மலாயாவின் கட்டமைப்புப் பணிகளில் மலாயா தமிழர்களின் அர்ப்பணிப்பு அன்பளிப்புகள்; சமர்ப்பணக் காணிக்கைகள்; ஆக்கல் அறுவடைகள் காலத்தால் மறக்க முடியாத வரலாற்றுத் தடங்கள். 1882-ஆம் ஆண்டில் இந்தத் தோட்டத்தில் குடியேறிய தமிழர்கள் அந்தப் பகுதியின் காண்டா காடுகளையும் சதுப்பு நிலங்களையும் செப்பனிட்டுக் காபி தென்னைத் தோட்டமாக மாற்றி இருக்கிறார்கள்.
1882-ஆம் ஆண்டில் சிலாங்கூர் பந்திங், ஜூக்ரா, பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. வருடத்தைக் கவனியுங்கள். 1882. அதற்கு முன்னதாகவே தமிழர்கள் குடியேறி இருக்கலாம். ஏன் என்றால் அது முன்பு ஓர் ஆமணக்கு தோட்டம்.
மலாயாவில் 1840-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். அப்படிக் குடியேறிய தமிழர்கள் இந்த பெர்மாத்தாங் தோட்டத்திற்கும் வந்து இருக்கலாம். ஆமணக்கு தோட்டத்தில் வேலை செய்து இருக்கலாம்.
Selangor, Banting, Jugra Permatang Estate was established in 1882. At first it was a banana plantation. Then castor; Coffee plantation. It then became a coconut plantation. Tamil people were brought in from India as indentured labourers to this estate. A picture speaks more than 1000 words
மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா தமிழர்கள் மலாயாவிற்கு வந்து விட்டார்கள். இதை மலாயா வாழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வந்தேறிக்கு முன்னர் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது தப்பு.
ஒரு நாட்டில் மிக உயர்ந்த அரசியல் பதவி வகித்த ஒருவரின் குடும்பம் கப்பலேறி வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் இங்கே வந்து குடியேறி விட்டார்கள். அந்தத் தமிழர்களுக்குப் பின்னர் வந்த சிலர், மஞ்சள் துணி போட்டு மசாலா தோசை சுட்டுச் சாப்பிட்டு இருக்கிறார்கள். ரொட்டி சானாய் போட்டு வயிறு வளர்த்து இருக்கிறார்கள்.
அந்தக் கதையை எல்லாம் தமிழர்களுக்குப் பின்னர் வந்த வந்தேறிகள் மறந்து விட்டார்கள். காலம் செய்த கோலம். மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். ஆக யார் வந்தேறிகள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பந்திங் பெர்மாத்தாங் தோட்டம் முதலில் இது ஒரு வாழைத் தோட்டம். பின்னர் ஆமணக்கு (castor) தோட்டம். பின்னர் காபி தோட்டம். அடுத்து தென்னைத் தோட்டம். அதற்கு அடுத்து ரப்பர் தோட்டம்.
இந்தத் தோட்டம் ஜுக்ரா நகரத்தில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது. இந்தத் தோட்டத்தில் ஓர் அதிசயம் என்னவென்றால் அந்தத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழர்கள் சொந்தமாகவே தங்களின் வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவி இருந்தன.
The Permatang coconut estate, situated seven miles from Jugra town, has several interesting and distinctive features. The coolies are not housed in "lines," as is usual on estates in the Federated Malay States, but in houses built by themselves to their own design and scattered over the property.
ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்தமாகக் காய்கறித் தோட்டம். தோட்டப் பால் பண்ணையை நிர்வாகி அறிமுகம் செய்தார். தோட்டத்தில் 35 பசுமாடுகள். பால் மற்றும் வெண்ணெய் விற்பனை நல்ல லாபத்தை அளித்தது. இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 785 ஏக்கர். இதில் 300 ஏக்கர் தென்னை மரங்கள்.
Each house has its own patch of garden. The manager has introduced dairy farming, and the sale of milk and butter from his thirty-five head of cattle yields a profit after paying all expenses. The estate is 785 acres in extent, 300 acres of which have been planted with coconuts.
1906-ஆம் ஆண்டில் 17,000 தென்னை மரங்கள். 7335 தேங்காய்கள். 1907-ஆம் ஆண்டில் 150,000 தேங்காய்கள் கிடைத்தன.
There are altogether 17,000 coconut-trees, and the produce from those in bearing in 1906 was 7,335 nuts; the estimated yield for 1907 was 150,000 nuts. The nuts are made into copra on the estate, and the product is sold in Singapore.
1900-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் நிர்வாகி மன்ரோ (R. W. Munro). 1864-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். 1895-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். இவர் வருவதற்கு முன்னர் பல நிர்வாகிகள் பணி செய்து உள்ளனர். நிர்வாகி மன்ரோ, சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காபி பயிர்த் தொழில் ஈடுபட்டார். இந்தத் தோட்டம் Morib Coconut Estates Syndicate நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.
Mr. R. W. Munro, the manager, was born in 1864, came to the Federated Malay States in 1895, and spent years in coffee-planting in Negeri Sambilan and Selangor. Many managers have worked before he came. R. W. Munro has managed the Permatang estate since 1900s. The proprietary company, the Morib Coconut Estates Syndicate.
இதை எல்லாம் பார்த்த பிறகு மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்ல முடியுமா. மீண்டும் சொல்ல வேண்டிய நிலை. வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.03.2021
https://ksmuthukrishnan.blogspot.com/2021/03/1882.html
சான்றுகள்:
1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 492.
2. http://www.biship.com/fleetlists/fleet1880-1889.htm
3. http://seasiavisions.library.cornell.edu/catalog/
4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941
5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)
அருமை ஐயா....
பதிலளிநீக்குமலாயா தமிழர்கள் வரலாறு காலத்தால் அழிவு இல்லாதது...