01 ஏப்ரல் 2021

மின்னல் எப்.எம். 75-ஆம் ஆண்டு நிறைவு நாள்

மொழிக்கு கலை ஒரு கலைவாசல். கலைக்கு இசை ஓர் இசைவாசல். இசைக்கு மொழி ஒரு விழிவாசல். அந்த மொழிக்கு ஒலி ஒரு தலைவாசல். அதுதான் மின்னல் எப்.எம். என்கிற ஒலிவாசல். அதுவே ஆனந்தத் தேன்காற்றில் ஓர் ஆனந்த பைரவி. வணக்கம் சொல்லி வாழ்த்துகிறேன்.
1951-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மலாயா வானொலி நாடக நடிகர்கள்

நம்முடைய பிள்ளையின் தோற்றம் எப்படி இருக்கிறதோ. அது பிரச்சினை இல்லை. என்றைக்கும் கிளியோபாட்ரா தான். நன்றாக நடக்கிறதோ இல்லையோ. என்றைக்கும் நம்முடைய ஜான்சிராணி தான். நன்றாகப் பேசுகிறதோ இல்லையோ. என்றைக்கும் நம்முடைய இளவரசி டயானா தான். இன்றைக்கும் என்றைக்கும் நடமாடும் தாஜ்மகால்.

அந்த வகையில், மின்னல் எப்.எம். நம்முடைய மொழிக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழுக்குத் தோரணம் கட்டி அழகு பார்க்கும் சின்ன ஒரு தேவதை.

அந்தச் சிருங்காரச் சொப்பனத்தை நாம்தான் போற்ற வேண்டும். புகழ வேண்டும். தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். கண்டிப்பது வேறு. தண்டிப்பது வேறு. அதே சமயத்தில், தொட்டதற்கு எல்லாம் குறை சொல்லும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

1950-களில் கோலாலம்பூர் ஓரியண்டல் கட்டடத்தில்
மலாயா வானொலியின் ஒலிபரப்பு

அடுத்து, நம்முடைய குழந்தையை நாம் தான் முதலில் உச்சி முகர்ந்து மெலிதாய் அரவணைக்க வேண்டும். வேறு யாரைப் போய்ப் புகழச் சொல்கிறீர்கள். சொல்லுங்கள்.

ஆப்பிரிக்கா காங்கோ காட்டில் ஆடிப்பாடும் குழந்தையைத் தேடிப் போகச் சொல்கிறீர்களா. இல்லை மங்கோலியாவில் மஞ்சள் அரைத்து மாமன் மச்சான் விளையாடும் குழந்தையைத் தேடிப் போகச் சொல்கிறீர்களா.

அழகு பைங்கிளியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு ஆலமரத்து ஜீவனைப் புகழ்வது எல்லாம் நன்றாக இல்லை. ஆக நம்முடையதை நாம் புகழ்வது என்பது ஒரு சாதுர்யமான சாணக்கியம். தப்பில்லை.

மலாயா வானொலி பழம் பெரும் பாடகர்கள்

இன்னும் ஒரு விசயம். மின்னல் எப்.எம். அடுத்து டி.எச்.ஆர். ராகா. இரண்டுமே நம்முடைய இரண்டு கண்கள். இதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை. அப்படி மாற்றுக் கருத்துகள் இருந்தால் நல்லது.

அப்புறம், இரண்டு கண்களில் எந்தக் கண் உங்களுக்குப் பிடிக்கும் என்கிற கேள்விதான் உங்களையே கண்சிமிட்டிக் கேட்கும். இன்றைக்கு மின்னல் எப்.எம். பற்றிய தகவல்கள். இன்னொரு நாளைக்கு டி.எச்.ஆர். ராகா. சரி. நம்முடைய மின்னலுக்கு வருவோம்.

வானொலி திரைப்பட புகழ் சந்திரா சண்முகம்

புனிதமான இலக்கிய மொழியில் சுப்ரபாதம் பாடும் அமுதே தமிழே. மென்மையானத் தென்றலாய்த் தவழ்ந்து வரும் தாலாட்டுதே வானம். நம்பிக்கையின் சுடர்விளக்காய் நம்பிக்கை நட்சத்திரம். மலேசிய மனங்களை வருடிச் செல்லும் மக்கள் நடுவே. மறக்க முடியாத மலரும் நினைவுகள்.

மண்வாசனைகளைச் சுமந்து வரும் மண்ணின் நட்சத்திரம். நயனங்கள் பேசும் நம்மைச் சுற்றி. செதுக்கிச் சிறகடிக்கும் சிறுகதைகள். மஞ்சுளாவின் மணிமணியான நாடகங்கள். நலம் விசாரிக்கும் யாவரும் நலம்.

மலாயா வானொலி தமிழ்ப் பகுதிக்கு புதிய பரிமாணத்தைக்
கொண்டு வந்த திரு. பாலகிருஷ்ணன்

இப்படி கலைகட்டும் நிகழ்ச்சிகள். அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தனையும் நல்ல நல்ல நிகழ்ச்சிகள். அத்தனையும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இனிமையான சாருகேசிகள். பாராட்டுகிறோம்.

மின்னல் எப்.எம். என்று சொல்லும் போதே, மின்மினியாய் இனிமையான கீர்த்தனங்கள் துளிர்க்கின்றன. அங்கே அழகு அழகான குரல்கள். அழகு அழகான நிகழ்ச்சிகள். அழகு அழகான சிந்து பைரவிகள். எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். தப்பில்லை.


இருந்தாலும், ரொம்பவும் புகழக் கூடாது. அப்புறம் இருமல் வந்து... காய்ச்சல் வந்து...  வேண்டாங்க. இதோடு நிறுத்திக் கொள்வோம்.

மின்னல் எப்.எம். பண்பலையின் நீண்ட நெடிய வரலாற்றுச் சுவடுகளை நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பு வானொலி 6 என்றும் மலேசிய வானொலி அலைவரிசை 6 என்றும் அழைக்கப்பட்டது. அதில் இருந்து வந்த புதிய பரிமாணம்தான் மின்னல் எப்.எம். மலேசிய இந்தியர்களின் தகவல் பொழுதுபோக்கு ஊடகம்.

1960-ஆம் ஆண்டுகளில் வானொலிப் பெட்டி

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது. மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது. மலேசிய வானொலியின் வரலாறு 1940-களில் தொடங்குவதாக பலர் சொல்கின்றனர். சொல்லியும் வருகின்றனர். அது தவறு. 1921-ஆம் ஆண்டு தொடங்குகிறது என்பதுதான் மிகச் சரியான தகவல்.

1920-களில், ஜொகூர் மாநில அரசாங்கத்தில் ஏ. எல். பெர்ச் என்பவர் ஒரு மின்பொறியியலாளர். இவர்தான் மலாயாவிற்குள் முதன்முதலாக ஒரு வானொலிப் பெட்டியை, இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்தார்.

1960-ஆம் ஆண்டுகளில் வானொலிப் பணியாளர்கள்

கொண்டு வந்த சூடு ஆறவில்லை. அதற்குள் ஜொகூர் கம்பியில்லாத் தொடர்புக் கழகத்தை (Johore Wireless Association) உருவாக்கினார். 300 மீட்டர் ஒலி அலையில் ஒரு சின்ன கம்பியில்லாத் தொடர்பு முறை. அவ்வளவுதான்.

அதற்கும் மறு ஆண்டு 1922-இல், பினாங்கில் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூரிலும் அதே போல ஒரு கழகம். அதன் பின்னர், மலாக்காவிலும் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது.

இந்தக் கம்பியில்லாத் தொடர்பு முறை, அப்போதைக்கு ஒரு புதிய தொழில்நுட்ப முறை. அரிச்சுவடி படித்துக் கொண்டு இருந்தன.


ஆக அந்த 1921-ஆம் ஆண்டு, வானொலி என்கிற ஒரு நூதனமான பெட்டி எப்படியோ கப்பலேறி மலாயாவுக்கும் வந்துவிட்டது. கப்பலின் பெயர் தெரியவில்லை. நிச்சயமாக அது ரஜுலா கப்பலாக இருக்க முடியாது. ஏன் தெரியுமா.

1926-இல் தான் ரஜுலா கப்பல், சென்னைக்கும் பினாங்கிற்கும் பயணத்தைத் தொடங்கியது. ஆக, வானொலிப் பெட்டி மலாயாவுக்
கு வந்தது 1921-இல். இந்த விசயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இப்போது தெரிந்து இருக்கும்.


1930-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தைச் சேர்ந்த சர் ஏர்ல் (Sir Earl) என்பவர், மாதத்தில் இரண்டு நாட்களுக்குச் சிற்றலை ஒலிபரப்பைத் தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் ஒலிபரப்பு.

அதுவே பின்னர் காலத்தில், சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் பகுதிக்கு மாற்றம் கண்டது. அங்கு இருந்து, ஒரு புதிய ஒலிபரப்புச் சேவைத் தொடங்கினார்கள். மலாயா கம்பியில்லாக் கழகம் என பெயரையும் வைத்தார்கள்.


அடுத்து, சர் செண்டோன் தாமஸ் (Sir Shenton Thomas) என்பவர் வருகிறார். இவருடைய அரிய முயற்சிகள் தான் இமயத்தில் சிகரம் காண்கின்றன. அவருடைய தன்னலமற்ற சேவைகள் மலாயா ஊடக வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டியவை. உண்மையிலேயே, இவரைத் தான் மலாயா வானொலியின் தந்தை என்று சொல்ல வேண்டும்.

மலாயாவின் ஒலிபரப்புத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தார். சிங்கப்பூரில் இருக்கும் கால்டிகாட் குன்றில் ஓர் ஒலிபரப்பு அறையை உருவாக்கினார். அதற்கு மலாயா பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corporation of Malaya) என பெயரையும் சூட்டினார்.

சர் செண்டோன் தாமஸ், தன் நண்பர்கள், அறிந்தவர்கள்  தெரிந்தவர்களிடம் கைமாற்றாகப் பணம் வாங்கி இருக்கிறார். அரசாங்கம் பணம் எதுவும் கொடுத்து உதவியதாகத் தகவல் எதுவும் இல்லை.

இது 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடந்தது. ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த ஒலிபரப்புக் கழகம் பின்னர் அரசுடைமையாக்கப் பட்டது. மலாயா ஒலிபரப்புக் கழகம் என பெயர் மாற்றமும் செய்யப் பட்டது.

இந்த மலாயா ஒலிபரப்புக் கழகத்தில், ஒலிபரப்பு மொழிகளாக மலாய், ஆங்கிலம், மாண்டரின் சீனம், தமிழ் என நான்கு மொழிகள் இருந்தன. மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு 1938-ஆம் ஆண்டு தொடக்கப் பட்டதாக சிலர் சொல்கின்றனர். அதுவும் தவறு. 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்பது தான் மிகச் சரியான தகவல்.

அந்த நாளில் சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தமிழ்மொழியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மற்ற மொழிகள் பினாங்கில் இருந்தும் ஒலிபரப்பு செய்யப் பட்டன.


கோலாலம்பூர் நிலையத்தில் இருந்து தமிழ் ஒலிபரப்பு செய்யப்படும் போது, தஞ்சை தாமஸ் என்பவர் தமிழ்ப்பகுதியின் தலைவராக இருந்தார். மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இவர் அழைக்கப் படுகிறார்.

1942-இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டம். மலாயாவிலும் சிங்கப்பூரிலும் பிரிட்டிஷாரின் ஆட்சி ஒரு முடிவிற்கு வருகிறது. அப்போது மலாயா தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் ஜே.எம்.பி.கே வானொலி. ஜப்பானியர்கள் வந்ததும் முதல் வேலையாகப் பெயரை மாற்றம் செய்தார்கள்.


அப்போது டி.எஸ்.சண்முகம் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் (மவுண்ட்பாட்டன் சாலை) இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து, அப்போதைய ஒலிபரப்பு தொடங்கியது.

1946-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் மலாயா ஒலிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது. (On 1st April 1946, the Department of Broadcasting was established in Singapore) இன்றோடு 75 ஆண்டுகள். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.04.2021

(தொடரும்)

சான்றுகள்:

1. https://www.rtm.gov.my/index.php/en/background

2. https://www.britannica.com/topic/Radio-Television-Malaysia

3. https://www.abu.org.my/portfolio-item/radio-televisyen-malaysia/

4. https://www.nst.com.my/news/2017/03/222337/sound-history


பேஸ்புக் பதிவுகள்


Perumal Thangavelu: ஊடகங்களில் இன்னும் வெளி வராத செய்திகளை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh >>> Perumal Thangavelu: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க

Sheila Mohan: மின்னல் பண்பலை. வரலாற்றை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றிங்க சார்...

Malathi Nair: Vaaltukal

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: மகிழ்ச்சி

Sarkunavathi Panchanathan: Vaazhga Minnal Fm. Valarga um seavai!

Kala Balasubramaniam: 🙏

Yogavin Yogavins: 🙏

Muthukrishnan Ipoh >>> Yogavin Yogavins: வாழ்த்துகள்

Letchumanan Nadason: 🙏

Muthukrishnan Ipoh >>> Letchumanan Nadason: வாழ்த்துகள்

Aananthi Pooja: 🙏

Valliamah Nadesan: Vaaltukal.

Muthukrishnan Ipoh >>> Valliamah Nadesan: நன்றிங்க

Muthukrishnan Ipoh >>> Valliamah Nadesan: வாழ்த்துகள்

Mohan Jegan: Arumai sar

Muthukrishnan Ipoh >>> Mohan Jegan: நன்றிங்க

Bobby Sinthuja: வாழ்த்துகள்

Mohamed Shameem: ஒலி அலை 6

Muthukrishnan Ipoh >>> Mohamed Shameem: வாழ்த்துகள்

Maha Lingam: வாழ்த்துகள் ஐயா..

Sathya Raman: வணக்கம் சார். ஓர் இத்தாலியரான மார்கோனி கண்டுபிடித்த வானொலி பற்றிய நிறைய தகவல்களைப் பகிர்தமைக்கு மிக்க நன்றி.

மலேசியா வானொலி தமிழ்ப் பிரிவு வானொலி ஆறுக்கு முன்பாக "ரங்காயான் மேரா" என்ற பெயரிலே வலம் வந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் .

சிங்கப்பூர் வானொலியை அடுத்து நல்ல தமிழ் பேசி நயம்பட நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்ற ஒரே வானொலி மின்னல் எப்,எம் எனலாம்.

சதா பொதுநல அறிவிப்பு என்கிற பெயரில் புத்தி சொல்லி அதிகமான ஆங்கில கலவையைப் புகுத்தி வெறும் பாடல்கள்; வெட்டிப் பேச்சும்; விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் தமிழுக்கென்று பாடுபடாத மற்றொரு வானொலியைப் பற்றி வம்பு பேசி ஒன்று ஆக போவதில்லை.

அன்று ராங்காயான் மேராவாக உலா வந்த காலக் கட்டத்தில் வானொலி ஒலிபரப்பில் தெளிவு இருக்காது. சதா இரைச்சலாகவே இருக்கும்.

அப்போது சிங்கப்பூர் வானொலிக்கு நான் நிறைய எழுதிக் கொண்டிருந்த நேரம்.

அவர்களின் 96.8-லிருந்து நிகழ்ச்சிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்க முடிந்த போது நம்மூர் வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைச் சரியாகக் கேட்க முடியவில்லை என்ற ஆதங்கங்களை அன்றே பத்திரிகையில் புகார் எழுதிப் புரட்டிb போட்ட கதை எல்லாம் நடந்தது.

நிறை குறைகளைச் சுட்டி காட்டினால் பெருந்தன்மையோடு ஏற்கும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லை.

இன்று மின்னல் எப்.எம்.மில் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பலரின் குரல்கள் இனிமை சேர்த்தாலும் சிலரின் குரல்களிலே அபரிதமான நேர்மை தெரிகிறது.

புதிதாக வந்த அறிவிப்பாளர்கூட பிசிறி இல்லாமல் தமிழை நல்ல படி உச்சரித்து உரையாடுவது உற்சாகம் அளிக்கிறது.

75-ஆம் ஆண்டைக் கொண்டாடும் மின்னல் எப்.எம்-க்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சதா மலேசிய சரித்திரத்தையும், மலாயா தமிழர்களைப் பற்றியும் இன்று ஒருநாள் மறந்து மக்களுக்கு மகிழ்வூட்டும் வானொலி அதன் ஆக்கம் பற்றி விவரித்து விளக்கமாகப் பதிவு செய்தது சிறப்பு சார்.

அவ்வப்போது இப்படியான கட்டுரைகளைத்த் தந்து மன இறுக்கத்தை தள்ளி வைக்கவும். நன்றிங்க சார். வாழ்க வானொலி. வெல்க எம் மொழி 🌷

மா.சித்ரா தேவி >>> Sathya Raman: இன்றும் வானொலி நமக்கு உற்ற தோழிதானே

Sathya Raman >>> மா.சித்ரா தேவி: சில சமயம்.😁

Easkay Vasan: வானொலிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறா. அருமை ஐயா, அற்புதம்.

Sheila Mohan: அருமைங்க சார்.. வானொலியின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. 75-ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடும் மின்னல் பண்பலைக்கு நல்வாழ்த்துகள்

Parimala Muniyandy: அருமையான தகவல்கள்... விவரம் தெரிந்த நாள் முதல் வானொலியின் தீவிர ரசிகை என்பதால் இந்தப் பதிவை மிகவும் விரும்பிப் படித்தேன். மிகவும் சிறப்பான பதிவு... நன்றிங்க அண்ணா🙏

Parameswari Doraisamy: அருமை ஐயா. நானும் வானொலியின் தீவிர நேயர். தகவல்களுக்கு மிக்க நன்றி

Oviyar Mugil: 🙏

Funa Perumal: பழைய ஞாபகங்களைக் கட்டி அணைத்து கொண்டு இருக்கிறீர்கள்... நமக்கு ஞாபகம் வருகிறது... சந்தோஷம் அடைகிறேன்... நன்றி

Muthiah Valliyappah Karuppiah: வணக்கம் ஐயா... சிறப்பானச் செய்தி... வானொலி 6 க்கு முன்னால் சிவப்பு அலை வரிசை (Rangkaian Merah) என்பதாக ஞாபகம்... சரியா தவறா என்று தெரியவில்லை...

Velan Mahadevan: Super info

Thanga Raju: மின்னல் பண்பலையின் அருமையான வரலாற்றுப் பதிவு... சூப்பர்

Raghawan Krishnan: Awesome.

Thanga Raju: 🙏

Vijaya Sri: அருமை ஐயா

Thanabaal Varmen: 🙏

Vijayan Vijay: Sir, I work in oriental building 🏢 Insurance company... United India fire & general Insurance co.

Renganathan Thirumalai: Information on the radio broadcasting in this country especially in Tamil. Tq

KM Guna: அருமையான பதிவு நன்றி அய்யா.

Alagumani Mathivanan: உற்ற நண்பனாக இருக்கும் மின்னல் பண்பலை பற்றிய தகவல்கள் அருமை ஐயா

Palaniappan Kuppusamy: 🙏







 

2 கருத்துகள்: