13 டிசம்பர் 2020

மலேசிய தேசிய கீதம் நெகாராகூ வரலாறு

பேராக் மாநிலத்தின் 26-ஆவது அரசர் சுல்தான் அப்துல்லா முகமட் ஷா (Sultan Abdullah Muhammad Shah). இவர்தான் நம்முடைய தேசியப் பாடலான நெகாராகூ தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தவர். நெகாராகூ பாடலின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

Sultan Abdullah Muhammad Shah, the 26th King of Perak is the main figure behind our national anthem Negaraku. There is a long history behind this anthem.


ஜேம்ஸ் பர்ச் (JWW Birch). பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய மேலாளராகப் பதவி வகித்தவர். இவர் 1875 நவம்பர் 2-ஆம் தேதி, மகாராஜா லேலே என்பவரால் பேராக், பாசீர் சாலாக் எனும் இடத்தில் கொலை செய்யப் பட்டார்.

James Birch (JWW Birch). He served as a colonial Resident for the State of Perak. He was assassinated on November 2, 1875, by Maharaja Lela at Pasir Salak, Perak.

ஜேம்ஸ் பர்ச் கொலையில் பேராக் சுல்தான் அப்துல்லா முகமட் ஷாவிற்கும் தொடர்பு இருந்ததாகச் சொல்லி, அவரைச் சீஷெல்ஸ் தீவிற்கு நாடு கடத்தினார்கள்.

Suspected involvement in the assassination, Sultan Abdullah Mohammed Shah was deported to the Seychelles.

சீஷெல்ஸ் தீவு (Seychelles) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவிற்குக் கிழக்கே 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்தச் சீஷெல்ஸ் தீவில் 19-ஆம் நூற்றாண்டில் *லா ரோசாலி* (La Rosalie) எனும் ஒரு பாடல் புகழ்பெற்று விளங்கியது. பிரெஞ்சு நாட்டுக் கவிஞர் பியர் ஜீன் டி பெரஞ்சர் (Pierre Jean de Beranger) எழுதிய பாடல்.



In the 19th century, a song called *La Rosalie* was famous at Seychelles Island. The song written by French poet Pierre Jean de Beranger.

சுல்தான் அப்துல்லா முகமட் ஷா அவர்கள் சீஷெல்ஸ் தீவில் இருந்த போது லா ரொசாலி எனும் அந்தப் பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் நீங்காத ஓர் இடம் பிடித்துக் கொண்டது.

Sultan Abdullah Mohammad Shah was impressed by the melody of the song La Rosalie when he was on the Seychelles Island. He is also a music lover. The song took a deep impression in him.

1883-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் ஷா விடுதலையானார். சீஷெல்ஸ் தீவின் இசைச் சுமையுடன் மலாயாவிற்கு வந்தார்.


சுல்தான் அப்துல்லா முகமட் ஷா

In 1883, Sultan Abdullah Mohammed Shah was released. He arrived to Malaya with a musical melody from the Seychelles Island.

வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார். அதையே பேராக் மாநிலப் பண்ணாகவும் மாற்றி அமைத்தார்.

Our national anthem, "Negaraku" originated from a French song, called "La Rosalie", then it was adapted and recomposed as "Terang Bulan".  This Malay song was selected as the Perak state anthem until 1956, which the song was chosen as the national anthem of Malaysia.

1957-ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த 11 மாநிலங்களுக்கும் சொந்தமான மாநிலப் பாடல்கள் இருந்தன. ஆனால் கூட்டரசு மலாயாவிற்கு மட்டும் தேசிய அளவில் பாடல் இல்லை. அதாவது தேசிய கீதம்.

அப்போது கூட்டரசு மலாயாவின் முதலமைச்சராகத் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இருந்தார். மலாயாவுக்கு ஒரு தேசிய கீதம் எழுதும் போட்டி உலகளாவிய நிலையில் நடத்தப் பட்டது.

தேசிய பாடலை தேர்வு செய்த குழுவினர்.

போட்டிக்கு 514 பாடல் பதிவுகள் உலகம் முழுமையில் இருந்தும் வந்தன. ஆனால் எதுவுமே சிறப்பாக, பொருத்தமாக அமையவில்லை.

கடைசியில் பேராக் மாநிலக் கீதத்தின் இனிமையான மென்மை பலருக்கும் பிடித்துப் போகவே அதையே நம் மலேசிய நாட்டின் தேசியப் பாடலாக மாற்றி அமைத்தார்கள்.

1990-களில் நெகாராகூ பாடலின் இசை இந்தோனேசியா நாட்டுப் பாடலான *தெராங் புலான்* (Terang Bulan) பாடலில் இருந்து மருவியது என இந்தோனேசியா பிரச்சினை பண்ணியது. பெரிய பிரச்சினையாகவும் உருவானது.

கடைசியில் வரலாற்றுச் சான்றுகள் முன் வைக்கப் பட்டன. அதோடு இந்தோனேசியா அடங்கிப் போனது. இதுதான் நம்முடைய தேசிய கீதத்தின் வரலாறு. இதுவும் ஒரு வரலாற்றுத் தகவல். மீண்டும் ஒரு தகவலுடன் சந்திக்கிறேன். நன்றி.

Malaysian national anthem Negaraku is originated from a French song called "La Rosalie". It was adapted and recomposed as "Terang Bulan". This song was selected as the Perak state anthem until 1956, since then, the song was chosen as the national anthem of Malaysia.

தேசிய பாடலின் வரிகளை எழுதிய கவிஞர் சைபுல் பகாரி எலியாஸ்

தேசியப் பாடலின் மலாய் மொழியில் வரிகளை எழுதியவர் சைபுல் பகாரி எலியாஸ் (Saiful Bahri bin Elyas). 1957 ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி அவருக்கு 1000 மலாயா டாலர் சன்மானமாக வழங்கப்பட்டது. 

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2023

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக