05 மார்ச் 2021

மலாயா தமிழர்கள்: கெமுனிங் தோட்டம் சுங்கை சிப்புட் - 1870

கெமுனிங் தோட்டம் சுங்கை சிப்புட் நகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது. இன்னும் இருக்கிறது. மலாயாவில் மிகப் பழைமையான தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 1870-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டது. (Kemuning Estate, Sungai Siput, Perak - 1870)

Kemuning Estate, three miles from Sungai Siput, Perak. It is one of the oldest estates in Malaya. Developed in 1870s. In several respects Kemuning Estate is unique among rubber properties. It stands in the enviable position of being absolutely free from government rent, having been granted in 1870s, in perpetuity to D.H. Hill by the Perak Government in recognition of his pioneering work in the country.


பேராக் அரசாங்கம் டி.எச்.ஹில் என்பவருக்கு அந்தத் தோட்டத்தை அன்பளிப்பாக வழங்கியது. இவர் பேராக் மாநிலத்தில் பல கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அதனால் நிலவரி இல்லாமல் அவருக்கு அந்தத் தோட்டம் வழங்கப்பட்டது.

1900-ஆம் ஆண்டுகளில் A.D.Machado என்பவர் நிர்வாகியாகப் பணிபுரிந்தார். 6000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

Under the management of A.D. Machado it has been the scene of many experiments and at the time has at once the oldest rubber estate in the district.


முதலில் 1870-ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு நடப்பட்டது. பின்னர் அராபிக்கா காபி நடப்பட்டது. அதன் பின்னர் 1897-ஆம் ஆண்டில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. கெமுனிங் தோட்டம் திறக்கப்பட்ட போது 60 தமிழர்கள் வேலை செய்தார்கள்.

Cassava was first planted in this estate in the 1870s. Then Arabica coffee was planted. Subsequently, in 1897, rubber was cultivated. 60 Tamils were employed when the Kemuning estate was first opened for cultivation.

ஆள் சேர்ப்பு செய்வதற்காக ஓர் ஐரோப்பியத் துணை நிர்வாகி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். கங்காணி எவரும் அனுப்பபடவில்லை. ஏன் என்றால் கங்காணி முறை அந்தக் கட்டத்தில் மலாயாவில் அமல்படுத்தப் படவில்லை.

An European assistant was sent to India for laborers recruitment. No Kangani was sent. Because the Kangani system was not implemented in Malaya at that time.

ஆரம்பக் காலங்களில் தோட்டத்தில் அதிக வருமானம் இல்லை. இருப்பினும் இந்தத் தோட்டத்தில் ஈய்ச் சுரங்கங்கள் இருந்தன. அவற்றைச் சீனர்களுக்கு வாடகைக்கு விட்டார்கள். அதன் மூலம் வருமானம் கிடைத்தது. அதன் பின்னர் தமிழர்கள் 380 பேர் வரவழைக்கப் பட்டார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சுங்கை சிப்புட் பகுதியில் மிகப் பெரிய தோட்டமாக விளங்கியது.

In the early days Kemuning estate had also a distinction that, although it is a rubber estate, the bulk of its revenue so far had been derived from rubber source, but from tin-mining, the estate having many strips of rich tin - land within its boundaries. These mines are worked by Chinese in tribute, and yield a very handsome profit.

தோட்டத்தில் வேலை செய்த தமிழர்களுக்காக ஒரு மருத்துவமனையையே கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அந்தத் தோட்டம் எவ்வளவு பெரிய தோட்டமாக இருந்து இருக்க வேண்டும். அத்தாப்பு கூரைகள் வேய்ந்த மருத்துவமனை.

An atap roofed hospital was built for the Tamils who worked in the estate. Just imagine how big the estate must have been.


இங்கு பப்பாளி சாறு செய்வதற்கு 300 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி மரங்களும் நடப்பட்டன. ரப்பர் வருவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

கொஞ்ச காலம் எலுமிச்சை புல் செடிகள், மிளகு எல்லாம் பயிர் செய்து இருக்கிறார்கள். மலாயா வரலாற்றில் கெமுனிங் தோட்டம் தலையாய மிளகுத் தோட்டமாகும். இப்போதுகூட அதற்கு மிளகுத் தோட்டம் என்று செல்லப் பெயர் உண்டு.

In addition to rubber and tin, the property produced papaya juice, lemon-grass oil, coffee, and a little pepper for export.

ஆக 1840-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயாவுக்கு வந்து இந்த நாட்டை வளப்படுத்திய இந்தியர்கள் (தமிழர்கள்) வந்தேறிகளா? அப்படிச் சொல்லும் பொது கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
05.03.2021

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 412 - 413. Britain Publishing Company, 1908, p

2. http://www.biship.com/fleetlists/fleet1879-1889.htm

3. http://seasiavisions.library.cornell.edu/catalog/

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)




 

1 கருத்து: