11 டிசம்பர் 2020

இந்தோனேசியா தமிழர்களின் ஈராயிரம் ஆண்டு வரலாறு

தமிழ் மலர் - 08.12.2020

இந்தோனேசியா தமிழர்களின் வரலாறு நீண்டு நெடியது. ஈராயிரம் ஆண்டுகளையும் தாண்டிப் போய் இதிகாசம் பார்க்கின்றது. மலாயா தமிழர்களின் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளுகின்றது. முன்னுக்குப் போய் முத்திரையும் பதிக்கின்றது. பொய் இல்லை. உண்மை. மலாயா தமிழர்களின் வரலாறு 2000 ஆண்டுகள் பழைமை என்றால் இந்தோனேசியா தமிழர்களின் வரலாறு 2500 ஆண்டுகள் பழைமையானது.

இந்தோனேசியாவில் வணிகம் செய்யப் போன தமிழர்கள் வரலாறு படைத்தார்கள். அந்த வரலாற்றிலேயே இப்போது முத்திரையும் பதிக்கின்றார்கள். தொப்புள் கொடி உறவுகளில் கரைந்தும் கரையாமல் காவியங்கள் படைக்கும் அந்த அழகிய ஜீவன்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை.

Two thousand years history of Indonesian Indians (Tamils). The history of Indonesian Indians is indeed lengthy story. The epic goes back to more than two thousand years. It also precedes the history of the Indians in Malaya. One would say if the history of Malayan Indians is 2000 years old; then the history of Indonesian Indians is much older; dates back to some 2500 years.

ஒரு காலத்தில் தமிழர்களின் கலைச் சுவடுகளும் காலச் சுவடிகளும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி இருக்கின்றன. அதற்கு மூல காரணம் அந்தக் காலத்துத் தமிழர்கள் கடல் பயணத்திலும் கலைக் கலாசாரத்திலும் அதீத வளர்ச்சிப் பெற்று இருந்தனர். தலையாய காரணம்.

1024-ஆம் ஆண்டு இராஜேந்திர சோழர் இந்தோனேசியாவின் மீது படை எடுத்தார். பலருக்கும் தெரிந்த தகவல். இருப்பினும் அதற்கு முன்னரே தமிழர்கள் அங்கே போய் விட்டார்கள்.

சின்னச் சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அரசுகளைப் பெரிய பேரரசுகளாக மாற்றி இருக்கிறார்கள். பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பெருமையாக இல்லை. பெரும் வியப்பாக உள்ளது.

In 1024 Rajendra Chola invaded Indonesia. However before this conquest the Tamils from India had done their migration. They created small villages; and then smaller states at the course of migration. They turned those states into great empires.

Asoka's Kalinga War in India about 2200 years ago...  Several thousand people survived the war and escaped.

அப்போது பிறந்து அதைப் பார்த்து இருக்கலாமே எனும் ஆசையும் வருகிறது. இப்போது ஒரு சில அரசியல்வாதிகளின் கோமாளிக் கூத்துகளைப் பார்க்காமல் ஒரு புண்ணியம் செய்து இருக்கலாமே எனும் ஒரு நப்பாசையும் அப்படியே வந்து போகிறது. விடுங்கள். மலாயா தமிழர்கள் வாங்கி வந்த வரம் அல்ல. வரப்பிரசாதம். நம் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுக்காகப் போராடிக் காட்டுவோம். வேறு வழி இல்லை. கண்கள் பனிக்கின்றன.

People of Odisha; Andhra; Tamil Nadu; Bengal escaped the calamity. They migrated to Southeast Asia by sea. They emigrated to Java, Bali, Sumatra, Borneo, the Philippines, Vietnam, Annam, Burma and Thailand. And they established smaller states; eventually empires and ruled them until the 14th century.

The descendants of the Sailendra kings who ruled Java are from India. They also ruled southern Siam (present-day Thailand). At the same time they ruled Peninsular Malaysia.

ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அசோகரின் கலிங்கப் போர். இதுவும் பலருக்குத் தெரிந்த தகவல். அந்தக் கொலைவெறி ஆட்டத்தில் இருந்து தப்பித்தவர்கள் பல ஆயிரம் பேர். பல ஆயிரம் தென்னிந்தியர்கள்.

ஒடிசா மக்கள்; ஆந்திரா மக்கள்; தமிழ்நாட்டு மக்கள்; வங்காள மக்கள். இவர்கள் கடல் மார்க்கமாகத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படி புலம் பெயர்ந்த நம்முடைய மூதாதையர்கள் ஜாவா, பாலி, சுமத்திரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ், வியட்நாம், அன்னான், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் 14-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.  

இப்போதும்கூட தாய்லாந்து நாட்டு மன்னர்கள் இராமாயணத்தில் வரும் ராமரின் பெயரைத் தங்களின் புனைப் பெயர்களாக சூட்டிக் கொள்கின்றனர். தெரியும் தானே. இராமாயணக் காவியம் தாய்லாந்து அரண்மனைச் சுவர்களில் ஓவியங்களாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் தென்னாட்டு இந்தியர்களின் கலாசார இந்திர மந்திரங்கள் இந்தோனேசியாவிலும் நிலையான இடத்தைப் பெற்று உள்ளன.

ஆக அப்போது அந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழர்களின் முதல் தென்கிழக்காசியப் புலம்பெயர்வும் நடைபெற்று உள்ளது. ஒரு செருகல். வணிகம் செய்யப் போன தமிழர்களை அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டாம்.

அவர்களின் வணிக நோக்கத்தின் புலம்பெயர்வை இதில் சேர்க்க இயலாது. ஆயிரக் கணக்கில்; இலட்சக் கணக்கில் மக்கள் இடம் பெயர்வதைப் பெரும் திரள் புலம்பெயர்வு (Mass Exodus) என்று சொல்வார்கள்.

ஒரு சில ஆயிரம் பேர் அவ்வப்போது வணிகம் செய்ய தென்கிழக்காசிய நாடுகளுக்குப் போய் இருக்கலாம். ஆனால் வணிகர்கள் மூலமாக; ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய அளவில் புலம்பெயர்வு நடைபெறவில்லை. கலிங்கப் போருக்குப் பின்னர்தான் தமிழர்களின் பெரும் திரள் புலம்பெயர்வு நடைபெற்று உள்ளது.

இந்தக் காலக் கட்டத்தில் தான் கலிங்கர்கள் தீபகற்ப மலேசியாவில் குடியேறி இருக்கிறார்கள். ஆக ஆதிகால மலாயா தமிழர்கள் இந்தக் கலிங்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.

(Sadasivan, Balaji Sadasivan 2011)

ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திரா மன்னர்களின் பரம்பரையினர் கலிங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் சயாமையும் (இப்போதைய தாய்லாந்து) ஆட்சி செய்தார்கள். அதே சமயத்தில் தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்தார்கள்.

இந்தச் செய்திகளை எல்லாம் இப்போதைய வரலாற்றில் பார்க்க முடியாது. தேடினாலும் கிடைக்காது. சொந்த காப்பியங்களை எழுதி சொந்த இராமாயணங்களைப் படைக்கும் அறிவுஜீவிகள் இருக்கும் வரையில் வரலாற்றுக்கு வரட்டுக் காய்ச்சல். புந்தோங் பக்கிரிசாமி புலம்புகிறார்.

(Coedes, George 1968. Walter F. Vella)

7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா ஜாவா தீவில் கலிங்கா பேரரசு எனும் ஓர் அரசு உருவானது. இந்தியாவின் கலிங்கப் பேரரசின் பெயரே இந்தோனேசியாவின் கலிங்கப் பேரரசிற்கும் வைக்கப் பட்டது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.850-ஆம் ஆண்டு வரை கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறது.

கலிங்கப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் மேலும் இரு பேரரசுகள் இந்தோனேசியாவில் இருந்து உள்ளன. முதலாவது கூத்தாய் பேரரசு; மற்றொன்று தர்மநகரா பேரரசு.

மேலும் ஒரு செய்தி. கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு. இந்த மூன்று பேரரசுகளும் தான் இந்தோனேசியாவின் வரலாற்றில் மிக மிகப் பழமையான பேரரசுகள். நினைவில் கொள்வோம்.

ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு; சிங்காசாரி பேரரசு; சைலேந்திரா பேரரசு போன்ற அரசுகள் தோன்றுவதற்கு முன்னரே கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவில் உச்சம் பார்த்து ஆட்சி செய்து விட்டது.

அந்தக் காலக் கட்டத்தில் இந்தோனேசியாவில் இருந்து தமிழர்கள் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்தோனேசியா வரலாற்று ஆசிரியர் பூர்வாந்தாவின் (H Purwanta 2012) ஆய்வு அறிக்கையில் இருந்து இந்த உண்மையை இங்கே பதிவு செய்கிறேன். சரி.

இராஜேந்திர சோழர், ஸ்ரீ விஜய பேரரசின் மீது தாக்குதல் நடத்திய பின்னர், இந்தோனேசியாவில் தமிழர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து உள்ளன. தற்போதைய வடக்கு சுமத்திரா மேடான் பகுதியில் அமைந்து உள்ள ஒரு பண்டைய வர்த்தக நகரத்தைக் கோத்தா சீனா இந்தியா என்று அழைக்கிறார்கள். சோழர் படையெடுப்பின் நேரடி விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

வட சுமத்திரா, அந்தாம் தேவி மாவட்டத்தில் லோபு துவா எனும் கிராமத்தில் 1873-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் லோபு துவா கல்வெட்டு (Lobu Tua Inscription). பாரஸ் கல்வெட்டு என்றும் அழைப்பார்கள். தமிழ் மொழியில் எழுதப்பட்டது. 1088-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வணிகர்கள் அங்கே வணிகம் செய்து உள்ளதாகப் பதிவுகளில் உள்ளன. வருடத்தைக் கவனியுங்கள். 1088-ஆம் ஆண்டு.

Lobu Tua Inscription, also called Barus Inscription, is an inscription written in Tamil language which was discovered in 1873 in the village of Lobu Tua, Andam Dewi district of Central Tapanuli Regency, in North Sumatra Province, Indonesia.

This inscription is dated 1010 Saka, or 1088 AD. This inscription was reported in the Madras Epigraphy Report of 1891-1892 by E. Hultzsch, an English epigraphist in India.

சுமத்திரா பாருஸ் துறைமுகத்தில் ஒரு தமிழ் தொழிற்சங்கம் இருந்ததை அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அந்தத் தொழிற்சங்கத்திற்கு "ஆயிரம் திசைகளில் ஐந்து நூறு" (Disai-Ayirattu-Ainnurruvar) என்று பெயரிடப்பட்டது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுப்பராயலு ஆய்வின்படி அந்தத் தொழிற்சங்கத்தின் மற்றொரு பெயர் அயயாவோல் (Ayyavole). இதே போல மற்றொரு தமிழ் மொழி கல்வெட்டையும் வட சுமத்திரா ஆச்சே நகரில் கண்டு எடுத்து இருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டு இப்போது இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

The inscription mentions the existence of a Tamil trade union in the Barus region. The trade union was named "The Five Hundreds of a Thousand Directions" (Disai-Ayirattu-Ainnurruvar).

According to Prof. Y. Subbarayalu from Tamil University, Thanjavur, this trade union's other name was Ayyavole, which also left a Tamil-language inscription in Aceh. The inscription is stored in the National Museum of Indonesia.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள். ஒரு கல்வெட்டில் உள்ள சில தமிழ்ச் சொற்கள்:

சுவாதி ஸ்ரீ சர்க்கரை  - svasti sri cakarai
ஆயிரத்து - ayirattu
செலானி - cellani
திங்கள் - tinkal
வரோசன மாதம் - varocana matan
வல்லவட்டம் திசை - vallavat teci
கொண்ட - konta
தினத்து வெள்ளப்புரட்டு - tinattu velapurattu
நிறைந்த - niranta
விளங்கு திசை ஆயிரம் - vilanku ticai ayira
நாமக்கண்ணார் நகர சேனப்பர் - nammakanar nakara senapa

இப்படி நிறைய தமிழ் எழுத்துகள் அந்தக் கல்வெட்டில் உள்ளன.

உலக வரலாற்றில் பற்பல நாகரிகங்கள் வந்தன. பார் புகழப் புகழாரம் பாடின. அவற்றில் உச்சம் பார்த்த சில நாகரிகங்கள் இடம் தெரியாமல் சிதைந்து போயின. அவற்றில் சில அட்ரஸ் இல்லாமலேயே மறைந்தும் போயின. இவை அனைத்தும் நவீன காலத்து மனிதர்களால் காலா காலத்துக்கும் மறக்கப்பட்ட நாகரிகங்கள்.  

அவற்றில் தென் இந்தியர்கள் நாகரிகம் மட்டும் ஏனோ தெரியவில்லை. திசை திரும்பிய இடம் எல்லாம் தழைத்தோங்கியது. பல ஆயிரம் ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்தது. அந்த நாகரிகத்தின் கலாச்சார சுவடுகளும் கலைச் சுவடிகளும் தென்கிழக்கு ஆசியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரந்து விரிந்து படர்ந்து போய் கிடந்தன.

ஆனால் இப்போது நேற்று வந்த சாதி சனங்களால் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டு பாவப்பட்ட பிள்ளையாய் பரிதவித்து நிற்கிறது. கிளற வேண்டாம். கொரோனா காலம். நெஞ்சு அடைத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி மேலும் இடம்பெறும்.

சான்றுகள்:

1. International Journal of Advanced Research in ISSN: 2278-6236. Management and Social Sciences Impact Factor: 6.284. Vol. 5 | No. 6 | June 2016 www.garph.co.uk IJARMSS | 937

2. THE MIGRANTS OF KALINGA: FOCUS ON THEIR LIFE AND EXPERIENCES (2016) Janette P. Calimag, Kalinga-Apayao State College, Bulanao Tabuk City, and Kalinga.

3. Sadasivan, Balaji, Singapore: Institute of Southeast Asian Studies, [2011] 313 p.

4. The Indianized states of Southeast Asia, Author: George Coedes, Honolulu, East-West Center Press [1968]

5. Madras Epigraphy Report of 1891-1892 by E. Hultzsch



 

3 கருத்துகள்:

  1. சமீபத்தில் உங்கள் வலைப் பதிவுத்தளத்தினைக் காணநேர்ந்தது. முக்கியமான ஆவணப்படுத்தலாக அமைகிறது உங்கள் பதிவு. தொடரட்டும் தங்கள் சேவை.

    பதிலளிநீக்கு
  2. தமிழர்களின் உணர்ச்சி அடக்க முடியாத ஒன்று என்று ஒரு நாள் வெடித்துச் சிதறும் அப்போது ஒருவன் வருவான் அவன் தான் மலைநாட்டுத் தமிழன் புரட்சிகளை செய்ய ஆரம்பிப்பான் விட்டுப்போன மண்ணை வீரம் கொண்டு ஆட்சி புரிவான் இது சாத்தியம் அன்று இந்த உலகமே அண்ணாந்து பார்த்து வியந்து போகும்

    பதிலளிநீக்கு