

Batu Caves is at a mountain range with lush green cave dunes. Abuntant with celestial forests and perennial herbaceous shrubs. Plus rare species of birds. Just 13 km from Kuala Lumpur.

மலேசிய வரலாற்று நூல்களில் பத்துமலைத் தோட்டத்தைப் பற்றி பதிவுகள் எதுவும் இல்லை. பள்ளியில் மாணவர்கள் படிக்கும் போது கூட அதைப் பற்றி சொல்லித் தந்து இருக்க மாட்டார்கள். சந்தேகமே. ஏன் என்றால் ஆசிரியர்கள் பலருக்கும் தெரியாத விசயம்.

There are no records of the Batu Caves Estate in Malaysian history books. It is a sad story. Batu Caves Estate was developed by the Batu Caves Rubber Company. In 1920s WD Fraser was the manager of the estate.

பொதுவாக அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரு சொல் வழக்கம். கித்தா மரம் என்றால் தமிழன். கித்தா தோப்பு என்றால் தமிழன். செம்மண் சாலை என்றால் தமிழன். கம்பிச் சடக்கு என்றால் தமிழன். விமானச் சடக்கு என்றால் தமிழன். மலாயாவில் கால் படுகிற இடம் எல்லாம் தமிழன். தமிழன். ஆக பத்துமலையிலும் அவன் கால் படாமல் இருக்குமா?

பத்துமலைத் தோட்டத்தில் முதன்முதலில் காபி பயிர் செய்து இருக்கிறார்கள். அந்தத் தோட்டம் பத்துமலை ரப்பர் கம்பெனி (Batu Caves Rubber Company) எனும் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்திற்கு பிரேசர் (WD Fraser) என்பவர் நிர்வாகியாகப் பணிபுரிந்து இருக்கிறார்.

Batu Caves Estate covering an area of ​​approximately 600 acres. Workers 90 Tamils; 25 Javanese; 10 Malays. 11 quarters for estate workers. A rubber storage warehouse; A coffee storage warehouse; For managers two bungalows.

ஏறக்குறைய 600 ஏக்கர் பரப்பளவு. இந்தத் தோட்டத்தில் 90 தமிழர்கள் 25 ஜாவானியர்கள்; 10 மலாய்க்காரர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு 11 லயன் வீடுகள். தவிர ஒரு ரப்பர் சேமிப்புக் கிடங்கு; ஒரு காபி சேமிப்புக் கிடங்கு; நிர்வாகிகளுக்கு இரு பங்களாக்கள் இருந்து உள்ளன.

1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் அந்தப் பகுதியில் காய்கறிகள் பயிரிட்டு வந்தார்கள். பத்துமலைக் குகைகளில் இருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்து வந்து விவசாயத்திற்கு உரமாய்ப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்போது பத்துமலை அடிவாரத்தில் நிறையவே காபித் தோட்டங்கள் இருந்து இருக்கின்றன.

The Chinese who lived in the Batu Caves area in the 1860s used to cultivate vegetables. Bat dung from the Batu caves was used as fertilizer for agriculture. At that time there were a lot of coffee plantations in the foothills of Batu Caves.

தெமுவான் பூர்வீகக் குடிமக்கள் டுரியான் தோப்புகளைப் பராமரித்து வந்து இருக்கிறார்கள். பின்னர் மலை அடிவாரத்தில் இருந்த காபித் தோட்டங்களை அப்புறப்படுத்தி விட்டு பத்துமலை ரப்பர் தோட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அப்போதைய காலத்தில் ஒரு ரப்பர் மரத்தில் மேலும் கீழுமாய்ப் பல கோடுகளைப் போட்டுச் சீவுவது வழக்கம். பத்துமலைத் தோட்டத்தில் 20 கோடுகள் வரை போட்டு இருக்கிறார்கள்.

மலாயாவுக்கு முதன்முதலில் வந்த தமிழர்கள், அதாவது 1880-களில் வந்த தமிழர்கள், எப்படி பால் மரம் சீவி இருப்பார்கள். அதைப் பற்றி முறையான தகவல்கள் நம்மிடம் இல்லை.

சிலர் கற்பனையில் பலவாறாக நினைத்துக் கொள்ளலாம். ஒய்யாரமாய் சிங்காரமாய் சந்தோஷமாய் வேலை செய்து இருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளலாம். அப்படி எல்லாம் இல்லீங்க.

கம்புக் கட்டைத் தூண்களை ஏற்றி வைத்து சர்க்கஸ்காரர்களைப் போல அந்தர் பல்டி அடித்து சாகசம் செய்து இருக்கிறார்கள். அதுதாங்க உண்மை.

Fact: The Tamils came to Batu Caves in the 1860s.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.12.2020

சான்றுகள்:

1. Drabble, J. H. 1973. Rubber in Malaya, 1876–1922: The Genesis of the Industry. Kuala Lumpur: Oxford University Press.

2. The Museu Paraense Emílio Goeldi - Brazilian research institution and museum 1866.

(No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக