மலேசிய தமிழர்ச் சமூகத்திற்கு மலேசியப் பிரதமர் நேற்று (03.04.2021) ஓர் வாக்குறுதி அளித்து உள்ளார். மகிழ்ச்சியான வாக்குறுதி. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. “நாங்கள் உங்களை கவனித்துக் கொள்வோம். இது எங்கள் உறுதிமொழி”. ("We will take care of you. This is our pledge to you") இந்த வாக்குறுதியை உண்மையிலேயே நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள முடியுமா. பெரிய ஒரு கேள்விக்குறி?
தமிழர்கள் ஏன் தற்போதைய இந்த இக்கட்டான நிலைக்குப் பின் தள்ளப் பட்டார்கள்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பேராசிரியர் ராமசாமி சொல்வது போல விண்வெளி (ராக்கெட்) அறிவியலை எடுத்துப் படித்துப் பட்டம் வாங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.
Ethnic and religious policies are openly enforced. Accepting them is having a major impediment to the socio-economic progress of Indians (Tamils).
கடந்த காலங்களில் தமிழர்கள் வேண்டும் என்றே புறக்கணிப்புச் செய்யப்பட்டு உள்ளனர். சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு எடுத்துக் கொள்வதில் இருந்து தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.
In the past, Indians (Tamils) have been totally neglected. They were excluded from participating in the national socio-economic developments.
பிரதமர் அவர்களின் "இந்தியர்களைக் கவனித்துக் கொள்வோம்" எனும் உத்தரவாதச் சொற்கள் கேட்பது நன்றாக இருக்கிறது. இருந்தாலும் மலேசியத் தமிழர்ச் சமூகத்திற்கு ’இந்தா எடுத்துக்கோ’ என்று சில ரொட்டி துண்டுகளைத் தூக்கிப் போடுவது போலாகும்.
It is good to hear the Prime Minister's words of assurance, "Let us take care of the Indians." However, it is like throwing some bread crumbs to the Malaysian Indian (Tamil) community saying ‘Take It’.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்ள தமிழர்கள் தங்கள் கண்ணியத்தையும் பெருமையையும் இழந்து வருகின்றனர். வேதனை.
The Indians (Tamils) under the present government are losing their dignity and pride.
கடந்த காலத்து நினைவலைகளில் எஞ்சி இருப்பது தாய்க்கட்சி ம.இ.கா. மட்டுமே. அந்தக் கட்சியின் மூலமாக தமிழர்களின் பிரதிநிதித்துவம் அரசாங்கத்தில் இன்னும் உள்ளது எனும் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவ்வளவுதான்.
The remnants of the memories of the past are the mother party MIC. An illusion has now been created that the representation of Indians (Tamils) is still in government.
ஒரு முழு அமைச்சர் பதவி. அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களும் பிரதிநிதித்துவம் பெற்று விட்டனர் என்று சொல்ல முடியுமா? ஒரே ஓர் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு பேர் போடுவது சாதாரண விசயம் அல்ல.
A full ministerial post. Can it be said that all Indians (Tamils) are represented?
பிரதமர் மட்டும் அல்ல. இன பேதம் பார்க்கும் வேறு எந்தத் தலைவர்களின் இனிமையான பேச்சுகளும் சரி; தமிழர்ச் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வுக்கு எந்த வகையிலும் நன்மை வழங்கப் போவது இல்லை. எல்லாமே கானல் நீர்.
All the sweet talk by the primier or any other race baiting leaders will mean nothing for the future well-being of the Indian Tamil community. Just a mirage.
இந்த நாட்டிற்காகக் கண்ணீர் வடித்த தமிழர்ச் சமூகம். இரத்தம் சிந்திய தமிழர்ச் சமூகம். அந்தச் சமூகம் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை குடிமக்களாகவே கருதப் படுகின்றனர்.
The community that shed tears and blood for this country and that community is treated as second or third class citizens.
இந்த நிலையைத் தாண்டி தமிழர்களின் நிலை உயரும் வரையில் பிரதமரின் “நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வோம்” எனும் சொற்கள் வெறும் அல்வாத் துண்டு விளம்பரங்கள் தான்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2021
பேஸ்புக் பதிவுகள்
Maha Lingam: அரசியல் நாடகம்... ஐயா. ஏற்கனவே நம்பி நம்பிக் கெட்டுப் போன ஏழை இனம். இவர்களுக்குத் தெரியும்; இந்தியச் சமுதாயம் எதைச் சொன்னாலும் நம்பும். ஓட்டுப் போடும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். காரணம், ஏற்கனவே ஒருத்தன் கற்று கொடுத்து விட்டான். எப்படி இந்த இனத்தை ஏமாற்றுவது என்று... நம்ப வேண்டாம்...
Sathya Raman >>> Maha Lingam: சரியாகச் சொன்னீர்கள் சார்.
Muthukrishnan Ipoh >>> Maha Lingam: புதிதாக எதுவும் இல்லை. ஏற்கனவே ஒருவர் கற்றுக் கொடுத்து விட்டார். நல்லாவே நாலு டன் ஆணி அடித்துவிட்டு நகர்ந்து விட்டார். நம்பி மோசம் போனதுதான் மிச்சம்.
Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இப்போதுதான் தங்களது முழு பதிவையும் படித்துக் கொண்டிருக்கிறேன் சார். இதற்காக கருத்துகளையும் நிச்சயம் எழுதுவேன் .
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: சரிம்மா. ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் பகிர வேண்டி உள்ளது. உலக அளவில் எல்லோரும் உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும். அடிபட்டுக் கடிபட்டு வந்தவர்களுக்கு வலிக்கவே செய்யும்.
MP Tarah: ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விட்டு போக வேண்டியது தானே, இதை எல்லாம் நம்புவதற்கு இங்கு யாருமில்லை, வேறு வேலை இருந்தா பார்க்கச் சொல்லவும். குடிகாரன் பேச்சி, விடிந்தால் போச்சி என்பது போல்தான் இதுவும் ஒன்றாகும்.
Sathya Raman >>> MP Tarah: அதே 🙏
Muthukrishnan Ipoh >>> MP Tarah: நல்ல வாக்குறுதி... தேர்தல் வாக்குறுதி... சேர்த்து பால்கோவா பாயாசம் கொடுத்து இருக்கலாம். மேலும் கூடுதலாக இனிக்கும்.
Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இந்த கேக்கு கீக்கு சார்?
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: பால்கோவாவிற்கு மிஞ்சி ’கேக்’காவது... ’கிக்’காவது...
Parameswari Doraisamy: வணக்கம் ஐயா.. இந்த சுயநல அரசியல்வாதிகளின் குள்ளநரி வேசத்தை நம்பி நம்பி ஏமாற்றம் அடைந்துதான் மிச்சம். தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதிகள் அள்ளி வீசுகிறார்கள்.இவர்களை பார்த்தாலே மிகவும் கோபம் எரிச்சல் தான் வருகிறது.
Sathya Raman >>> Parameswari Doraisamy: இந்த முறையாவது எரிச்சல் மிகுந்த கோபத்தை நிஜமாக்குவோம் பரமேஸ்.
Parameswari Doraisamy >>> Sathya Raman: ஆமாம் சத்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்
Sathya Raman >>> Parameswari Doraisamy: வெச்சு செய்வோமா? 😀
Arojunan Veloo: தன் கையே தனக்கு உதவி. நாம ஒன்றுபட்டுச் செயல் படவேண்டிய நேரம் வந்தாச்சு! அரசும் அரசியலாரும் நம்மைக் காப்பாற்றப் போறதில்லை! ஏதாவது ஒரு நல்ல வழியச் சொல்லுங்க ஐயா!
Sathya Raman >>> Arojunan Veloo: அப்படி போடு
Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: மிகச் சரியாகச் சொன்னீர்கள். நம் கையே நமக்கு உதவி. இனி அரசியல் தலைவர்களை நம்பி நடக்கப் போவது எதுவும் இல்லை.
Perumal Thangavelu: தலைவன் சந்தர்ப்பவாதியாக இல்லாமல் மக்களை நேசிப்பவரா இருந்தால் தானாக வாக்களிக்கும் கூட்டம் பெருகும். யார் ஒருவர் இன மத பேதமின்றி சேவை செய்கிறாரோ அவரை மக்கள் கூட்டம் மொய்க்கும். இல்லாவிடில் ஏய்க்கும் ta
Sathya Raman >>> Perumal Thangavelu: அத்தகைய நல்லவரை இந்ந நாடு இன்னும் கண்டுபிடிக்க வில்லை சார்.
Perumal Thangavelu >>> Sathya Raman: 🙏
Kumar Murugiah Kumar's >>> Sathya Raman: உண்மையை அறிந்து மக்கள் சிந்திக்கட்டும்.
Vani Yap: சிந்திக்க வைக்கும் பதிவுங்க ஐயா.. நம்ப முடியாத வாக்குறுதி தான்.... காலம் தொட்டும் தமிழர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சேரா சன்மானம் 😔😔
Kala Balasubramaniam: So well said and the undeniable truth..
Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam: சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லித் தான் ஆக வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி... நம்முடைய கருத்துகளைச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. நமக்கு கருத்துரிமை உள்ளது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமை உள்ளது.
Kala Balasubramaniam >>> Muthukrishnan Ipoh: 🙏
Ranjanaru Ranjanaru: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ... சமயம் பார்த்து காய் நகர்த்துகிறார் பிரதமர் ... இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் ஏமாளி சமூகம்தான் ...
Sathya Raman >>> Ranjanaru Ranjanaru: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
Muthukrishnan Ipoh: நம் இனம் மிக மிகச் சிறிய இனமாகி விட்டது. அதனால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப் போவது இல்லை. எதிர்த்துப் போகவும் மாட்டார்கள் என்பதும் நன்றாகத் தெரியும்.
Ranjanaru Ranjanaru >>> Muthukrishnan Ipoh: 🙏
Baakialetchumy Subramaniam: இந்த மாதிரியான பசப்பு வார்த்தைகளை பேசியே பழக்கப் பட்ட அரசியல்வாதிகளை என்னவென்பது...
Sathya Raman >>> Baakialetchumy Subramaniam: அவர்களுக்கு பெயர்தான் அரசியல்வாதிகள் சகோதரி.
Raghawan Krishnan: You have written very clearly about our Present situation in this country. Indeed TRUE FACTS. Are our Leaders BRAVE Enough to have Table Talk with the Prime Minister? We must talk as Citizens of this Country. Congrats. My Dearest Friend YB Muthu Krishnan.
Muthukrishnan Ipoh >>> Raghawan Krishnan: நன்றிங்க. எதிர்பார்த்தது தான். ’நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்’ என்றால் என்ன. இனிமேல் தான் பாதுகாக்கப் போகிறார்களா? இவ்வளவு நாளும் ஏமாற்றப் பட்டோம். அதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம். விடுங்க ராகவன். வேதனையைக் கொட்டித் தீர்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
Velan Mahadevan: Marilah maari undilah undi
Muthukrishnan Ipoh >>> Velan Mahadevan: 🙏 தேர்தல் நெருங்கி விட்டது.
மா.சித்ரா தேவி: ஐயோ ஐயோ
Sathya Raman >>> மா.சித்ரா தேவி: ஏன் இந்த கொலை வெறி.? 😀
மா.சித்ரா தேவி >>> Sathya Raman: நம்ப கூட்டம் இப்பதான் திராவிடன் தமிழன் சமஸ்கிருதம்ன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க. அப்புறம் புத்தாண்டு தீபாவளிக்கு போயிருங்க. இதுல நம்ம பிரதமர் வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு அய்யோ அய்யோ 😁
Sathya Raman >>> மா.சித்ரா தேவி: அதுமட்டுமா இன்னும் ஒரு வாரத்தில் பிறக்க போகிற சித்திரை முதல் நாளை வெச்சி செய்வாங்களே ஒரு கூத்து. நம்ம பயல்களே காமெடியன்களாக இருக்கும் போது நம்ம பிரதமர் பாவம் சித்ரா. சீக்குக்கார மனுசன்.
இப்பத்தான் நமக்கு இனிப்பு தந்திருக்கிறார். அது திகட்டியதும் தண்ணி காட்டுவார் பாருங்கள். இருந்ததாலும் உங்களுக்கு தாமாஷ் ஜாஸ்தி... பாவம்! அவரே சீக்குக்கார ம ???? 😁
Parameswari Doraisamy >>> Sathya Raman: இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த பிரச்சனை தீராது சத்தியா. இனிப்பான செய்தியைக் கேட்டு எனக்கு சர்க்கரை அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது 😄
Sathya Raman >>> Parameswari Doraisamy: எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று நம்மவர்களைப் பற்றி கணித்து வைத்து இருக்கிறார்களே? ஏமாந்த சோணகிரிகள் நம்மில் இருக்கும் வரை இனிப்பென்ன தேனாறும், பாலாறும் பாசாவில் ஓடுகிறதுன்னு பாட்சா கட்டுவார்கள். அதையும் நம்பி நம்ம பயப் பிள்ளைகள் பாத்திரம் ஏந்தி படை எடுப்பார்கள்.
தன்மானம் தன்னில் உணர்த்தாத வரை தமிழன் இந்த நாட்டில் தலை எடுப்பது எங்கணம் பரமேஸ்?
பயப்படாதீர்கள்... பிரதமர் தந்த இனிப்பான செய்தியால் மயக்கம் எல்லாம் வர வாய்ப்பில்லை. தேர்தல் முடிந்ததும் அவர் செய்யும் அதிரடியில்தான் நம் சமூகத்திற்கு பெரும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Parameswari Doraisamy >>> Sathya Raman: சூடு சொரணை தன்மானம் என்ன விலை என்று கேட்பார்கள் சிலர்.
Sathya Raman >>> Parameswari Doraisamy: அந்த குணம் விலைமதிப்பற்றது என்று தெரியாத மடந்தைகளோ என்னவோ. 🤔
Malathi Nair: Satya Raman's words very true.
MP Tarah: ஒவ்வொரு
Sundaram Natarajan: Arumai Anna.
Muthukrishnan Ipoh >>> Sundaram Natarajan: நன்றிங்க
Raja Rajan: image of 1 person and text that says '8:53 facebook Thinnes Kumar KL INDIAN MAKKAL'S 12h.® Join Cuti thaipusam Di kedah dibatalkan oleh mb racist sanusi, angsung x pernah buka mulut pm Pintu belakang, ini nak kata jaga kaum india, ennamma nadikar paaruuu i f NST ONLINE 1 MIN READ Muhyiddin to Indian community: We will take care of you New Straits...
Ganesan Nagappan: 🙏
Sathya Raman: வணக்கம் சார். யானையைக் கண்டால் ஆயிரம் அடி நகர்ந்து விட வேண்டும். குதிரையைக் கண்டால் நூறு அடி விலகிவிட வேண்டும். இந்த நம்பிக்கைத் துரோகிகளைக் கண்டால் எப்போதுமே எட்டி ஒதுங்கிப் போய் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இந்த அரசியல்வாதிகளின் வாய்ப் பந்தல்களையும், வஞ்சனை எண்ணத்தையும் வேரோடு அறுத்துச் சாய்க்கிற அறிவு வேண்டும். வாழைப்பழத் தோல்களாக; சோளக் கதிரின் சருகாக; தேவையற்றக் கழிவாக; இந்த நாட்டுத் தமிழர்களை எண்ணி எள்ளி நகையாடும் இந்த நாட்டு அதிகார வர்க்கத்தை நினைத்தால் வாந்தி வருகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவத்தில் தென்னிந்தியத் தமிழர்களை இங்கு அழைத்து வந்து அவர்களிடம் பெற வேண்டியதை எல்லாம் பெற்று, உறிஞ்ச வேண்டியதை எல்லாம் உறிஞ்சி, மலாயாவைத் தங்களது உழைப்பால், உதிரத்தால் உருமாற்றம் செய்து மலேசியாவாக இன்று மலர்ச்சிப் பாதையில் வலம் வருவதற்கு இன்று இந்த நாட்டில் இன்று குவிந்துக் கிடக்கும்... மியான்மர்காரர்களோ, இந்தோனேசியர்களோ, பாகிஸ்தானியர்களோ, பங்காளதேசிகளோ அல்ல.
சத்தியமாக எம் தமிழர்கள் தாம். இந்த நாட்டின் வாரிசுகள் என்று வாய்ச் சவடால் பேசும் பூமி புத்ராக்களும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
ஓர் இனம் உழைக்கத் தயாராக இல்லாத போது மற்றோர் இனம் இந்த நாட்டில் எருமை மாடுகளாய், நேரம் காலம் இன்றி, சூடு சொரணை இல்லாமல் அனைத்தையும் பொறுத்து, அடக்கி, அடங்கி, உழைத்து... இன்று நன்றி கெட்ட அரசியல் வாதிகளின் பார்வையில் உதவாக் கரைகளாக உதாசீனப் படுத்தப் படுகிறோம்.
உலகில் மூத்த இனம் இன்று சொந்த நாடு இல்லாமல் உழைப்பைக் கொட்டிய நாட்டிலும் இன்றும் கொத்தடிமைகளாக நடத்தப்படும் கொடூரம்.
இந்த நாட்டில் ஏற்படுகின்றன அரசியல் மாற்றங்களிலும் நம் இந்தியர்களின் மனங்களையே சதா புண்படுத்தி புளங்காகிதம் அடையும் அவலம்.
இதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே இல்லாத ஒற்றுமை. சொந்த இனத்தின் மீதே இல்லாத அக்கறை. கூடவே நமக்காக துணிந்து எதையும் கேட்டுப் பெற துணிவு இல்லாத நமது பிரதிநிதிகள்.
அப்படியே கேட்டது கிடைத்தாலும் அவற்றைச் சொந்தத்திற்கும், சுயத்திற்கும் அனுபவிக்கும் சுயநலச் சொருபர்கள்.
தேர்தல் வரும் பின்னே, இனிய செய்திகள் வரும் முன்னே. இந்நாட்டு இந்தியர்களை இளித்த வாயர்களாக நினைத்து, நினைத்து ஒவ்வொரு தேர்தல் வரும் போது எல்லாம் இந்த சோழியன் குடுமிகளின் சொகுசு வார்த்தைகளை, பசப்பு, பித்தலாட்டம் நிறைந்த உரைகளை உதிர்க்கும் உச்சரிக்கும்.
இந்த நயவஞ்சக நாலாந்திர ஆலாபனைகளில் ஆட்கொள்ளாமல், அறிவு மயங்காமல் இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் மறைந்து இருக்கும் மர்ம முடிச்சுகளை ஆழ்ந்த அறிவோடு அவிழ்த்து... இதுநாள் வரை இந்நாட்டில் நம்மவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை துரோகத்தையும், திறந்த மனதோடு சீர்தூக்கிப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வோமாக.
இனிமேலாவது நாமும் சுயநலமாக வாழ பழகுவோமாக. ஏகாந்த வார்த்தைகளில்
ஏமாந்தது போதும். தேனான அறிவிப்புகளில் நம் தன்மானம் தேய்ந்தது போதும். இனியாவது சுயத்தோடு அறத்தோடும் நமக்கான வாழ்வாதாரத்தை வாழ்வோமா?
இது ஒரு அட்வைசோ அறிவுறுத்தலோ இல்லை. நம் சமூகம் இந்நாட்டில் நடத்தப் படுக்கின்றன ஆதங்கத்தின் வெளிப்பாடே என்னுடைய இந்த பதிவு.
Parthiban Apparu >>> Sathya Raman: அருமையான வார்த்தைகள். சிறப்பு சிறப்பு. 🙏
Sathya Raman >>> Parthiban Apparu: நன்றிங்க சார். எம் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளின் வெளிப்பாடே அரணான என் எழுத்துக்கள். 🙏
Christopher Charles >>> Sathya Raman: migavum arumai.
Jeeva Muthu >>> Sathya Raman: நம் சமூகத்துள்ளேயே குள்ள நரிகள் பெருகி கிடக்கிறதே
Sathya Raman >>> Jeeva Muthu: இன்னும் எவ்வளவு காலத்துக்கு இத்தகைய காரணங்களையும் சொல்லி கவலைப் பட்டுக்கொண்டிருக்கப் போகிறோம் சார். ஒரு ஹிண்ராப்பை உருவாக்கிய நம்மால் இந்த குள்ளநரிகளையும் அடையாளம் கண்டு அலர வைக்க முடியும். மனதில் தீரம் இருந்தால்...
Banu Linda: இந்த இனிப்பு செய்தி கேட்டு எனக்கு இனிப்பு இரத்தில் எகிறி விட்டது.. போங்க...
Sathya Raman >>> Banu Linda: பார்த்து பானு.தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் தானாகவே இறங்கி விடும் எல்லாமே...
Banu Linda >>> Sathya Raman: 😄😄😄
Muthukrishnan Ipoh >>> Banu Linda: நல்லவேளை எனக்கு இல்லை. இருந்து இருந்தால் யாராவது தூக்கிக் கொண்டு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கலாம்.
Isham Balqis: It's all syaitans naadagam... Tamil Scholl make less... IC Mykad... LTTE... Alocation for Tamil School RM50M cut to RM30M... worst MIC happy to promise like syaitans
Sathya Raman >>> Isham Balqis: Exactly Sir.
Muthukrishnan Ipoh: ஏதோ சொல்ல வேண்டிய கட்டம். ஏதோ சந்தோஷப் படுத்த வேண்டிய கட்டம். சொல்லிவிட்டுப் போகட்டும். நமக்குத் தெரியாத ஒன்றா. விடுங்க தம்பி. போராட வேண்டிய நம் இலக்கு.
Isham Balqis: Yes sar.. We Fight for Merdeka.. British brought us to fight n help get Metdeka.. since 64yrs still fighting for our right cos MIC only care own pockets.. luxury life style..
Sathya Raman >>> Isham Balqis: உங்களின் இந்தப் பதிவுக்கு என் தமிழில் பதில் தந்தால்தான் சரியாக இருக்கும். என்று ஒரு நாட்டில் மதம் பெரிதாகப் பேசப் படுகிறதோ அன்றே அந்த நாட்டின் தலைவிதியும் தலைக் குப்பற கவிழ்ந்தே தீரும்.
இன்று உலகத்தில் நடக்கும் அத்துணை அநீதிகளுக்கும் மதவெறியே மூலக் காரணம் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். மலேசியா நல்ல நாடு, சுபிட்சம் நிறைந்த தேசம், எல்லா வளங்களையும் கொண்ட வற்றாத பூமி.
ஆனால் அந்த அற்புதங்களை, அரசியல் அல்பத்தால் இன வெறியால், மத மயக்கத்தால் சீரழித்துச் சின்னா பின்னமாக்கி விட்டார்கள்.
முந்தைய அரசாங்கத்தின் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கையால் வெறுப்பு அடைந்து வேறோர் அரசாங்கத்தை மக்கள் மாற்றி அமைத்தார்கள்.
அவர்களும் மக்கள் ஏற்படுத்திய புரட்சியை கொஞ்சம்கூட மதிக்காமல் கட்சிக்கு உள்ளேயே காலை வாரி விட்டுக் கொண்டார்கள். சேராக் கூடாத இடத்தில் சேர்ந்தார்கள். பதவிக்காகப் பல துரோகங்களைச் செய்தவர்களின் கையாளாத தனம்.
ஓட்டுப் போட்டு மக்கள் பிரதிநிதிகளாக பிரகடனம் செய்யப் பட்டவர்களின் அஜாக்கிரதையால், அலட்சியத்தால் பின் வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றியவர்களும் பல குளறுபடிகளுக்கு இடையில் ஒரு வருடத்தை கடந்து விட்டார்களே.
இந்த அரசியல் சித்து விளையாட்டில் ம.இ.கா. மட்டும் நம் இந்திய மக்களின் நலங்களைக் காக்கும் என்கிற கனவு எல்லாம் காணக் கூடாது சார்.
எரிகிறதில் பிடுங்கியது லாபம் என்ற நினைப்பில்; பதவிக்கு வருகிறவர்களிடம் நாம் எந்த எதிர்பார்ப்பையும் வைக்கக் கூடாது.
இருபது வருடத்திற்கு மேல் இந்திய சமுதாயத்தின் தானைத் தலைவன் என்றவர் எல்லாம் எம் மக்களின் கொஞ்ச நஞ்ச சொத்து உடைமையும் தின்று ஏப்பம் விட்டதுதான் மிச்சம்.
ஒரு தரமான கொள்கை, கோட்பாடு இல்லாத அரசியல் மக்களுக்கு எந்த நன்மையையும், நலத்தையும் தரப் போவது இல்லை.
நாட்டின் பெரும்பாலான கருவூலத்தைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சட்டம் தண்டனையைக் கொடுத்து உள்ளது. இருந்தாலும் இன்னமும் அவர்களும் சுதந்திரமாக, சுகமாக வெளியே சுற்றி வருகிறார்கள்.
அதே சமயம் மூக்குக்கு கீழே முகக் கவசத்தை இறக்கி விட்டால் அதற்கு அபதாரமாக ஆயிரம், பத்தாயிரம் என்று எளிய மக்களிடம் பிடுங்குகிறார்கள்.
இந்த நாட்டில் சட்டமும், ஒழுங்கும் அவ்வப்போது மாற்றி அமைப்பதே பொது மக்களுக்காகவே தானே ஒழிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லை.
கூடிய விரைவில் 15 ஆவது பொது தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இதில் யார், யார் சந்தி சிரிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கப் போகிறோம் சார். எல்லா தீர்ப்பும், தீர்வும் மக்கள் கையில்.
Isham Balqis >>> Sathya Raman: worst Racist.. Kedah didnt give PH for Thaipusam to stay at home but this back door brain now giving MIC alwaa n jujubi n honey talks
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க. இருவரின் பதிவுகளும் வலைத்தளத்தில் பதிவாகி உள்ளன.
Christopher Charles: Arumai.
Vejayakumaran: 🙏
Muthukrishnan Ipoh >>> Vejayakumaran: 🙏🌻
Shanker Muniandy: ம.இ.கா. மாநாட்டில் ஒரு பசப்பு பேச்சு ம.சீ.ச மாநாட்டில் ஒரு பசப்பு பேச்சு. கடைசியில் அம்னோ மாநாட்டில் அவர்களுக்காகத் தீர்மானங்கள் போட்டு நிறைவேற்றுவார்கள். இப்படி பேசிப் பேசி காலை வாரிவிட்ட எத்தனைத் தலைவர்களை பார்த்து இருப்போம்.
முனைவர் நாகப்பன் ஆறுமுகம்: இப்படி ஒரு அறிவிப்பு வருகிறதென்றால் பக்கத்தில் தேர்தல் வருகிறது என்று பொருள். அமைச்சர் பதவி ஒருவருக்கோ இருவருக்கோ கிடைத்தால் மொத்த இந்தியரில் இரண்டு பேர் கவனிக்கப் பட்டார்கள் என்று பொருள். அவ்வளவே.
Velaydam Kannan: வெற்று வாக்குறுதிகள்